தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்
நம்பிக்கை தளராத
நயமான ஓசை
நீள் தெருவில்
நெடுக மோதி எதிரொலித்து
அதிர்ந்து அலைந்து
மாயமாய் மறைந்து
அழிந்து போகிறது
எல்லோருக்கும் வாழ்க்கை
ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு
தவறாமல் வருகிறான் அவன்
ஞாயிறன்று அவன்
செருப்பூ பழைய செருப்பூ
காலனி ஓசை
கனலாய் கரைய
கலங்கிப்போகிறது நெஞ்சு
இன்னும் அவன்
போகவேண்டிய தொலைவு
எவ்வளவோ?
எப்பொழுது முடியுமோ
அவனின்
இன்றைய பொழுது?
___________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக