26 மார்ச் 2024

 






நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து.




இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த ஆணின் கைபேசியிலும் ஒரு சசிகலாவின் அழைப்போ...எஸ்.எம்.எஸ்ஸோ இருக்கக்கூடும்...அதுபோல் எந்தப் பெண்ணின் கைபேசியிலும் ஒரு சீரங்கப் பெருமாளின் அழைப்போ...எஸ்.எம்.எஸ்ஸோ இருக்கக்கூடும்...என்ற கருத்தே. சபலம் உள்ளவர்கள் இப்படி மாட்டிக் கொண்டு நிம்மதியில்லாமல் அலைய வேண்டியதுதான். எடுத்த எடுப்பில் முறித்துப் பேசி விட்டால் எந்தப் பொம்பளை தொடருவாள்...இந்தக் கைபேசி காலத்தில் மாணவர்கள்தான் நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆசிரியப் பெரு (சிறு) மக்களும் நாங்களும்தான் என்று நிற்கிறார்கள் என்பதை இந்நாவல் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்துகிறது எனக் கொள்ளலாமா? இருப்புதான் பொழப்பக் கெடுக்குதும்பாங்க..அது எத்தனை உண்மை? இந்த நாவலிலும் இதற்கு முந்தைய நாவலான "இப்போது உயிரோடிருக்கிறேன்" நாவலிலும் ஒரே விஷயத்தை இன்னும் எத்தனை பக்கத்திற்குத்தான் நீட்டிப்பார் என்கிற அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

 மனசு…உஷாதீபன் சிறுகதை=பாலமுருகன் லோகநாதன் விமர்சனம்––----------------------------------------

ஜனரஞ்சகமான ஒரு சிறுகதைகளில் இதுவும் ஒன்று என்று கூறினால் அஃது மிகையாகாது. குறிப்பாக ஏன் இந்த கதையானது என்னை நெகிழவைத்தது என்றால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பரவலாகத் தமிழகத்தில் வறட்சி நிலவிய சமயத்தில் பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் மேனுவல் பம்பு செட்டு வைத்திருப்பார். தினமும், அல்லது ஒரு நாள் விட்டு மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் கார்பொரேசனிலிருந்து குடிப்பதற்குப் புழங்குவதற்குக் குழாயின் மூலம் தண்ணீர் விடுவார்கள். அப்போது மேனுவல் பம்பு செட்டை கார்பொரேசன் குழாயிலிருந்து வரும் தண்ணீருடன் இணைத்து மேனுவல் பம்பு செட்டு மூலம் தண்ணீர் அடித்து வீட்டிற்குக் கொண்டு செல்வோம். சில சமயங்களில் அடித்தளத்திலிருந்து மேல் தளத்திற்கு இத்தண்ணீரைக் கையில் கொண்டுசெல்வது வழக்கம். அல்லது இங்கு எழுத்தாளர் கூறியமாதிரி ஊருக்கு இரண்டு மூன்று பொது மேனுவல் பம்பு செட்டு இருக்கும். அங்கு மிதிவண்டியில் இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு போவது வழக்கம். ஒன்று இடப்புறமாகவும் மற்றொன்று வலதுபுறமாகவும் மிதிவண்டியில் தொங்கவிட்டுக்கொண்டு போய் தண்ணீர் எடுத்துவருவது வழக்கமாக வைத்திருந்தோம். மீண்டும் இந்த கதைநின் வாயிலாக எழுத்தாளர் அதை நினைவூட்டுகிறார். இதையே ஆசிரியர் இங்கு மறுபடியும் நம் கண்முன் கொண்டுவந்திருப்பார்.
இங்கு இந்த கதையிலும் கதையின் நாயகன் தண்ணீருக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாக எடுத்துக்கூறியிருப்பார் ஆசிரியர் திரு உஷாதீபன் அவர்கள். இவர் இங்குப் பதிவு செய்த மாதிரி எனது ஊரிலும் ஆற்றங்கரையை ஒட்டி ஒரு பொது கார்பொரேசன் குழாய் மேனுவல் பம்பு செட்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளிலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திலோ அங்கு கார்பொரேசனிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் அனைவரும் அங்குக் குடங்களுடன் சென்று வரிசை வரிசையாக நின்று ஒருவர் பின் ஒருவராக தங்களது குடங்களை நிரப்பிச்செல்வது வழக்கம். மேலும் ஆசிரியர் இங்குப் பதிந்த மாதிரி சவக்காடு ஒன்றும் இருந்தது அஃது படித்துறைக்கு ஒட்டின மாதிரிதான் அமைந்திருந்தது. நாம் அந்த சவக்காட்டைத் தாண்டி தான் தண்ணீர் எடுக்கச் செல்வேண்டும்.
பெரும்பாலும் அவரவர் குடங்களுக்கு, அவரவர் தண்ணீர் அடித்துக்கொண்டு செல்வது வழக்கம். வயதில் முதிர்ந்தவர்கள், முடியாதவர்களுக்கு வருமர போது. அங்கு ஒரு சிலர் இருப்பார்கள் அவர்ஙள் குடங்களை வாங்கி தண்ணீர் நிரப்பித்தருவர். ஆனால் அதற்கு அவர்கள் காசு கேட்டு வாங்கிக்கொள்வர். இதையும் எழுத்தாளர் அழகாகப் பதிவு செய்திருப்பார்.
ஒரு சில இடத்தில் மற்ற இடங்களைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று ரூபாய் அதிகமாக ஒரு குடம் தண்ணீருக்குக் கேட்பர். உடனே குடம் வைத்திருப்பவர் தண்ணீர் அடித்து கொடுப்பவரிடம் அங்கெல்லாம் ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய் தான். நீங்கள் என்னவென்றால் ஒரு குடத்திற்கு மூன்று ரூபாய் கேட்கிறீர்களே என்று கூறுவர். அதன் பிறகு சிறிது தூரமானால், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு ரூபாய்க்குத் தண்ணீர் அடித்துத் தருகிறவர்களிடம் செல்வர். ஏனென்றால் நம் மனதில் இவர் நம்மை ஏமாற்றுகிறார் என்று நாம் எண்ணுவதால் தான் இப்படிச் செய்கிறோம்.
ஆழமாகச் சிந்தித்தால் நமக்கு ஒன்று விளங்கும், ஏன் அவர்கள் நமக்குத் தண்ணீர் அடித்துத் தரவேண்டும். ஒன்று அவர்களுக்குக் காசு தட்டுப்பாடு இருக்கும், இல்லையென்றால் அவர் அதையே ஒரு வேலையாக எடுத்துச் செய்து அதன் மூலம் வரும் ரூபாயை வைத்து தினமும் தன் வயிற்றுப் பசியை போக்கிக்கொள்வர். அதுவும் இல்லையேல் அவரது குடும்பத்தில் யாரேனும் உடல் நலம் குன்றி இருப்பார்கள், அவர்களுக்கு மாத்திரை மருந்து செலவுக்கு என்று எண்ணற்ற காரணங்கள் இருக்கக் கூடும்.
கதையாசிரியர் அருமையாக முடித்திருப்பார், நம்மை ஒருவர் ஏமாற்றுகிறார் என்று நினைத்திருந்த தறுவாயில். நம்மை நன்றாக அறிந்தவர் நம்மிடம் வந்து இல்லை அவள் உங்களை ஏமாற்றவில்லை என்று கூறி அவள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைக்கும்போது நமக்கு அதிகமாக விளங்கும், இங்கு நாயகனின் மனைவி தன் கணவனிடம் அந்த அனைவருக்கும் தண்ணீர் அடித்துக்கொடுக்கும் பெண்ணைப் பற்றி எடுத்துக் கூறுகிறாள். உண்மையில் அவளது வீட்டில் இயலாமை அதனால்தான் அவள் உங்களிடம் சற்று அதிகமாக ரூபாய் கேட்டுள்ளாள் மற்றும் உடல் நலம் குன்றி கணவன் இருபதால் அவள் அப்படிச் செய்திருப்பாள் என்று எடுத்துரைக்கும் போது. நாம் கூட தண்ணீர் அடிக்க முடியும் ஆனால் நாம் அதைச் செய்வதில்லை ஏன்? நமக்கு முடியவில்லை என்பதால்தான் நாம் மற்றவர்களைத் தண்ணீர் அடித்துத் தரச்சொல்கிறோம். அப்படியானால் தண்ணீர் அடித்துக் கொடுப்பவர் கேட்கும் ரூபாயை நாம் கொடுக்கத்தான் வேண்டும். இதைச் செய்வதனால் நாம் அவர்களுக்கு உதவி செய்த மாதிரி இருக்கும். இந்த உலகைவிட்டு போகும் போது நாம் என்ன கொண்டு செல்லப் போகிறோம். அதனால் முடிந்தவரைப் பிறருக்கு உதவினாலே நம்மைச் சார்ந்த சந்ததிகள் நன்றாக இருப்பார்கள். இந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மீதம் பிடித்து நாம் என்ன மாட மாளிகைகளைக் கட்டிவிடப் போகிறோம்! என்று நாயகனின் மனைவி நாயகனிடம் கூறும்படி கதைக்களத்தை அமைத்திருப்பார் எழுத்தாளர். சில சமயங்களில் நாம் எடுக்கின்ற முடிவுகளைப் பற்றி,அடுத்தவர் நம்மிடம் இதை இப்படிக்கூடப் பார்க்கலாம் என்று எடுத்துக் கூறும் போது! நமக்கு அதில் புதைந்திருக்கும் உண்மை வெளிப்படும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் எழுத்தாளர் திரு உஷாதீபன் அவர்களுக்கு உரித்தாகட்டும்.🎉🎉🎉👍👍👌👌
-பாலமுருகன்.லோ-
May be an illustration of 1 person, boat, horizon and ocean
All reactions:
Suresh Subramani, Pachaiyappan Ge and 4 others

25 மார்ச் 2024

 புகைச்சல்..சிறுகதை-வெளியீடு..அந்திமழை மாத இதழ்.-விமர்சனம்=பாலமுருகன் லோகநாதன்

=================================
இக்கதையானது அந்திமழை என்னும் மாத இதழில் ஊமே01 2018யில் வெளிவந்துள்ளது. இக்கதையின் ஆசிரியர் திரு உஷாதீபன் அவர்கள். தலைப்பிற்கு ஏற்ப இன்றும் சாமானிய மனிதன், தன் சக மனிதனைப் பார்த்து புகைச்சல் கொண்டுதான் இருக்கிறான். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால்! அவனால் முடிகிறது ஏன் நம்மால் முடியவில்லை என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது. ஒன்று நாம் யோசிக்க மறந்து விடுகிறோம், ஏதோ ஒரு காரணத்தால் நம் மனதில் எழும் பயத்தின் உந்துதலால் தான் நாம் துணிந்து செயலை செய்வதற்குத் தயங்குகிறோம்.
இந்த புகைச்சலினால் பிரத்தியாருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை, மாறாக எப்போதும் நாம் பிரத்தியரைப் பற்றியே எண்ணுவதானால் சங்கடம் நமக்குத்தான். நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டு அடுத்தவரின் வேலையில் நடவில் நுழையாமல் இருந்தாலே போதும் நம் மனமானது மாசுபடாமல் தூய்மையாக இருக்கும். அவன் அப்படி, இவன் இப்படி, இவர்களால் எப்படி இந்த செயல் முடிந்தது என்று எண்ணுவதைத் தவிர்த்து அவரவர் அவரவருடைய வேலையைப் பார்த்தார்களேயானால் மனிதர்களுக்கிடையே புகைச்சல் இல்லாமல் இருக்கலாம்.
இங்கு எழுத்தாளர் திரு உஷாதீபன் அவர்கள் நமக்கு அழகாக ஒரு நகைச்சுவையான ஒரு சிறுகதையைக் கொடுத்திருக்கிறார். ஒரு பிராமண சமுகத்திலிருந்து வருபவராகத் திரு ரங்கநாதம், அவரது மனைவி வசுமதி. ரங்கநாதனின் எதிர் வீட்டில் விஷேசம், எதிர் வீட்டு உரிமையாளர் விஷேசத்தைத் தடபுடலாக நடத்தினார், பெரும்பாலும் ஊரில் உள்ள அனைவரையும் மற்றும் அவர்களது சொந்தங்களை அழைத்து ஒரு பெரிய விருந்தாக ஏற்பாடு செய்திருந்தார். ரங்கநாதனுக்கும் அவர்கள் வீட்டிலிருந்து அழைப்பித்தல் வந்திருந்தது. ஆனால் ரங்கநாதம் அன்று மிகுந்த கோபம் கலந்த சங்கடத்திலிருந்தார். ஏனென்றால் ஒரே சப்தம் வீட்டில் உள்ள அனைத்து சன்னல் கதவை அடைத்தும் ஒலியானது இவரது காதை துளைத்துக்கொண்டு நாராசமாய் இவரது காதுகளில் விழுந்துகொண்டிருந்தது.
வெளியே போனால் எங்கு நம்மை மறுபடியும் அவர்களது விஷேசத்தில் கலந்துகொள்ளும்படி கூறிவிடுவார்களோ என்று எண்ணி கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டினுள் அமர்ந்திருந்தார். அவருக்கு இரு நினைப்பாகவே இருந்தது. இந்த விழாவிற்குப் போவதா அல்லது தவிர்த்துவிட்டு வேறெங்காவது போகலாமா என்று. ஏன் தனது மனையிடம் கேட்கக் கூடாது என்று நினைத்து வசுமதிக்குத் தொலைப்பேசியில் அழைத்து விஷயத்தைச் சொன்னார்.
அவள் தங்களது மகன் வீட்டிலிருந்தாள், இவரிடம் நீங்கள் அவர்கள் வீட்டு விஷேசத்திற்க்கு கண்டிப்பாக சென்றுவாருங்களேன் என்று கூறினாள். மேலும் அவள் கூறினாள் அவரிடம், நாம் வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்கு வரும் போது அந்த எதிர வீட்டில் உள்ளவர்கள் தான் நமது வீட்டிற்கு வரும் கடிதத்தை எல்லாம் சேகரித்து நாம் வந்தவுடன் தருகிறார்கள் என்றாள். அதற்கு ரங்கநாதம் உடனே எப்படிப் போய் அங்குச் சாப்பிடுவது, நமது சமுகம் வேறு, அவர்களது பழக்கவழக்கம் எல்லாம் மாறுபடுகிறது. நாம் சைவம், அவர்கள் அசைவம் சமைப்பவர்கள், அதே பாத்திரத்தில் இன்று சைவம் சமைத்திருப்பார்கள், எப்படிச் சாப்பிடுவது என்றார்.
வசுமதி உடனே அவரிடம் கூறினாள் உங்களுக்குத் தான், ரசம் பிடிக்குமே அதைச் சாப்பிடுங்கள். பாயசம் செய்திருப்பார்கள் அதை டம்லரில் வாங்கி குடித்துவிட்டுப் பேர் பண்ணிவிட்டு வந்துவிடுங்கள். பிறகு ரங்கநாதம் எதிர் வீட்டு விஷேசத்திற்குப் போனாரா என்பதே இந்த கதை, ஆசிரியர் கதைக்களத்தை நகைச்சுவை உணர்வுடன் நகர்த்திச் சென்றிருக்கிறார்.
-பாலமுருகன்.லோ-
May be pop art of 1 person, slow loris and text that says 'அந்த்ஸழ andhimazhai.com முகப்பு மாத இதழ் சினிமா இலக்கிட ஓவியம் ஜீவா சிறுகதைகள் புகைச்சல் உஷாதீபன்'
All reactions:
Jeeva Nanthan, Pachaiyappan Ge and 4 others

23 மார்ச் 2024

 சொந்த வீடும் சமையல் மாமியும்..(குங்குமம் இதழில் வந்த கதை)

--------- லோகநாதன் பாலமுருகன் விமர்சனம்
†***************÷************÷**********
சிறுகதையை இயற்றியது திரு உஷாதீபன் அவர்கள். ஆசிரியர் ஏதோ பெரிய சமையல் குறிப்பை இங்கு நமக்குத் தரப்போகிறார் என்று நினைத்துப் படிக்க முற்பட்டேன். ஆனால் அவர் அதைவிட ஒரு முக்கியமான ஒன்றை அனைவருடனும் பகிர்ந்திருக்கிறர். எப்படி ஒரு மனிதனுக்கு உணவு முக்கியமோ, அத்தியாவசிய ஒன்றாக அமைந்ததோ அதேபோல், நாம் அனைவரும் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்திருப்பார்.
புத்தகங்கள் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்தால் உண்டாம் மாற்றம் எப்படிப்பட்டவையாக இருக்கக் கூடும் என்பதை அழகாக தன் எழுத்தின் மூலம் தந்திருப்பார். இந்த கதையில் சில எழுத்துலக ஜாம்பவான்களைப் பற்றி மக்கள் என்ன நினைந்திருந்தார்கள் என்பதைப் பிட்டுப்பிட்டு வைத்திருப்பார். ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் அல்லாமல் நாம் அனைத்து எழுத்துலக ஜாம்பவான்களுடைய எழுத்துக்களையும் மக்களாகிய நாம் வாசித்தோமேயானால்! கட்டாயம் இங்கு ஆசிரியர் கூறியமாதிரி மனிதர்களின் மனம் மென்மை படுத்துவது மட்டும் அல்லாமல் மேன்மை படுத்துகிறது அதில் எந்த ஐயப்பாடும் இல்லை. எழுத்தாளருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். 💐💐💐👍👍👍👍
-பாலமுருகன்.லோ

 குப்பை..-சிறுகதை - உஷாதீபன்

விமர்சனம்-பாலமுருகன் லோகநாதன்(உயிரோசை இதழ்)

++++++++++++++++++++++++++++++
அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்து, அவர்களுக்கென்றே ஒரு கதையைச் சித்தரித்திருக்கிறார் எழுத்தாளர் திரு உஷாதீபன் அவர்கள். நாம் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என்று வகைப்படுத்திப் பிரித்துப் போடப் பழகிக்கொண்டோம். அதேபோல் மனதிலிருக்கும் சந்தேகம் என்ற அழுக்கை நாம் முற்றிலுமாக களையெடுக்க வேண்டும் என்பதை அழகாக ஒரு குட்டி கதையாகவே தந்திருப்பார்
வேலைக்கு அமர்த்திய பிறகு நாம் தினம்தோறும் அவர்களைச் சந்தேகக் கண்களுடன் பார்ப்பது தவறு, அவர்களைச் சோதிப்பது போன்ற செயல்களைச் செய்யும் போது வீட்டு வேலைக்கு வந்த நபரின் மனமானது எப்படிப் பாடுபடும். நாம் அவர்களை வேலைக்கு அமர்த்தும் போதே அவர்களுடைய முழு விவரத்தையும் தெரிந்த பிறகே அவர்களை வேலைக்கு அமர்த்த சம்மதம் தெரிவிக்கிறோம்.
தவறு செய்திருந்தாலும் நான் இது போன்று தவறு செய்தேன் அதற்கு உண்டான தண்டனையும் எனக்குக் கிட்டியது என்று அவர்கள் கூறும் போது அவர்கள் முழுமையாக தன் தவற்றை உணர்ந்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.
இங்கு எழுத்தாளர் என்ன செல்ல வருகிறார் என்றால். குற்றம் சாற்றும் முன்னர், தொலைந்து போன பொருளை நாம் முதலில் நன்றாகத் தேட வேண்டும். தேடியும் கிடைக்கவில்லை என்றால் நாம் உடனே போய் வீட்டு வேலைச் செய்யும் நபரிடம் போய் ஜாடை மாடையாகப் பேசுவது அநாகரீகம். மக்கள் இப்போது மக்கும் கும்பை மக்கா குப்பை என்று வகைப்படுத்திப் பிரித்து வைக்கப் பழகிக்கொண்டனர், அதேபோல் சந்தேகம் என்ற இருளை, மாய உலகத்திலிருந்து அவர்கள் முதலில் வெளிவர வேண்டும். வேலைச் செய்பவர்களிடம் நயமாகக் கேட்டுப்பார்க்க வேண்டுமே தவிற நேரடியாக எடுத்தாயா்என்று்கேட்கக் கூடாது எப்போது சந்தேகக் கண்ணுடன் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைத்திருப்பார்.ஏனென்றால் அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்களே..
-பாலமுருகன்.லோ-
May be an illustration of slow loris and text that says '17:38 ..0.2KB/s.ill குப்பை (சிறுகதை)- உஷாதீபன் March 2, 2020 உஷாதீபன் இலக்கியம்> சிறுகதை'
All reactions:
இதயா ஏசுராஜ், Raman Ranganathan and 10 others
1 comment
Like
Comment
Share

 ஆறுதல்…உஷாதீபன் சிறுகதை-வாசிப்பனுபவம்-பாலமுருகன் லோகநாதன்

*******************************
சரவணன், நிர்மலா இவர்களைப் பற்றிய கதை என்றுதான் படிப்பவர் எண்ணத்தோன்றும். ஆனால் சரவணன், நிர்மலா மாதிரி, இந்த உலகத்தில் பல நபர்கள் இருப்பதால்தான் ஆசிரியர் அதையே ஒரு சிறிய கதையாக நமக்குக் கொடுத்திருக்கிறார். இச் சிறுகதையை இயற்றியிருப்பவர் திரு உஷாதீபன் அவர்கள். இங்கு அன்றாட வாழ்கையில் நிகழலும் நிகழ்வையே இவர் கதைக்கருவாகக் கையாண்டிருப்பார்.
பல வீடுகளில் இதுபோன்று சின்னஞ்சிறு மனஸ்தாபம் கணவன் மனைவிக்கிடையே நிகழ்ந்த வண்ணமாக இருக்கும். ஒரு விஷயத்தைப் பெண்கள் ஒரு விதமாகவும் ஆண்கள் அதே வேறு வதமாகவும் நினைக்கின்றனர். பெரும்பாலும் ஆண் வர்க்கத்தினர் எல்லா விஷயத்தையுமே அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு, இதில் அப்படி என்ன இருக்கிறது சிறிய விஷயம்தானே நாம் ஏன் இதைக் கூட பிறந்த அண்ணனிடம் மன்னியிடம் கூறக் கூடாது என்று நினைத்துக் கூறிய விஷயமானது, கணவன் மனைவிக்கிடையே ஒரு பெரிய கருத்து வேறுபாடே உண்டாக்குகிறது.
இதனால் பல வீடுகளில் கணவன் மனைவிக்கிடையே தினந்தினம் ஏதோ ஒரு வகையில் சண்டை வந்த வண்ணமாக உள்ளது. அவள் கேட்கும் கேள்விகளுக்கு இவனால் பதில் கூற இயலவில்லை, ஏனென்றால் இதில் என்ன இருக்கிறது சாதாரண விஷயம்தானே என்று நினைத்து தன் கூட பிறந்தவனிடம் சொன்ன விஷயம் இப்படி பூதாகாரமாக வெடிக்கும் என்று அவனுக்கு அப்போது தெரியாது.
இதனால் விடுமுறை நாள் ஆனாலும் பரவாயில்லை நாம் அலுவலகத்திற்குச் சென்றோமேயானால் இவளிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்து சரவணன் மாதிரி பல நபர்கள் செய்வதுண்டு. ஆசிரியர் கூறிய மாதிரி பல காரியங்களுக்குப் பதிலுக்குப் பதில் பேசாமல் அதைப்பற்றி பேச்சை வளர்க்காமலிருந்தாலே பல நல்ல முடிவுகளை எடுக்க முடியும். மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக் கவசத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி இருப்பார்.
என்ன இது இதுவரை என்ன கதைக்கரு என்றுதானே பார்க்கிறீர்கள். ஆம் கணவன் மனைவிக்கிடையே பேசி மனப்பூர்வமாக அதற்குப் பிறகு வரும் விழைவுகளைக் கருத்தில் கொண்டு செய்த செயல். ஆம் பெண் வர்க்கத்தினருக்கு மிக முக்கியமான ஒரு உடல் உறுப்பு கர்ப்பப்பை அதை சில தொந்தரவுகளுக்காக மருத்துவரின் ஆலோசனையின் படி நீக்கியதை, கணவன் தன் அண்ணனிடமும் மன்னியிடமும் சொல்லியதையே இவள் இவனிடம் கேட்கிறாள் ஏன் இதைச் சொன்னீர்கள் அவர்களிடம். அவர்கள் அப்படியா இருக்கிறார்கள், எங்கோ செங்கல்பட்டு அருகே நிலம் வாங்கினார்கள் அதைச் சொன்னார்களா நம்மிடம், மேலும் எந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதில் அவர்கள் சொல்லமாட்டார்கள். நீங்கள் இப்பட்டிருக்கிறீர்களோ என்றாள். அதற்குச் சொந்த அண்ணன் மற்றும் மன்னியிடம்தான் சொன்னேன். இத்தனை வருஷம் ஒன்றாகத்தான் நானும் அண்ணாவும் வளர்ந்தோம். திருமணத்திற்குப் பிறகு தனித்தனியாகச் சென்றுவிட்டோம். நிர்மலா தன் கணவனிடம் கேட்டாள்! ஆம் அவர்கள் கூட என்னிடம் கேட்கவில்லை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் என்னிடம் கேட்டாள்! உங்களுக்குக் கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டதாமே. ஒரே ஒரு பிள்ளைதான் உங்களுக்கு இப்படிப் போய் சோதிக்கிறானே கடவுள் உங்களை. இனி நீங்க ஒன்றாக இருந்தால் என்ன பயன் ஒன்றுமில்லை என்றால். சரவணன், நிர்மலாவிடம் கூறினான் சரிதான் இதை அந்த வேலை செய்பவள் உன்னிடத்தில் கேட்டிருக்கக் கூடாது தான். முதலில் மன்னி இதை அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது, அவளுக்குச் சாமர்த்தியம் அவ்வளவு அதன் போல். சரி நீ இதை நினைத்து கவலை கொள்ளாதே, நமக்குத் தான் ஒரு பிள்ளை இருக்கிறானே. மேலும் உனக்கு நான் ஒரு குழந்தை எனக்கு நீ ஒரு குழந்தை, உன்னிடத்தில் இருக்கும் அன்பு என்றுமே குறையாது. குழந்தையே இல்லையென்றாலும் நான் உன்னை வெறுக்கமாட்டேன். நீ இதை இப்படி எண்ணிப்பார்க்க வேண்டும்! குழந்தையே இல்லாதவர்களின் நிலை என்ன என்று
-பாலமுருகன்.லோ-
May be an illustration of text
All reactions:
Saraswathy A, Pachaiyappan Ge and 5 others

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...