14 டிசம்பர் 2023

 

தன்னை வென்றவன்” – சமூக நாவல் –  (description) Pustaka.co.in வெளியீடு



ரு இருபத்தைந்து வயது இளைஞனின் எழுபது, எண்பதுகளிலான வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியது இந்நாவல்.  சம்பவங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் காலமும் கருத்தும் உணர்த்தப்பட்டு நாவல் யதார்த்த நிலையில்  நகர்ந்து பயணிக்கிறது.  பின் நகர்ந்த காலமாய் இருப்பினும், கருத்து உள் வாங்கி இருத்தும் தன்மையானது இதன் சிறப்பு.

பிறந்தது முதல் குடும்பமே கோயிலாய் ஒன்றிக் கிடந்த ஒருவனை பணி நிமித்தம் வேரோடு வெளியூரில் பிடுங்கி நட்ட கதை இது.. வெளி உலக அனுபவமே இல்லாத ஒருவனை, தனியொருவனாக அவன் தங்கியிருக்கும் அறையும், பணியாற்றும் அலுவலகமும், சுற்றியுள்ள புதிய மனிதர்களும், அன்பு காட்டும் எளிய உள்ளங்களும், இந்த சமூகமும் எப்படிப் புதுப் புது அனுபவங்களை அவனுக்கு அள்ளித் தருகின்றன, அதன் முரண்களிலிருந்து அவன் எப்படி விலகி நின்று தன்னைக் காத்துக் கொள்கிறான், பொது நலச் சிந்தனைகளில்  எப்படிப் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்,  அவனுக்கான அடையாளம் எங்ஙனம் வேரூன்றுகிறது, நியமங்கள் மிகுந்த, முறைமையான,  பொறுப்புள்ள குடும்பத்திலிருந்து வெளிப்போந்தவன் எப்படிப் பலரின் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரியவன் ஆகிறான் என்பதை மிகுந்த நிதானத்தோடு சின்னச் சின்னச் சம்பவக் கோர்வைகளோடு, வாசிப்போர் மனதில் ஆழப் பதியும் வண்ணம் கண்ணும்  கருத்துமாய் முன் வைக்கும் நாவல்  இது.

அனுபவங்களால் புடம்போடப்பட்டு தன்னையே வென்றவனாய் தலை நிமிர்ந்து நிற்கிறான் இதன் நாயகனான சத்யன் என்கிற சத்தியமூர்த்தி.

                                    -----------------------------

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...