04 மே 2020

'தாண்டவன்“ சிறுகதை - பிரசுரம் - இலக்கிய வேல் - மாத இதழ்

சிறுகதை                                       தாண்டவன்                                                                                                         ----------------------------------------------------------
     முத்துப் பேச்சிக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. தர்மாஸ்பத்திரிக்குப் போன கணவன் தாண்டவனை இன்னும் காணவில்லை. அவனை நினைத்து நினைத்தே அவளின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருக்கிறது. என்று அவனைக் கல்யாணம் பண்ணினாளோ அன்று முதல் அவள் வாழ்க்கையில் அனுதினமும் அல்லல்தான். தெரிந்தேதான் அவனை ஏற்றுக் கொண்டாள். எல்லாம் காலப் போக்கில் சரியாகிப் போகும் என்று. காலம் போனதுதான் மிச்சம். அவனோடு சந்தோஷமாக சம்போகித்து நான்கு குழந்தைகளை வேறு பெற்றாயிற்று. அவர்கள் இருக்கும் நிலையில் அது கண்டிப்பாக  அதிகம்தான். இரண்டு பெற்றவுடனேயே எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள் அவள். அவன் கேட்டால்தானே. தாண்டவக்கோன் தாண்டவம்தான் ஆடினான். வயது பற்றியெல்லாம் கவலையில்லை. குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதுபற்றியும் எண்ணமில்லை.  எண்ணிக்கையில்தானா ஆண்மையின் நிரூபணம் இருக்கிறது. ஆண்மையின் அழகு பெற்றுத்தள்ளுவதிலா பிரதிபலிக்கிறது. பெற்றுப் போட்டு பெற்றுப் போட்டு இவள் உடல் நைந்து போனதுதான் மிச்சம். இந்த பாழாய்ப்போன உடம்பில் அப்படி என்னதான் கண்டான்.
     முத்து....முத்தூhhh...என்று அவன் கையைத் தவழவிடுகையிலேயே மடங்கித்தான் போகிறாள் அவள். ஊரெல்லாம் அவளைப் பேச்சி பேச்சி என்றே விளிக்கையிலே அவனுக்கு மட்டும் அவள் என்றும் முத்துதான். நீ கடலுக்கடில கிடைச்ச முத்துடீ எனக்கு...நா உன்னை அப்டித்தான் கூப்பிடுவேன்...ஊரு வேணா எப்டீயும் கூப்பிடட்டும்....எனக்கு நீ என்னைக்கும் முத்துதான்...
     எப்படியெல்லாம் உடம்பு பூராவும் பரவுகிறது அவனின் கைகள். மண்வெட்டி பிடிக்கும் அந்த முரட்டுக் கைகளில்தான் எத்தனை காய்ப்புக்கள். அதுவா இத்தனை இதமாகத் தனக்குத் தோன்றுகிறது. எங்கிருந்து கற்று வந்தான் இந்தக் கலையை. படிக்காதவன்...முரட்டுக் குணம் படைத்தவன்...எந்த நேரமும் வீச்சும் விரைப்புமாகத் திரிபவன்...யாருக்கும் அடங்காதவன்...இங்கே குழந்தையாய் ஊறுகிறானே என் உடம்பில். உரிமை உள்ளவன்தான் எனினும் அதற்கும் ஒரு அளவில்லையா? நேரங்காலமில்லையா?
     பேச்சீ...அடி பேச்சீ....என்னாடீ இன்னைக்கு வேலைக்கு வரல....அந்தக் கட்டைல போறவன் என்னா ஏச்சும் பேச்சும் தெரியுமா...கண்டமேனிக்கு வாய்ல வந்ததைப்  பேசுறாண்டீ... – சொல்லிக் கொண்டே கதவைத் தட்டிய முனியம்மா...அந்த நேரத்தில் அன்று வந்திருக்கக் கூடாதுதான். ஊஉற_ம்...அவள் வந்ததில் தவறில்லை...அந்த நேரத்தில், அதுவும் விளக்கு வைக்கும் மாலை கழிந்த இருள் கவியும் பொழுதில்  யார்தான் அப்படிக் கிடக்க நேரிடும்....மனசு அன்று மிகவும் லஜ்ஜைப்பட்டுப் போனது இவளுக்கு. கூனிக் குறுகித்தான் போனாள். அன்று, அந்தக் கணத்தில்தான் தான் விழித்துக் கொண்டோமோ என்று இன்று கூட நினைத்துப் பார்க்கிறாள் அவள்.
     கருப்புன்னாலும், நவ்வாப்பழங் கணக்கா என்னமா இருக்கடீ நீ? அலுக்கவே மாட்டியாடீ எனக்கு? ஒவ்வொரு வாட்டியும் புதுசு புதுசா என்னமாச்சும் தோணிக்கிட்டே இருக்கே உங்கிட்டே? எங்கேயிருந்துறீ இந்த வரத்த வாங்கிட்டு வந்த? எந்தச் சாமி கொடுத்த வரம் இது? உன்ன மட்டும் தனியா மண்ணைப் பிசைஞ்சு செய்திச்சா அந்தச் சாமி? எனக்கு உன் நெனப்பாவே இருக்கேடீ... எந்த வேல வெட்டிக்கும் போகாம பேசாம உன் நெஞ்சுலயே சாய்ஞ்சு கெடக்கலாம் போலிருக்கு... எழுந்திரிக்கவே மனசாக மாட்டேங்குதுடி...என்னை என்ன செய்யச் சொல்ற? என்னை யாராவது அடிச்சு வெரட்டினாத்தான் போல்ருக்கு....
     எந்நேரமும் ஒரு மனிதனுக்கு அதே நினைப்புத்தானா? வீட்டிற்கு வருவதே பெண்டாட்டியோடு படுக்கத்தான் என்பதாகவே குறியாக இருந்தான் அவன். எப்படியோ எப்படியோ அவனைச் சந்தோஷப்படுத்தி, திருப்திப்படுத்தி, ஓயவைத்து, உறங்கச் செய்து காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள் அவள். ரண வேதனைதான் அவளுக்கு. அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்போது இந்த உடல் போராட்டம் வேறா?
     ஏட்டீ, என்னாடி இப்டித் தடுமாறுற? என்னாச்சு உனக்கு? கேட்டுக் கொண்டே சட்டென்று கைக் குடத்தைக் கீழே வைத்து, விழ இருந்த பேச்சியைத் தாங்கிப் பிடித்தாள். பேச்சியின் குடத்துத் தண்ணீர் தளும்பித் தளும்பிச் சிதறியது.
அய்யய்யோஅய்யய்யோ..ஒரு கப்புத் தண்ணி போச்சே….கடவுளேபதறினாள் பேச்சி.
     நல்லவேளடீ, கொடந்தண்ணியும் கொட்டிருச்சின்னா என்னாவுறது? இன்னம் மூணு நாளைக்கி வச்சிக்கிரணுமேடீ….
     பேச்சிக்கு முனியம்மாவின் வார்த்தைகள் சன்னமாய்க் காதில் ஒலித்தது போலிருந்தது. காலையிலிருந்து சுடுதண்ணி ஒரு வாய் ஊற்ற வக்கில்லை. அதற்குள் தண்ணிக்கென்று கிளம்பியாயிற்று. டீ குடிச்சியாடீஎன்று கேட்ட முனியிடம் ஆச்சுக்கா….என்று தைரியமாய்ப் பொய் சொல்லியாயிற்று. நம்பினாளோ என்னவோஅவள் குடித்தாளா என்று தனக்குக் கேட்கத் தெரியவில்லை. அவளும் சொல்லவில்லை. எந்தத் துயரத்தில் எதையென்று பகிர்ந்து கொள்வது?
     மண்ணெடுக்கப் போகாதையா, போகாதையான்னு சொன்னேன்கேட்டியா? அதெல்லாம் யாருக்கும் தெரியாதுடீன்னு சொன்னேஇப்போ ஆளுக வெரட்டினாங்கங்கிறே….வண்டி மாட்டத் தாறுமாறா வெரட்;டி, கொண்டு வந்து சேர்த்துப்புட்டேன்னு சாமர்த்தியமாச் சொல்றே….திருட்டுத்தானய்யா அதுஅனுமதி இல்லாமப் போய் எடுத்தா, யார்தான் விடுவாக….? அரசாங்கத்துக்குத் தெரிஞ்சா பிடிச்சு உள்ள வச்சிருவாகய்யாநீயும் கம்பியெண்ணப் போயிட்டேன்னா அப்புறம் எங்கதி?
     அனுமதிக்கிறவன்லாம் ஒழுங்காத்தேன் எடுக்கிறாங்களோ? பத்தடிக்கு இருபதடி தோண்டியிருக்கான் ஒவ்வொருத்தனும்….இதுல லாரிக்காரனுக்கும், வண்டிக்காரனுக்குமே உள்குத்து வேல வேறே நடக்குதுமிஷினு ஓட்டி, அவனவன் சைடுல காசு பார்க்குறான்….கான்டிராக்டுன்னு திருடுறவன் ஒருத்தன்லாரிக்காரனும், மிஷின் வச்சிருக்கிறவனும் தனிக்கூட்டு….கேட்டா எரக்கம்னு சொல்வாங்கஎங்க வண்டிதான்னுக்குவாங்கபெரிய கும்பிடப் போட்டுட்டு கிடைச்சவரைக்கும் லாபம்னுட்டு வண்டிய நகர்த்துற அத்தக் கூலி…..யார யார்தான் கேட்க முடியும்? ஊருக்குள்ள போயி ஆளுகளக் கூட்டிட்டு வராம இருக்கானேங்கிற பரிதாபத்துல அவனையும் கூட்டாளியாக்கிக்கிட்டுத் திருடுறானுங்கவந்தவரைக்கும் லாபம்னு கண்டுக்காமப் போறான் காய்ச்சப்பாடுள்ளவன்
                சின்னப்புள்ளேலேர்ந்து ஓடி வெளயாண்ட ஆறுதான்….அவன் பார்க்க அடிச்சிட்டு வந்த வெள்ளத்துல பாய்ஞ்சு பாய்ஞ்சு முக்குளிச்சவன்தான்ஆத்தா மடில புரண்டுட்டு அவளையே காட்டிக் கொடுக்கிறான்னா? சீவனத் தக்க வச்சிக்க அவனுக்கு வேறே வழி தெரில….என்னா பண்ணச் சொல்றே…? எனக்குத் தெரிய இந்த ஊரு ஆத்துலர்ந்து மேற்;கால பத்துக் கிலோமீட்டருக்கு எங்கயும் கருவேலங்காடாத்தேன் கெடக்கு….எப்டி வந்திச்சு இந்தப் பொதரு? ஆத்து வழியாவே மாடன் கோயில் பூசைக்குப் போயிருக்கமேஇன்னைக்குப் போக முடியுமா? ஒத்தக் கிலோ மீட்டர் தாண்டுறதுக்குள்ள நம்மளப் பாம்பு புடுங்கலைன்னாக் கேளு…..ராத்திரியெல்லாம் எம்புட்டுத் தப்பு நடக்குது தெரியுமா அந்தக் கும்மிருட்டுக்குள்ள? எவனுக்காச்சும் முப்பது நாப்பது வருஷத்துக்கு மேல வத்தாமத் பிரளயமா வெள்ளத்த ஓடவிட்ட அந்த ஆத்து மேல, ஆத்தா மேல மருவாதையிருக்குதா? பக்தியிருக்குதா?  எல்லாப் பயலுவளும் மனசாட்சியக் கொன்னுட்டாங்ஞடி….துட்டுத்தாண்டி இன்னைக்குப் பிரதானம்… …அதுக்காக என்னமுஞ் செய்வாங்ஞ….இம்புட்டு எதுக்கு? இந்த ஊர்ல திரிஞ்ச எத்தன கழுதைங்க இன்னைக்கு கூலிப்படயா மறைஞ்சி கெடக்குது தெரிமா? நீ என்னத்தக் கண்ட? அத்தன பயலுவளும் வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டாங்ஞன்னு நெனச்சிட்டிருப்பேஎனக்குத்தான் தெரியும்எவனெவன் எங்கங்க இருக்காங்ஞன்னுதெரிஞ்சோ தெரியாமலோ போயி மாட்டிக்கிட்டானுவோ….
     வாயடைத்துப் போனது முத்துப் பேச்சிக்கு. அந்தக் காலத்துல ராசாக்க இருந்தப்போ அரமனைல வேல பார்க்குறதே பெருமைன்னுட்டு சேனைக்கு ஆளெடுக்கைல நா முந்தி, நீ முந்தின்னு ஓடுவாகளாம்எங்க ராசா கூப்டிருக்காக….அந்தத் தெய்வம் கேட்;டிருக்குன்னுபாட்டனாரு சொல்லக் கேட்ருக்கேன்….எந் தம்பி கூட மில்ட்டிரிக்கு ஆளெடுக்குறாகன்னுட்டு பளனிக்கு ஓட்டமா ஓடினான்….இப்ப என்னடான்னா கூலிப்படையாம்கூலி கொடுத்தா பட சேப்பாக…? அப்டீன்னா சம்பளம் கெடையாதா? அதென்ன கூலிப்படபேரே நல்லால்லியே….பேருலயே தப்பு இருக்கா மாதிரியா ஒரு வேல இருக்கும்…. தப்பித் தவறிக் கூட அந்தப் பக்கம் போயிராத நீஅவ்வளவுதேன் சொல்லுவென்அப்டிப் போனேன்னு தெரிஞ்சிச்சுஅப்புறம் நா ஒனக்கில்ல….இத்தன நா உன்கிட்டப் படுத்தத ஒரு கெட்ட கனவா நெனக்கிடுதேன்எம் புள்ளைங்க உண்டு, நா உண்டுன்னு உசிரக் கைல புடிச்சிக்கிட்டு செம்மத்தக் கழிச்சிட்டுப் போறேன்
     என்னா புள்ளஒரு வெவரத்துக்குச் சொன்னா என்னன்னமோ பினாத்துறஅப்டியெல்லாம் எஞ்செல்லத்த விட்டிட்டுப் போயிடுவனா? எப்படா இன்னம் ரெண்டு செல்வத்தக் கைல பார்ப்போம்னுட்டு நாங் கெடக்கேன்அதுக்குள்ளயமா நீ என்ன வெலக்கப் பார்க்குற?
     அடச் சீ…..! என்னா ஆளுய்யா நீ…! நா என்ன பிள்ள பெறுற மெஷினா? பெத்துப் பெத்துத் திரிய விடுறதுக்கு? அப்புறம் அத்தனயும் பிச்ச எடுக்கத்தேன் போகுமாக்கும்இருக்குற நாலயும் கரசேக்குறதுக்கே என்னா கஸ்டப் படப்போறனோ? நல்ல வேளஒண்ணுதேன் பொட்டை….நாம ரெண்டு பேரும் நாளைக்குத் திடீர்னு மண்டயப் போட்டாலும், மத்த மூணும் இந்த ஒண்ணக் காப்பாத்தாது? அப்டியா கைவிட்ரும்?
     மொத நாளைக்கு மொதநா தாண்டவனோடு நெருக்கமாய் சல்லாபித்தபோது எழுந்த பேச்சுக்கள் முத்துப் பேச்சிக்குப் படிப்படியாய் ஞாபகத்துக்கு வந்தன. அவன் தன் மேல் வைத்திருக்கும் பிரியம்தான் தன்னை இப்படி இயக்குகிறதோ என்று எண்ணி எண்ணி மறுகியிருக்கிறாள் அவள். கால் வயிற்றுக் கஞ்சிக்கே தாளம் போடும் பல சமயங்களில் கூட அவன் தன்னைக் கடிந்து கொண்டதில்லையே? இப்படியான ஒரு மனநிலை அவனுக்கு எப்படி வாய்த்தது?
     எத்தனையோ இரவுகளில் சுற்றுகிறான், நினைத்த பொழுது வீடு திரும்புகிறான். ஆனாலும் எந்தவொரு கெட்ட பழக்கமும் அவனை அண்டியதாக இவள் உணர்ந்ததில்லை. கிடைக்கும் வேலை எதுவானாலும் மான அவமானம் பார்க்காமல், ஏற்ற இறக்கமில்லாமல் செய்து விட்டு எங்கிருந்தேனும் ஏதாச்சும் துட்டைக் கொண்டு வந்து தன் கையில் திணிப்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கும் தாண்டவனை நினைக்கையில் நெஞ்சு விம்மியது அவளுக்கு.
     தண்ணீர்க் குடத்தைக் கொண்டு இறக்குகையில் கால்கள் தடுமாற, பக்கத்து ஜன்னலைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். அது கையோடு வந்து விடுவேன் என்பதுபோல் ஆட்டம் போட்டது.தன் நிலையிலிருந்து வெளிப்பட்டுத் துருத்திக் கொண்டு ஆடியது. ஏதேனும் ஒரு தொகை சேர்ந்தால், கொஞ்சம் சிமின்டும், மணலும் வாங்கிக் கலந்து அங்கங்கே விரிசல் விட்டிருக்கும், காரை பெயர்ந்திருக்கும் பகுதிகளைப் பூச வேண்டும் என்று நினைத்திருந்தாள். பிழைப்பு அப்படியா இருக்கிறது. சோத்துக்கே பல சமயங்களில் வயிற்றில் ஈரத் துணிதானே…!
     அதெல்லாம் சமயம் போல பார்த்துக்கலாம்..இப்போ மண்ணடிச்சிக்கிட்டிருக்கேன்லஅவர்ட்டச் சொல்றேன்….ஏதாச்சும் ஏற்பாடு பண்ணாமயா போவாரு….?
     நீ ஒரு வெள்ளந்தியான ஆளய்யா….மண்ணடிக்கிறவனுக்கும், வீடு கட்டுற வனுக்கும் என்னாய்யா சம்பந்தம்? பெருந்துட்டுச் சம்பாதிக்கிறவன் எப்பவுமே நொச்சுப் பிடிச்ச வேலைகளைச் சுமந்துக்கிட்டு அலைய மாட்டான்யாநீ எங்கியாச்சும் கொத்தனார் வேல பார்த்தேன்னு வச்சிக்கோஅப்பக் கூட ஏதாச்சும் நடந்துடும்….ஆனா கான்ட்ராக்ட் எடுத்து மணல் திருடுறவன், கொள்ள கொள்ளயா அடிக்கப் பார்ப்பானா, உன்ன மாதிரி வெத்து வேட்டுகள நினைச்சிட்டிருப்பானா? ஒழுங்கா எதுல கூலி கெடைக்கும், எந்த வேலைக்குப் போனா நெலைக்கும்னு யோசிய்யா….எவன் குறுக்கு வழில என்ன செய்றான்னே யோசிச்சிட்டிருக்காதேஅது நம்ப பொழப்பையே கெடுத்துடும்….உண்மையான உழப்புதான்யா என்னைக்குமே நெலைக்கும்…..
     எவ்வளவோதான் சொன்னாள். ஆனாலும் மாட்டு வண்டியடிப்பதில் அவனுக்கிருந்த பிரேமை ஏனென்றே தெரியவில்லை. எங்கோவோர் மூலையில் எவனோ ஒரு வண்டி மண் எடுத்துப் போவதில் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்று யாரும் கண்டு கொள்ளாத ஒன்றில்தான் துட்டு சட்டென்று கைக்கு வரும் என்கிற அவனது கணிப்பு இவளுக்கு வியப்பாயிருந்தது.
     சின்ன வயது தாண்டவனை அவள் அறிவாள். அது அவன் சொந்த ஊரில். இது அவன் நிழல் கூட இல்லை. சினிமாக் கதாநாயகன் போல் மாறிப் போனான்.
     தாண்டவக்கோனின் பேச்சு ஒன்றும் சாதாரணப்பட்டதல்ல. அதுதான் அவளை அவனுக்குக் கொடுக்க வைத்தது. அவனை மாதிரித் தைரியமாகப் பேச ஆள் கிடையாது. அந்த ஆளா இது என்று இன்று எவனும் நம்பமாட்டான். கட்சியில்; அவனுக்குத் தனிப் பெருமை. எதிர்க்கட்சியின் ;வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றி, கந்தல் கந்தலாக ஆக்கி விடுவான். அந்த விறுவிறுப்பு? என்னா புத்திசாலித்தனம்? …வியந்திருக்கிறாள். எத்தனையோ அடிதடியிலிருந்து தப்பியிருக்கிறான். கூட்டம் முடித்து இருப்பிடம் போகும் வழியில் ஊர் திரும்பும்பொழுது என்று சந்தித்த பேராபத்துக்கள் மிக அதிகம். “கெட்ட வார்த்தையெல்லாம் பேசப்படாது. அரசியல் மட்டும் பேசு...யாரையும் பர்சனலாத்; திட்டிப் பேசாதே.”-எத்தனையோ   முறை   எச்சரித்திருக்கிறார் தலைவர். கேட்டால்தானே? அவன் பாயும் புலிப்பா!”– தலைவர் வாயிலான இந்த உசுப்பல்தான் அவனை எகிறியது. கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கும் அவன் பேச்சில். கேலியும், கிண்டலும், நையாண்டியும் தாங்க மாட்டாமல் ஒரு கூட்டத்தில் தலைவரே இவன் சட்டையைப் பிடித்து இழுத்து அமர்த்திவிட்டார். அடங்காப்பிடாரன் அவன். அவர் பரமசாது. அப்படித்தான் சொன்னார்கள் எல்லோரும். படு நல்லவர் என்றார்கள். இவர் எப்படி அரசியலுக்கு வந்தார், தலைவரானார் என்று எதிர்த்தரப்பினர் மூக்கின்மேல் விரலை வைத்தார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பவன்தான் தாண்டவன். “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைஎன்பான். யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறான் என்று யாருக்கும் தெரியாது. வாயைப் பொத்திக்கொண்டு;சிரிப்பார்கள் எல்லோரும். எல்லோருக்கும் பொருந்துவதுபோல் பேசுவான் அரசியல் வெடிகளைச் சரம்சரமாய் அவிழ்த்து விடுவான். எதிர்பாரா உண்மைகள் பல வெளிவரும் அதில். இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என்று ஆடிப் போவார்கள் எல்லோரும். பதினாலு வயசில் அந்தக் கட்சிக்கு வந்துவிட்டவன் தாண்டவன். ஏழுவரைக்குமான பள்ளிப்படிப்பே பெரிய காரியம். அதற்கு மேல் தம்பிடித்து மேலெழும்ப முடியவில்லை.
     ஊர்விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் என்று லாரி ஓட்டிக் கொண்டிருந்தார் அவன் அப்பா. எங்கேயிருக்கிறார் எப்பொழுது வருவார், போவார் என்பதே தெரியாது. என்ன ஆனார் என்றும் தெரியவில்லைதான்.
     பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுவது, காசுக்கு குண்டு விளையாடுவது, மூணுசீட்டு, டப்பா குலுக்கல் என்று அலைவது இவன் வேலையாகிவிட்டது. தறுதலையாகிப் போனான்.
     ஏழாங்கிளாசிலேயெ மூணுவருஷம். அதற்கு மேல் படிக்க வைத்தால் பள்ளிக்குக்; கேடு என்று அனுப்பி வி;ட்டார்கள். அவனுக்கே அந்தத் தேக்கம் எரிச்சலைத்தான் தந்தது. அவிழ்த்துவிட்டது தத்தாரியாய்த் திரிவதற்கு ஏதுவாகிவிட்டது. அங்கங்கே சித்தாள் வேலை, நாத்து நடவு, அறுவடை என்று கூலி வேலைக்குப் போன தாயார், நைந்து போய் ஒரு நாள் மண்டையைப் போட தனியாளானான் தாண்டவன். பிறகுதான் அரசியல் களம்.
     மனசுக்கு ஆதர்சமான கட்சி மாநாட்டுக்கு என்று இரவு பகல் பாராமல் விழித்திருந்து வேலை செய்ததில் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு என்னை மிஞ்சி எவனுமில்லை என்கிற தியாக உணர்வில், நுழைவாயில் கொடி கட்டும் போது கை தவறிப் பிடித்த எலெக்ட்ரிக்; வொயர் ஆளைத்; தூக்கி வீச ஒரு மாதம் படுக்கையில் போட்டுவிட்டது அவனை!
     ஆனால் அந்த நிகழ்வுதான் உயிருக்குயிரான தலைவரை அவனருகே கொண்டுவந்து நிறுத்தியது. யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்? ஜீவனற்றுக் கிடந்த அவன் கைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுஎல்லாம் சரியாப் போயிடும்....மனசு விட்ரக் கூடாது...அம்புட்டுச் செலவும் கட்சி பார்;த்துக்கிடும்...சரியாப்பூ..?’ - என்று ஆருயிர்த் தலைவர்; தோளில் தட்டியபோது, அந்த ஸ்நேக பாஷையில் தன்னை இழந்து போனான். புத்துயிர் பெற்றான். புது ஜீவனாய் உருவெடுத்தான். தங்க ப்ரேம் மூக்கு கண்ணாடி  பளபளக்க வாயில்  உறால்;ஸ் மிட்டாய் உருள பிரஸ்லெட் கையில் தவழ, தலையைத் தடவிக் கொடுத்து ஆறுதல் சொன்ன அந்த நேரச் சிலிர்ப்பு ஆயுளுக்கும் மறக்காது தாண்டவக்கோனுக்கு. கூர்மையான பேச்சு அவன் பேச்சு. இப்படிக் குத்தி அப்படி வாங்குவான். இவனுக்கு மட்;டும் எங்கேயிருந்து கிடைக்கிறது இந்த நாறப்பய வார்த்தையெல்லாம்? என்று சங்கடப்பட்டவர்கள் அநேகம். குண்டு வெடித்தாற்போல் வீசுவான் வார்த்தைகளை. இப்போ இருப்பவன் அவனே இல்லை. இது மறு ஜென்மம்.
                தலைவரைச் சீண்டாதே...என்னை வேணா பேசிக்கோ...ஆறுதல் பட்டுக்கோ...என் உயிரப் பேசினே, பதிலுக்கு இப்படித்தான் வாங்குவே..நான் மூச்சு விடுறதே அவுருக்காகத் தாண்டா கேனப் பலே...!”— என்றுவிட்டு ஒரு நிமிடம் கூட்டத்தைப் பார்ப்பான். சிரிப்பதா, வேண்டாமா என்று அதிர்ந்து நிற்கும் ஜனம்.                                                
                நம்மூர்ல விலை போகாதாண்ணே உங்க பேச்சு? இப்டி ஒதுக்குறீங்க?” என்பார்கள் லோக்கல் ஆட்கள்.
                மன்னிச்சிக்க ராசா,...உனக்கில்லாததா?” சொல்லிச் சமாளிப்பான் தாண்டவன். ஒரு ஊரில் கூட்டம் முடியுமுன்பே மறுகூட்டத்திற்கான ஆட்கள் வந்து விடுவார்கள். பேசிப் பேசி, பேசக் கற்றவன் அவன்.
     சாப்பாடு, தங்கல், குடி, கூத்தி என்று ஒரே தடபுடல்தான். “பொம்பள இல்லன்னா இந்த ஒலகம் இல்லடா...எங்க அம்மாவைப் பார்த்தண்டா இன்னைக்கு அவட்ட...அப்டியே மடிலதான் கெடந்தேன்....”–படு
     சென்டிமென்டாக இருக்;கும் அவன்பேச்சு சமயங்களில். அவனிடம்நல்லதனம் வெளிப்படும் இம்மாதிரி வேளைகளில். “கவனிப்பில்லாமப் போன ஆளு...”--என்று வருத்தப்படுவார்கள் பலரும். எத்தனையோ முறை தலைவரே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் மறுத்தவனாயிற்றே? “மன்னிச்சிடுங்க தலைவா! கட்சியில் கவனம் போயிடும் பெறவு...இந்த மனசு முழுக்க உங்களுக்குத்தான்...ஒரு பொட்டச்சிகிட்ட அத அடகு வைக்க ஏலாது..” என்றான்.
     அவனா இன்று இப்படி? பேச்சிக்கே அது ஆச்சரியம்தான். தலைவர் திடீரென்று நெஞ்சடைத்து இறந்த அந்த நாளோடு வெளியே வந்தவன்தான். தான் காணாமல் போவதைப் பற்றி, போனதைப் பற்றி இன்றுவரை அவன் ஒரு வார்த்தை பேசியதில்லையே….! யாரும் கண்டுகொள்ளவுமில்லையே? அதற்கு அவன் வருந்தவுமில்லையேஅதுதான் அதிசயம்இது வேறு வாழ்க்கை
                ஒரு பொட்டச்சி கிட்ட அடகு வப்பனா? என்றவன், தன்னிடம் இன்று அடிமையாய்க் கிடக்கிறான். அதில்தான் அவளுக்கு ஆறுதல். என் புருஷன்தான், எனக்கு மட்டும்தான்என்ற கதை நிலைத்துப் போனது.
                நானூறு மைல் தாண்டி வந்த பின்பு ஒருத்தரும் இன்றுவரை அவனைத் தேடவில்லை…! அரசியலில் இப்படியுமா நிகழும்? பெரிய கட்சித் தலைவருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகாது. தனக்கென்ன வந்தது? சாதாரணத் தொண்டன் மூஞ்சி என்ன அவ்வளவு பிரபலமா? மீசை, கிருதா முதற்கொண்டு எல்லாவற்றையும் மழித்துக் கொண்டு, இவனா அவன்? என்று எவனும் நினைக்க முடியாமல்தான் இன்றுவரை கடத்தியிருக்கிறான். கட்சியும் காணாமல் போனதே…! பின்னால் வந்தவர்கள் எதோடோ இணைத்து, தங்களையும் வளப்படுத்திக் கொண்டார்கள் என்று செய்தி. போகட்டும், நமக்கென்னஇதுதான் அவன் பதில்.
                வாசலில் சத்தம் கேட்டது. தாண்டவன்தான் வந்திருக்க வேண்டும். மனசு அடித்துக் கொள்ள, படுத்திருக்கும் பிள்ளைகளைத் தாண்டிக் கொண்டு வெளியேறினாள் முத்துப் பேச்சி.
                முத்துஅடியேஎன் சொத்து…..முழிச்சிருக்கியா? – கேட்டுக் கொண்டே துள்ளலோடு வந்த கணவனை ஆர்வம் பொங்க கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்து வந்தாள்.
                என்னாய்யாஇன்னைக்கு ஒரே சந்தோசமா வந்திருக்காப்ல இருக்கு….இன்னா விசயம்….? கேட்டுக் கொண்டே அடுப்படிக்குள் நுழைந்து பானையில் நீர் ஊற்றி அவனுக்காகப் பாதுகாத்து வைத்திருந்த சோற்றை எடுத்துக் கொண்டு வந்து உட்கார்ந்தாள் பேச்சி.
                எல்லாம் நல்ல நேரந்தான்….வண்டி மண் அடிக்கப் போகாதேன்னு எந்த நேரத்துல நீ சொன்னியோஉன் மனசுக்கு அந்த வாக்குப் பலிச்சுப் போச்சுன்னு வச்சிக்கியேன்….
                நானென்ன உன்ன அந்த வேலைக்குப் போக வேணாம்னா சொன்னேன். மானத்தோட செய்ற எந்த வேலையும் குத்தமில்லய்யாதிருட்டுத்தனமாச் செய்றதுதான் கூடாதுன்னு சொன்னேன்….
                அதான் புள்ள…..மேலக்கரைல சேட்டு லாரிக மண்ணடிக்கைல, அப்டியே லாரிக்;குப் பின்னாடி வண்டியக் கொண்டாந்து, நின்னமா, போனமான்னு காதும் காதும் வச்ச மாதிரி லோட ஏத்திட்டுப் புறப்படுய்யான்னு சொல்லியிருந்திச்சு அந்தப் பார்ட்டி…..முந்;நூறு சொளையாக் கெடைக்குமேன்னு ஆசைப்பட்டு நானும் போனனாஏரியாத் தாசில்தார்ட்ட மாட்டிக்கிட்டேன்…..எம்புட்டோ சொல்லிப் பார்த்தேன், கெஞ்சிக் கேட்டேன்….விடவே மாட்டேன்னுட்டாரு அந்தய்யா….
                பெறவு? போலீசுக்குச் சொல்லிட்டாரா…? நாந்தேன் சொன்னேன்லய்யாஇதெல்லாம் வாண்டாம்னு….ஏன்யா இப்டி வம்ப இளுத்துட்டு வந்து நிக்கிறே…. – சொல்லியவாறே கண்ணைக் கசக்க ஆரம்பித்த பேச்சியை இழுத்து அணைத்தான் தாண்டவன்.
                அதான் புள்ள நம்ப நல்ல நேரம்…..வண்டி மண்ணை வேறே வழியில்லாம நான் கீழே சாய்ச்சு விட, அந்தாள் மனசு எறங்கிப் போச்சு…..என்னைக் கையோட எங்கூட வான்னு இழுத்திட்டுப் போயிட்டாரு….
                எங்கய்யாடேசனுக்கா…..?
                அட நீ ஒண்ணுபயந்து சாகுறியே….இம்புட்டு நேரங்கழிச்சு வந்த நான் பேசுற ஜோரு தெரியாமப் புலம்புறியே….? என்னா புள்ள நீ…?
                என்னதான்யா ஆச்சு….? சொல்லித் தொலையேன்
                அதுக்குத்தான வர்றேன்பொழுது சாயுற நேரம் மட்டும் அவுரு ஆபீஸ் வாசல்ல காத்துக் கெடந்தேன். என்னா செய்வாரோன்னு கெதம் கெதம்னுதான் இருந்திச்சுஆனா அந்த மனுசன் தெய்வம் மாதிரி புள்ள…..
                வெள்ளையும் சொள்ளையுமா வந்த ஒராளோட வெளில வந்த அவுரு….என்னைக் கையக் காண்பிச்சு….இந்தாள்தான் நான் சொன்னதுன்னாரு….
அந்தாள் என்னடான்னா, நாளைக்கே வேலைக்கு வந்துருன்னிட்டாரு….கனவு மாதிரி நடந்து போச்சு புள்ளன்னா….!
                சந்தோஷம் தாங்காமல் முத்துப் பேச்சியை அப்படியே அலேக்காகத் தூக்கி வீட்டுக்கு வெளியே கொண்டு போய் சுற்றினான் தாண்டவன்.
                நீ உண்மைலயே அந்தச் சிவபெருமான்தான்யாஅதுக்காக இப்டியா? என்றாள் பேச்சி கொஞ்சலோடு. எங்க வேலைன்னு கேட்கலையே…..நம்ப குளிர்பானக் கம்பனிலதான்…..சொல்லிவிட்டு மேலும் சந்தோஷமாய் அவளை அணைத்து முத்தமிட்டான்.
                எந்தக் கம்பெனிக்காரன் அங்கு வந்தால் தங்கள் மக்களுக்குத் தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்று ஓராண்டுக்கு முன்னால் அந்த கிராம மக்கள் போராடித் தோற்றார்களோ  அதே கம்பனியில் வேலை கிடைத்ததற்காகத் தன் கணவன் மகிழ்ச்சியில் துள்ளுவது கண்டு அத்தனை பெருமைப் பட முடியாமல், காலையில் நடையாய் நடந்து ஏழு கி.மீ தூரம் சென்று  எடுத்து வந்த ஒரு குடம் தண்ணீர் அப்போது அவள் நினைவில் வந்து அந்த சந்தோஷத்தைப் புறக்கணித்தது.                                                                                                                                                                                                                       ------------------------------------------------------                     

சிறுகதை                                       உஷாதீபன்,                                                                                                                                                                 எஸ்2-இரண்டாவது தளம், ப்ளாட் எண்.171,172                                                                              ராம் நகர் 12 வது பிரதான சாலை,                                                                                                      அக்சயம்அபார்ட்மென்ட்,மடிப்பாக்கம், சென்னை-91.
 தாண்டவன்        (செல் - 94426 84188 )                                                                                  ----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...