தலைப்பு------`மரணம்’ஆக்கம்--- செய்யாறுதி.தா.நாராயணன்
முருகானந்தம்அய்யாபோய்விட்டார்.
60வயசு.
நோய்நொடின்னுஒருநாள்படுக்கவில்லை. நடமாடிக்கொண்டேபோய்சேர்ந்துவிட்டார். காலைபதினோருமணிக்குகழனியைசுற்றிவிட்டுவந்தவர்மருமகளிடம்குடிக்கத்கொஞ்சம்நீராகாரம்கேட்டிருக்கிறார்.
மருமகள்கொண்டுவந்துகொடுப்பதற்குள்சோபாவில்சாய்ந்துவிட்டார்.
முருகானந்தம்வீட்டின்முன்பாகஊர்ஜனங்களும்கூடியிருந்தனர்.
ஊரில்சாவுவிழுந்துவிட்டால்சவம்எடுக்கிறவரைக்கும்அந்தத்தெருஆட்கள்ஒருத்தரும்வேலைக்குபோறதில்ல. சவத்தைஎடுத்ததுக்குஅப்புறம்தான்சொந்தவேலைக்குபோகணும்.
இதுவாலாயமாய்இருக்கும்ஊர்நடைமுறை..விவசாயிகளும், நெசவாளிகளும், நிறைந்திருக்கும்ஊர்அது.
சாவுவீட்டைச்சுற்றிலும்ஒருமவுனம்விரவியிருந்தது. உள்ளேபோகும்பெண்கள்கொஞ்சநேரம்மார்பில்தப்தப்பென்றுஅடித்துக்கொண்டுபிலாக்கணம்பாடியழுதார்கள்.
அழுதுமுடித்தவர்கள்கண்களைதுடைத்தபடிவெளியேறிக்கொண்டிருந்தனர். திண்ணைமேல்ஊர்காரியஸ்தர்வேதாச்சலம்அய்யாஉட்கார்ந்துக்கொண்டுசவத்தைகுளிப்பாட்டுவதற்காகவாங்கிவந்திருந்தகடைசெலவுசாமான்களைதட்டில்பரப்பிக்கொண்டிருந்தார்.தெருவில்பாடைதயாராகிக்கொண்டிருந்தது.
பூஜோடிப்புநடக்கிறது. பக்கத்தில்ஒருத்தன்கொள்ளிசட்டியில்சிறிதுகட்டைநெருப்புவைத்துமேலேவறட்டியைபோட்டுநெருப்புமூட்டிக்கொண்டிருந்தான்.
தெருவில்இருப்பவர்களுக்கும்உள்ளேஇருப்பவர்களுக்கும்சிரத்தையாகடீவிநியோகமாகிக்கொண்டிருந்தது.
முருகானந்தம்ஊரில்நல்லமனுஷன்என்றுபெயரெடுத்தவர்.
சற்றுரோஷமானஆள்.முணுக்கென்றுகோபம்வந்துவிடும்.இரண்டுதடவைஊர்தலைவராகஇருந்தவர். மூன்றாம்தடவைதன்தம்பிதலைவருக்குநிற்கிறான்என்றுகேள்விப்பட்டுஒதுங்கிக்கொண்டார்.
ஊரில்போர்போட்டு, டேங்க்கட்டிகுடிதண்ணீர்வசதிசெய்தது, ஆரம்பசுகாதாரநிலையம்கொண்டுவந்தது,
ரேஷன்கடைகொண்டுவந்தது, மெயின்ரோடிலிருந்துசீரானசாலை, எல்லாம்வந்ததுஇவர்காலத்தில்தான்.
இந்ததடவைதலைவராகஅவருடையதம்பிதான்போட்டியின்றிஅன்னபோஸ்ட்டாகதேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
சாவுமேளம்பொரிந்துக்கொண்டிருக்கிறது.
பறையடிப்பவர்கள்சற்றைக்கொருதரம்வெள்ளையும்சள்ளையுமாய்வரும்மேட்டுக்குடிகளிடம்பாட்டுபாடிசுபோஜெயம்சொல்லிகாசுகறந்துக்கொண்டிருந்தார்கள்.மேளம்அடிக்கிறவன்நாலுபேர்,
ஒப்பாரிபாட்டுபடிக்கிறவன்ஒருத்தன், அப்புறம்சுடுகாட்டில்சிதைஅடுக்கிதயார்செய்பவர்கள்ரெண்டுபேரு.
ஆகமொத்தம்ஏழுபேருக்கும்சாயரட்சைக்குசவத்தைஎடுத்தபிறகுஆளுக்குஒருகுவார்ட்டர்சரக்கு,தண்ணிபாக்கெட்ஒண்ணு,
தொட்டுக்கவறுத்தகறிஇல்லையென்றால்ரத்தப்பொரியல்ஒருபொட்டணம்என்றால்கூடஅறுநூறுரூபாய்க்குமேல்தேற்றியாகணும்.
ஜரூராகசுபோஜெயம்கலெக்ஷன்நடந்துக்கொண்டிருக்கிறது.பளிச்னுஒருத்தர்வரப்படாது. அவர்கிட்டபணம்கறக்காமஅனுப்பறதில்லை.
முதலில்முருகானந்தம்குடும்பமும்,
அவருடையதம்பிகோபால்குடும்பமும்கூட்டுக்குடித்தனமுமாகத்தான்வாழ்ந்துவந்தார்கள்.முருகானந்தம்தம்பியிடமும்,
பிள்ளைகளிடமும்மிக்கபாசமுள்ளவராகத்தான்வாழ்ந்துவந்தார். அப்புறம்வீட்டில்வாழவந்தபெண்களுக்குள்வந்தவாய்ச்சண்டைபின்னால்ஆண்களுக்குள்பெரியசண்டையாகிஅடிதடிவரைக்கும்போய்பிரிந்துவிட்டார்கள்.
எப்பவும்அற்பகாரணங்களுக்காகவரும்சண்டைகள்தான்வெட்டுகுத்துரேஞ்சுக்குபோகும்என்பதுவாஸ்தவமானபேச்சு.அடுத்தடுத்தகாலங்களில்சொத்துபாகம்பிரிப்பதில்எழுந்ததகறாரில்பங்கீடுநடக்காமலேநின்றுபோனது.
இரண்டுபக்கங்களிலும்வளர்ந்துவிட்டபிள்ளைகளால்பிரிவுநிரந்தரமாகிப்போனது. பிரிந்துஇன்றைக்குபத்துவருஷங்கள்கடந்துவிட்டன.பரஸ்பரம்ஒருத்தருக்கொருத்தர்ஜென்மப்பகையாளியாகதிரிந்துக்கொண்டிருந்தார்கள்.தம்பிபக்கத்திலஇரண்டுகிலோமீட்டரில்புதூர்கிராமத்தில்மளிகைக்கடைவைத்திருக்கிறான்.தினமும்ஊரிலிருந்துபோய்வந்துகடையைகவனித்துக்கொள்கிறான்.
எடுபிடிக்குரெண்டுபணியாட்கள்.
சவத்தைதெற்குதிசையில்தலையைவைத்துகிடத்தியிருந்தார்கள்.
தலைமாட்டில்குத்துவிளக்குஎரிந்துக்கொண்டிருக்கிறது. கால்மாட்டில்உயிர்பிரியும்போதுஅவசரமாகஉடைத்ததேங்காய்முடிகள்வைக்கப்பட்டிருந்தன.
காரியஸ்தர்வேதாசலம்கத்திக்கொண்டிருந்தார்.“டேய்! யார்றாஅவன்தலைமாட்டிலகட்டிலுக்குக்கீழேநெல்சிப்பம்ஒண்ணுகொண்டாந்துவையிடான்னுசொன்னனேஎன்னஆச்சி?
சீக்கிரம்.டேய்! நீசவத்துக்குநெத்தியிலகனக்கவிபூதிபூசுங்கடா.”---சொல்லிக்கொண்டேசவத்துக்குவீக்கம்ஏறாதிருக்கஒருசீலைத்துணியில்சோற்றுப்பைகட்டிமார்மீதுவைத்துமேலேதுணியைமூடினார்.அந்நேரத்துக்குஅவங்கவீட்டுவகையறாவைச்சேர்ந்தபெண்கள்ஒவ்வொருத்தராய்தெருமுனையிலிருந்தேஉரக்கஒப்பாரிபாடிஅழுதுக்கொண்டேவந்து,
உள்ளேவந்ததும்மாரடித்துக்கொண்டுபாடிஅழஆரம்பித்தார்கள். காரியஸ்தர்வேதாசலம்சவத்தினுடையமூத்தபிள்ளையைக்கூப்பிட்டார்.
கூடவேமற்றஇருவரும்சோகமாய்வந்துநின்றார்கள்.“ஏம்பா! சொந்தக்காரங்கஎல்லாருக்கும்தகவல்போயிட்ச்சா?.எல்லாரும்வந்துட்டாங்களா?.இன்னும்யார்னாவரவேண்டியதுஇருக்கா?.”
“எல்லாரும்வந்தாச்சிங்க.”----அவர்சற்றுகுனிந்துதணிந்தகுரலில்.“உங்கசித்தப்பனுக்குதகவல்சொன்னியாஇல்லையா?
ஆளைக்காணோமே.”-----அதற்குமூன்றுபேரும்பிலுபிலுவென்றுசீறிக்கொண்டுவந்துவிட்டார்கள்.“அந்தாளுக்குஎதுக்குதகவலுசொல்லணும்?.உங்களுக்குத்தெரியாததுஒண்ணுமில்லே.
பத்துவருசபகை. வாழ்வுசாவுக்கெல்லாம்தள்ளியாச்சி, இன்னிக்கிஇன்னாதிடீர்னுசொட்டுதா?.அந்தாளுவரக்கூடாது.”----மூத்தபிள்ளைமாதவன்கூடுதலாகஎகிறினான்.
“டேய்மாதவா! இன்னாஇருந்தாலும்கூடப்பொறந்தவன்.அதில்லாமஊருதலைவர்.
எதனாவில்லங்கம்பண்ணாமஇருக்கணும்டா. அவனுக்குபவர்இருக்குதுடா.”“எதுவாஇருந்தாலும்சரிநாங்கபார்த்துக்கறோம்.அந்தப்பேச்சைவுடுங்க.வரக்கூடாதுன்னாவரக்கூடாதுதான்.எங்களையேஅடிக்கஆள்செட்பண்ணான்யாஅவன்.
துரோகி.”“டேய்! இன்னாடாசொல்றீங்க?.இன்னும்உங்கப்பனுக்கும்அவனுக்கும்பாகப்பிரிவினைஆவலியேடா.
நாளைக்குசெட்டில்மெண்ட்எழுதஅவன்தாட்சண்யம்வோணும்டா. முனபின்னயோசிச்சிநடங்க. இப்பிடிஎடுத்தேன்கவுத்தேன்னுபேசாதீங்கப்பா.”
“அன்னைக்கிகதஅன்னைக்கி.எங்கதாட்சண்யம்இல்லாமஅவன்மட்டும்பாகப்பிரிவினைநடத்திக்குவானா?.வுடுப்பாஅந்தாளுவரக்கூடாது.”
“டேய்! வாணாம்டாசொல்றதகேளுங்க.”“நாங்கவாணான்றோம்நீஇன்னமோதிரும்பத்திரும்பஅவனுக்கோசரம்வக்காலத்துவாங்கறியே.அந்தபேச்சைவுடுப்பா.”“
சரி..சரி..மணிமூணுஆச்சி. இப்பகுளிப்பாட்டஆரம்பிச்சால்தான்அஞ்சிமணிக்காவதுசவத்தைகெளப்பமுடியும்.
நாவிதன், ஏகாலி, வந்துட்டாங்களாபாரு. போயிகுளிச்சிமுடியுங்க. டேய்! பணிச்சவனைதாரைஊதச்சொல்லு.”-----அவர்கள்குளிக்கப்போனதும்அங்கேதாரைசத்தம்ரெண்டுதடவைஎழுந்தடங்கியது.
சவத்தைகுளிப்பாட்டப்போகிறோம்என்றுஊருக்குசமிக்ஞை.பங்காளிகள்வீடுகளைச்சேர்ந்தஇளைஞர்படைஒன்றுமளமளவென்றுகிணற்றிலிருந்துதண்ணீர்சேந்திவந்துதெருவில்அண்டாக்களில்நிரப்பஆரம்பித்தார்கள்.
ஒருதாம்பாளத்தட்டில்அபிஷேகசாமான்கள்ரெடியாகஇருந்தது. ஊர்முக்கியஸ்தர்களில்ஒருத்தர்பெருந்தனத்திடம்வந்து
“இன்னாபாஇந்தபசங்கசித்தப்பன்நாத்தமேஉதவாதுன்னுஅடாவடிபண்ணுதுங்க?.”
“இன்னாபண்ணச்சொல்ற?.இவங்கசித்தப்பனும்ரொம்பரோஷக்காரன். சுலுவுலஇறங்கிவரமாட்டாப்பல. வந்தாலும்ஒருத்தரையொருத்தர்அடிச்சிக்குவானுங்கப்பா. ரெண்டுதரப்பிலேயும்ஆன்னாஊன்னாகத்தியதுக்கிடுவானுங்க. அந்தகூத்தைநாமல்லாம்பார்க்கலியாஇன்னா?.சரிவுடுநமக்குஇன்னாகிரகச்சாரம்?.சாவுவூட்லசண்டைவாணாம். ஆவறகாரியத்தபார்ப்போம்.”
“இன்னாபண்ணச்சொல்ற?.இவங்கசித்தப்பனும்ரொம்பரோஷக்காரன். சுலுவுலஇறங்கிவரமாட்டாப்பல. வந்தாலும்ஒருத்தரையொருத்தர்அடிச்சிக்குவானுங்கப்பா. ரெண்டுதரப்பிலேயும்ஆன்னாஊன்னாகத்தியதுக்கிடுவானுங்க. அந்தகூத்தைநாமல்லாம்பார்க்கலியாஇன்னா?.சரிவுடுநமக்குஇன்னாகிரகச்சாரம்?.சாவுவூட்லசண்டைவாணாம். ஆவறகாரியத்தபார்ப்போம்.”
ஒருபக்கம்ஓரமாய்அந்தவீட்டுக்குபாத்தியப்பட்டசம்பந்திகள்எல்லாரும்கூடிநின்றுஆலோசித்துக்கொண்டிருந்தார்கள்.
சவத்தைஎடுத்தப்புறம்ராத்திரிசாப்பாட்டுபொறுப்புஅவங்களுடையது.சம்பந்தசோறுன்னுசொல்றது.
ஆதிநாளில்அரிசிபருப்புமுதற்கொண்டுஎல்லாவற்றையும்வாங்கி, ஆக்கிபரிமாறுவதுவரைக்கும்சம்பந்திகள்பொறுப்பு.
இன்றைக்குஇத்தனைசாப்பாடுஎன்றுஓட்டலில்ஆர்டர்குடுத்திட்றது. செலவைபங்கிட்டுக்கொள்வதுஎன்பதுநடைமுறைசம்பிரதாயம்.
ஆனால்இன்றைக்கும்கொண்டான்குடுத்தான்வீட்டார்கள்தான்இருந்துபந்திபரிமாறிவிட்டுபோகணும்.
முருகானந்தத்தின்பிள்ளைகள்மூவரும்சோகமாய்உட்கார்ந்திருக்க, அவர்களுடையதாய்மாமன்கள்இரண்டுபேரும்கிட்டேவந்தார்கள்.“டேய்!
மாதவா! மூணுபேரும்நாங்கசொல்றதைக்கேளுங்கப்பா. வாழ்வுலசேரலேன்னாலும்சாவுலசேரணும்னுசொல்வாங்கடா.
உங்கசித்தப்பனுக்குதகவல்சொல்லணும்டா. அவன்வந்தாநீங்கஎதுவும்பேசவேண்டாம். கிட்டகூடவரத்தேவல.நாங்கபார்த்துக்கறோம்.
வந்துபர்த்துட்டுபோயிரட்டும். தடைசொல்லாதீங்க.” ----அதுக்குஇளையபுத்திரன்தான்பதில்சொன்னான்.“மாமா!
கம்னுபோயிடுங்க. அந்தாளுவந்தான்னாஒதைவிழும். என்னைக்காஇருந்தாலும்பதிலுக்குபதில்அவனைஒதைக்காமவுட்ரதில்லைன்னுகாத்துக்கிட்டுஇருக்கோம்.
அதுஇன்னைக்கேநடந்திடும். ஆமாசொல்லிட்டோம். அந்தகம்மனாட்டிஇங்கவரக்கூடாது. இனிமேயாரும்இந்தபேச்சைஎடுத்துக்கிணுஎங்ககிட்டவராதீங்க.எந்தகாலத்திலேயும்அந்ததுரோகியகிட்டேசேர்க்காதீங்கடான்னுஎங்கப்பனேசொல்லிட்டுபோயிருக்காருஆமா.”—மூவரும்ஆவேசமாய்கத்தினார்கள்.
அத்துடன்அவர்கள்நகர்ந்தனர்.பெரியவன்மாதவன்நடுவிலவன்காதைகடித்தான்.
“டேய்! இந்தகெழவன்கபேச்சைநம்பமுடியாது.
நம்மசம்மதம்இல்லாமலேகூடஅந்தஆளைவரவழிச்சிவிடுவாங்க. அப்படிஒருக்காவந்துட்டாமொதஅடிஉன்னுதுபுரியுதா?”
“சரிண்ணா.”
ஆயிற்றுநாலுமணிக்கெல்லாம்சவத்தைவெளியேகொண்டுவந்துவிட்டார்கள்.“டேய்!
தலைதெற்குதிசையிலஇருக்கணும். பெஞ்ச்சைவடக்குதெற்காபோடுங்கப்பா.”------பெண்களின்ஒப்பாரிகூடுதல்சத்தத்துடன்இருக்கசிலபெண்கள்மாரடித்துஅழஆரம்பித்தார்கள்.
காரியஸ்தர்ஒவ்வொருசடங்காகசொல்லச்சொல்லமூத்தபிள்ளைசிரத்தையாகசெய்துக்கொண்டிருந்தான்.
“மொதல்லதவலைதண்ணியகால்லஇருந்துதலைவரைக்கும்சோரஊத்துடா.”---ஊத்தியாச்சி.
“அடுத்துசிரசில்எண்ணைசீயக்காய்பொடிவைத்துதேய்த்துஒருகுடம்தண்ணீர்ஊத்து.ஆச்சா?.அடுத்துமஞ்சள்தூளைதண்ணியிலகரைச்சிஅபிஷேகம்பண்ணிஒருகுடம்தண்ணியஊத்துடா..”---அவரேமஞ்சள்பொடியைதண்ணீரில்கரைத்துக்கொடுத்தார்.
அதுமுடிஞ்சிது.
“அப்புறம்பாலைஎடுத்துபாதத்திலிருந்துசிரசுவரைக்கும்அபிஷேகம்பண்ணு.
ஆச்சா?.மேலஒருகுடம்தண்ணியஊத்து. அப்புறம், தயிர்அபிஷேகம்,அப்படிஇல்லடா, தயிரைசிரசிலவெச்சிதண்ணிஊத்துப்பா.
ஆச்சா? சீக்கிரம்அடுத்துகடைசியாஇளநீர்அபிஷேகம்.”------அப்புறம்மேலேவெள்ளைத்துணிபோர்த்திசுற்றி,
நெற்றியில்விபூதியைகனக்கபூசி, மேலேபன்னீர்போன்றவாசனாதிதிரவங்களைதெளிக்கச்செய்தார்.தலைமாட்டில்ஊதுவத்தியைகத்தையாய்கொளுத்திசெருகினார்.
“டேய்! அந்தம்மாவைகூட்டியாங்க. இங்கபக்கத்திலஉட்காரவைக்கணும். அவங்களுக்கும்தண்ணிஊத்திகுளிப்பாட்டணும்.”---
“ஏம்பா! இந்தகுளிர்லஅவங்கஎதுக்கு?
தலையிலதண்ணிதெளிச்சிக்கலாம்பா.” “ டேய்! யார்றாஅவன்ஊஹும்சடங்குசம்பிரதாயங்களைமீறக்கூடாது.
முறைன்னுஒண்ணுஇருக்கில்ல?.உம்சீக்கிரம்சீக்கிரம்.ஏம்பா! தாய்வூட்டுகோடிசேலைஎங்கப்பா,
யாருபோட்றது?.”---இந்தஊருக்கேசாவுசடங்குகளைமுழுசாகஅறிந்தவர்வேதாச்சலம்அய்யாதான். ஊரிலேசாவுவிழுந்தாயாருக்குஇல்லேன்னாலும்முதல்லஅவருக்குத்தான்செய்திபோகும்.
அவரும்தன்வேலைகளையெல்லாம்விட்டுவிட்டுஒருசேவையாய்வந்துசெய்வார். இரண்டாவதுபிள்ளைஅம்மாவைஅழைத்துவந்துபக்கத்திலேயேஒருஸ்டுல்பொட்டுஉட்காரவைத்தான்.
அதன்பின்அவளையும்குளிப்பாட்டச்செய்தார்கள்.முகத்தில்மஞ்சள்பூசிதலையில்மீண்டும்ஒருகுடம்தண்ணீர்ஊற்றினார்கள்..அந்தம்மாவுக்குஅழகூடதிராணிஇல்லை,
குளிரில்வெடவெடவென்றுநடுங்குகிறது..அடுத்துஅந்தம்மாகையில்பூச்சரம்கொடுக்கப்பட்டது.
யாரோஒருவயதானவிதவைஒருத்திவழிநடத்த, இடவலமாகபுருஷனைமூன்றுமுறைசுற்றிவந்துஅவர்பாதங்களின்மேல்பூசாற்றிஅப்படியேசரிந்துகணவன்காலைக்கட்டிக்கொண்டுகுலுங்கினாள்.
பிள்ளைகள்மூன்றுபேரும்அம்மாவைநெருங்கிவந்துநின்றுஅழுதார்கள். எல்லாம்முடிந்தது. தாய்வீட்டுகோடியும்போட்டாச்சி.
கடைசிதீபாராதனையையும்காட்டியாயிற்று. அடுத்துசவத்தைதூக்கிபாடையில்வைக்கவேண்டியதுதான்பாக்கி.
அந்நேரத்திற்குதிமுதிமுவென்றுமுருகானந்தத்தின்தம்பிகோபால்கூக்குரல்போட்டுக்கொண்டேமூச்சிரைக்கஉள்ளேஓடிவந்தான்.குடும்பத்தோடுமூன்றுநாட்கள்கொல்லிமலைடூர்போனவன்இப்போதுதான்திரும்பியிருக்கிறான்.
வந்தவன்விஷயத்தைக்கேள்விப்பட்டவுடன்எல்லாமாச்சரியங்களும்அழிந்துபோய்பாசம்மேலிட,ஓடிவந்திருக்கிறான்.
கூடவேஅவனுடையமனைவியும், இரண்டுபிள்ளைகளும்வந்துநின்றனர். இருந்தவர்கள்யாருக்கும்எதுவும்புரியவில்லை.என்னநடக்குமோஎன்றஅச்சம்எல்லோரிடமும்விரவியிருந்தது.
முருகானந்தத்தின்பிள்ளைகள்மூன்றுபேரும்கோபத்தில்திமிறிக்கொண்டுஅடிதடிக்குதயாராகநிற்கிறார்கள்.
வந்தசித்தப்பன்நெருங்கிஅண்ணன்முகத்தைகுனிந்துபார்த்தான். அவ்வ்ளவுதான்ஒருநிமிஷம்வாய்கோணிக்கொள்ளமாறுகண்போலவித்தியாசமாய்பார்த்தான்.
மூச்சுதிணறலாகக்கே.கே.கேஎன்றுபெருசாய்ஒருகேவல், அவ்வளவுதான்தடாலென்றுமயங்கிகீழேவிழுந்தான்.
சுற்றியிருந்தவர்கள்ஓடிப்போய்அவனைபுரட்டிப்போட்டார்கள்.முகத்தில்தண்ணீர்தெளித்துஅவனுடையஆவேசத்தைதணித்தார்கள்.
சற்றுநேரத்தில்மயக்கம்தெளிந்துஎழுந்தவன்அண்ணன்காலைபிடித்துக்கொண்டுகதறிதீர்த்துவிட்டான்.மாலைமாலையாய்கண்ணீர்வடிகிறது.
“ஐயோஅண்ணா! பத்துவருசமாதுரோகியாதூரநின்னுப்புட்டேனே.
பழசையெல்லாம்நினைச்சிப்பார்க்காததுக்கிரியாபூட்டனே. அப்பிடிஇன்னாத்தசாதிச்சிப்புட்டேன்?.ஐயய்யோ!எணா…எணா…!
“---பட்பட்டென்றுமுகத்தில்அடித்துக்கொண்டுஅழுதான்.சுற்றிலும்உட்கார்ந்திருந்தபெண்கள்அழுகுரலும்இப்போதுஉயர்ந்தது.
“பாருண்ணா! புத்திகெட்டகோபாலுபாவிவந்திருக்கேண்ணா.”—அவனுடையஅழுகைநிற்கவில்லை.
பாதாதிகேசம்அண்ணனைதடவிக்கொண்டேயிருந்தான்..நேரம்போய்க்கொண்டேஇருக்கிறது.அப்புறம்சவஅடக்கத்துக்குஇருட்டிவிடும்.சுற்றிலும்இருந்தவர்கள்அவசரப்பட்டார்கள்.
வேதாச்சலம்கையமர்த்தினார்.
“கொஞ்சம்பொறுங்கப்பா, பத்துவருசதுக்கம்கொதிச்சிஅடங்கட்டும்.”-----யாரோஒருத்தர்வற்புறுத்திதள்ளிவிடஇப்போதுஅந்தமூன்றுபிள்ளைகளும்சித்தப்பனைநெருங்கிநின்றார்கள்.
பார்த்துவிட்டுஅவர்களைகட்டிக்கொண்டுஅழுதான்.தன்அண்ணியைப்பார்த்துவிட்டுதலைதலையென்றுஅடித்துக்கொண்டுஅழுதான்.
“உங்களையெல்லாம்மறந்துட்டுவெட்டிஜம்பத்துக்குவெலையாயிட்டேண்டா.
எல்லாரும்இந்தசித்தப்பனைமன்னிச்சிடுங்கடா…”------தூரமாய்நின்றிருந்ததன்இரண்டுபிள்ளைகளைப்பார்த்துவிட்டுஉரக்க
“என்கப்பலேகவுந்துபோச்சிடா. இன்னமும்ஏண்டாநமக்குவெடாசு?.வாங்க.”----இப்போதுஇரண்டுபிள்ளைகளும்வந்துதங்கள்பெரியப்பாபிள்ளைகளோடுசேர்ந்துக்கொண்டார்கள்.
அவருடையமனைவிஏற்கனவேஓரகத்தியின்பக்கத்தில்போய்உட்கார்ந்துஅழஆரம்பித்துவிட்டாள்..பிள்ளைகள்ஒருத்தரையொருத்தர்கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.
ஆனாலும்முருகானந்தம்பிள்ளைகள்மட்டும்அரைமனதோடுஇறுக்கமாகத்தான்நின்றார்கள். அந்நேரத்திற்குகாரியஸ்தர்வாயைத்திறந்தார்.
“ஏம்பாகோவாலூ! சாவுலநீங்கஎல்லாரும்ஒண்ணாசேர்ந்ததுஎங்களுக்கெல்லாம்சந்தோஷம். எல்லாரும்கொஞ்சம்தள்ளிநில்லுங்கசவத்தகெளப்பணும்.
லேட்டாவுது.ஏண்டாசாமிநாதா! மசமசன்னுநிக்காதநெய்பந்தத்துக்குகுரல்குடு.”---இப்போதுநாவிதன்உரக்ககுரல்கொடுத்தான்.“
நெய்ப்பந்தம்புடிக்கபாத்தியப்பட்டவங்கள்லாம்வந்துபுடிங்கய்யோ.”—இதுஉறவுகள்நெய்பந்தம்பிடிக்கும்சடங்கு.வேதாச்சலம்அய்யாஉரக்ககுரல்கொடுத்தார்.
“ எல்லாருக்கும்சொல்றேன். புள்ளைங்க,
பேரப்புள்ளைங்க, பேத்திங்க, வூட்லபொறந்தபொண்டுங்க, ஒருகால்விட்டபொண்டுங்கபங்காளிங்க,
ஒருகால்வுட்டவங்க, எல்லாருக்கும்கொளுத்தியநெய்பந்தங்களைசாமிநாதன்தர்றான்பாரு. அதைபுடிச்சிக்கிட்டுசவத்தைமூணுதபாஇடவலமாகசுத்திவரணும்.
அப்புறம்எல்லாபந்தங்களையும்கொள்ளிச்சட்டியில்போட்டுட்டுசவத்தின்கால்மாட்டில்விழுந்துகும்பிட்டுமுடிக்கணும்.
தெரிஞ்சிதா?.சீக்கிரம்சீக்கிரம்.”-------எல்லாரும்அழுதபடிசுற்றிமுடித்தார்கள்.இடுகாட்டுக்குவரமுடியாதவர்களுக்காகஅங்கியேவாய்க்கரிசிபோடும்சடங்கைநடத்திமுடித்தார்கள்.அப்புறம்காரியஸ்தர்சொற்படிபிள்ளைகளேசேர்ந்துசவத்தைதூக்கிக்கொண்டுவந்துபாடையில்வைத்தார்கள்.
பெண்களின்அழுகைச்சத்தம்கூடியது. சிலர்கீழேவிழுந்துபுரண்டுஅழுதார்கள்.உறவுப்பெண்கள்பாடையைஇடப்பக்கமாகமாரடித்துக்கதறியபடிமூன்றுமுறைசுற்றிவந்துபின்புஒருவரையொருவர்கட்டிப்பிடித்துக்கொண்டுஒப்பாரிவைத்துஅழுதார்கள்.
ஆயிற்றுமூத்தபிள்ளைகுளித்துமுடித்துஈரவேட்டியுடன்கொள்ளிச்சட்டியைமுன்னேபிடித்துக்கொண்டுசெல்லஊர்வலம்கிளம்பியது.
வழிநெடுகஒப்பாரிபாடல்கேசட்ஓடிக்கொண்டிருந்தது.தெருக்கோடிவரையிலும்ஏகாலிகள்பாதையில்துணிகளைவிரித்துக்கொண்டேசெல்ல,
அதன்மீதுஊர்வலம்நகர்ந்தது. பறையின்உச்சகட்டசத்தத்தில்ஊர்அதிர்ந்தது.ஒருத்தர்ஒருமுறத்தில்அரிசிபொரியைவைத்துக்கொண்டுவழியெங்கும்இறைத்தபடியேசென்றார்.
பாடையில்தொங்கும்பூமாலைகளைஉறவினர்கள்வழியெங்கும்பிய்த்துபோட்டுக்கொண்டேசென்றனர். சித்தப்பனும்,
அவர்பிள்ளைகளும்பாடையையொட்டிநடந்தார்கள். இடையிலஒருதடவைகாரியஸ்தர்வேதபுரிஅய்யாவந்துபாடையைஒருபக்கம்தோள்கொடுத்துக்கொண்டிருந்தநடுபையனிடம்கிசுகிசுப்பாய்எதையோசொல்ல,
அவன்வேண்டாவெறுப்பாய்தன்சித்தப்பனுக்குதோள்மாற்றிவிட்டுநகர்ந்தான்.
ஆயிற்றுசுடுகாடுவந்தாயிற்று. அரிச்சந்திரன்கோயில்எதிரில்பாடையைஇறக்கினார்கள்.
சற்றுதூரத்தில்சிதைக்காகவிறகுகள்அடுக்கப்பட்டிருந்தன. அரிச்சந்திரன்கோவிலின்முன்அரிச்சந்திரன்அகவலைவெட்டியான்சொல்லஆரம்பித்தான்.
நீரால்அடியேன்நெடுங்கால்பறவியே,தீராமணியேதிருமால்மகன்தோன்றி,உலகம்தோன்றி,
ஊர்தோன்றி, ஊருக்குவடக்கேகாளிகோயில்தோன்றி, ஊருக்குமேற்கேபெருமாள்கோயில்தோன்றிஊருக்குக்கிழக்கேதிருபனைசாற்றசாம்பவன்கோயில்தோன்றிபூவுதோன்றி,
புஷ்பம்தோன்றி. . . .
அடுத்துசித்தப்பன்ஒருபக்கம்கைபிடிக்க,
பாடையைசிதையருகேதூக்கிச்சென்று, சிதையைமூன்றுசுற்றுசுற்றிகீழேவைத்தார்கள். படையல்போட்டுஎல்லாச்சடங்குகளையும்முடித்துதீபாராதனைகாட்டிசவத்தைசிதையில்வைத்தார்கள்.
தோள்மிதுபானையில்தண்ணீர்சுமந்தபடி
கொள்ளிவைக்கும்பிள்ளைமூன்றுசுற்றுசுற்றிவந்துபானையைப்போட்டுஉடைத்துவிட்டுநிற்க,
வேதாச்சலம்அய்யாகுரல்கொடுத்தார்.
“வாய்க்கரிசிபோட்றவங்கள்லாம்வந்துபோடுங்கப்பா.
சீக்கிரம்கீழ்க்காத்துஓட்டுது.”------எல்லாரும்வரிசையாய்வந்துவாய்க்கரிசிபோட்டுவிட்டுநகரஅடுத்ததாகசவத்தின்கால்களைபிணைத்திருந்தகட்டுகளையும்,
இடுப்புஅரைஞான்கயிற்றையும்அறுத்துவிட்டார்கள். இன்னும்சித்தப்பன்நினைத்துநினைத்துஅழுதுக்கொண்டிருந்தான்.
அப்புறம்சவத்தின்மேல்விறகுக்கட்டைகள்அடுக்கப்பட்டன. வேதாச்சலம்அய்யாகவனித்துவிட்டுசிதைஅடுக்கினவர்களைஅதட்டினார்.
“டேய்! நெஞ்சாங்கட்டையவெக்கலியா?.இன்னாடாவேலைசெய்யறீங்க?.----பூதவுடல்நெருப்பில்எரியும்போதுமுன்பக்கமாகவளைந்துக்கொள்ளும்.
அதைத்தடுப்பதற்காககனமானவிறகுதிம்மைஒன்றைமார்பின்மேல்வைப்பார்கள். அதைநெஞ்சாங்கட்டைஎன்பார்கள்.அடுத்துஎல்லாஉறவுக்காரங்களும்கதறமூத்தபிள்ளைசிதைக்குநெருப்புவைத்துவிட்டுதிரும்பிப்பார்க்காமல்நடக்கஆரம்பித்தான்.கூடவேதுணைக்குஅவன்மச்சான்..வந்தகும்பலும்ஆற்றில்தலைமுழுககிளம்பியது.
வேதாச்சலம்அய்யாஉரக்ககுரல்கொடுத்தார்.
“யாரும்போவாதீங்கப்பா. ஒருநிமிசம்இங்கவாங்க.”----எல்லாரும்கூடினர்.
கொள்ளிவைத்துவிட்டுச்செல்லும்மூத்தபிள்ளையும்நின்றான்.
“ஏம்பா! மாதவா! இத்தநாமவூட்லபோயிஉக்காந்துதான்பேசணும்.
நான்ராத்திரிக்குசென்னைகிளம்பறேன். வரஒருவாரம்ஆயிப்புடும். அதான்இங்கியேசொல்லிட்றேன்.
நாளைக்குகாத்தாலஎல்லாரும்வந்துபால்வெச்சிடுங்க. அப்புறம்திதிபார்த்துதேதியகுறிச்சிவெச்சிட்டேன்.உயிர்வுட்டபதினஞ்சாம்நாளுசனிக்கிழமைநடப்பு,
பதினாறாம்நாளுஞாயிற்றுக்கிழமைகருமாதி. மாதவா!இன்னாசொல்ற?.”---மூத்தவன்சற்றுநேரம்மவுனமாகநின்றான்.அப்புறம்வாயைத்திறந்தவன்தம்பிகளைபார்த்துவிட்டுதயங்கிசொன்னான்.
“ எங்கசித்தப்பாவைகேளுபா.”---சித்தப்பன்முன்னேவந்துநின்றான்.
******************************************
கணையாழி நவம்பர்2019இதழில்பிரசுரமானகதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக