புகைச்சல்..சிறுகதை-வெளியீடு..அந்திமழை மாத இதழ்.-விமர்சனம்=பாலமுருகன் லோகநாதன்
=================================
இக்கதையானது அந்திமழை என்னும் மாத இதழில் ஊமே01 2018யில் வெளிவந்துள்ளது. இக்கதையின் ஆசிரியர் திரு உஷாதீபன் அவர்கள். தலைப்பிற்கு ஏற்ப இன்றும் சாமானிய மனிதன், தன் சக மனிதனைப் பார்த்து புகைச்சல் கொண்டுதான் இருக்கிறான். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால்! அவனால் முடிகிறது ஏன் நம்மால் முடியவில்லை என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது. ஒன்று நாம் யோசிக்க மறந்து விடுகிறோம், ஏதோ ஒரு காரணத்தால் நம் மனதில் எழும் பயத்தின் உந்துதலால் தான் நாம் துணிந்து செயலை செய்வதற்குத் தயங்குகிறோம்.
இந்த புகைச்சலினால் பிரத்தியாருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை, மாறாக எப்போதும் நாம் பிரத்தியரைப் பற்றியே எண்ணுவதானால் சங்கடம் நமக்குத்தான். நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டு அடுத்தவரின் வேலையில் நடவில் நுழையாமல் இருந்தாலே போதும் நம் மனமானது மாசுபடாமல் தூய்மையாக இருக்கும். அவன் அப்படி, இவன் இப்படி, இவர்களால் எப்படி இந்த செயல் முடிந்தது என்று எண்ணுவதைத் தவிர்த்து அவரவர் அவரவருடைய வேலையைப் பார்த்தார்களேயானால் மனிதர்களுக்கிடையே புகைச்சல் இல்லாமல் இருக்கலாம்.
இங்கு எழுத்தாளர் திரு உஷாதீபன் அவர்கள் நமக்கு அழகாக ஒரு நகைச்சுவையான ஒரு சிறுகதையைக் கொடுத்திருக்கிறார். ஒரு பிராமண சமுகத்திலிருந்து வருபவராகத் திரு ரங்கநாதம், அவரது மனைவி வசுமதி. ரங்கநாதனின் எதிர் வீட்டில் விஷேசம், எதிர் வீட்டு உரிமையாளர் விஷேசத்தைத் தடபுடலாக நடத்தினார், பெரும்பாலும் ஊரில் உள்ள அனைவரையும் மற்றும் அவர்களது சொந்தங்களை அழைத்து ஒரு பெரிய விருந்தாக ஏற்பாடு செய்திருந்தார். ரங்கநாதனுக்கும் அவர்கள் வீட்டிலிருந்து அழைப்பித்தல் வந்திருந்தது. ஆனால் ரங்கநாதம் அன்று மிகுந்த கோபம் கலந்த சங்கடத்திலிருந்தார். ஏனென்றால் ஒரே சப்தம் வீட்டில் உள்ள அனைத்து சன்னல் கதவை அடைத்தும் ஒலியானது இவரது காதை துளைத்துக்கொண்டு நாராசமாய் இவரது காதுகளில் விழுந்துகொண்டிருந்தது.
வெளியே போனால் எங்கு நம்மை மறுபடியும் அவர்களது விஷேசத்தில் கலந்துகொள்ளும்படி கூறிவிடுவார்களோ என்று எண்ணி கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டினுள் அமர்ந்திருந்தார். அவருக்கு இரு நினைப்பாகவே இருந்தது. இந்த விழாவிற்குப் போவதா அல்லது தவிர்த்துவிட்டு வேறெங்காவது போகலாமா என்று. ஏன் தனது மனையிடம் கேட்கக் கூடாது என்று நினைத்து வசுமதிக்குத் தொலைப்பேசியில் அழைத்து விஷயத்தைச் சொன்னார்.
அவள் தங்களது மகன் வீட்டிலிருந்தாள், இவரிடம் நீங்கள் அவர்கள் வீட்டு விஷேசத்திற்க்கு கண்டிப்பாக சென்றுவாருங்களேன் என்று கூறினாள். மேலும் அவள் கூறினாள் அவரிடம், நாம் வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்கு வரும் போது அந்த எதிர வீட்டில் உள்ளவர்கள் தான் நமது வீட்டிற்கு வரும் கடிதத்தை எல்லாம் சேகரித்து நாம் வந்தவுடன் தருகிறார்கள் என்றாள். அதற்கு ரங்கநாதம் உடனே எப்படிப் போய் அங்குச் சாப்பிடுவது, நமது சமுகம் வேறு, அவர்களது பழக்கவழக்கம் எல்லாம் மாறுபடுகிறது. நாம் சைவம், அவர்கள் அசைவம் சமைப்பவர்கள், அதே பாத்திரத்தில் இன்று சைவம் சமைத்திருப்பார்கள், எப்படிச் சாப்பிடுவது என்றார்.
வசுமதி உடனே அவரிடம் கூறினாள் உங்களுக்குத் தான், ரசம் பிடிக்குமே அதைச் சாப்பிடுங்கள். பாயசம் செய்திருப்பார்கள் அதை டம்லரில் வாங்கி குடித்துவிட்டுப் பேர் பண்ணிவிட்டு வந்துவிடுங்கள். பிறகு ரங்கநாதம் எதிர் வீட்டு விஷேசத்திற்குப் போனாரா என்பதே இந்த கதை, ஆசிரியர் கதைக்களத்தை நகைச்சுவை உணர்வுடன் நகர்த்திச் சென்றிருக்கிறார்.
-பாலமுருகன்.லோ-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக