கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் இன்று. அவர் இல்லாவிட்டால் அன்று எங்கள் வீட்டி ல் இருந்த நிலைமைக்கு எஸ்.எஸ்.எல்.சி கூடப் படித்திருக்க முடியாது. வெள்ளை சட்டையும், நீல டிராயருமாக யூனிஃபாரம் போட்டு நடந்து வந்த அந்த நாள் இன்றும் கண் முன்னே. பஞ்சாயத்துப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியில் சேர வெறும் ஆறு ரூபாய் கட்ட முடியாத காலம் அது. பள்ளி இறுதித் தேர்வுக்கு பதினோரு ரூபாய். கடைசி நாளன்று மதியம் மூன்று மணிவரை அவகாசம் கொடுத்து கடைசி நிமிஷத்தில் கொண்டு போய்க் கட்டினேன். வெறும் ஆறு ரூபாயும் பதினோரு ரூபாயுமே கட்ட முடியாத காலம் அது. மற்றப்படி முற்றிலும் கல்வி இலவசம். இன்று நினைத்துப் பார்க்க முடியுமா?
இப்போதும், எப்போது் ஒரு காமராஜர் படம் என் பார்வையில் இருக்கும். பாரதி ஸ்டோரில் காலண்டர் வாங்கும்போது சாமி படம் வேண்டாம், காமராஜர் படம் போட்ட காலண்டர் தாருங்கள் என்றுதான் சொல்லி வாங்கி வருவேன்.
அப்பாவிடமும் காமராஜர் போடுவதுபோல் ஒரு சட்டை இருந்தது. அது வெளியில் வரும்போதெல்லாம் அவர் நினைவு வரும்...
மகராஜாவின்ட சர்க்கார் போயி....இனி சன்யாசியுடே சர்க்காராணு...அவனாக்கும் நம்முடெ ராஜா...ஆளு பரம யோக்யன்...
லெட்சுமிக்குட்டியம்மே...ஓட்டுப் போட்டிருங்க....-காமராஜின் குரல் தூரத்திலிருந்து...
பெண்ணு கெட்டு நாடாரே.... - பாட்டிகூவுகிறாள். அவளுக்கு தீராத மனக்குறை....
ஜெயமோகனின் “இன்றைய காந்தி” நினைவுக்கு வருகிறது....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக