13 செப்டம்பர் 2019

“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -வாசிப்பனுபவம்-உஷாதீபன்


-வாசிப்பனுபவம்-உஷாதீபன்
 படியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பதுபோலவோ, நாவல் படிப்பது போ லவோ விறுவிறுவென்று நகர்ந்து பலனில்லை. உங்களை நீங்கள் அறிவதற்கான ஆத்மநிலையில் முழுமையான சுயச் சார்போடு படித்து உள்வாங்க வேண்டும்.
பாலுறவை நான் எதிர்க்க வில்லை. ஆனால் அதில் என்ன சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காண வேண்டும். தன்னை இழந்த நிலையை ஒரு கணம் பாலுறவு அளிக்கிறது. மறுபடியும் மனம் பழைய கொந்தளிப்பு நிலைக்கே வந்துவிடும். அந்தக் கணத்தில் துயரம், பிரச்னை, “தான்என்ற இவை இல்லையாதலால் பாலுறவைத் திரும்பத் திரும்ப வேண்டுமென்கிறோம். உங்கள் மனைவியை அன்புடன் நேசிப்பதாகக் கூறுகிறீர்கள். அந்த அன்பில் பாலுறவு இன்பம், உங்கள் குழந்தைகளை அவள் பராமரித்தல், உங்களுக்குச் சமையல் செய்து உணவு பரிமாறுதல் போன்றவை எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கும்.நீங்கள் அவளைச் சார்ந்திருக்கிறீர்கள். அவள் தன்னுடைய உடலை உங்களுக்குத் தந்திருக்கிறாள். உங்களுடன் அவள் உணர்ச்சிகளை பங்கு கொண்டிருக்கிறாள். உங்கள் செய்கைகளுக்கு ஊக்கமளிக்கிறாள்.உங்கள் நலனுக்கும், பாதுகாப்புக்கும், தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள். என்றேனும் ஒரு நாள் அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டு உங்களை விட்டு விலகி விட்டால் உங்கள் மனம் தடுமாறுகிறது. உங்களுக்குப் பிடிக்காத அந்தத் தடுமாற்றம்தான் பொறாமை, மனவலி, கவலை, வெறுப்பு, வன்முறை இப்படிப் பலவும். அதாவது நீ எனக்கே சொந்தமானவளாக இருக்கும்வரை நான் உன்னை அன்புடன் நேசிப்பேன். என்னை விட்டு விலகினால் உன்னை நான் வெறுப்பேன் பாலுறவு மற்றும் என்னுடைய தேவைகளை நீ பூர்த்தி செய்யும்வரை நான் உன்னை நேசிப்பேன். இவைகளை நீ தராவிட்டால் உன்னை நான் வெறுப்பேன் என்று கூறியதாக ஆகும்.
இதைப் படிக்கும் நீங்கள் உங்களுக்குள் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்படி இல்லை என்று யாரேனும் ஒருவர் சொல்ல முடியுமா?
அட போங்க சார்...படத்தப் பார்த்ததும் இந்தியன் தாத்தாதான் ஞாபகத்துக்கு வருது.....!! அதையும் நினையுங்கள். இதையும் படியுங்கள். எது ஜெயிக்கிறது என்று பாருங்கள்.


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...