30 ஆகஸ்ட் 2011

இரு கவிதைகள்

"பிணக்கு"

உனக்கும் எனக்குமான

உறவுச் சிக்கல்களுக்கிடையில்

தார்மீக முனைப்புகளாய்

பின்னிக் கிடக்கின்றன

ஏராளமான வார்த்தைகள்

வறண்டுபோன நம்

வாழ்க்கைக்கு

சாட்சிகளாய் நிற்கின்றன

அதன் வீர்யம்

நீயும் நானும்

கூடிக் களித்தபோது

கும்மாளமிட்ட மெப்பனைகள்

மறைந்து போயின மாயமாய்

இந்தச் சொல்லடுக்குகளின்

ஆழத்தில் – இனி

நினைத்தாலும்

அவிழ்க்க முடியாத

சிடுக்குகளை

ஒரு மூன்றாமவன் வந்து

முயன்று நிற்கலாமா?

எல்லாம் பொய்யென்று

இழிந்துணாந்த வேளையில்

இந்த

இடைப்பட்டவன்

எதற்கு இங்கே?

---------------------------------------------------------


 

அகண்ட

ககன வெளித் தனிமையில்

உன் வருகைக்காக்க்

காத்துக் கிடக்கிறது மனம்

காற்றில் அலைபாயும்

இருண்மை விலகி

ஒளி பீறிடத் துடித்து நிற்கிறது

ஏக்கப் பெருமூச்சுக்குள்

அனலாய்ப் பரவி

உனக்கான

நேரத்தை நீட்டிக்கின்றன

விழித் திரையிலிருந்து

பரவும் கதாகள்

விட்டில் பூச்சிகளாய்

மினு மினுத்துப்

பறந்தழிகின்றன

கனல் துண்டமாய்ச் சிதறும்

கண் ஓர நீர்த்துளி

நம்மின்

கதையைச் சொல்லி

மடிகிறது!

-----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...