----------------
கங்கையானாலும்
காவிரியானாலும்
எங்கோவோர் மூலையில்
ஏதோவோர் மலையிடுக்கில்
ஒரு சின்னதான ஜனனத்தில்
உயிர்த்து எழுந்து
தவழ்ந்து இறங்கி
பல்கிப்பெருகும்
புகுந்த இ;டத்தில்
முற்றிலும்
புதிதாய்
பூமியில் பரவும்
போகுமி;டமெல்லாம்
தாகம் தணித்து
காணும் நிலமெல்லாம்
கசிந்து செழிப்பாக்கி
புவியை வளமாக்கும்
ஒரு ஜீவநதி
அறி
======
பார்ப்பதும் பார்க்காததும
உன் விருப்பம்
பார்த்தும் பார்க்காதது
என் விருப்பம்
கேட்பதும் கேட்காததும்
உன் விருப்பம்
கேட்டும் கேட்காதது
என் விருப்பம்
பேசுவதும் பேசாததும்
உன் விருப்பம்
பேசியதும், பேசாததும்
என் விருப்பம்
உன்னோடு அது
என்றால்
என்னோடு இது…!
உனக்கு மட்டும்
அது என்றோ
எனக்கு மட்டும்
இது என்றோ
எதுவுமில்லை!
உன்னோடு உள்ளது
உன்னுடையது
என்னோடு கிடப்பது
என்னுடையது
அவரவர்க்கு அவரவருடையதுதான்
யாரும் எதுவும்
பறிப்பதற்கில்லை
யாரும் யாரையும்
முடக்குவதற்குமில்லை
உனக்கும் எனக்கும்
உலகம் ஒன்றுதான்….!
-----------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக