29 ஆகஸ்ட் 2011

ஆதங்கம்

            

நம் வீட்டுச் சுவர்களில்

படிந்திருக்கும் அழுக்குகளில்

மறைந்திருக்கும்

கரும் புள்ளிகளில்

வாசம் செய்கின்றன

உன் வார்த்தைகள்

வண்ணம் பூசிப்

பிரவேசம் செய்த ஒரு

புதிய நாளில் உன்னை

மார் சுமந்து உள்

நுழைந்தேன் நான்

பார்க்கப் பார்க்க உருமாறி

வளர்ந்த நீ

உளம் மாறியும்

வளர்ந்திருக்கிறாய்

உன்னில் தெறித்தெழுந்த

சுடுசொற்களையெல்லாம்

என்னைச் சுமக்க வைத்தாய்

சுமப்பதே சுகம்தானே

தடம்

பிறழ வைத்த பெருமை

உனக்கே உண்டு

கையில் சுற்றிய பம்பரம்

ககனத்தில் விடப்பட்ட காலை

உலகம் உன்னைச்

சமன் செய்யும்

ஆயினும்

இந்தச் சுவாகளின்

ஈசான மூலைகளில்

எதிரொலிக்கின்றன உன்

நெருப்புச் சொற்கள்!

----------


 


 

கருத்துகள் இல்லை: