31 ஆகஸ்ட் 2011

கேள்வி

பித்தளை அகலாய்ப்

பிறந்தது உண்மை

பளபளத்து நின்று

பாராட்டுப் பெற்றும்

அழகும் அறிவும்

ஆனபயன் என்ன?

விரும்பினவரெல்லாம்

விலகியதென்ன?

வரவர

எண்ணெயும் கெட்டது

திரியும் கெட்டது

சிட்டமும் பிடித்து

சிதைந்தது வெளிச்சம்

மண் அகலாகவே

இருந்திருந்தால்

நின்று நேராகச்

சுடர்விட்டு நன்றாய்

ஒளிர்ந்திருப்பேனோ?

------------------------------------------

1 கருத்து:

arshiyaas சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே
வலைத்தளம் அழகாக இருக்கிறது
படைப்புகளும் அம்சமாக இருக்கின்றன.
நிறை வலைத்தள வாசகர்கள் கிடைக்கட்டும்.
உங்களின் வலைத்தள இன்னிங்ஸ் இதோ ஸ்டார்ட் ஆகிவிட்டது.

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...