பின் நோக்கி எழும் அதிர்வுகள்-சிறுகதைத் தொகுதி-விமர்சனம்-கருணாமூர்த்தி-முகநூல் வாசகர்------------------------------------------------------------------------------------------------------------------------------------. பாலாஜி பதிப்பகம் முதல் பதிப்பு 2019 விலை ரூபாய் 260 மொத்த பக்கங்கள் 256.----------------------------------------------------------------------------
அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் மானுடர்கள், சிறந்த மனிதர்களாக இத்தொகுதியில் உலவுகிறார்கள். சிறுகதைகளின் தரத்தை நிர்ணயிக்க அழகியல் அம்சங்கள் பிரதானத் தீர்மான சக்தியாக அமைகின்றன. ஆனால் மனித நேயம், சமூக நோக்கு, பண்பாட்டு மெய்மை ஆகியவையும் இன்றியமையாதவை. உஷாதீபனின் கதைகள் இவற்றை உள்ளடக்கி, வடிவ அமைதியுடன் விளங்கி, கதைகளின் வெற்றிக்குக் காரணமாகின்றன. படித்தவுடன் மன நிறைவை ஏற்படுத்தும், அசலான வாழ்க்கையைப் பேசும் இத்தொகுதிக்கான படைப்புக்கள் அனைத்தும் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு சிறந்த சேர்மானம்.
###₹
முன்னுரை என்று ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
இத் தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் எளிய மனிதர்களைப் பற்றியதானது. நாம் அன்றாடம் காணும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள், அவர்களோடு கொள்ளும் சிறுசிறு உரையாடல்கள், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் இவையெல்லாமும் சேர்ந்து மனதுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நிஜமும், கற்பனையுமாக அவ்வப்போது வெளிவந்து எனக்கு மிகுந்த திருப்தி அளித்தவை.
பெரும் பணம் படைத்தவர்கள், வசதி வாய்ப்புள்ளவர்கள், படித்தவர்கள், அறிவாளிகள் இவர்களிடையே வெளிப்படும் பண்பாட்டு அசைவுகளைவிட, அன்றாடப் பாடுகளில் சிதைந்து நொறுங்கி, அறநெறி தவறாமல், மனம் தளராமல் உழைத்து, தன் வாழ்க்கையை வறுமையிற் செம்மையாக நடத்துகின்ற எளிய மனிதர்களிடம் வெளிப்படும் குணநலன்கள்தான் என் கதைகளுக்கான பாத்திரங்கள் என்பதைச் சொல்லிக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதில்தான் என் மனம் பெருமை யடைகிறது, நிம்மதியுறுகிறது.
இளம் பிராயத்தில் நமக்கு அமைந்த வாழ்க்கைச் சூழலும், வறுமையும், அதனோடு தொடர்ந்து போராடி அற நெறி பிறழாது நம்மைக் கரையேற்றிய பெற்றோர்களின் தியாக சீலங்களுமே இதற்கான ஆழமான வித்து. அந்த மன நேர்மையும், செயல் திறனும் விடாது இன்றும் என்னோடு பயணித்துக் கொண்டிருப்பதை உணரும்போது, ஒருவகையில் எனது படைப்புத் திறன்தான் என்னைத் தொடர்ந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தலைப்படுகிறேன் நான்,
என் படைப்புக்களில் பாவனை இல்லை. பகட்டு இல்லை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. என் மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது. மன உலகம் கதையுலகமாக விரிகிறது. அன்றாட அனுபவ எல்லைக்குள், மனசுக்குள் பதிவாகிற நிகழ்வுகளே கதைகளா யிருப்பவை. அதனாலேயே நேர்மையும், மன உண்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.
எனது அனுபவ எல்கைக்குட்பட்ட ஒரு சம்பவத்தை, சம்பவத் துளியை மட்டுமே சிறுகதையாக்குவது, உலுத்தாத மொழி நடை, வாசக மனதில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்தல், சிறிய அழுக்கைத் துடைத்தல், சிறிய சோகம் கவிழச் செய்தல், வெளிச்ச நினைவு மின்னி மறைதல் என எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயர்த்திப் பிடிக்கிற, அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு இவையே என் கதைகளின் வழித்தடம்.
இந்த நோக்கில் வாசக உள்ளங்கள் என் கதைகளை நிச்சயம் உணரும், என்கிறார் உஷாதீபன் அவர்கள்.
####
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம் :
இந்த புத்தகத்தில் மொத்தம் 24 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளது.
இச்சிறுகதைகளை கீழ்க்கண்ட வார, மாத இதழ்கள் வெளியிட்டுள்ளது.
புதிய பார்வை, வார்த்தை, சொல்வனம் இணைய இதழ், அந்திமழை, செம்மலர், தாமரை, தினமணிகதிர், போடி- மாலன் சிறுகதைப் போட்டித் தேர்வு, தினமணிகதிர் - நெய்வேலி புத்தகக் கண்காட்சித் தேர்வு...
1. அசையாச் சொத்து
2. அம்மாவின் மனசு
3.ஆட்டோக்கள் உரசுகின்றன
4.நிறைவு
5. ஒரு நாள் கிழிந்தது.6.மாற்றம்
7. அப்பாவின் நினைவு தினம்
8. பழைய ஆளு
9. மனக்குப்பை
10. ஒரு மரம் தனி மரம்
11. தன்னில் கரைந்தவர்.12.தாகம்
13. பனிப்போர்.14. முனைப்பு
15. யார் கூப்டதுங்க?
16.தனிமை.17. நம்பினால் நம்புங்கள்
18. பாதிப்பு
19.பின்னோக்கி எழும் அதிர்வுகள்
20. போந்தாக்குழி
21. முரண் நகை 22.ராஜீ
23. காவல்
24. நகரும் வீடுகள்..
பல்வேறு சிறுகதைத் தொகுப்புகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர் உஷாதீபன் அவர்களின் 24 சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு "பின்னோக்கு எழும் அதிர்வுகள்".
சிறுகதைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கு தகுந்தவாறு எழுதினால்தான் பேசப்படும் வகையில் அமையும். அந்த வகையில் இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தவாறு சின்னச் சின்ன விஷயங்களையும் அதன்பின்னே சென்று ஆழமாக அறிந்து சுவாரசியங்களுடன் சிறப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
இவருடைய சிறுகதைகளில் பயணிக்க்கும்போது நாமே அதில் ஒரு பாத்திரமாகிவிடுகிறோம். எல்லா கதைகளும் நம்மைச் சார்ந்து நடப்பதுபோல்தான் இருக்கிறது. நிறைய விஷயங்கள் நம் வாழ்க்கையுடனும் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும், நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் ஒருவராகவே கதை மாந்தர்கள் இருக்கிறார்கள். நாம் உதாசீனப்படுத்தும் விஷயங்கள்கூட சிறுகதையாக மாறுவது நம்மை வியப்பிலாழ்த்துகிறது.
ஒரு சில கதைகளை
வாசிக்கும்போது நம்மையறியாமலே சிரிப்பு வருகிறது. ஆசிரியரின் சமூக அக்கறை சிறுகதைகளில் தென்படுகிறது.
இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள எல்லா கதைகளுமே ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்திவிட்டுத்தான் செல்கிறது. அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியவில்லை. நினைவில் நிறுத்தி அசைபோட வைக்கிறது.
அதிகாலை எழுந்து வாசற்பெருக்கி, கோலமிட்டு, என்பதில் தொடங்கி இரவு படுக்கையில் படுக்க செல்லும் வரையிலுமான அனைத்து நிகழ்வுகளும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது. இச் சிறுகதைத் தொகுப்பு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மொழி நடையும் பேச்சு வழக்கும் எளிதாக புரியும்படி கதை சொல்லப் படுகிறது. சிறுகதைகளுக்கான தலைப்பு முத்தாய்ப்பாக உள்ளது.
###
1) அசையா சொத்து:
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய வயதானவர்கள் குறித்த கதை இது .எனக்கும் எனது பெரியவர்களின் நினைவு வந்தது. நானும் வயதாகிக் கொண்டிருக்கிற நிலையில் இந்த கதையை படிக்கும் போது மனதை என்னவோ செய்கிறது.
அப்பா கூடக் கடைசிக் காலத்தில் அந்தத் திண்ணையில் தான் உட்கார்ந்திருந்தார். அது ஏன் அப்படி பெரியவர்கள் எல்லோரும் அப்படித் தங்களைத் தாங்களே ஒதுக்கிக் கொள்கிறார்கள்? மனதிற்கு அவ்வாறு தோன்றிவிடுமோ? யாருக்கும் தன்னால் சிரமம் கூடாது என்பதாக! தான் மட்டும் இந்த உலகத் தில் தனியனாய் நிற்பதுபோல் ஒரு தோற்றம் ஏற்படுமோ?
அந்த வயதானவரையும் அவர் சேகரித்து வைத்த ,சேர்த்துவைத்த காப்பாற்றிக் கொண்டிருக்கிற அசையா சொத்து குறித்தும் ஆசிரியர் சம்பந்தப்படுத்தி ( compare செய்து)வைத்திருப்பது அபாரமாக இருக்கிறது.
அவை மட்டும்தான் அசையாச் சொத்துக்களா? அந்தச் சொத்துக்கள் மட்டும்தான் மதிப்பிற்குரியவையா? இவர் வைத்திருந்ததால்தானே அவை இருந்தது? அந்த அஃறிணைப் பொருட்கள் மதிப்பிற்குரியவை என்றால் அதைப் பாதுகாத்து சம்ரட்சணை பண்ணி வைத்திருந்த இந்த உயர்திணைப் பொருள் எத்தனை மேல் மதிப்பிற்குரியவை? இதேபோல் ஒவ்வொரு வீட்டின் வயதான பெரியவர்களும், முதியவர்களும் தானே அசையாச் சொத்துக்கள்? உயிர் இருந்தும் அசைய முடியா, இயங்க இயலாச் சொத்துக்கள். அதுதானே? கேள்வி மேல் கேள்விகள். பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பதிலில்லா கேள்விகள்!!
2) அம்மா மனசு:
எனது தந்தை கூட என்னை வரச்சொல்லி பக்கத்தில் வைத்துக்கொண்டு நிறைய கேள்விகள் கேட்பார் .நிறைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார் .,இருக்கும்போது இறக்கும்போது அப்படியே செய்து கொண்டிருந்தார் .
அதைத்தான் ஆசிரியர் அம்மா மனசு என்கிற கதையில் பதிவு செய்கிறார்.
அந்த முகத்தில்தான் எத்தனை திருப்தி? இதமான வார்த்தைகளுக்காக இந்தப் பெரியவர்கள் எத்தனை ஏங்கிப்போய்க் கிடைக்கிறார்கள்? வேளர வேளைக்கு சோறு தின்பதைவிட வயிற்றை நிரப்புவதைவிட அன்பு வார்த்தைகள்தானே அவர்களின் மனப்பசியை ஆற்றுகின்றன? வயிறு நிறைவதைவிட மனசு நிறைவது உயிரைப் புதுப்பித்துக் கொள்வதற்கு சமமல்லவா? இது கிடைக்காமல் ஏங்கி ஏங்கி புழுங்கிப் புழுங்கி துக்கம் நெஞ்சை அடைக்க வார்த்தைகள் வர இயலாமல் எப்படி வாயடைத்துக் கிடக்கின்றன எத்தனையோ ஜீவன்கள்? யாரேனும் ஆத்மார்த்தமாய் அறிவதுண்டா? உணர்வு பூர்வமாய் நுணுகி அறிந்து உயிரோட்டமாய் ஆறதலாய்ச் செயல்பட்டது யார்?
கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்காவது அம்மா சிரித்தாளா? எந்த இடத்திலாவது அம்மாவின் முகத்தில் தன்னையறியாத அல்லது தன்னை மீறிய புன்னகை வெளிப் பட்டதா? எத்தனையோ முறை தேடித்தான் இருக்கிறான். பார்க்க முடிந்ததில்லை. ஆனாலும் அம்மா தன் கதைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாள். இவனும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். சிறு பிராயத்தில் அது அவள் வாழ்க்கைப்பட்ட கதை. அன்றிலிருந்து இன்றுவரை அவள் எதிர் நோக்கிய பிரச்சனைகளின் கதை. வாழ்க்கை எவ்வளவு அவலமாக இருக்கிறது அம்மாவுக்கு மூழ்கி முத்தெடுத்து மீண்டிருக்கிறாள் அம்மா.
தனது இளைய மகனை வரச்சொல்லி அவரிடம் சொன்ன கதையையே சொல்லிக்கொண்டிருக்கிறார். அவனும் அலுக்காமல் கேட்கிறான் .
இறுதியில்
இவன் அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் காண்டிருந்தான். இந்த முறை அம்மாவிடம் கதைகள் இல்லை, வாழ்க்கை இருந்தது என்று தோன்றியது இவனுக்கு.
3) போந்தா குழி:
சிறுவயது நட்பை நினைவு படுத்துகின்ற கதை இது.
சிறுவயதில் ஒவ்வொரு நண்பனுக்கும் ஒரு பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவார்கள் .அதையும் ஆசிரியர் அழகாக பதிவு செய்கிறார்.
"நம்ப தெருவுலே என்னென்னவோ பட்டப் பெயர்லெல்லாம் ஆட்கள் இருப்பாங்களே... அதச் சொல்லித்தானே நாமளே அவுங்களைக் கூப்பிடுவோம்...
'அதுக்கென்ன பஞ்சம்... அது நெறயவே இருக்கு... 66 காப்படி மாங்கா பேரன், இட்லி மாமி, சட்டிப்பீ வெங்கட்ராமன், ரப்பர் பாலு, மைக்கா ராமநாதன், சைபால் குருமூர்த்தி, வாழக்கா வடை ரங்கன், ஓடுகால் ராமமூர்த்தி, நூறடி நீளம் பத்தடி அகலம் ரங்காச்சாரி..."இடைவெளியில்லாமல் சொல்லிக் கொண்டே போனான் முத்து.
பெரிய ஆபிஸர் ஆகிவிட்டதால் தனது கிராமத்திற்கு வந்து தனது பழைய நண்பர்களை தேடி பிடித்து பேசும்போது அவன் சார் போட்டு அழைப்பது வினோதமாக இருக்கிறது.
அவன் இனித் தன்னோடு விளையாட மாட்டான். அப்படியே விளையாடினாலும் தன்னை ஜெயிக்க மாட்டான். அந்தப் பழைய நாட்கள் இனிக் கிடைக்கவே போவதில்லை!
நெஞ்சில் ஏறிய சுமையோடு தயக்கத்துடனேயே நடக்க ஆரம்பித்தான் பழைய நட்பை தேடி வந்த நண்பன்.
##₹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக