14 செப்டம்பர் 2019நித்ய கன்னி - நாவல் - எம்.வி.வெங்கட்ராம்.                                     வாசிப்பனுபவம் - உஷாதீபன்                                           --------------------------------------------------------------------                                   வெளியீடு - காலச்சுவடு, நாகர்கோயில்.                                  --------------------------------------------------------------------------
படித்து முடித்த நாவல்எம்.வி.வெங்கட்ராம்அவர்கள் எழுதியநித்ய கன்னி”. சரித்திரம் தொடங்கும்முன் என்று சொல்கிறார்களே அந்தப் பழைய காலத்தைப் பற்றியது இந்த நாவல். நம்முடைய இதிஉறாசத்தில் காணும் ஒரு குறிப்பை, ஒரு பொறியை ஊதி ஊதி தம் கற்பனையால், புதுமைகளும், அதிர்ச்சிகளும் கலந்து ஒரு நீண்ட சிறு காவியமாக நமக்கு அளித்திருக்கிறார் எம்.வி.வி.
விஸ்வாமித்ரரின் சீடன் காலவன். நல்ல அழகன். குருகுல வாழ்க்கை முடிந்ததும், குருதட்சிணை கொடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் செய்கிறான். பொறுமையிழந்த விஸ்வாமித்திரர் உடல் வெள்ளையாகவும், காதுமட்டும் கறுப்பாகவும் உள்ள எண்ணூறு புரவிகளைக் கொண்டு தருமாறு பணிக்கிறார். காலவன் யயாதி மன்னனிட் செல்கிறான். அவனிடம் அத்தகைய பரிகள் இல்லை. பதிலாக புதல்வி மாதவியைத் தானம் செய்கிறான். அவள் நித்ய கன்னி. ஒர குழந்தை பெற்றவுடன் முன்போலவே கன்னி ஆகிவிடும் அதிசய வரம் கொண்டவள். அவளை அடுத்தடுத்து மூன்ற அரசர்களுக்கு திருமணம் செய்வித்து அறுநூறு பரிகளைப் பெறுகிறான் காவலன். மீதிக் குதிரைகளுக்குப் பதிலாக விஸ்வாமித்திரரே அவளைக் கல்யாணம் செய்து கொண்டு ஒரு மகவு பிறந்ததும் விடுவிக்கிறார். இந்த வலங்களுக்கிடையே உயிரைப் போல ஒருவரையொருவர் நேசிக்கும் காலவனும் மாதவியும் எப்படி உணர்ச்சி வதைக்குள்ளாகிறார்கள் என்று இந்த நாவல் கூறுகிறது. அத்தோடு அந்தவிதமான தத்தளிப்பின் காரணங்களையும் ஆராய முயலுகிறது.
நாவலில் புதிய புதிய கேள்விப்படாத வார்த்தைகள் பல நமக்கு நிறையக் கிடைக்கின்றன. எப்படி எப்படியெல்லாம் விவாதித்தால் நாவலின் அந்தந்தக் கதாபாத்திரங்களின் மன நியாயங்களை, செயல்களை, நிலை நிறுத்த முடியும் என்று ரொம்பவும் அதீதமாகச் சிந்தித்து, சிந்தித்து அத்தியாயம் அத்தியாயமாக வடித்திருக்கிறார். 180 பக்கங்களே கொண்ட இந்த நாவலை ஒரு முறை படித்தால் போதாது. நன்றாக மனதில் நிறுத்த வேண்டுமானால் மீண்டும் ஓரிருமுறை படிப்பது என்பதுதான் சரி. காலச் சுவடு வெளியீடாக வந்துள்ள இந்த க்ளாசிக் வரிசை நாவல் இலக்கிய நண்பர்கள் அனைவரும் படித்து ருசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவல்.


கருத்துகள் இல்லை: