28 ஜனவரி 2020

எழுத்தாளர் திரு.தி.தா.நாராயணனின் வாசிப்பனுபவம்-    அவருக்கு என் நன்றிகள்.---------------------------------------------
“தவிக்கும் இடைவெளிகள்” -சிறுகதைத் தொகுதி-உஷாதீபன் (2014-கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது பெற்ற நூல்)
------------------------------------------------------------------
எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை, குறுநாவல்களை, , கட்டுரைகளை என்று எழுதும்  திறமையாளர். நான் உணர்ந்த அளவுக்கு இவரது எழுத்துக்கள் ஜாலிக்கானதோ, பொழுதைக் கொல்லுவதற்கானதோ அல்ல. சிந்திக்க வைக்கும் தரமுள்ளது. இது இவருடைய பத்தாவது சிறுகதைத் தொகுப்பு என்றறிய அ.ப்.ப்.ப்.பா.. எனக்கு மூச்சு முட்டுகிறது. ஆமாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறாராம்? ஒரு சின்ன கரு போதும் அவருக்கு, அந்த சின்ன புள்ளியை வைத்தே வாசல் முழுக்க வியாபித்து விடும் பிரமாண்டமான அழகிய கோலமாக்கிவிடுவார் நேர்த்தியாக. இத்தொகுப்பில் இவருடைய எழுத்தில் பரவலாகத் தெரியும் தனித்தன்மைபற்றி நான் சொல்லியாக வேண்டும்.

“நியாயம் என்றால் எது நியாயம்? உங்களுக்கு நியாய மானது மற்றவங்களுக்கும் நியாயமாக தோணனும்னு அவசியமா? கட்டாயமா? மனுஷாளுக்கு மனுஷாள் மாறுபடாதா? குணநலன்களை வச்சிதானே மனநிலை?...” --------இப்படி ஒரு பத்தி பூராவும், ஒரு பக்கம் பூராவும், ஏன் கதை முழுக்கவும் கேள்விகளாகவே, அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் பதில் என்று இவரால் எப்படி எழுத முடிகிறது? என்று வியப்பாக இருக்கிறது. கேள்வி களிலேயே சுவாரஸ்யமான ஒரு கதையும் வந்து விடுகிறது, அதில் ஒரு ஆழமும் கிடைத்துவிடுகிறது. அப்படிப் பட்ட திரு உஷாதீபன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றை NCBH வெளியிட்டிருக்கிறது.

“தவிக்கும் இடைவெளிகள்” ---இது மேற்படி சிறுகதைத் தொகுப்பின் பெயர். 19 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. படிக்கும்போதே தெரிகிறது ஒரு சிறுகதை எழுதுவதற்கான தந்திரங்கள் அத்தனையும் இவருக்குப் பிடிபட்டுள்ளன. முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிற வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தை, காலத்தைத் துண்டாக நறுக்கித் தருவதுதான் சிறுகதை என்கிற சிறுகதைகளுக்கான இலக்கணத்தில் உஷா தீபனின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒட்டிக் கொள்ளு கின்றன. அவற்றில் உயிர்த்துடிப்பும்,மனங்களின் சுழற்சியும், விசாலமும், கண்ணீர்த் தெறிப்பும், சிரிப்பு களும், உறைந்திருக்கின்றன. இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும், இது என் கதைதான், என் வீட்டில் இப்படித்தான் நடக்கின்றன, என்று நமக்குத் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அத்தனையும் நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்க்கைகளே.

ஐம்பது காசை ஏமாந்து விடுவோமோ என்ற தவிப்பு, சொல்லவும் முடியாத கூச்சம், அப்படியே நடுத்தர வர்க்க மனிதர்களின் இயல்பை `மனக்கணக்கு’ கதையில் வடித்து விடுகிறார்,

`சுப்புண்ணா’ கதையில் மனம் பேதலித்த மகனைப் பராமரிக்கும் ஒரு குடும்பம். அவர்கள் படும் வலிகள், ஊடே அவன் முரட்டுத்தனமாய் எதையும் செய்வானோ என்கிற அச்சம். முடிவு அதிர்கிறது. செட்டான விவரிப்பு.

மரணம்...? ஒருவருடைய மரணத்தில் அவரோடு வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை, சுவாரஸ்யங்களை அசைபோட்டு, சொல்லிச் சொல்லி அழுவது இயல்பு. அவற்றை நோகநோகச் சொல்கிறார். `செத்தும் கொடுத்தார் சித்தப்பா” கதையில்,

`சபாஷ் கணேசா’ நாம் அங்கங்கே பார்க்கக்கூடிய ஒரு மனிதர். ஏன் அது நாமாகக் கூட இருக்கலாம். . ஒரு வேலை செய்யாமல் கெத்தாக திரியும் மனுஷன். சரி இவரிடம் என்ன கதை இருக்கிறது? இருக்கிறதே. கடைசியில் ஒரு உன்னதமான காரியம் செய்து பிறருக்காக வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தமே இருக்கிறது என்பதில் நமக்கு ச்சே! என்று மனங்குளிர்ந்து போகிறது.

‘நாக்கு’ என்றொரு கதை என்னை நெகிழ வைத்து விட்டது. பொதுவாகவே வயசான தாத்தா பாட்டிகள் பேரனுக்குத் தின்பண்டங்களை ஊட்டும்போது தானும் ஒரு வாய் போட்டுக்கிறதுதான். நாலு பிஸ்கட் பையனுக் கென்றால் ஒண்ணு பாட்டிக்கு. அதற்குக் காரணம் அவர்கள் தன் வாழ்நாள் முழுக்க தன் பிள்ளைகள் சாப்பிடணும்னு தன் வேட்கையை அடக்கிக் கொண்டவர்கள். இப்போது வில்பவர் போன பின்னால் ஆசையை அடக்க முடிவதில்லை. அப்படித்தான்

காலம் முழுக்க தான் வாழ்க்கைப்பட்ட தன் பெரிய குடும்பத்திற்கு விதவிதமாகச் செய்து போட்டு, தானும் சாப்பிட்டு மகிழ்ந்த மரகதம் பாட்டிக்கு நாக்கு நீளம் என்று மருமகள் திட்டுகிறாள். தன் கணவரின் வருடாந்தர திதிக்காக தன் எதிரில் மருமகள் சுட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் வடையும், மொறுமொறு அதிரசமும் அவளுக்கு வாயில் நீர் சுரக்க வைக்கிறது. சாப்பிடு என்று கணவனே சொன்னதைப் போல் மானசீகமாய் உணர்ந்து, ஒரு அதிரசத்தை எடுத்துக் கடிக்க பேரன் போட்டுக் கொடுத்து விடுகிறான். அதைத் தொடர்ந்து நடக்கும் ஏச்சுக்கள். நம் கண்கள் கலங்கிவிடுகின்றன. சம்பவங் களும் சொன்ன நேர்த்தியும் மனசைப் பிழிகிறது.

இன்னொரு கதை `சுயம்’-கொஞ்சம் விவகாரமான விஷயம். கறவல் மாடுகளை வைத்துக் கொண்டு அவை களே தன் உலகம் என்று வாழ்ந்து வரும் பரமேஸ்வரன், மின்சாரத் துறையிலிருந்து ஓய்வு பெற்றவர். பாட்டு டீச்சரான அவர் மனைவி கொஞ்சகாலம் யாருடனோ வாழ்ந்து விட்டுத் திரும்பி வந்தவள் என்கிற விஷயம் மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகிறது. இந்தாளுக்கு புத்தியில்லே என்றெல்லாம் விமர்சனங்கள். ஆனால் முடிவில் அதிலிருந்து விலகி, அதிலுள்ள இன்னொரு கோணத்தைக் காட்டும் கொச்சையில்லாத செக்ஸ் கதை.

`இனம்’ என்றொரு கதை. குட்டித் துணி தலை யணையைத் தோளில் இருத்தி அதன் மேல் தையல் மிஷினை ஏற்றி,தெருத்தெருவாய் சுற்றி தைக்கும் தொழிலாளி ஆறுமுகம் வேலையில் சுத்தம், நேர்மை போன்ற அவன் பண்புகளால் அந்தக் குடும்பத் தலைவனை ரொம்பவே பாதித்தான். அவன் மீது இரக்கம் கொள்ளும் கணவன் அவனுக்கு பேங்க் லோனுக்கு ஏற்பாடு செய்ய லாமா? என்று யோசிக்கிறான். மனைவி உபத்திரவம் வேண்டாம் என்று தடுத்து விடுகிறாள். கையறு நிலை. அவன் வாழ்வு மேம்படாதா? என்று நினைக்கிறார். ஒரு நாள் ஆறுமுகம் வந்து நன்றி சொல்லுகிறார். உங்களால் தான் கஷ்டமில்லாமல் நாலு ஊர்களுக்குப் போய் சம்பாதிக்க முடிகிறது என்கிறான். பார்த்தால் தான் ஸ்கூட்டர் வாங்கியபின் உபயோகமில்லாமல் கிடந்த தன்னுடைய பழைய சைக்கிளை மனைவி தூக்கி அவனுக்கு இனாமாகக் கொடுத்து விட்டிருக்கிறாள். அவளுடைய மனவிசாலத்தைக் கண்டு அவருக்கு குபீரென்று பூரிப்பு. கூடவே லேசாய் ஒரு உறுத்தல் தனக்கு அந்த யோசனை வரவில்லையே என்று. கதையின் கட்டுக்கோப்பும், நடையும்... நான் ரசித்துப் படித்தேன்.

வயதான தாயைப் பராமரிக்கும்போது நுணுக்கி நுணுக்கி எத்தனை விஷயங்களைப் பார்க்கவேண்டி யிருக்கிறது. படித்து முடிக்கும்போது வாழ்ந்து முடித்த நிறைவு ஏற்படுகிறது. உணர்வுகள் கதையில்.

பையனைப் பொறுப்புடனும், தன் பணியில் ஒரு ஈடுபாட்டோடு செய்ய வேண்டுமே என்ற கவலை யோடு, மகனுக்குக் கற்றுத்தரும் (திட்டி) தந்தையும், அவனை ஏன் சும்மா திட்றீங்க என்று மகனுக்காக மல்லுகட்டும் மனைவியும் அச்சு அசலாய் என் வீட்டில் நடக்கிறது. ஏன் எல்லாருடைய வீடுகளிலும் தான்.இது `கேள்விகள்’ கதை.

‘விட்டதடி ஆசை’ என்ற கதையில் கல்யாணமாகி புதுக்குடித்தனம் போக வாடகைக்கு வீடு பார்க்கப் போகும் போது, அங்கே எதிர் போர்ஷன் பெண் பலவீனப்பட்டு சிருங்கார சமிக்ஞை காட்டுவதும், அதைப் பிடிக்காத அந்த ஆண் ஒதுங்கிவிட்டு வெளியே வந்து விடுதலும் சற்று வலிந்த கற்பனையாய்ப் பட்டது. முதல் பார்வை யிலேயே ஒரு பெண் அந்தஅளவுக்கு இறங்கி வருதலும், இளைஞனான அவன் கொஞ்சமும் சலனப் படவே யில்லை என்பதில் சற்று மிகை தெரிந்தது.   

தவிக்கும் இடைவெளிகள் என்ற கதை அருமை அருமை, மனம் லயித்தது. சாஃப்ட்வேர் அடிமைகளாக சேர்ந்து, கைநிறைய சம்பாதித்து, கெத்தாக திரியும் மகன் களைக் கொண்ட தகப்பன்களுக்கெல்லாம் ஏற்படும் அனுபவம். அட்வைஸ் தருவதால் மகன்களிடம் செல்லாக் காசாகிவிடும் தகப்பன்கள். ஆனால் எந்த மனைவியும் அட்வைஸ் தருவதில்லை. பச்சோந்திகளாய் கட்சி மாறி அவனுடன் அரட்டையடிக்கப் போய் பிள்ளைகளுக்குப் பிடித்த அம்மாவாக இருக்கிறார்கள். தலைமுறை இடைவெளி.

இப்படி இவருடைய கதைகளில் மத்தியமர்கள் தான் உலாவருகிறார்கள். கேள்விகளின் மூலம் சுவாரஸ்யமாய் போதிக்கிறார்கள். வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருகிறார்கள். படிக்கும்போதே வாழ்ந்த நிறைவு. தமிழ்ச் சிறுகதைகளுக்கு இத்தொகுப்பு ஒரு ப்ளஸ். இன்னொரு ப்ளஸ் அதன் இலக்கியத்தரம். வாசகர்களுக்கு என் அப்பீல், இதை வாங்கிப் படியுங்கள், அப்போது தெரியும் நான் சொல்லாமல் விட்ட பல ப்ளஸ்கள் அநேகம் உண்டு என்று.
Save

14 ஜனவரி 2020

“நிழல் பிம்பங்கள்” - புதுகை சஞ்சீவி - சிறுகதைத் தொகுதி- வாசிப்பனுபவம் -



“நிழல் பிம்பங்க
ள்” - புதுகை சஞ்சீவி - சிறுகதைத் தொகுதி- வாசிப்பனுபவம் - உஷாதீபன்       லை இலக்கியம் என்பதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு அப்புறம்தான். அதையே வாழ்க்கையாக வைத்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியாது. ஓரிருவருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகி இருக்கலாம். ஆனாலும் வயிற்றுப்பாட்டுக்காக அன்றாநிழல் டம் கடுமையாக உழைத்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுபவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்க்கைப்பாடுகளுக்கூடாக சில கனவுகள் உடன் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அது தவிர்க்க முடியாததாகவுமிருக்கும்.                                                                          எளிய மனிதர்களின் மனதில் இரக்கமும், மனித நேயச் சிந்தனையும் எப்போதும் படிந்திருக்கும் ஒன்று. தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்வது, வாழ்க்கையை அலட்டலின்றி மிக எளிமையாக வாழப் பழகிக் கொள்வதன் மூலம் மன நிம்மதியைத் தேடிக் கொள்வது, உறவுகளிடையே அன்பையும் பாசத்தையும், நட்புகளிடையே நேசத்தையும் வளர்த்து எந்தக் கணத்திலும் அது வாடி விடாமல் பாதுகாத்து நிற்பது ஆகிய வெள்ளந்தியான, வெளிப்படையான, அலட்டலில்லாத  வாழ்க்கை எல்லோருக்கும் அதன் போக்கில் சாதாரணமாக அமைந்து விடுவதில்லை.                                                                     இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், எழுத்தாளர் திரு புதுகை சஞ்சீவி அவர்களுக்கு அது தன் போக்கில் அமைந்திருக்கிறது. அதனால்தான் தான் அன்றாடம் காணும் மனிதர்களிடமிருந்து, அவர்களின் ஒவ்வொரு அசைவுகளிலுமிருந்து, அவர்களுடனான உரையாடல்களிலிருந்து தனக்கான கருத்தை மையமிட்டுக் கொண்டு,  அதிலுள்ள நியாயங்களை, மனக் கிலேசங்களை, மன அவசங்களை அவருக்கான வடிகாலாய் சின்னச் சின்னப் படைப்புக்கள் மூலம் சிறுகதைகளாக்கி நம் முன்னே நேர்மையாய் வரிசைப்படுத்துகிறார்.                                  ஜீவனோபாயத்திற்கான தொழிலாக எழுத்தை நம்பி வாழ முடியாதென்றாலும், மனதளவில் ஏமாற்றப்பட்ட மனிதனாக, எடுத்துரைக்க முடியாத கோழையாக, எது எக்கேடு கெட்டால் என்ன என்கிற விட்டேற்றியாகத் தான் இருந்துவிடக் கூடாது என்கிற உந்துதலில் உருப்பெற்றிருக்கும் இவரது ஒவ்வொரு படைப்பும் ஒரு முக்கியக் கருத்தை நமக்குச் சொல்லி நம்மைச் சிந்திக்க வைக்கிறது.                                                                                         வாழும் காலங்களில் சிலரது இருப்பு மற்றவர்களிலிருந்து வேறுபட்டிருக்கும். அந்த வேறுபாடு என்பது அபூர்வமானதாய், சாதரணமாய் யாரிடமும் தென்படாத, நடைமுறையில் பொருந்தாத நடவடிக்கையாய் இருக்கும். ஆனால் அவர்களை நாம் அதற்காக ஒதுக்கிவிட முடியாது. நச்சு நச்சென்று வீட்டு நடவடிக்கைகளை கவனிப்பதும், குறை சொல்வதுமாய் இருப்பவர்களால் நாம் நம்மையறியாமல் பொறுப்புள்ளவர்களாய் உருப்பெறுகிறோம் என்பதுதான் உண்மை. அப்படிச் சொல்ல ஆள் இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியவரும். அந்த மனிதர்களின் பெருமை வாழும் காலங்களில் புலப்படாது. நச்சரிப்பாய்த் தோன்றும். ஆனால் அவர்களால் நாம் இந்த வாழ்க்கைக்குத் தயாராகிறோம் என்பதுதான் உண்மை. புண்படுத்துகிறவர்கள் நம்மைப் பண்படுத்துகிறார்கள் என்று பொருள்.                                  ங்கத்தம்மா அப்படித்தான் போய்ச்சேர்ந்தால் போதும் என்று நினைத்து வெறுக்கும் அளவு கடைசி காலத்தில் பீ, மூத்திரம் எடுக்கும் நிலைக்குப் போய் கதை முடிந்தாலும், அவர்களின் நெஞ்சுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண அலைகள், தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளின் நலன் பொருட்டே இருக்கும் என்கிற கருத்தை உணர்த்துகிறது. அதன் அடையாளம்தான் அவனைப் பத்திரமாப் பார்த்துக்கோ என்று சொல்வது. முதியவர்களை மதித்தலும், போற்றுதலும், சேவை செய்தலும் நம் கடமை என்பதை உணர்தல் நன்று என்கிற கருத்து இங்கே முன் நிற்கிறது.             நா போயிட்டு வர்றேன் என்று சொல்வதற்கு எத்தனை முதிர்ச்சி வேண்டும்? அந்த மனப் பக்குவம் கிட்டியவர்கள் பாக்கியசாலிகள். பாக்கியத்தம்மா நம் மனதில் நிற்கிறார்.                .னிதன் எதையும் நேசிக்க முடியும். நல்ல மனசு வேண்டும். இயற்கையை, மரம் செடி கொடிகளை, மனிதர்களை, விலங்குகளை இப்படி அனைத்தையும் ரசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் நல்ல வாசகனாகவும் இருக்க முடியும். படைப்பாளியாகவும் ஆக முடியும்.             அன்றாடம் கண்கொணடு பார்க்கும் குளத்தின் மீது இவன் கொண்டிருந்த ப்ரீதி அவனை அப்படிப் பலவாறு எண்ண வைக்கிறது. அந்தக் குளம் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும், அதில் பிறர் இறங்கிக் குளிக்க  உரிமையில்லையென்றும், அது தன் உடலின் உஷ்ணத்தைத் தணித்து, தனக்கு குளிர்ச்சியை  நல்குவதற்காகவே தண்ணீரைத் தேக்கி நிற்கிறது என்றும், காற்றின் வீச்சில் அலைஅலையாய்த் தன்னை அழகுபடுத்திக் கொண்டு தனக்காகக் காத்திருக்கிறது என்றும், குளத்தினை வேறொருவர் பயன்படுத்தும் நிலையில் கோபம் கொள்வதாயும், அதன் மொத்த உரிமையும் தனக்கானதேர என்றும் புனைவை ஓடவிட்டிருக்கும் படைப்பாளி பாராட்டுக்குரியவர்.         தவி செய்யும் மனப்பாங்கு சாதாரணமாய் மனுஷனுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும். அதனால் துன்பம் வருமானால் தயங்குவது இயல்பு. அதையும் மீறி ஆபத்தில் இருக்கிற ஒருவனுக்கு  உதவி செய்ய சராசரி மனுஷ மனசு துணிவதில்லை. எளிய மனிதன் அய்யோ, இவர் இப்படித் துன்புறுகிறாரே என்று இரக்கம் கொள்ள மட்டுமே இயலும். ஆனால் ஒரு பத்திரிகையாளராய் இருப்பவர் உதவி செய்ய தைரியமாக முன்வரும்பொழுது அதற்கு பயப்படுகிறது காவல். ஆனால் சாதாரண மனிதனுக்கு அது சாத்தியமாவதில்லை. இப்படிப் பலவும் பார்த்துப் பார்த்து, பலரும் ஒதுங்கினால் அப்புறம் யார்தான் துன்பப்படுவோர்க்கு அல்லது ஆபத்தில் இருப்போர்க்கு உதவுவது?                                                                    வலிப்பு நோயில் வீழ்ந்து கிடக்கும் ஒருவனுக்கு உதவுகிறான் அவன். மனித நேயம் முற்றிலும் அழிந்து விடவில்லை. அவ்வப்போது உயிர்த்தெழுகிறது என்கிற நல்ல கருத்தை முன் வைக்கிறது இக்கதை.                                                                           ம் அன்றாட வாழ்க்கையில் நாம் பலரையும், பல்வேறுவிதமான மனிதர்களையும் பார்த்திருப்போம். பழகியிருப்போம்.  அதே சமயம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மனப் பிறழ்வு கொண்ட மனிதர்கள் ஒருவரையேனும் கண்டிப்பாகச் சந்தித்திருக்கக் கூடும். நம் ஊரில் நம் தெருவிலேயே இருந்திருக்கவும் கூடும். வெளியூர் செல்கையில் அங்கு பார்த்திருப்போம். புண்ணிய ஸ்தலங்களில்,மக்கள் அதீதமாய்க் கூடும் சுற்றுலா இடங்களில் எங்கேனும் ஒரு மூலையில் ஒருவரையேனும் கண்டிப்பாகப் பார்க்க முடியும்.                                                     உறவுகளை ஒரு கட்டத்துக்கு மேல் வைத்துக் காப்பாற்ற முடியாது என்கிற முடிவுக்கு வந்து இம்மாதிரி இடங்களுக்கு வரும்போது வேண்டுமென்றே விட்டு விட்டுச் சென்று விடுவது வழக்கமாயிருக்கிறது. சொந்த ஊரிலிருந்து வெகு தூரம் தள்ளிச் சென்று காணாததுபோல் கண்டு கொள்ளாமல் தள்ளிவிட்டு வெளிநாடு சென்று விட்டவர்களும் இருக்கிறார்கள். மனநலக் காப்பகத்தில் சேர்த்து, வருடம் தவறாமல் பணம் அனுப்பிப் பாதுகாப்பவர்களும் உள்ளார்கள். ஆனால் நேரில் சென்று ஒரு முறையேனும் பார்த்து வருவது என்கிற நிக ழ்வெல்லாம் கிடையாது இச் செயலில். எனக்குத் தெரிய....சார்...சார்...எங்க அப்பாம்மா எப்ப வருவாங்க...எப்ப வருவாங்க சார்...அவங்ககிட்ட என்னைக் கொண்டு விடுறீங்களா...? கூட்டிட்டு வருவீங்களா? என்று கேட்டு நச்சரித்த மன நோயாளியை நான் கண்டிருக்கிறேன்.                                       ஏன் இத்தனை புத்தி ஸ்வாதீனமற்ற மனிதர்கள் இங்கே இப்படித் திரிகிறார்கள் என்று ராமேஸ்வரம் போன்ற இடங்களில் கண்டவர்கள் காரணம் தேடி வேதனையுற்றதையும் அப்படி விட்டுவிட்டு வந்த ஒருவர் இவர்கள் ஊர் வந்து சேரும் முன்பே வந்து வீட்டு வாசலில் வந்து காத்திருந்த கதைகளும் கூட உண்டு. அப்படி ஒருவனைப்பற்றிய கதையைத்தான் “சின்ன மீனை விழுங்கும் மீன்” கதை சொல்கிறது. வாழ்ந்து கெட்டவன் என்று உணரும்போது மனம் வேதனையுறுகிறது. மனித நேயத்தை மையச் சரடாகக் கொண்ட இக்கதை மிகுந்த பாராட்டுக்குரியதாகிறது.                                                                          தி.மு.தி.பி என்றொரு கதை. திருமணத்திற்கு முன் தேனாய் இனிக்கும் பெண்ணின் வார்த்தைகளும், பேச்சும் திருமணத்திற்குப் பின்பு கசந்து போகிறது. சராசரிக் கணவனின் சுயரூபம் வெளிப்படுகிறது. சுடு சொற்களால் மனைவியைச் சுட்டுக்கொண்டே,..... ஊசி போல் குத்திக்கொண்டேயிருக்கிறது அவன் வார்த்தைகள். பெண் அடங்கிப் போனால் அது தொடர்கிறது. ஆண் என்கிற திமிரில் அது பேயாய் ஆடுகிறது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே? அந்தப்பெண் ஒரு நாள் கொதித்தெழுகிறாள்.  இதுதான் கதை. படைப்பாளியின் நியாய உணர்வு இம்மாதிரிப் படைப்புக்களைக் கொண்டு வருகிறது. வாசிப்பவர்களின் மனதை நிறைக்கிறது.               ட்சியவாதம் என்பது இளவயது வீச்சு. பலரின் முன்னே, தான் வித்தியாசப்பட்டவன் என்று காட்டிக் கொள்வதும், அந்த நோக்கிலேயே சிந்திப்பதும்,இளமைத் துடிப்பில் செயல்படுவதும் சகஜம். அப்படித்தான் ஜோசப்பும் இருக்கிறான். எல்லாரும் அழகான பெண்களையே தேடினால் அழகற்ற அவலட்சணமான , பார்வையற்ற, ஊமையாய் உள்ள , ஊனமுற்ற நிலையிலுள்ள பெண்களையெல்லாம் யார் கட்டுவது? அவர்கள் வாழ்வின்றித் திரிய வேண்டியதுதானா? அவர்களையெல்லாம் கொண்டு கடலிலா தள்ள முடியும்? என்கிற ரீதியில் சிந்திக்கிறான்.                கடைசியில் அவனுமே ஒரு தவறிழைத்து விடுகிறான். பழகிய பெண்ணை ஒரு முக்கிய கட்டத்தில் கைவிட நினைக்க, நழுவ முயற்சிக்க பெண்ணின் பெற்றோர் மிரட்டலில் திருமணம் நடந்து விடுகிறது. ஊரும் உறவும் கூடி நிற்கும் பொழுதில் உறவுகளுக்கு வயிற்றெரிச்சல்தான் மிஞ்சுகிறது. எவ்வளவு அழகான பையன். அவனுக்கு எத்தனை அவலட்சணமாய் அமைந்திருக்கிறது? என்று வருந்துகிறார்கள்.                                                          வெவ்வேறு வடிவங்களில் கதை எழுதிப் பார்க்க வேண்டும் என்கிற முயற்சியில் கதையின் பாத்திரங்கள் தனித்தனியாக அவரவர் கருத்துக்களைப் பதிவு செய்வதாக வருத்தங்களை, மனக் கிலேசங்களை வெளியிடுவதாக ஜங்ஷன் என்றஇக்கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.                இருதயத்தின் கசப்பு என்று ஒரு கதை. வாழும் காலத்தில் பயனற்றுப் போனதற்கு, வயதான காலத்தில் வருந்தும் ஜுவன்களைக் கண்டிருக்கிறோம்.இந்தக் கதையின் நாயகன் புற்று நோயில் இறந்து போய், தாய் தந்தையர்க்கு, உறவுகளுக்கு, இந்த சமுதாயத்துக்குப் பயனற்றுப் போனோமே என்று சவமாய்க் கிடக்கையில் எண்ணிப் பார்ப்பதுபோல் புனைவு செய்யப்பட்டிருக்கிறது இக்கதை. எல்லா மனித ஜீவன்களும் தங்கள் தவறுகளுக்கு ஒரு கட்டத்தில் வருந்துகின்றன. வருந்தாமல் போன உயிர்கள் என்று எதுவுமே இருக்க முடியாது. வெளியில் சொல்லவில்லையாயினும் மனதுக்குள் புழுங்கி, குமைந்து மடிந்து போன ஜீவன்கள் கண்டிப்பாய் உண்டுதான். ஆனால் நோவில் படுத்து, வேதனை அனுபவித்துப் போனவர்கள் சிந்திக்க ஆரம்பிக்கும்போது அந்த வேதனை அவர்களை மேலும் சிதைப்பது மட்டுமல்லாது உடனிருப்பவர்களையும்,உறவுகளையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. இக்கதையில் அப்படி நோயுற்று உயிரை விட்ட  நாயகனின் சோகத்தில் நாமும் தவிர்க்க முடியாமல் பங்கு பெறுகிறோம்.                                        திசைகளற்ற வெளி:- இளம் பிராயத்தில் நாம் கேட்ட பொருழளை  வாங்கிக் கொடுக்க பெற்றோர்களிடம் பொருளாதார வசதியிருக்காது. நாம் விரும்பும் பள்ளியில் படிக்க வைக்க முடியாது. நம் விருப்பங்கள் நிறைவேற குடும்பச் சூழல்,வறுமை, வசதியின்மை ஒத்துழைக்காது.          இப்படியான நிலையில் விவரமின்றி வீட்டை விட்டு வெளியேறி விடும் சிறுவர்கள் இளைஞர்கள் உண்டு. அப்படித்தான் இக்கதையின் சிறுவன் மணி வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் நண்பனைத் தேடிப் போய் விடுகிறான். பிறகு அவர்கள் ஊருக்குத் தகவல் சொல்ல, தந்தை பார்த்துவிட்டுப் போக, பிறகு  கொஞ்ச நாளில் அப்பா இறந்து விட்டதாகத் தகவல் வர, ஊருக்கு வரும் இவன், வழியில்  கைவசம் இருந்த பணத்தையும் தொலைத்து பிச்சையெடுக்கும் நிலைக்குப் போய் விடுகிறான். சிறுவர்கள் செய்யும் அறியாத் தவறு அவர்களை இப்படியெல்லாம் சீரழிய வைக்கும் என்பதைச் சொல்லும் கதை. திசைகளற்ற வெளியில் கதியின்றி நிற்கிறான் சிறுவன். எப்படியெப்படி விஷயங்களெல்லாம் இவரைப் பாதித்திருக்கிறது என்று நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நல்ல சிந்தனையுள்ள மனிதன்....இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் வழக்கமுடையவனாக, இருக்கும் நிலையில் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொள்பவனாக, வாழ்வின் எல்லாச் சிக்கல்களிலிருந்தும் எளிமையாக வெளிவரும் சிறப்பு மிக்கவனாக வாழ்ந்து கழிக்கும் பக்குவம் பெற்றவனாக இருக்க முடியும். படைப்பாளியை நோக்கி இம்மாதிரியான சிந்தனையை நமக்கு அளிக்கிறது இவரது எழுத்து.                                                      கதியின்மை:- கதியற்றுக் கிடக்கும் அநாதைகளைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார் இக்கதையை. தன் கடைக்கு அருகிலான பஸ் ஸ்டாப்பில் சுருண்டு கிடக்கும் கிழவிக்கு சாப்பிடக் கொடுத்து, அவளை ஏதேனும் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட முயல்கிறார்.  அநாதை என்று பதிவுசெய்து FIR போட்டு பிறகு கொண்டு வாருங்கள், சேர்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் இல்லத்தார். இல்லையெனில் கொலைப்பழி விழ வாய்ப்புள்ளது என்கிற உண்மை இக்கதையின் மூலம் தெரிய வருகிறது. உதவி செய்வதில் கூட இம்மாதிரி ஆபத்தெல்லாம் இருக்கிறது என்கிற உண்மை நம்மைப் பதைக்க வைக்கிறது. இரக்கம் கொள்பவர்கள், உதவ நினைப்பவர்கள் எளிய மனிதர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் அன்றாடப் போராட்டங்களிலிருந்து இம்மாதிரிச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டால்...பிறகு நற் சிந்தனையையே நாளா வட்டத்தில் கை விடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்தப் பேரபாயம் இக்கதை மூலம் நம் மனதை உறுத்துகிறது. நாட்டின் கதியற்றோர் மீதான இரக்கச் சிந்தை ஆசிரியரின் எழுத்தில் படிந்து, நம்மனதை சுமையாக்குகிறது.                                                                       தலைமைப் பீடம், நிழல் பிம்பங்கள் என்று இன்னும் இரண்டு கதைகள் இத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன. மொத்தம் 11 சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பினை திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகம் கொண்டு வந்திருக்கிறார்கள்.                                       புதுகை சஞ்சீவியின் மனித நேயச் சிந்தனை அவருக்கு இன்னும் இன்னும் வெவ்வேறு களங்களிலான புதுமையான சிந்தனைகளைக் கொடுத்து, மிகச் சிறந்த படைப்பாளி என்கிற ஸ்தானத்தில் அவரை உயர்த்தி வைக்கும் என்பது நிச்சயம். அதற்கு “நிழல் பிம்பங்கள்” என்ற இத்தொகுதி நற்சான்றாய் விளங்கி தலை நிமிர்ந்து நிற்கிறது. அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.                                                                                                              -------------------------------------------------------


நிழல் பிம்பங்கள்” - புதுகை சஞ்சீவி - சிறுகதைத் தொகுதி- வாசிப்பனுபவம் - உஷாதீபன்       லை இலக்கியம் என்பதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு அப்புறம்தான். அதையே வாழ்க்கையாக வைத்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியாது. ஓரிருவருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகி இருக்கலாம். ஆனாலும் வயிற்றுப்பாட்டுக்காக அன்றாடம் கடுமையாக உழைத்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுபவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்க்கைப்பாடுகளுக்கூடாக சில கனவுகள் உடன் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அது தவிர்க்க முடியாததாகவுமிருக்கும்.                                                                          எளிய மனிதர்களின் மனதில் இரக்கமும், மனித நேயச் சிந்தனையும் எப்போதும் படிந்திருக்கும் ஒன்று. தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்வது, வாழ்க்கையை அலட்டலின்றி மிக எளிமையாக வாழப் பழகிக் கொள்வதன் மூலம் மன நிம்மதியைத் தேடிக் கொள்வது, உறவுகளிடையே அன்பையும் பாசத்தையும், நட்புகளிடையே நேசத்தையும் வளர்த்து எந்தக் கணத்திலும் அது வாடி விடாமல் பாதுகாத்து நிற்பது ஆகிய வெள்ளந்தியான, வெளிப்படையான, அலட்டலில்லாத  வாழ்க்கை எல்லோருக்கும் அதன் போக்கில் சாதாரணமாக அமைந்து விடுவதில்லை.                                                                     இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், எழுத்தாளர் திரு புதுகை சஞ்சீவி அவர்களுக்கு அது தன் போக்கில் அமைந்திருக்கிறது. அதனால்தான் தான் அன்றாடம் காணும் மனிதர்களிடமிருந்து, அவர்களின் ஒவ்வொரு அசைவுகளிலுமிருந்து, அவர்களுடனான உரையாடல்களிலிருந்து தனக்கான கருத்தை மையமிட்டுக் கொண்டு,  அதிலுள்ள நியாயங்களை, மனக் கிலேசங்களை, மன அவசங்களை அவருக்கான வடிகாலாய் சின்னச் சின்னப் படைப்புக்கள் மூலம் சிறுகதைகளாக்கி நம் முன்னே நேர்மையாய் வரிசைப்படுத்துகிறார்.                                  ஜீவனோபாயத்திற்கான தொழிலாக எழுத்தை நம்பி வாழ முடியாதென்றாலும், மனதளவில் ஏமாற்றப்பட்ட மனிதனாக, எடுத்துரைக்க முடியாத கோழையாக, எது எக்கேடு கெட்டால் என்ன என்கிற விட்டேற்றியாகத் தான் இருந்துவிடக் கூடாது என்கிற உந்துதலில் உருப்பெற்றிருக்கும் இவரது ஒவ்வொரு படைப்பும் ஒரு முக்கியக் கருத்தை நமக்குச் சொல்லி நம்மைச் சிந்திக்க வைக்கிறது.                                                                                         வாழும் காலங்களில் சிலரது இருப்பு மற்றவர்களிலிருந்து வேறுபட்டிருக்கும். அந்த வேறுபாடு என்பது அபூர்வமானதாய், சாதரணமாய் யாரிடமும் தென்படாத, நடைமுறையில் பொருந்தாத நடவடிக்கையாய் இருக்கும். ஆனால் அவர்களை நாம் அதற்காக ஒதுக்கிவிட முடியாது. நச்சு நச்சென்று வீட்டு நடவடிக்கைகளை கவனிப்பதும், குறை சொல்வதுமாய் இருப்பவர்களால் நாம் நம்மையறியாமல் பொறுப்புள்ளவர்களாய் உருப்பெறுகிறோம் என்பதுதான் உண்மை. அப்படிச் சொல்ல ஆள் இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியவரும். அந்த மனிதர்களின் பெருமை வாழும் காலங்களில் புலப்படாது. நச்சரிப்பாய்த் தோன்றும். ஆனால் அவர்களால் நாம் இந்த வாழ்க்கைக்குத் தயாராகிறோம் என்பதுதான் உண்மை. புண்படுத்துகிறவர்கள் நம்மைப் பண்படுத்துகிறார்கள் என்று பொருள்.                                  ங்கத்தம்மா அப்படித்தான் போய்ச்சேர்ந்தால் போதும் என்று நினைத்து வெறுக்கும் அளவு கடைசி காலத்தில் பீ, மூத்திரம் எடுக்கும் நிலைக்குப் போய் கதை முடிந்தாலும், அவர்களின் நெஞ்சுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண அலைகள், தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளின் நலன் பொருட்டே இருக்கும் என்கிற கருத்தை உணர்த்துகிறது. அதன் அடையாளம்தான் அவனைப் பத்திரமாப் பார்த்துக்கோ என்று சொல்வது. முதியவர்களை மதித்தலும், போற்றுதலும், சேவை செய்தலும் நம் கடமை என்பதை உணர்தல் நன்று என்கிற கருத்து இங்கே முன் நிற்கிறது.             நா போயிட்டு வர்றேன் என்று சொல்வதற்கு எத்தனை முதிர்ச்சி வேண்டும்? அந்த மனப் பக்குவம் கிட்டியவர்கள் பாக்கியசாலிகள். பாக்கியத்தம்மா நம் மனதில் நிற்கிறார்.                .னிதன் எதையும் நேசிக்க முடியும். நல்ல மனசு வேண்டும். இயற்கையை, மரம் செடி கொடிகளை, மனிதர்களை, விலங்குகளை இப்படி அனைத்தையும் ரசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் நல்ல வாசகனாகவும் இருக்க முடியும். படைப்பாளியாகவும் ஆக முடியும்.             அன்றாடம் கண்கொணடு பார்க்கும் குளத்தின் மீது இவன் கொண்டிருந்த ப்ரீதி அவனை அப்படிப் பலவாறு எண்ண வைக்கிறது. அந்தக் குளம் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும், அதில் பிறர் இறங்கிக் குளிக்க  உரிமையில்லையென்றும், அது தன் உடலின் உஷ்ணத்தைத் தணித்து, தனக்கு குளிர்ச்சியை  நல்குவதற்காகவே தண்ணீரைத் தேக்கி நிற்கிறது என்றும், காற்றின் வீச்சில் அலைஅலையாய்த் தன்னை அழகுபடுத்திக் கொண்டு தனக்காகக் காத்திருக்கிறது என்றும், குளத்தினை வேறொருவர் பயன்படுத்தும் நிலையில் கோபம் கொள்வதாயும், அதன் மொத்த உரிமையும் தனக்கானதேர என்றும் புனைவை ஓடவிட்டிருக்கும் படைப்பாளி பாராட்டுக்குரியவர்.         தவி செய்யும் மனப்பாங்கு சாதாரணமாய் மனுஷனுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும். அதனால் துன்பம் வருமானால் தயங்குவது இயல்பு. அதையும் மீறி ஆபத்தில் இருக்கிற ஒருவனுக்கு  உதவி செய்ய சராசரி மனுஷ மனசு துணிவதில்லை. எளிய மனிதன் அய்யோ, இவர் இப்படித் துன்புறுகிறாரே என்று இரக்கம் கொள்ள மட்டுமே இயலும். ஆனால் ஒரு பத்திரிகையாளராய் இருப்பவர் உதவி செய்ய தைரியமாக முன்வரும்பொழுது அதற்கு பயப்படுகிறது காவல். ஆனால் சாதாரண மனிதனுக்கு அது சாத்தியமாவதில்லை. இப்படிப் பலவும் பார்த்துப் பார்த்து, பலரும் ஒதுங்கினால் அப்புறம் யார்தான் துன்பப்படுவோர்க்கு அல்லது ஆபத்தில் இருப்போர்க்கு உதவுவது?                                                                    வலிப்பு நோயில் வீழ்ந்து கிடக்கும் ஒருவனுக்கு உதவுகிறான் அவன். மனித நேயம் முற்றிலும் அழிந்து விடவில்லை. அவ்வப்போது உயிர்த்தெழுகிறது என்கிற நல்ல கருத்தை முன் வைக்கிறது இக்கதை.                                                                           ம் அன்றாட வாழ்க்கையில் நாம் பலரையும், பல்வேறுவிதமான மனிதர்களையும் பார்த்திருப்போம். பழகியிருப்போம்.  அதே சமயம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மனப் பிறழ்வு கொண்ட மனிதர்கள் ஒருவரையேனும் கண்டிப்பாகச் சந்தித்திருக்கக் கூடும். நம் ஊரில் நம் தெருவிலேயே இருந்திருக்கவும் கூடும். வெளியூர் செல்கையில் அங்கு பார்த்திருப்போம். புண்ணிய ஸ்தலங்களில்,மக்கள் அதீதமாய்க் கூடும் சுற்றுலா இடங்களில் எங்கேனும் ஒரு மூலையில் ஒருவரையேனும் கண்டிப்பாகப் பார்க்க முடியும்.                                                     உறவுகளை ஒரு கட்டத்துக்கு மேல் வைத்துக் காப்பாற்ற முடியாது என்கிற முடிவுக்கு வந்து இம்மாதிரி இடங்களுக்கு வரும்போது வேண்டுமென்றே விட்டு விட்டுச் சென்று விடுவது வழக்கமாயிருக்கிறது. சொந்த ஊரிலிருந்து வெகு தூரம் தள்ளிச் சென்று காணாததுபோல் கண்டு கொள்ளாமல் தள்ளிவிட்டு வெளிநாடு சென்று விட்டவர்களும் இருக்கிறார்கள். மனநலக் காப்பகத்தில் சேர்த்து, வருடம் தவறாமல் பணம் அனுப்பிப் பாதுகாப்பவர்களும் உள்ளார்கள். ஆனால் நேரில் சென்று ஒரு முறையேனும் பார்த்து வருவது என்கிற நிக ழ்வெல்லாம் கிடையாது இச் செயலில். எனக்குத் தெரிய....சார்...சார்...எங்க அப்பாம்மா எப்ப வருவாங்க...எப்ப வருவாங்க சார்...அவங்ககிட்ட என்னைக் கொண்டு விடுறீங்களா...? கூட்டிட்டு வருவீங்களா? என்று கேட்டு நச்சரித்த மன நோயாளியை நான் கண்டிருக்கிறேன்.                                       ஏன் இத்தனை புத்தி ஸ்வாதீனமற்ற மனிதர்கள் இங்கே இப்படித் திரிகிறார்கள் என்று ராமேஸ்வரம் போன்ற இடங்களில் கண்டவர்கள் காரணம் தேடி வேதனையுற்றதையும் அப்படி விட்டுவிட்டு வந்த ஒருவர் இவர்கள் ஊர் வந்து சேரும் முன்பே வந்து வீட்டு வாசலில் வந்து காத்திருந்த கதைகளும் கூட உண்டு. அப்படி ஒருவனைப்பற்றிய கதையைத்தான் “சின்ன மீனை விழுங்கும் மீன்” கதை சொல்கிறது. வாழ்ந்து கெட்டவன் என்று உணரும்போது மனம் வேதனையுறுகிறது. மனித நேயத்தை மையச் சரடாகக் கொண்ட இக்கதை மிகுந்த பாராட்டுக்குரியதாகிறது.                                                                          தி.மு.தி.பி என்றொரு கதை. திருமணத்திற்கு முன் தேனாய் இனிக்கும் பெண்ணின் வார்த்தைகளும், பேச்சும் திருமணத்திற்குப் பின்பு கசந்து போகிறது. சராசரிக் கணவனின் சுயரூபம் வெளிப்படுகிறது. சுடு சொற்களால் மனைவியைச் சுட்டுக்கொண்டே,..... ஊசி போல் குத்திக்கொண்டேயிருக்கிறது அவன் வார்த்தைகள். பெண் அடங்கிப் போனால் அது தொடர்கிறது. ஆண் என்கிற திமிரில் அது பேயாய் ஆடுகிறது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே? அந்தப்பெண் ஒரு நாள் கொதித்தெழுகிறாள்.  இதுதான் கதை. படைப்பாளியின் நியாய உணர்வு இம்மாதிரிப் படைப்புக்களைக் கொண்டு வருகிறது. வாசிப்பவர்களின் மனதை நிறைக்கிறது.               ட்சியவாதம் என்பது இளவயது வீச்சு. பலரின் முன்னே, தான் வித்தியாசப்பட்டவன் என்று காட்டிக் கொள்வதும், அந்த நோக்கிலேயே சிந்திப்பதும்,இளமைத் துடிப்பில் செயல்படுவதும் சகஜம். அப்படித்தான் ஜோசப்பும் இருக்கிறான். எல்லாரும் அழகான பெண்களையே தேடினால் அழகற்ற அவலட்சணமான , பார்வையற்ற, ஊமையாய் உள்ள , ஊனமுற்ற நிலையிலுள்ள பெண்களையெல்லாம் யார் கட்டுவது? அவர்கள் வாழ்வின்றித் திரிய வேண்டியதுதானா? அவர்களையெல்லாம் கொண்டு கடலிலா தள்ள முடியும்? என்கிற ரீதியில் சிந்திக்கிறான்.                கடைசியில் அவனுமே ஒரு தவறிழைத்து விடுகிறான். பழகிய பெண்ணை ஒரு முக்கிய கட்டத்தில் கைவிட நினைக்க, நழுவ முயற்சிக்க பெண்ணின் பெற்றோர் மிரட்டலில் திருமணம் நடந்து விடுகிறது. ஊரும் உறவும் கூடி நிற்கும் பொழுதில் உறவுகளுக்கு வயிற்றெரிச்சல்தான் மிஞ்சுகிறது. எவ்வளவு அழகான பையன். அவனுக்கு எத்தனை அவலட்சணமாய் அமைந்திருக்கிறது? என்று வருந்துகிறார்கள்.                                                          வெவ்வேறு வடிவங்களில் கதை எழுதிப் பார்க்க வேண்டும் என்கிற முயற்சியில் கதையின் பாத்திரங்கள் தனித்தனியாக அவரவர் கருத்துக்களைப் பதிவு செய்வதாக வருத்தங்களை, மனக் கிலேசங்களை வெளியிடுவதாக ஜங்ஷன் என்றஇக்கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.                இருதயத்தின் கசப்பு என்று ஒரு கதை. வாழும் காலத்தில் பயனற்றுப் போனதற்கு, வயதான காலத்தில் வருந்தும் ஜுவன்களைக் கண்டிருக்கிறோம்.இந்தக் கதையின் நாயகன் புற்று நோயில் இறந்து போய், தாய் தந்தையர்க்கு, உறவுகளுக்கு, இந்த சமுதாயத்துக்குப் பயனற்றுப் போனோமே என்று சவமாய்க் கிடக்கையில் எண்ணிப் பார்ப்பதுபோல் புனைவு செய்யப்பட்டிருக்கிறது இக்கதை. எல்லா மனித ஜீவன்களும் தங்கள் தவறுகளுக்கு ஒரு கட்டத்தில் வருந்துகின்றன. வருந்தாமல் போன உயிர்கள் என்று எதுவுமே இருக்க முடியாது. வெளியில் சொல்லவில்லையாயினும் மனதுக்குள் புழுங்கி, குமைந்து மடிந்து போன ஜீவன்கள் கண்டிப்பாய் உண்டுதான். ஆனால் நோவில் படுத்து, வேதனை அனுபவித்துப் போனவர்கள் சிந்திக்க ஆரம்பிக்கும்போது அந்த வேதனை அவர்களை மேலும் சிதைப்பது மட்டுமல்லாது உடனிருப்பவர்களையும்,உறவுகளையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. இக்கதையில் அப்படி நோயுற்று உயிரை விட்ட  நாயகனின் சோகத்தில் நாமும் தவிர்க்க முடியாமல் பங்கு பெறுகிறோம்.                                        திசைகளற்ற வெளி:- இளம் பிராயத்தில் நாம் கேட்ட பொருழளை  வாங்கிக் கொடுக்க பெற்றோர்களிடம் பொருளாதார வசதியிருக்காது. நாம் விரும்பும் பள்ளியில் படிக்க வைக்க முடியாது. நம் விருப்பங்கள் நிறைவேற குடும்பச் சூழல்,வறுமை, வசதியின்மை ஒத்துழைக்காது.          இப்படியான நிலையில் விவரமின்றி வீட்டை விட்டு வெளியேறி விடும் சிறுவர்கள் இளைஞர்கள் உண்டு. அப்படித்தான் இக்கதையின் சிறுவன் மணி வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் நண்பனைத் தேடிப் போய் விடுகிறான். பிறகு அவர்கள் ஊருக்குத் தகவல் சொல்ல, தந்தை பார்த்துவிட்டுப் போக, பிறகு  கொஞ்ச நாளில் அப்பா இறந்து விட்டதாகத் தகவல் வர, ஊருக்கு வரும் இவன், வழியில்  கைவசம் இருந்த பணத்தையும் தொலைத்து பிச்சையெடுக்கும் நிலைக்குப் போய் விடுகிறான். சிறுவர்கள் செய்யும் அறியாத் தவறு அவர்களை இப்படியெல்லாம் சீரழிய வைக்கும் என்பதைச் சொல்லும் கதை. திசைகளற்ற வெளியில் கதியின்றி நிற்கிறான் சிறுவன். எப்படியெப்படி விஷயங்களெல்லாம் இவரைப் பாதித்திருக்கிறது என்று நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நல்ல சிந்தனையுள்ள மனிதன்....இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் வழக்கமுடையவனாக, இருக்கும் நிலையில் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொள்பவனாக, வாழ்வின் எல்லாச் சிக்கல்களிலிருந்தும் எளிமையாக வெளிவரும் சிறப்பு மிக்கவனாக வாழ்ந்து கழிக்கும் பக்குவம் பெற்றவனாக இருக்க முடியும். படைப்பாளியை நோக்கி இம்மாதிரியான சிந்தனையை நமக்கு அளிக்கிறது இவரது எழுத்து.                                                      கதியின்மை:- கதியற்றுக் கிடக்கும் அநாதைகளைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார் இக்கதையை. தன் கடைக்கு அருகிலான பஸ் ஸ்டாப்பில் சுருண்டு கிடக்கும் கிழவிக்கு சாப்பிடக் கொடுத்து, அவளை ஏதேனும் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட முயல்கிறார்.  அநாதை என்று பதிவுசெய்து FIR போட்டு பிறகு கொண்டு வாருங்கள், சேர்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் இல்லத்தார். இல்லையெனில் கொலைப்பழி விழ வாய்ப்புள்ளது என்கிற உண்மை இக்கதையின் மூலம் தெரிய வருகிறது. உதவி செய்வதில் கூட இம்மாதிரி ஆபத்தெல்லாம் இருக்கிறது என்கிற உண்மை நம்மைப் பதைக்க வைக்கிறது. இரக்கம் கொள்பவர்கள், உதவ நினைப்பவர்கள் எளிய மனிதர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் அன்றாடப் போராட்டங்களிலிருந்து இம்மாதிரிச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டால்...பிறகு நற் சிந்தனையையே நாளா வட்டத்தில் கை விடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்தப் பேரபாயம் இக்கதை மூலம் நம் மனதை உறுத்துகிறது. நாட்டின் கதியற்றோர் மீதான இரக்கச் சிந்தை ஆசிரியரின் எழுத்தில் படிந்து, நம்மனதை சுமையாக்குகிறது.                                                                       தலைமைப் பீடம், நிழல் பிம்பங்கள் என்று இன்னும் இரண்டு கதைகள் இத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன. மொத்தம் 11 சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பினை திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகம் கொண்டு வந்திருக்கிறார்கள்.                                       புதுகை சஞ்சீவியின் மனித நேயச் சிந்தனை அவருக்கு இன்னும் இன்னும் வெவ்வேறு களங்களிலான புதுமையான சிந்தனைகளைக் கொடுத்து, மிகச் சிறந்த படைப்பாளி என்கிற ஸ்தானத்தில் அவரை உயர்த்தி வைக்கும் என்பது நிச்சயம். அதற்கு “நிழல் பிம்பங்கள்” என்ற இத்தொகுதி நற்சான்றாய் விளங்கி தலை நிமிர்ந்து நிற்கிறது. அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.                                                                                                              -------------------------------------------------------


  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...