குப்பை..-சிறுகதை - உஷாதீபன்
விமர்சனம்-பாலமுருகன் லோகநாதன்(உயிரோசை இதழ்)
++++++++++++++++++++++++++++++
அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்து, அவர்களுக்கென்றே ஒரு கதையைச் சித்தரித்திருக்கிறார் எழுத்தாளர் திரு உஷாதீபன் அவர்கள். நாம் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என்று வகைப்படுத்திப் பிரித்துப் போடப் பழகிக்கொண்டோம். அதேபோல் மனதிலிருக்கும் சந்தேகம் என்ற அழுக்கை நாம் முற்றிலுமாக களையெடுக்க வேண்டும் என்பதை அழகாக ஒரு குட்டி கதையாகவே தந்திருப்பார்
வேலைக்கு அமர்த்திய பிறகு நாம் தினம்தோறும் அவர்களைச் சந்தேகக் கண்களுடன் பார்ப்பது தவறு, அவர்களைச் சோதிப்பது போன்ற செயல்களைச் செய்யும் போது வீட்டு வேலைக்கு வந்த நபரின் மனமானது எப்படிப் பாடுபடும். நாம் அவர்களை வேலைக்கு அமர்த்தும் போதே அவர்களுடைய முழு விவரத்தையும் தெரிந்த பிறகே அவர்களை வேலைக்கு அமர்த்த சம்மதம் தெரிவிக்கிறோம்.
தவறு செய்திருந்தாலும் நான் இது போன்று தவறு செய்தேன் அதற்கு உண்டான தண்டனையும் எனக்குக் கிட்டியது என்று அவர்கள் கூறும் போது அவர்கள் முழுமையாக தன் தவற்றை உணர்ந்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.
இங்கு எழுத்தாளர் என்ன செல்ல வருகிறார் என்றால். குற்றம் சாற்றும் முன்னர், தொலைந்து போன பொருளை நாம் முதலில் நன்றாகத் தேட வேண்டும். தேடியும் கிடைக்கவில்லை என்றால் நாம் உடனே போய் வீட்டு வேலைச் செய்யும் நபரிடம் போய் ஜாடை மாடையாகப் பேசுவது அநாகரீகம். மக்கள் இப்போது மக்கும் கும்பை மக்கா குப்பை என்று வகைப்படுத்திப் பிரித்து வைக்கப் பழகிக்கொண்டனர், அதேபோல் சந்தேகம் என்ற இருளை, மாய உலகத்திலிருந்து அவர்கள் முதலில் வெளிவர வேண்டும். வேலைச் செய்பவர்களிடம் நயமாகக் கேட்டுப்பார்க்க வேண்டுமே தவிற நேரடியாக எடுத்தாயா்என்று்கேட்கக் கூடாது எப்போது சந்தேகக் கண்ணுடன் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைத்திருப்பார்.ஏனென்றால் அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்களே..
-பாலமுருகன்.லோ-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக