22 மே 2023

 

இந்தியா 1948 - நாவல் - அசோகமித்திரன்
இவ்வளவு இயல்பாக..ஆழமான...அழுத்தமான அமைதியோடு ஒருவன் தன் வாழ்க்கையைச் சொல்லி விட முடியுமா? தன்னையும்...தன்னைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களையும்...என ஒவ்வொருவரின் சிறு அசைவையும் கவனமாக எடைபோட்டு...அவர்களின் மதிப்பிற்குகந்த உணர்ச்சிகளின்பாற்பட்ட மற்றும் அனுபவபூர்வமான செயல்பாடுகளை நிதானமாக எதிர்நோக்கி..வாழ்க்கையை இயன்றவரை அதன் யதார்த்தத்தில் பயணிக்க வைத்து...விளைவுகளைக் கடந்து முன்னேறும் நாயகனின் பயணம் நாவல் முழுவதும் விரவி...கடைசியில் நம்மைத் தீராத சோகத்தில் ஆழ்த்தி நிறுத்தி விடுகிறது.

இலக்கியம் மூலமாக நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள்...நம்மை விடாது பக்குவப் படுத்திக் கொண்டேயிருக்கிறது.
இம்மாதிரி கனத்த சிந்தனையுள்ள படைப்புக்களைப் படித்து முடிக்கும்போது...வாங்கி வைத்துள்ள பல நூல்கள்...தானே அமைதியாக விலகி...தங்களை ஒளித்துக் கொள்கின்றன என்பதுவே உண்மை...!!

கருத்துகள் இல்லை: