10 ஜூலை 2016

நன்றி…!

வடஅமெரிக்காவிலிருந்து வெளி வரும் “தென்றல்” என்ற மே 2016 மாத இதழில் என்னைப்பற்றிய அறிமுகக் கட்டுரையோடு, “பந்து பொறுக்கி” என்ற எனக்குப் பிடித்தமான சிறுகதை ஒன்றும் வெளிவந்துள்ளது, அன்பர்களின் நேசமா20160710_191927ன பார்வைக்காக....20160710_19273320160710_192716 - Copy

நா.பா.வைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் இந்திய இலக்கியச் சிற்பிகள்-சாகித்ய அகாதெமி நூலில்….

Ushadeepan Sruthi Ramani added 6 new photos.

·imagesdownloaddownload (1)download (2)download (3)

நா.பா.வின் தீபம் மாத இதழ் 1965 ஏப்ரலில் தோன்றியது. 1988 ஏப்ரலில் மறைந்தது. தீபம் இரண்டாம் இதழில் அவர் எழுதிய வரிகள் குறிப்பிடத்தக்கவை -

“என்னிடம் சிந்தனையையும் எழுத்தையும் தவிர அதிகமாக வசதிகள் ஒன்றுமில்லை என்பதை நானே உணர்கிறேன். நான் ஒரு சாதாரண இலக்கியத் தொழிலாளி என்பதும் எனக்குப் புரிகிறது. நான் பணத்தினால் ஏழையாகவும் மனத்தினால் குபேரனாகவும் இருப்பதாக எனக்கே தோன்றுகிறது. உடல் நலமில்லாத கணவன் கட்டிலருகே - அவன் நிச்சயம் பிழைத்து விடுவான் - பிழைக்க வேண்டும் - என்ற ஒரே நம்பிக்கையை மனத்தின் தவமாகக் கொண்டு வேறுவிதமாக நினைப்பதைக் கூடத் தன் கற்பிற்குப் பங்கமாய் எண்ணும் ஒரு இந்துக் குடும்பத்து சகதர்மிணியைப் போல் என் முயற்சியின் வெற்றியை அன்றி வேறு அமங்கல நினைவை நினைக்கவும் செய்யாது வெற்றியே இலக்காகும் தியானமாக நான் இந்த இலக்கியத் தவத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்”

இந்திய இலக்கியச் சிற்பிகள் - சாகித்ய அகாதெமி தொகுப்பில் நா.பா.வைப்பற்றி தொகுத்தளித்துள்ள திரு திருப்பூர் கிருஷ்ணன் ஓரிடத்தில் தெரிவிக்கும் அழகான இக்கருத்துக்களைக் காணுங்கள்.

தமிழ் மொழியின் எல்லா நயங்களையும் தம் படைப்புக்களில் துலங்கச் செய்த ஓர் அபூர்வமான நடையமைப்பை உடையவர் என்ற வகையிலேயே நா.பா. வித்தியாசப்பட்டு நிற்கிறார்.
ஜானகிராமனின் பலம் அவரது பாத்திர வார்ப்பு
ஜெயகாந்தனின் பலம் அவரது விவாதக் கோணம்
புதுமைப் பித்தனின் பலம் அவரது கிண்டல் தொனி
அழகிரிசாமியின் பலம் அவரது அதிரச் சொல்லாத எளிமை.
அகிலனின் பலம் அவரது தேசியச் சிந்தனை
இந்திரா பார்த்தசாரதியின் பலம் அவரது கூர்மையான உரையாடல்
ராஜம் கிருஷ்ணனின் பலம் கள ஆய்வு
ஆர்.சூடாமணியின் பலம் உளவியல் கோணம்
கி.ராஜநாராயணனின் பலம் வட்டார வழக்கு
என்றால்
நா.பா.வின் பலம் அவரது நடைதான். நினைத்து நினைத்து மகிழ வைக்கிற நடை. தெளிந்த சிற்றோடை போன்ற பட்டறிவால் விளைந்த பிசிரற்ற, சீரான தங்கு தடையற்ற நடை. அவர் தடம் பதித்ததது அந்த வகையில்தான்.


  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...