02 அக்டோபர் 2014

திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 (2.10.2014 விழா)

 

 

 

2014-10-03 08.07.16 2014-10-03 08.09.05 2014-10-03 08.06.55 2014-10-03 08.08.55

நேற்று (02.10.2014) திரு கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருது விழா நாமக்கல்லில் சிறப்புற நடந்தேறியது. திரு ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் சி.பி.எம்.(எம்) அவர்கள் பேராசிரியர் திரு அருணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் முதன்மை விருது மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் விழங்கிச் சிறப்புரை வழங்கினார். வரவேற்புரையை திரு கு.பாரதிமோகன், உறுப்பினர், கு.சி.பா. அறக்கட்டளை நிகழ்த்தினார். துவக்கவுரையை திரு ச.தமிழ்ச்செல்வன் அரங்கேற்றினார்.திரு கா.பழனிச்சாமி, கு.சி.பா.அறக்கட்டளைச் செயலர் முன்னிலை வகித்து விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. தனக்கு வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் தொகையை அப்படியே கட்சி நிதியாக திரு ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார் திரு அருணன் அவர்கள். அருமையான ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியதும் மறக்க முடியாதது. இம்மாதிரி நாம் என்று பேசப் போகிறோம் என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தியது.
பல விருதுகள் பெற்ற, திறமையான, அற்புதமான படைப்பாளி திரு சுப்ரபாரதிமணியன் அவர்களுடன் காலை பத்து மணி முதல் மாலை மூன்று மணி விழா துவங்கும்வரை உடன் இருந்து உரையாடியது மறக்க முடியாத நிகழ்வாக எனக்கு அமைந்தது. அன்பும், அரவணைப்பும் உள்ள அவருடனான மன நெருக்கம் என்றும் என் நினைவில் நிற்பது.
இந்த பிரம்மாண்டமான விழாவில் எனது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்ட சிறப்பு விருது மற்றும் ரூ.10000 எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை. நிறைவாய்க் கிடைத்த விருதும் புத்தகங்களும், சான்றிதழும் அன்பு நண்பர்களின் பார்வைகாக... - உஷாதீபன்

01 அக்டோபர் 2014

“இளந்தமிழன்” மாத இதழில் ஒரு கட்டுரை – நானும் என் எழுத்தும்

“இளந்தமிழன்” என்றொரு மாத இதழ் உண்டு. பலருக்கும் தெரிந்திருக்காது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது. பழம் பெரும் உன்னதத் தலைவர்களின், எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படிக்க வேண்டுமா. நீங்கள் இந்த இதழை வாங்கித்தான் ஆக வேண்டும். அவற்றைப் படித்த பின்பு அவர்களின் மீதும், அதைப் பிடிவாதமாக, விடாது வெளியிட்டு வரும் இந்த இதழின் ஆசிரியர் மீதும் உங்களுக்கு மதிப்பு பன் மடங்கு கூடும். அந்த இதழில் என் கதைகள், கட்டுரைகள் வருவதை நான் பெருமையாக நினைக்கிறேன். அவை எனக்குக் கற்பூர வாசனை.
இந்த மாத அக்டோபர் 2014 இதழில் எனது “நானும் என் எழுத்தும்” என்ற தலைப்பிலான மனசாட்சிக்கு விரோதமில்லாத, அப்பழுக்கற்ற ஒரு கட்டுரை. முடிந்தால் படியுங்கள். நன்றி.2014-10-01 18.29.11 2014-10-01 18.30.09

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...