எழுத்தாளர் வாதூலன் மறைவு - ஆழ்ந்த இரங்கல். அஞ்சலி. பாத நமஸ்காரங்கள்.
-------------------------------------------------------
எழுத்தாளர் வாதூலன் (83) அவர்கள் 20ம் தேதி சனிக்கிழமை இரவு காலமானார்.
கடைசிவரை ஆக்டிவாக இருந்தார் என்பதற்கு இன்று (22)திங்கள் தினமணியில் வந்திருக்கும் அவரது கட்டுரையே சாட்சி.
எனது ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டுப் பேசுவார். வாட்ஸப் செய்தி அனுப்புவார். ரமணீ...என்று நீட்டி அழைப்பதில் அவரது அன்பு தெரியும்.
மரபுசாரா தொழிலாளர்கள் பக்கம் உங்கள் மனது சாய்ந்திருக்கிறது. நேர்மை உணர்வு மதிப்பளிக்கிறது. லஞ்சம்...ஊழல்...குறித்த வெறுப்பும்..எதிர்ப்பும்...கோபமும் அதிகம் என்று பாராட்டுவார்.
இசை ரசனை அதிகம். அது குறித்து கட்டுரை நூலும், நிறையக் கதைகளும் எழுதியுள்ளார். அல்லயன்ஸ் பதிப்பகம் இவரது நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒரு அன்பு நெஞ்சம் மறைந்தது. கண்ணீர் அஞ்சலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக