14 ஜூன் 2020

கேள்வி - கவிதை


கேள்வி

--------------------

பித்தளை அகலாய்ப்
பிறந்தது உண்மை
பளபளத்து நின்று
பாராட்டுப் பெற்றும்
அழகும் அறிவும்
ஆனபயன் என்ன?
விரும்பினவரெல்லாம்
விலகியதென்ன?
வரவர
எண்ணெயும் கெட்டது
திரியும் கெட்டது
சிட்டமும் பிடித்து
சிதைந்தது வெளிச்சம்
மண் அகலாய்
இருந்திருப்பி்ன்
நின்று நேராய்ச் சுடர்விட்டு
நன்றாய்
ஒளிர்ந்திருப்பேனோ?
------------------------------------------

கருத்துகள் இல்லை:

  இந்திரா பார்த்தசாரதி   - படைப்பு வாசிப்பனுபவம் - பேசும் புதிய சக்தி - ஜூலை 2025  பிரசுரம்         த மிழ் இலக்கியச் சூழலில் பல பழம் பெரும...