ஆறுதல்…உஷாதீபன் சிறுகதை-வாசிப்பனுபவம்-பாலமுருகன் லோகநாதன்
*******************************
சரவணன், நிர்மலா இவர்களைப் பற்றிய கதை என்றுதான் படிப்பவர் எண்ணத்தோன்றும். ஆனால் சரவணன், நிர்மலா மாதிரி, இந்த உலகத்தில் பல நபர்கள் இருப்பதால்தான் ஆசிரியர் அதையே ஒரு சிறிய கதையாக நமக்குக் கொடுத்திருக்கிறார். இச் சிறுகதையை இயற்றியிருப்பவர் திரு உஷாதீபன் அவர்கள். இங்கு அன்றாட வாழ்கையில் நிகழலும் நிகழ்வையே இவர் கதைக்கருவாகக் கையாண்டிருப்பார்.
பல வீடுகளில் இதுபோன்று சின்னஞ்சிறு மனஸ்தாபம் கணவன் மனைவிக்கிடையே நிகழ்ந்த வண்ணமாக இருக்கும். ஒரு விஷயத்தைப் பெண்கள் ஒரு விதமாகவும் ஆண்கள் அதே வேறு வதமாகவும் நினைக்கின்றனர். பெரும்பாலும் ஆண் வர்க்கத்தினர் எல்லா விஷயத்தையுமே அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு, இதில் அப்படி என்ன இருக்கிறது சிறிய விஷயம்தானே நாம் ஏன் இதைக் கூட பிறந்த அண்ணனிடம் மன்னியிடம் கூறக் கூடாது என்று நினைத்துக் கூறிய விஷயமானது, கணவன் மனைவிக்கிடையே ஒரு பெரிய கருத்து வேறுபாடே உண்டாக்குகிறது.
இதனால் பல வீடுகளில் கணவன் மனைவிக்கிடையே தினந்தினம் ஏதோ ஒரு வகையில் சண்டை வந்த வண்ணமாக உள்ளது. அவள் கேட்கும் கேள்விகளுக்கு இவனால் பதில் கூற இயலவில்லை, ஏனென்றால் இதில் என்ன இருக்கிறது சாதாரண விஷயம்தானே என்று நினைத்து தன் கூட பிறந்தவனிடம் சொன்ன விஷயம் இப்படி பூதாகாரமாக வெடிக்கும் என்று அவனுக்கு அப்போது தெரியாது.
இதனால் விடுமுறை நாள் ஆனாலும் பரவாயில்லை நாம் அலுவலகத்திற்குச் சென்றோமேயானால் இவளிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்து சரவணன் மாதிரி பல நபர்கள் செய்வதுண்டு. ஆசிரியர் கூறிய மாதிரி பல காரியங்களுக்குப் பதிலுக்குப் பதில் பேசாமல் அதைப்பற்றி பேச்சை வளர்க்காமலிருந்தாலே பல நல்ல முடிவுகளை எடுக்க முடியும். மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக் கவசத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி இருப்பார்.
என்ன இது இதுவரை என்ன கதைக்கரு என்றுதானே பார்க்கிறீர்கள். ஆம் கணவன் மனைவிக்கிடையே பேசி மனப்பூர்வமாக அதற்குப் பிறகு வரும் விழைவுகளைக் கருத்தில் கொண்டு செய்த செயல். ஆம் பெண் வர்க்கத்தினருக்கு மிக முக்கியமான ஒரு உடல் உறுப்பு கர்ப்பப்பை அதை சில தொந்தரவுகளுக்காக மருத்துவரின் ஆலோசனையின் படி நீக்கியதை, கணவன் தன் அண்ணனிடமும் மன்னியிடமும் சொல்லியதையே இவள் இவனிடம் கேட்கிறாள் ஏன் இதைச் சொன்னீர்கள் அவர்களிடம். அவர்கள் அப்படியா இருக்கிறார்கள், எங்கோ செங்கல்பட்டு அருகே நிலம் வாங்கினார்கள் அதைச் சொன்னார்களா நம்மிடம், மேலும் எந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதில் அவர்கள் சொல்லமாட்டார்கள். நீங்கள் இப்பட்டிருக்கிறீர்களோ என்றாள். அதற்குச் சொந்த அண்ணன் மற்றும் மன்னியிடம்தான் சொன்னேன். இத்தனை வருஷம் ஒன்றாகத்தான் நானும் அண்ணாவும் வளர்ந்தோம். திருமணத்திற்குப் பிறகு தனித்தனியாகச் சென்றுவிட்டோம். நிர்மலா தன் கணவனிடம் கேட்டாள்! ஆம் அவர்கள் கூட என்னிடம் கேட்கவில்லை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் என்னிடம் கேட்டாள்! உங்களுக்குக் கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டதாமே. ஒரே ஒரு பிள்ளைதான் உங்களுக்கு இப்படிப் போய் சோதிக்கிறானே கடவுள் உங்களை. இனி நீங்க ஒன்றாக இருந்தால் என்ன பயன் ஒன்றுமில்லை என்றால். சரவணன், நிர்மலாவிடம் கூறினான் சரிதான் இதை அந்த வேலை செய்பவள் உன்னிடத்தில் கேட்டிருக்கக் கூடாது தான். முதலில் மன்னி இதை அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது, அவளுக்குச் சாமர்த்தியம் அவ்வளவு அதன் போல். சரி நீ இதை நினைத்து கவலை கொள்ளாதே, நமக்குத் தான் ஒரு பிள்ளை இருக்கிறானே. மேலும் உனக்கு நான் ஒரு குழந்தை எனக்கு நீ ஒரு குழந்தை, உன்னிடத்தில் இருக்கும் அன்பு என்றுமே குறையாது. குழந்தையே இல்லையென்றாலும் நான் உன்னை வெறுக்கமாட்டேன். நீ இதை இப்படி எண்ணிப்பார்க்க வேண்டும்! குழந்தையே இல்லாதவர்களின் நிலை என்ன என்று
-பாலமுருகன்.லோ-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக