09 மே 2020

பின்னோக்கி எழும் அதிர்வுகள்-சிறுகதைத் தொகுப்பு-உஷாதீபன்


முன்னுரை                                                                                              த் தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் எளிய மனிதர்களைப் பற்றியதானது. நாம் அன்றாடம் காணும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள், அவர்களோடு கொள்ளும் சிறு சிறு  உரையாடல்கள், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் இவையெல்லாமும் சேர்ந்து மனதுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி,  நிஜமும், கற்பனையுமாக அவ்வப்போது வெளிவந்து எனக்கு மிகுந்த திருப்தி அளித்தவை.                                                                   பெரும் பணம் படைத்தவர்கள், வசதி வாய்ப்புள்ளவர்கள், படித்தவர்கள், அறிவாளிகள்  இவர்களிடையே வெளிப்படும் பண்பாட்டு அசைவுகளை விட, அன்றாடப் பாடுகளில் சிதைந்து நொறுங்கி, அறநெறி தவறாமல், மனம் தளராமல்  உழைத்து, தன் வாழ்க்கையை வறுமையிற் செம்மையாக நடத்துகின்ற எளிய மனிதர்களிடம் வெளிப்படும் குணநலன்கள்தான் என் கதைகளுக்கான பாத்திரங்கள் என்பதைச் சொல்லிக் கொள்வ
தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  அதில்தான்  என் மனம் பெருமையடைகிறது, நிம்மதியுறுகிறது.                                     .இளம் பிராயத்தில் நமக்கு அமைந்த வாழ்க்கைச் சூழலும், வறுமையும், அதனோடு தொடர்ந்து போராடி அறநெறி பிறழாது நம்மைக் கரையேற்றிய பெற்றோர்களின் தியாக சீலங்களுமே இதற்கான ஆழமான வித்து. அந்த மன நேர்மையும், செயல் திறனும் விடாது இன்றும் என்னோடு பயணித்துக் கொண்டிருப்பதை உணரும்போது, ஒருவகையில் எனது படைப்புத் திறன்தான் என்னைத் தொடர்ந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தலைப்படுகிறேன் நான்.                                                                           என் படைப்புக்களில் பாவனை இல்லை. பகட்டு இல்லை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. என் மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது.    மன உலகம் கதையுலகமாக விரிகிறது. அன்றாட அனுபவ எல்லைக்குள், மனசுக்குள் பதிவாகிற நிகழ்வுகளே கதைகளாயிருப்பவை. அதனாலேயே நேர்மையும், மன உண்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.                                                 எனது அனுபவ எல்கைக்குட்பட்ட ஒரு சம்பவத்தை, சம்பவத் துளியை மட்டுமே சிறுகதையாக்குவது, உலுத்தாத மொழி நடை, வாசக மனதில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்தல், சிறிய அழுக்கைத் துடைத்தல், சிறிய சோகம் கவிழச் செய்தல், வெளிச்ச நினைவு மின்னி மறைதல் என எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயர்த்திப் பிடிக்கிற, அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு இவையே என் கதைகளின் வழித்தடம்.               இந்த நோக்கில் வாசக உள்ளங்கள் என் கதைகளை நிச்சயம் உணரும். அந்த நம்பிக்கையோடு இத்தொகுப்பு இப்போது உங்கள் கைகளில்....                                                                                       அன்பன்,                       எஸ்.2-இரண்டாம் தளம், ப்ளாட் எண்.171, 172                                                மேத்தாஸ் அக்சயம் ( மெஜஸ்டிக் Nஉறாம்ஸ் )              உஷாதீபன்                         ராம் நகர் (தெற்கு) 12-வது பிரதான சாலை,                                                      சிருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில், மடிப்பாக்கம்,                                                  சென்னை - 600 091. (ஃபோன்: 94426 84188)                                                   (ushaadeepan@gmail.com)                            

கருத்துகள் இல்லை: