25 ஜூலை 2019

எடை போடுபவன் பத்தி எழுத்து-2


எடை போடுபவன்                         
பத்தி எழுத்து-2                                 

            எங்கள் தெருவில் தினமும் காலையில், பொழுது விடிந்தவுடனேயே...அதாவது ஏழு மணியைப் போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்....இதை ஏன் பொழுது விடிந்தவுடனேயே என்று சொல்கிறேனென்றால் அந்த நேரம் அவனைப் பொறுத்தவரை பொருந்தாத நேரம்...மற்றும் வீடுகளிலுள்ளோருக்கும் சற்றும் பொருந்தி வராத நேரம்...ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாது (அல்லது அவனின் மனதில் தோன்றவேயில்லையோ என்னவோ) நியமமாகத் தினமும் அவன் வந்து கொண்டேயிருப்பான். என் பிழைப்பு அது...என்னை என்ன செய்யச் சொல்றீங்க... என்பதாய்.
          பேப்பர்...பேப்பர்....பழையபேப்பர்...பிளாஸ்டிக்....இரும்பு......என்று விடாது கத்திக் கொண்டே வருவான். தெரு ஆரம்பத்தில் நுழைகிறான் என்றால் தெருக் கடைசியில் இருக்கும் எங்கள் வீட்டுக்குள் கேட்கும் அந்தச் சத்தம். அவன் வருகையை வைத்து நேரம் குறித்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிய அந்த நேரத்தில் அவனிடம் யாரும் பழைய பேப்பர் எடுத்துப் போட்டதாய்த் தெரியவில்லை. அப்படி உண்டென்றால் அவன் அத்தனை சீக்கிரம் தெருக் கடைசியை அடைந்திருக்க முடியாது.
காலை நேரத்தில் எல்லோரும் வீட்டு வேலைகளில் கவனமாய் இருப்பார்களே...பழைய பேப்பர், சாமான்களை ஒழிப்பதிலா கருத்தைச் செலுத்துவார்கள்? இது அவனுக்குத் தெரியாதா? இந்த நேரத்தில் போனால் வியாபாரம் போணியாகாது என்பதை உணர வேண்டாமா?
          பெரும்பாலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத்தான் வீட்டிலுள்ளோர் இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுப்பார்கள். அதுவும் கூடக் கடந்து போய்விடக்கூடும். இனி இடமில்லை என்கிற நிலையில் அடைத்து அடைத்து வைத்து, அவர்களுக்கே பொறுமை கழன்று என்றேனும் ஒருநாள் திடீரென்று இந்தக் குரல் கேட்டு விழிப்புற்று தூக்கிக் கொடுத்து இடத்தைக் காலி செய்து விடுவதும் உண்டு.
         பேப்பர்...பேப்பர்....பழைய சாமான்...இரும்பு....பழைய துணி....பால் பை....என்று இடைவிடாது கத்திக் கொண்டே வருவான். காது கிழிவது போலிருக்கும் அவன் சத்தம். ஆனாலும் பிழைப்பைப் பார்த்தாக வேண்டுமே....அவன் பாடு அவனுக்கு.
        ஏங்க...இந்த நேரத்துல வர்றீகளே...வீட்டு வேலைய விட்டிட்டு இந்தக் காலை நேரத்துல யாராவது பழைய பேப்பர எடுத்துப் போட்டிட்டிருப்பாங்களா...? ஒரு பதினோரு மணி...மதியம் ரெண்டு மணிக்கு மேலேன்னு வந்தீங்கன்னா....உங்களுக்கு லாபமா இருக்கும்....இப்ப யாரும் போட மாட்டாங்களே...?
அவன் கேட்டதேயில்லை. அந்தத் தெருவில் நுழைந்து மீண்டால்தான் ராசியோ என்னவோ...? வேறு சிலரும் வரத்தான் செய்கிறார்கள். வேறு நேரத்தில்....அந்த நுட்பம் இவனுக்கு மட்டும் தெரிவதில்லை. எடை போடுபவனுக்கு வீட்டு வாசிகளின் மனங்களை எடை போடத் தெரிய வேண்டாமா?
         சார்...பேப்பர்...பழைய பேப்பர் இருக்குங்களா....உடைஞ்ச ப்ளாஸ்டிக் சாமான்...இரும்பு..... - என்னிடமும் கேட்டிருக்கிறான். தலை தெரிந்தால் கேட்டு விடுவான். உண்மையைச் சொல்கிறேன்...நான் ஒரு நாள் கூட அவனிடம் போட்டதில்லை.
        சார் நம்பகிட்டப் போட்டு ரொம்ப நாளாச்சு.... - என்பான் . என்றோ இவனிடம் போட்டிருப்போமோ...என்று யோசிப்பேன் . இப்படிச் சொல்வது அவன் பண்பாடு போலும்....
        கடையில் ஒரு சாமான் வாங்கச் சென்றால், அது இல்லையென்றால்....இல்லைஎன்ற வார்த்தையைச் சொல்ல மாட்டார்கள்....தீர்ந்திருச்சு என்று கூடச் சொல்வதைக் கேட்க முடியாது. வரணும் சார்...என்பார்கள்...இல்லையென்றால் சாயங்காலம் வாங்க சார் என்பார்கள்....ஆர்டர் போட்டிருக்கு என்று சொல்வதும் உண்டு....ஆனால் தங்கள் கடையில் ஒருவர் கேட்கும் பொருள் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. அது ஒரு வகைப் பண்பாடு....வியாபாரம் பெருக வேண்டும் நிலைக்க வேண்டும் என்று நல்ல வகையில் மட்டுமே நினைக்கத் தெரிந்தவர்கள். அப்படித்தானே விரும்ப முடியும்.
        அதுபோல....அவன்ரொம்ப நாளாச்சுஎன்றுதான் சொல்கிறான். என்னிடம் போட்டதேயில்லை என்று ஒரு முறை கூடச் சொன்னதில்லை. இந்த உலகத்தில் எவரிடமிருந்தும் நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியும். எங்கேனும் ஒரு சின்ன ஸ்பார்க் நமக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
       அவனுக்கு நான் ஒரு வழி செய்தேன். என்னாலான உதவி.... மனதோடு செய்த அது அவனுக்குப் பெருகியது....இன்று அவன் இந்த வியாபாரத்தில் பெரிய கில்லாடி.
        அது எனக்கு ஒரு கதையானது. “முதல் போணி
Image may contain: one or more people
Image may contain: one or more people  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...