01 டிசம்பர் 2021

கொக்குக்கு ஒண்ணே மதி...! - குறுங்கதைகள் -

 

    

     கொக்குக்கு ஒண்ணே மதி...!    -  குறுங்கதைகள் -


     அவர்கள் அவனை ஒதுக்கினார்கள். அமைதியாக விலகிக் கொண்டான் இவன். உங்களுக்குக் காரணம் தேவையில்லையா என்றார்கள். வேண்டாம் என்றான். ஏன்? என்று மறுகேள்வி போட்டார்கள். ஏற்கனவே நான் அதில் இல்லையே....என்றான்.                                                    பொய் சொல்லத் துணிந்து விட்டீர்கள்...                                  இல்லை...நிஜத்தைத்தான் சொல்கிறேன்...                                    கண்கூடாக வருடா வருடம் சந்தாக் கொடுத்தீர்களே..ரசீது இருக்கிறதே....அது சாட்சியில்லையா?                                    மறுக்கவில்லை. அது அமைப்பிற்குத்தானே...! இன்னொன்றுக்கல்லவே?      இரண்டும் ஒன்றுதான்....                                                    அது உங்களுக்கு....                                                    இல்லை...உங்களுக்கும்தான்....                                               நீங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய?    

அமைதி காத்தால் என்ன பொருள்? சம்மதம் என்றுதானே...?                 அமைதியாக விலகியிருப்பதும் சம்மதமின்மையைக் காட்டும்.              அப்படியென்றால்?                                                     நான் ஆத்மார்த்தமாய் அதில் இல்லை என்று பொருள்.                  உங்களுக்கு சமூகப் பார்வை அற்று விட்டது..                            எது சமூகப் பார்வை?                                                  இதில் இருந்தால்தான் அது....                                                அமைப்பில் இருந்தாலோ அல்லது இஸத்தைப் பற்றிக் கொண்டிருந்தாலோதானா? மற்றவர்களுக்கெல்லாம் அது இல்லையா? என்ன அபத்தம் இது...!                                                            

   அவர்கள் அவனை முறைத்தார்கள்...!

                           ---------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...