11 டிசம்பர் 2019

இதயா ஏசுராஜின் “பயணிகள் உலவும் காகிதக்காடு”-நாவல் வாசிப்பனுபவம்


இதயா ஏசுராஜின் “பயணிகள் உலவும் காகிதக்காடு”-நாவல் வாசிப்பனுபவம்        
 இன்ன கருவைத்தான் எடுத்துக் கொண்டு கதை எழுத வேண்டும் என்று ஏதேனும் வரையறை இருக்கிறதா என்ன? காணும் அனுபவங்களில் மனதில் பதிந்த எதையும் எழுத முனையலாம். கதையாடல் என்பது சீராக அமைய வேண்டும். அப்படி அமையாமல் போன சிலவும்  இங்கே தொடர்கதைகளாகவும், நாவலாகவும் விரிவடைந்திருக்கின்றன.               

 இந்தப் பொருளைப் பற்றிச் சொல்வோம் என்று மனதில் வரித்துக் கொண்டால் அப்பொழுதே அதை எந்த அளவுக்குச் சொல்ல முடியும், எதுவரை ஸ்வாரஸ்யப்படுத்த முடியும், எதுவரை சொன்னால் அது தரம் குன்றாமல் இருக்கும் என்கிற தீர்மானம் படைப்பாளிக்கு வேண்டும். கதையையும், பாத்திரங்களையும், சம்பவங்களையும் மனதில் காட்சிப்படுத்திக் கொண்டு எழுத உட்கார்ந்தால் கதை தானாகவே ஓடி அடையும்.                                 ஒரு காலத்தில் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதுபவர்கள், அந்தந்த வாரத்திற்கான கதைக்கு வாசகர்களிடமிருந்து (ரசிகர்களிடமிருந்து என்று சொல்வதே பொருந்தும்) வரக் கூடிய கடிதங்களுக்கு ஏற்றமாதிரி கதைகளை நகர்த்தியும், கதாபாத்திரங்களைக் கொண்டு செல்லக் கூடியவர்களாகவும், சம்பவங்களைக் கோர்ப்பவர்களாகவும், அதன் மூலமாய் மேலும் சில வாரங்களுக்கு அவை நீட்டிக்கப்படுவதாயும் அமைந்த நிகழ்வுகளெல்லாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம்தான்.      இது பத்திரிகைகளில் தொடர்கள் இல்லாத காலம். ஏன் சிறுகதைகளே அருகிப் போன காலம். ஆனால் இது நாவல் காலம். எழுபது, எண்பது தொண்ணூறுகளில் எப்படி சிறுகதைகள் கொடி கட்டிப் பறந்ததோ அது போல இப்போது நாவல்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. எழுத வரும்போதே நாவலோடுதான் வருகிறார்கள். ஒவ்வொரு ஊர் புத்தகக் கண்காட்சிக்கும் புதிய புதிய நாவல்கள் கொண்டு வரப்படுகின்றன. ஊருக்கு ஊர் நிறைய எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஏதோவொரு விதத்தில் எழுதும் உற்சாகம் ஊக்கம் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் அவைகளை விழா எடுத்து வெளியிடும் பழக்கமும் கூடி வந்திருக்கிறது. வெளியிட்ட பதிப்பகத்தின் உதவியோடு அல்லது தனது சொந்தச் செலவிலேயே என்று எழுதிய நாவலை வெளியிடும், நாலு பேர் அறியச் செய்யும் விளம்பர யுக்தி கையாளப்படுகிறது.                                     எது எப்படியாயினும் ஒரு புத்தகம் கொண்டு வர வேண்டுமாயின் அந்தப் படைப்பாளி குறைந்தது நூறு புத்தகங்களாவது படித்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. ஒருவர் தொடர்ந்து சிறுகதைகளையும், கட்டுரைகளையும் அடுத்தாற்போல்   நாவலையும் ஒரு கை பார்ப்போம் என்று முனைகிறார் என்றால் அவர் வாசிப்பு உலகில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அவரை மனமுவந்து வாழ்த்துவது நமது பொறுப்பு. உற்சாகப்படுத்துவது நம் கடமை. அதே சமயம் அவரது எழுத்தை வெறும் புகழ்ச்சி வார்த்தைகளால் நிரப்பி விட முடியாது. அது தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதி இதயா ஏசுராஜின் “பயணிகள் உலவும் காகிதக்காடு” என்கிற இந்தச் சிறிய நாவலுக்கு இருக்கிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.                            வருகைக்கான ஆயத்தங்கள் என்று ஒரு அருமையான, தரமான சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தவர் இதயா ஏசுராஜ். மாய யதார்த்தம் என்கிற யுக்தியை அங்கங்கே சில கதைகளில் புகுத்தி சிறப்பாய் அந்தத் தொகுதியைத் தந்திருந்தார். அத் தொகுதி சிறந்த வாசிப்பனுபவத்தை நமக்குத் தந்தது.                                                                         இது நாவல் காலமாய் இருப்பதை உணர்ந்து, அதன் வேகத்தை அறிந்து, நாமும் ஒன்றை எழுதிவிட வேண்டும் என்கிற ஆவலில் உந்துதலில் அவர் இந்த நாவலை இத்தனை விரைவாய்க் கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.         நான் மேலே சொல்லியிருப்பதுபோல் நாவல் எதுவரை பயணம் செய்ய வேண்டுமோ அதுவரை தடங்கலின்றிப் பயணித்து எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டுமோ அந்த இடத்தில் கச்சிதமாய் நின்று தன்னை முடித்துக் கொள்கிறது.                           ஜோதிட வழி முறையில் சுவடி பார்ப்பது என்கிற ஒரு நடைமுறையைப் பின்பற்றி நம்பிக்கையோடு தேடிப் போய் தங்களின் எதிர்காலம் பற்றி அறிய முனைபவர்கள் உண்டு. அதில் ஒருவரின் சாவுபற்றிக் கூட இன்ன தேதியில், இந்த நேரத்தில், இப்படியாக நிகழும் என்பதாகவும் குறிப்புகள் இருப்பதாகவும், அவை உண்மையாக நடக்கின்றன என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.                                                      இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்கு அவர்கள் தேடும் புத்தகங்களில், கேள்விப்பட்டு வாங்க முனையும் புத்தகங்களில், அவர்களே எதிர்பாரா வண்ணம் சில வரிகள் இருப்பதுவும், அது அவர்களின் அப்போதைய, மனசஞ்சலமான துன்பங்களுக்கான தீர்வாக அமையும் வண்ணம்  நிகழ்வதுவும், அது அவர்களை வியப்பிலாழ்த்துவதாயும், பயம் கொள்ளச் செய்வதாயும் அமையும் சம்பவங்கள் அங்கங்கே பொருத்தமாக, அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கின்றன.                                                       வாழ்க்கையில் நாம் விரும்புவது ஒன்று நமக்கு நடப்பது ஒன்றாக இருக்கும். நான் விரும்பினபடியே, மனதில் நினைத்தபடியே அந்தக் குறிப்பிட்ட இலக்கை எட்டினேன் என்று சொல்பவர்கள், வெற்றியடைந்தவர்கள் மிகச் சிலரே. அதுபோல இந்த நாவலின் நாயகனுக்கும் அவன் விரும்பாத சற்றும் அனுபவமில்லாத தொழிலோடு கூடிய வாழ்க்கைதான் அமைகிறது. அதுவும் நண்பனின் பொறுப்பான யோசனையின்பேரில் அவன் அதில் இறங்குகிறான். போகப் போக அவன் அதில் தன்னைப் படிப்படியாக இணைத்துக் கொள்கிறான். அதன் மூலம் அவன் பெறும் பல்வேறு விதமான அனுபவங்கள்தான் நாவலாக விரிகிறது. எந்தவொரு செயலையும் அனுபவமின்றிக் கையிலெடுத்தாலும், அதில் மிகுந்த ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும், கடுமையான உழைப்பைச் செலுத்தி செயல்படுவோமானால் அதில் வெற்றியடையலாம் என்கிற உண்மையை இந்த நாவல் நமக்கு எடுத்துரைக்கிறது.      சுருக்கமாய்க் கொஞ்சம் சொல்லி நாவலின் மையப்புள்ளியைத் தொட்டால் அதற்குமேல் என்ன என்கிற ஆர்வத்தை வாங்கிப் படிக்க நினைக்கும் வாசகர்களுக்கு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.                                                                          செல்வவிநாயகம் ஒரு புத்தகப் பிரியர். வீடு நிறைய புத்தகங்கள் வாங்கி அடுக்கியிருக்கிறார். சிறந்த வாசிப்பாளர். அதுவே அவர் உயிர் மூச்சு. ஆனால் வீ்ட்டில் வேறு யாரையும் அவரால் அந்த நல்ல பழக்கத்திற்கு உட்படுத்த முடியவில்லை. மனைவி, மகன், மருமகள், பேரன் உட்பட. வகை வகையாகத்தான் வாங்கி வைத்திருக்கிறார். சிறார் நூல், தமிழின் பழம் பெரும் எழுத்தாளர்களின் படைப்புக்கள், மொழி பெயர்ப்பு நூல்களில் ரஷ்ய எழுத்தாளர்கள் என்று எ ல்லாமும்தான் உள்ளன. பலன்? யாரும் தொடுவதில்லையே...! வேலை நிமித்தமாக ஊர் விட்டு ஊர் செல்கையில் லாரியில் கொண்டு போகும் அளவு புத்தகங்களை சேகரித்திருக்கிறார்.                                                                      தன் வழக்கமான, பழக்கமான புத்தக வாசிப்பில் மூழ்கியிருக்கையில் அப்படியே மயங்கி விழுகிறார். சற்றுப் பொறுத்து மயக்கம் தெளிகையில் புத்தகங்கள் நிறைந்திருக்கும் மாடியறைக்குத் தன்னைக் கொண்டு செல்ல வேண்டுகிறார். அங்கு அவர் உயிர் பிரிகிறது. பேரன் கொடுத்த சில புத்தகங்களை அவர் சிதையில் அடுக்கி எரியூட்ட அவர் கதை முடிகிறது.    எந்த வேலையிலும் நிலைக்காத மாதவன் தொடர்ந்து ஜீவனத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறான். அப்பா வாங்கிச் சேர்த்திருந்த ஒரே சொத்தான அந்தப் பெரிய வீட்டை விற்றால் நல்ல விலை போகும். அந்தப் பணத்தைச் சேமித்து, அதில் கஷ்டமின்றிப் பாடு கழியும் என்று யோசிக்கையில் நண்பன் அசோகன் அவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறான். ஒரு காம்ப்ளெக்ஸ் போன்ற பகுதியில் ஒரு சிறு இடத்தைப் பிடிக்கிறார்கள். புத்தகக் கடை திறக்கிறார்கள்.       புத்தகங்கள் காலியானால் வீட்டு மாடி காலியாகும். அதை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாம் என்று யோசிக்கிறாள் அம்மா.     கடையைப் பாங்காகத் திறந்து கொடுத்துவிட்டு தன் மீன் கடையைப் பார்க்கப் போகிறான் நண்பன் அசோகன். நான்கு அத்தியாயங்கள் வரை மாதவன் கதை. 5-லிருந்து வேறு.                 எழுத்தாளர் நீலமேகம் மகள் சந்திரவதனா. மனைவி பவித்ரா. தான் அடையாளம் காணப்படவில்லை என்கிற ஆதங்கம். அந்த வருட அரசுப் பரிசு வேறொருவருக்குப் போய்விட, புத்தகங்களை நடுவீட்டில் போட்டு எரித்து விடுகிறார். பிறகு வீட்டில் புத்தகங்களைக் கண்டால் எரிந்து விழுகிறார். இனிப் புத்தகங்களையே கண்ணால் பார்க்கக் கூடாது என்று கொதித்து எழுகையில் மாரடைப்பில் மாண்டு போகிறார். அம்மா புடவையில் முகுந்தன் என்று கையெழுத்திட்ட கடிதம். அவளை யோசிக்க வைக்கிறது.  புத்தகக் கண்காட்சிக்கு எதிரே கடை போட்டிருந்த மாதவனிடமிருந்து 3 புத்தகங்களை வாங்கி வருகிறாள்.கஞ்சிரா மூர்த்தி என்ற எழுத்தாளர் எழுதிய பூமிக்கும் வானத்திற்கும் நடுவே என்ற நாவல் அவளை ஈர்க்கிறது. கடைசிப்பக்கத்தில் அறிய முயற்சிக்காதே என்ற வரிகள் கோடிடப்பட்டிருக்கின்றன. அது அவளை ஈர்க்கிறது.      உன் அம்மாவின் அந்தரங்கத்தை அறிய முயற்சிக்காதே. அது பாவம்...சந்திரா...என்றே உள்ளது.                                                          பிரமோத் வேலையற்ற இளைஞன். அவனுக்கு வேலை கிடைக்கிறது. சந்திரவதனா அலுவலகத்திலேயே. இருவருக்கும் ஒரு புத்தகம்தான் வழிகாட்டுகிறது. அங்கிருந்தும் தொடர்கிறது  மாய யதார்த்தம். உங்கள் காதலுக்கு பெரும் ஆபத்து வரப்போகிறது. அதிலிருந்து தப்பிக்க “கருணையின் காலடியில்” புத்தகத்தைப் பார்க்கவும். இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி செல்வ விநாயகம். என்று தொடர்கிறது.                                                    இப்படி அங்கங்கே ஆச்சரியங்களைக் கோர்த்துக் கொண்டே நாவலை ஸ்வாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர்.  .   புத்தக ஆர்வலர்கள் தேடிபோய்க் கண்டெடுக்கும் புத்தகங்களில் அவர்கள் வாழ்வி்ன் தொடர்புடைய சம்பவங்கள் படிப்பவர்களை அதிசயத்திற்குள்ளாக்கி, அதனை நம்ப வைத்துத் தேட வைத்து விடுகி்ன்றன. தேடிக் கொண்டு அலையும்  வெவ்வேறு கதாபாத்திரங்களாக பிரமோத், சந்திரவதனா, ராஜசேகரன் ஆகியோர் குழப்பத்திற்குள்ளாகி் தீர்வினையும் கண்டடைகிறார்கள். ராஜசேகரன் வாங்கவிருந்த ஒரு புத்தகம் இவர்கள் வெகுநாளாய்த் தேடிய ஒன்றாய் உள்ளது. வாங்கிப் பார்க்கையில் “நீங்கள் ரெண்டு பேரும் உடனே காசிக்குப் போங்கள். அங்கே ஒரு துறவி உங்களைத் தேடி வருவார். அவரைக் கூட்டிக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போங்கள். அம்மா மனது சாந்தியடையும். உங்கள் கல்யாணமும் நடக்கும் என்றிருக்கிறது. உடனே இருவரும் வாரணாசிக்குப் பயணிக்கிறார்கள்.                                                                               என்னதான் ஆகிறது பார்ப்போம் என்று நாமும் கடைசி வரை நகர்ந்து விடுகிறோம். சந்திரவதனா, பிரமோத், ராஜசேகரன், அசோகன் ஆகியோர் கூடும் இடம் அசோகனின் புத்தகக் கடையாகவே இருக்கிறது. அங்குதான் அவர்கள் தேடும் புத்தகங்கள் மூலம் இந்த அதிசயங்கள் நிகழ்கின்றன.  அப்படியான ஒரு புனைவை இந்த நாவல் மூலம் சித்தரித்திருக்கிறார் இதயா ஏசுராஜ். கதைச் சுருக்கம் மொத்தத்தையும் சொல்வது ஒரு விதத்தில் ஆபத்தாகவும் முடியும். இந்த மாய யதார்த்த நிகழ்வுகள் அந்தந்தப் புத்தகக் குறிப்புகள் மூலம் எவ்வாறு நிகழ்கின்றன, அவரவர் பிரச்னைகளுக்கு எப்படியெப்படி தீர்வு கிடைக்கிறது என்பதுதான் நாவலின் நடை பயணம். நடந்து கொண்டிருக்கும் இந்த அதிசயங்களைமனதுக்குள் அசைபோட்டு, அதையே கடைசியில் ஒரு நாவலாக எழுத முனைகிறாள் சந்திரவதனா. புத்தகங்களுக்கு நடுவே நாகம் வருகிறது. அது அருகிலுள்ள ஒரு மரத்தடிக்கு மாதவனை அழைத்துச் செல்கிறது. அங்கே ஒரு அதிசயத்தைக் காண்கிறான் அவன். இறந்து போன அப்பா தன்னோடு பேசியதாக உணர்கிறான். திருலோக சீதாராம் இக்கதையில் திருலோக ராம் சுந்தராக நடமாடுகிறார். இப்படியான அதிசயங்கள் விரவிக்கிடக்கின்றன இந்நாவலில். நீலமேகத்தின் மனைவி பவித்ராவின் காதலன் முகுந்தன் மீண்டு வருகிறான் நாவலின் கடைசி அத்தியாயத்தில். அவளின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பசுமையான பழைய நினைவுகளில் ஒன்றிப் போய் அந்த ஊரிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையில் சென்று மொழி பெயர்ப்பு நூல் ஒன்று வாங்கும்போது அதிலுள்ள சில பக்கங்கள் அவனை அதிசயத்துக்குள்ளாக்குகின்ற என்பதோடு இந்நாவல் நிறைவு பெறுகிறது.    நூற்றுச் சொச்சம்  பக்கங்களில் நிறைய அதிசயங்களை  உள்ளடக்கி பிரமிக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்பில் விறுவிறுப்பாக இதயா ஏசுராஜ் எழுதியுள்ள இந்நாவல் புதிதாக நாவல் எழுத யத்தனிக்கும் இளம் படைப்பாளிகள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல்  என்று உறுதியாய்ச் சொல்லலாம்.      அடுத்தடுத்த நாவல்களில் இன்னும் பிரமிக்கத்தக்க அதிசயங்களை அவர் நிகழ்த்த வேண்டும் என்று நாமும் அவரை வாழ்த்துவோம்.                            ----------------------------------------------                                    


                                                                 
     


10 டிசம்பர் 2019

தலைப்பு------`மரணம்’ஆக்கம்--- செய்யாறுதி.தா.நாராயணன் - சிறுகதை


தலைப்பு------`மரணம்’ஆக்கம்--- செய்யாறுதி.தா.நாராயணன்
முருகானந்தம்அய்யாபோய்விட்டார். 60வயசு. நோய்நொடின்னுஒருநாள்படுக்கவில்லை. நடமாடிக்கொண்டேபோய்சேர்ந்துவிட்டார். காலைபதினோருமணிக்குகழனியைசுற்றிவிட்டுவந்தவர்மருமகளிடம்குடிக்கத்கொஞ்சம்நீராகாரம்கேட்டிருக்கிறார். மருமகள்கொண்டுவந்துகொடுப்பதற்குள்சோபாவில்சாய்ந்துவிட்டார்.
முருகானந்தம்வீட்டின்முன்பாகஊர்ஜனங்களும்கூடியிருந்தனர். ஊரில்சாவுவிழுந்துவிட்டால்சவம்எடுக்கிறவரைக்கும்அந்தத்தெருஆட்கள்ஒருத்தரும்வேலைக்குபோறதில்ல.  சவத்தைஎடுத்ததுக்குஅப்புறம்தான்சொந்தவேலைக்குபோகணும். இதுவாலாயமாய்இருக்கும்ஊர்நடைமுறை..விவசாயிகளும், நெசவாளிகளும், நிறைந்திருக்கும்ஊர்அது. சாவுவீட்டைச்சுற்றிலும்ஒருமவுனம்விரவியிருந்தது. உள்ளேபோகும்பெண்கள்கொஞ்சநேரம்மார்பில்தப்தப்பென்றுஅடித்துக்கொண்டுபிலாக்கணம்பாடியழுதார்கள். அழுதுமுடித்தவர்கள்கண்களைதுடைத்தபடிவெளியேறிக்கொண்டிருந்தனர். திண்ணைமேல்ஊர்காரியஸ்தர்வேதாச்சலம்அய்யாஉட்கார்ந்துக்கொண்டுசவத்தைகுளிப்பாட்டுவதற்காகவாங்கிவந்திருந்தகடைசெலவுசாமான்களைதட்டில்பரப்பிக்கொண்டிருந்தார்.தெருவில்பாடைதயாராகிக்கொண்டிருந்தது. பூஜோடிப்புநடக்கிறது. பக்கத்தில்ஒருத்தன்கொள்ளிசட்டியில்சிறிதுகட்டைநெருப்புவைத்துமேலேவறட்டியைபோட்டுநெருப்புமூட்டிக்கொண்டிருந்தான். தெருவில்இருப்பவர்களுக்கும்உள்ளேஇருப்பவர்களுக்கும்சிரத்தையாகடீவிநியோகமாகிக்கொண்டிருந்தது.
முருகானந்தம்ஊரில்நல்லமனுஷன்என்றுபெயரெடுத்தவர். சற்றுரோஷமானஆள்.முணுக்கென்றுகோபம்வந்துவிடும்.இரண்டுதடவைஊர்தலைவராகஇருந்தவர். மூன்றாம்தடவைதன்தம்பிதலைவருக்குநிற்கிறான்என்றுகேள்விப்பட்டுஒதுங்கிக்கொண்டார். ஊரில்போர்போட்டு, டேங்க்கட்டிகுடிதண்ணீர்வசதிசெய்தது, ஆரம்பசுகாதாரநிலையம்கொண்டுவந்தது, ரேஷன்கடைகொண்டுவந்தது, மெயின்ரோடிலிருந்துசீரானசாலை, எல்லாம்வந்ததுஇவர்காலத்தில்தான். இந்ததடவைதலைவராகஅவருடையதம்பிதான்போட்டியின்றிஅன்னபோஸ்ட்டாகதேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
சாவுமேளம்பொரிந்துக்கொண்டிருக்கிறது. பறையடிப்பவர்கள்சற்றைக்கொருதரம்வெள்ளையும்சள்ளையுமாய்வரும்மேட்டுக்குடிகளிடம்பாட்டுபாடிசுபோஜெயம்சொல்லிகாசுகறந்துக்கொண்டிருந்தார்கள்.மேளம்அடிக்கிறவன்நாலுபேர், ஒப்பாரிபாட்டுபடிக்கிறவன்ஒருத்தன், அப்புறம்சுடுகாட்டில்சிதைஅடுக்கிதயார்செய்பவர்கள்ரெண்டுபேரு. ஆகமொத்தம்ஏழுபேருக்கும்சாயரட்சைக்குசவத்தைஎடுத்தபிறகுஆளுக்குஒருகுவார்ட்டர்சரக்கு,தண்ணிபாக்கெட்ஒண்ணு, தொட்டுக்கவறுத்தகறிஇல்லையென்றால்ரத்தப்பொரியல்ஒருபொட்டணம்என்றால்கூடஅறுநூறுரூபாய்க்குமேல்தேற்றியாகணும். ஜரூராகசுபோஜெயம்கலெக்‌ஷன்நடந்துக்கொண்டிருக்கிறது.பளிச்னுஒருத்தர்வரப்படாது. அவர்கிட்டபணம்கறக்காமஅனுப்பறதில்லை.
முதலில்முருகானந்தம்குடும்பமும், அவருடையதம்பிகோபால்குடும்பமும்கூட்டுக்குடித்தனமுமாகத்தான்வாழ்ந்துவந்தார்கள்.முருகானந்தம்தம்பியிடமும், பிள்ளைகளிடமும்மிக்கபாசமுள்ளவராகத்தான்வாழ்ந்துவந்தார். அப்புறம்வீட்டில்வாழவந்தபெண்களுக்குள்வந்தவாய்ச்சண்டைபின்னால்ஆண்களுக்குள்பெரியசண்டையாகிஅடிதடிவரைக்கும்போய்பிரிந்துவிட்டார்கள். எப்பவும்அற்பகாரணங்களுக்காகவரும்சண்டைகள்தான்வெட்டுகுத்துரேஞ்சுக்குபோகும்என்பதுவாஸ்தவமானபேச்சு.அடுத்தடுத்தகாலங்களில்சொத்துபாகம்பிரிப்பதில்எழுந்ததகறாரில்பங்கீடுநடக்காமலேநின்றுபோனது. இரண்டுபக்கங்களிலும்வளர்ந்துவிட்டபிள்ளைகளால்பிரிவுநிரந்தரமாகிப்போனது. பிரிந்துஇன்றைக்குபத்துவருஷங்கள்கடந்துவிட்டன.பரஸ்பரம்ஒருத்தருக்கொருத்தர்ஜென்மப்பகையாளியாகதிரிந்துக்கொண்டிருந்தார்கள்.தம்பிபக்கத்திலஇரண்டுகிலோமீட்டரில்புதூர்கிராமத்தில்மளிகைக்கடைவைத்திருக்கிறான்.தினமும்ஊரிலிருந்துபோய்வந்துகடையைகவனித்துக்கொள்கிறான். எடுபிடிக்குரெண்டுபணியாட்கள்.
சவத்தைதெற்குதிசையில்தலையைவைத்துகிடத்தியிருந்தார்கள். தலைமாட்டில்குத்துவிளக்குஎரிந்துக்கொண்டிருக்கிறது. கால்மாட்டில்உயிர்பிரியும்போதுஅவசரமாகஉடைத்ததேங்காய்முடிகள்வைக்கப்பட்டிருந்தன. காரியஸ்தர்வேதாசலம்கத்திக்கொண்டிருந்தார்.“டேய்! யார்றாஅவன்தலைமாட்டிலகட்டிலுக்குக்கீழேநெல்சிப்பம்ஒண்ணுகொண்டாந்துவையிடான்னுசொன்னனேஎன்னஆச்சி? சீக்கிரம்.டேய்! நீசவத்துக்குநெத்தியிலகனக்கவிபூதிபூசுங்கடா.”---சொல்லிக்கொண்டேசவத்துக்குவீக்கம்ஏறாதிருக்கஒருசீலைத்துணியில்சோற்றுப்பைகட்டிமார்மீதுவைத்துமேலேதுணியைமூடினார்.அந்நேரத்துக்குஅவங்கவீட்டுவகையறாவைச்சேர்ந்தபெண்கள்ஒவ்வொருத்தராய்தெருமுனையிலிருந்தேஉரக்கஒப்பாரிபாடிஅழுதுக்கொண்டேவந்து, உள்ளேவந்ததும்மாரடித்துக்கொண்டுபாடிஅழஆரம்பித்தார்கள். காரியஸ்தர்வேதாசலம்சவத்தினுடையமூத்தபிள்ளையைக்கூப்பிட்டார். கூடவேமற்றஇருவரும்சோகமாய்வந்துநின்றார்கள்.“ஏம்பா! சொந்தக்காரங்கஎல்லாருக்கும்தகவல்போயிட்ச்சா?.எல்லாரும்வந்துட்டாங்களா?.இன்னும்யார்னாவரவேண்டியதுஇருக்கா?.”                                                                                             “எல்லாரும்வந்தாச்சிங்க.”----அவர்சற்றுகுனிந்துதணிந்தகுரலில்.“உங்கசித்தப்பனுக்குதகவல்சொன்னியாஇல்லையா? ஆளைக்காணோமே.”-----அதற்குமூன்றுபேரும்பிலுபிலுவென்றுசீறிக்கொண்டுவந்துவிட்டார்கள்.“அந்தாளுக்குஎதுக்குதகவலுசொல்லணும்?.உங்களுக்குத்தெரியாததுஒண்ணுமில்லே. பத்துவருசபகை. வாழ்வுசாவுக்கெல்லாம்தள்ளியாச்சி, இன்னிக்கிஇன்னாதிடீர்னுசொட்டுதா?.அந்தாளுவரக்கூடாது.”----மூத்தபிள்ளைமாதவன்கூடுதலாகஎகிறினான்.
“டேய்மாதவா! இன்னாஇருந்தாலும்கூடப்பொறந்தவன்.அதில்லாமஊருதலைவர். எதனாவில்லங்கம்பண்ணாமஇருக்கணும்டா. அவனுக்குபவர்இருக்குதுடா.”“எதுவாஇருந்தாலும்சரிநாங்கபார்த்துக்கறோம்.அந்தப்பேச்சைவுடுங்க.வரக்கூடாதுன்னாவரக்கூடாதுதான்.எங்களையேஅடிக்கஆள்செட்பண்ணான்யாஅவன். துரோகி.”“டேய்! இன்னாடாசொல்றீங்க?.இன்னும்உங்கப்பனுக்கும்அவனுக்கும்பாகப்பிரிவினைஆவலியேடா. நாளைக்குசெட்டில்மெண்ட்எழுதஅவன்தாட்சண்யம்வோணும்டா. முனபின்னயோசிச்சிநடங்க. இப்பிடிஎடுத்தேன்கவுத்தேன்னுபேசாதீங்கப்பா.”
“அன்னைக்கிகதஅன்னைக்கி.எங்கதாட்சண்யம்இல்லாமஅவன்மட்டும்பாகப்பிரிவினைநடத்திக்குவானா?.வுடுப்பாஅந்தாளுவரக்கூடாது.” “டேய்! வாணாம்டாசொல்றதகேளுங்க.”“நாங்கவாணான்றோம்நீஇன்னமோதிரும்பத்திரும்பஅவனுக்கோசரம்வக்காலத்துவாங்கறியே.அந்தபேச்சைவுடுப்பா.”“ சரி..சரி..மணிமூணுஆச்சி. இப்பகுளிப்பாட்டஆரம்பிச்சால்தான்அஞ்சிமணிக்காவதுசவத்தைகெளப்பமுடியும். நாவிதன், ஏகாலி, வந்துட்டாங்களாபாரு. போயிகுளிச்சிமுடியுங்க. டேய்! பணிச்சவனைதாரைஊதச்சொல்லு.”-----அவர்கள்குளிக்கப்போனதும்அங்கேதாரைசத்தம்ரெண்டுதடவைஎழுந்தடங்கியது. சவத்தைகுளிப்பாட்டப்போகிறோம்என்றுஊருக்குசமிக்ஞை.பங்காளிகள்வீடுகளைச்சேர்ந்தஇளைஞர்படைஒன்றுமளமளவென்றுகிணற்றிலிருந்துதண்ணீர்சேந்திவந்துதெருவில்அண்டாக்களில்நிரப்பஆரம்பித்தார்கள். ஒருதாம்பாளத்தட்டில்அபிஷேகசாமான்கள்ரெடியாகஇருந்தது. ஊர்முக்கியஸ்தர்களில்ஒருத்தர்பெருந்தனத்திடம்வந்து
“இன்னாபாஇந்தபசங்கசித்தப்பன்நாத்தமேஉதவாதுன்னுஅடாவடிபண்ணுதுங்க?.”
“இன்னாபண்ணச்சொல்ற?.இவங்கசித்தப்பனும்ரொம்பரோஷக்காரன். சுலுவுலஇறங்கிவரமாட்டாப்பல. வந்தாலும்ஒருத்தரையொருத்தர்அடிச்சிக்குவானுங்கப்பா. ரெண்டுதரப்பிலேயும்ஆன்னாஊன்னாகத்தியதுக்கிடுவானுங்க. அந்தகூத்தைநாமல்லாம்பார்க்கலியாஇன்னா?.சரிவுடுநமக்குஇன்னாகிரகச்சாரம்?.சாவுவூட்லசண்டைவாணாம். ஆவறகாரியத்தபார்ப்போம்.”
ஒருபக்கம்ஓரமாய்அந்தவீட்டுக்குபாத்தியப்பட்டசம்பந்திகள்எல்லாரும்கூடிநின்றுஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். சவத்தைஎடுத்தப்புறம்ராத்திரிசாப்பாட்டுபொறுப்புஅவங்களுடையது.சம்பந்தசோறுன்னுசொல்றது. ஆதிநாளில்அரிசிபருப்புமுதற்கொண்டுஎல்லாவற்றையும்வாங்கி, ஆக்கிபரிமாறுவதுவரைக்கும்சம்பந்திகள்பொறுப்பு. இன்றைக்குஇத்தனைசாப்பாடுஎன்றுஓட்டலில்ஆர்டர்குடுத்திட்றது. செலவைபங்கிட்டுக்கொள்வதுஎன்பதுநடைமுறைசம்பிரதாயம். ஆனால்இன்றைக்கும்கொண்டான்குடுத்தான்வீட்டார்கள்தான்இருந்துபந்திபரிமாறிவிட்டுபோகணும். முருகானந்தத்தின்பிள்ளைகள்மூவரும்சோகமாய்உட்கார்ந்திருக்க, அவர்களுடையதாய்மாமன்கள்இரண்டுபேரும்கிட்டேவந்தார்கள்.“டேய்! மாதவா! மூணுபேரும்நாங்கசொல்றதைக்கேளுங்கப்பா. வாழ்வுலசேரலேன்னாலும்சாவுலசேரணும்னுசொல்வாங்கடா. உங்கசித்தப்பனுக்குதகவல்சொல்லணும்டா. அவன்வந்தாநீங்கஎதுவும்பேசவேண்டாம். கிட்டகூடவரத்தேவல.நாங்கபார்த்துக்கறோம். வந்துபர்த்துட்டுபோயிரட்டும். தடைசொல்லாதீங்க.” ----அதுக்குஇளையபுத்திரன்தான்பதில்சொன்னான்.“மாமா! கம்னுபோயிடுங்க. அந்தாளுவந்தான்னாஒதைவிழும். என்னைக்காஇருந்தாலும்பதிலுக்குபதில்அவனைஒதைக்காமவுட்ரதில்லைன்னுகாத்துக்கிட்டுஇருக்கோம். அதுஇன்னைக்கேநடந்திடும். ஆமாசொல்லிட்டோம். அந்தகம்மனாட்டிஇங்கவரக்கூடாது. இனிமேயாரும்இந்தபேச்சைஎடுத்துக்கிணுஎங்ககிட்டவராதீங்க.எந்தகாலத்திலேயும்அந்ததுரோகியகிட்டேசேர்க்காதீங்கடான்னுஎங்கப்பனேசொல்லிட்டுபோயிருக்காருஆமா.”—மூவரும்ஆவேசமாய்கத்தினார்கள். அத்துடன்அவர்கள்நகர்ந்தனர்.பெரியவன்மாதவன்நடுவிலவன்காதைகடித்தான்.


“டேய்! இந்தகெழவன்கபேச்சைநம்பமுடியாது. நம்மசம்மதம்இல்லாமலேகூடஅந்தஆளைவரவழிச்சிவிடுவாங்க. அப்படிஒருக்காவந்துட்டாமொதஅடிஉன்னுதுபுரியுதா?”
“சரிண்ணா.”
ஆயிற்றுநாலுமணிக்கெல்லாம்சவத்தைவெளியேகொண்டுவந்துவிட்டார்கள்.“டேய்! தலைதெற்குதிசையிலஇருக்கணும். பெஞ்ச்சைவடக்குதெற்காபோடுங்கப்பா.”------பெண்களின்ஒப்பாரிகூடுதல்சத்தத்துடன்இருக்கசிலபெண்கள்மாரடித்துஅழஆரம்பித்தார்கள். காரியஸ்தர்ஒவ்வொருசடங்காகசொல்லச்சொல்லமூத்தபிள்ளைசிரத்தையாகசெய்துக்கொண்டிருந்தான்.
“மொதல்லதவலைதண்ணியகால்லஇருந்துதலைவரைக்கும்சோரஊத்துடா.”---ஊத்தியாச்சி.
“அடுத்துசிரசில்எண்ணைசீயக்காய்பொடிவைத்துதேய்த்துஒருகுடம்தண்ணீர்ஊத்து.ஆச்சா?.அடுத்துமஞ்சள்தூளைதண்ணியிலகரைச்சிஅபிஷேகம்பண்ணிஒருகுடம்தண்ணியஊத்துடா..”---அவரேமஞ்சள்பொடியைதண்ணீரில்கரைத்துக்கொடுத்தார். அதுமுடிஞ்சிது.
“அப்புறம்பாலைஎடுத்துபாதத்திலிருந்துசிரசுவரைக்கும்அபிஷேகம்பண்ணு. ஆச்சா?.மேலஒருகுடம்தண்ணியஊத்து. அப்புறம், தயிர்அபிஷேகம்,அப்படிஇல்லடா, தயிரைசிரசிலவெச்சிதண்ணிஊத்துப்பா. ஆச்சா? சீக்கிரம்அடுத்துகடைசியாஇளநீர்அபிஷேகம்.”------அப்புறம்மேலேவெள்ளைத்துணிபோர்த்திசுற்றி, நெற்றியில்விபூதியைகனக்கபூசி, மேலேபன்னீர்போன்றவாசனாதிதிரவங்களைதெளிக்கச்செய்தார்.தலைமாட்டில்ஊதுவத்தியைகத்தையாய்கொளுத்திசெருகினார். “டேய்! அந்தம்மாவைகூட்டியாங்க. இங்கபக்கத்திலஉட்காரவைக்கணும். அவங்களுக்கும்தண்ணிஊத்திகுளிப்பாட்டணும்.”---
“ஏம்பா! இந்தகுளிர்லஅவங்கஎதுக்கு? தலையிலதண்ணிதெளிச்சிக்கலாம்பா.” “ டேய்! யார்றாஅவன்ஊஹும்சடங்குசம்பிரதாயங்களைமீறக்கூடாது. முறைன்னுஒண்ணுஇருக்கில்ல?.உம்சீக்கிரம்சீக்கிரம்.ஏம்பா! தாய்வூட்டுகோடிசேலைஎங்கப்பா, யாருபோட்றது?.”---இந்தஊருக்கேசாவுசடங்குகளைமுழுசாகஅறிந்தவர்வேதாச்சலம்அய்யாதான். ஊரிலேசாவுவிழுந்தாயாருக்குஇல்லேன்னாலும்முதல்லஅவருக்குத்தான்செய்திபோகும். அவரும்தன்வேலைகளையெல்லாம்விட்டுவிட்டுஒருசேவையாய்வந்துசெய்வார். இரண்டாவதுபிள்ளைஅம்மாவைஅழைத்துவந்துபக்கத்திலேயேஒருஸ்டுல்பொட்டுஉட்காரவைத்தான். அதன்பின்அவளையும்குளிப்பாட்டச்செய்தார்கள்.முகத்தில்மஞ்சள்பூசிதலையில்மீண்டும்ஒருகுடம்தண்ணீர்ஊற்றினார்கள்..அந்தம்மாவுக்குஅழகூடதிராணிஇல்லை, குளிரில்வெடவெடவென்றுநடுங்குகிறது..அடுத்துஅந்தம்மாகையில்பூச்சரம்கொடுக்கப்பட்டது. யாரோஒருவயதானவிதவைஒருத்திவழிநடத்த, இடவலமாகபுருஷனைமூன்றுமுறைசுற்றிவந்துஅவர்பாதங்களின்மேல்பூசாற்றிஅப்படியேசரிந்துகணவன்காலைக்கட்டிக்கொண்டுகுலுங்கினாள். பிள்ளைகள்மூன்றுபேரும்அம்மாவைநெருங்கிவந்துநின்றுஅழுதார்கள். எல்லாம்முடிந்தது. தாய்வீட்டுகோடியும்போட்டாச்சி. கடைசிதீபாராதனையையும்காட்டியாயிற்று. அடுத்துசவத்தைதூக்கிபாடையில்வைக்கவேண்டியதுதான்பாக்கி.
அந்நேரத்திற்குதிமுதிமுவென்றுமுருகானந்தத்தின்தம்பிகோபால்கூக்குரல்போட்டுக்கொண்டேமூச்சிரைக்கஉள்ளேஓடிவந்தான்.குடும்பத்தோடுமூன்றுநாட்கள்கொல்லிமலைடூர்போனவன்இப்போதுதான்திரும்பியிருக்கிறான். வந்தவன்விஷயத்தைக்கேள்விப்பட்டவுடன்எல்லாமாச்சரியங்களும்அழிந்துபோய்பாசம்மேலிட,ஓடிவந்திருக்கிறான். கூடவேஅவனுடையமனைவியும், இரண்டுபிள்ளைகளும்வந்துநின்றனர். இருந்தவர்கள்யாருக்கும்எதுவும்புரியவில்லை.என்னநடக்குமோஎன்றஅச்சம்எல்லோரிடமும்விரவியிருந்தது. முருகானந்தத்தின்பிள்ளைகள்மூன்றுபேரும்கோபத்தில்திமிறிக்கொண்டுஅடிதடிக்குதயாராகநிற்கிறார்கள். வந்தசித்தப்பன்நெருங்கிஅண்ணன்முகத்தைகுனிந்துபார்த்தான். அவ்வ்ளவுதான்ஒருநிமிஷம்வாய்கோணிக்கொள்ளமாறுகண்போலவித்தியாசமாய்பார்த்தான். மூச்சுதிணறலாகக்கே.கே.கேஎன்றுபெருசாய்ஒருகேவல், அவ்வளவுதான்தடாலென்றுமயங்கிகீழேவிழுந்தான். சுற்றியிருந்தவர்கள்ஓடிப்போய்அவனைபுரட்டிப்போட்டார்கள்.முகத்தில்தண்ணீர்தெளித்துஅவனுடையஆவேசத்தைதணித்தார்கள். சற்றுநேரத்தில்மயக்கம்தெளிந்துஎழுந்தவன்அண்ணன்காலைபிடித்துக்கொண்டுகதறிதீர்த்துவிட்டான்.மாலைமாலையாய்கண்ணீர்வடிகிறது.
“ஐயோஅண்ணா! பத்துவருசமாதுரோகியாதூரநின்னுப்புட்டேனே. பழசையெல்லாம்நினைச்சிப்பார்க்காததுக்கிரியாபூட்டனே. அப்பிடிஇன்னாத்தசாதிச்சிப்புட்டேன்?.ஐயய்யோ!எணா…எணா…! “---பட்பட்டென்றுமுகத்தில்அடித்துக்கொண்டுஅழுதான்.சுற்றிலும்உட்கார்ந்திருந்தபெண்கள்அழுகுரலும்இப்போதுஉயர்ந்தது.
“பாருண்ணா! புத்திகெட்டகோபாலுபாவிவந்திருக்கேண்ணா.”—அவனுடையஅழுகைநிற்கவில்லை. பாதாதிகேசம்அண்ணனைதடவிக்கொண்டேயிருந்தான்..நேரம்போய்க்கொண்டேஇருக்கிறது.அப்புறம்சவஅடக்கத்துக்குஇருட்டிவிடும்.சுற்றிலும்இருந்தவர்கள்அவசரப்பட்டார்கள். வேதாச்சலம்கையமர்த்தினார்.
“கொஞ்சம்பொறுங்கப்பா, பத்துவருசதுக்கம்கொதிச்சிஅடங்கட்டும்.”-----யாரோஒருத்தர்வற்புறுத்திதள்ளிவிடஇப்போதுஅந்தமூன்றுபிள்ளைகளும்சித்தப்பனைநெருங்கிநின்றார்கள். பார்த்துவிட்டுஅவர்களைகட்டிக்கொண்டுஅழுதான்.தன்அண்ணியைப்பார்த்துவிட்டுதலைதலையென்றுஅடித்துக்கொண்டுஅழுதான்.
“உங்களையெல்லாம்மறந்துட்டுவெட்டிஜம்பத்துக்குவெலையாயிட்டேண்டா. எல்லாரும்இந்தசித்தப்பனைமன்னிச்சிடுங்கடா…”------தூரமாய்நின்றிருந்ததன்இரண்டுபிள்ளைகளைப்பார்த்துவிட்டுஉரக்க
“என்கப்பலேகவுந்துபோச்சிடா. இன்னமும்ஏண்டாநமக்குவெடாசு?.வாங்க.”----இப்போதுஇரண்டுபிள்ளைகளும்வந்துதங்கள்பெரியப்பாபிள்ளைகளோடுசேர்ந்துக்கொண்டார்கள். அவருடையமனைவிஏற்கனவேஓரகத்தியின்பக்கத்தில்போய்உட்கார்ந்துஅழஆரம்பித்துவிட்டாள்..பிள்ளைகள்ஒருத்தரையொருத்தர்கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். ஆனாலும்முருகானந்தம்பிள்ளைகள்மட்டும்அரைமனதோடுஇறுக்கமாகத்தான்நின்றார்கள். அந்நேரத்திற்குகாரியஸ்தர்வாயைத்திறந்தார். “ஏம்பாகோவாலூ! சாவுலநீங்கஎல்லாரும்ஒண்ணாசேர்ந்ததுஎங்களுக்கெல்லாம்சந்தோஷம். எல்லாரும்கொஞ்சம்தள்ளிநில்லுங்கசவத்தகெளப்பணும். லேட்டாவுது.ஏண்டாசாமிநாதா! மசமசன்னுநிக்காதநெய்பந்தத்துக்குகுரல்குடு.”---இப்போதுநாவிதன்உரக்ககுரல்கொடுத்தான்.“ நெய்ப்பந்தம்புடிக்கபாத்தியப்பட்டவங்கள்லாம்வந்துபுடிங்கய்யோ.”—இதுஉறவுகள்நெய்பந்தம்பிடிக்கும்சடங்கு.வேதாச்சலம்அய்யாஉரக்ககுரல்கொடுத்தார்.
“ எல்லாருக்கும்சொல்றேன். புள்ளைங்க, பேரப்புள்ளைங்க, பேத்திங்க, வூட்லபொறந்தபொண்டுங்க, ஒருகால்விட்டபொண்டுங்கபங்காளிங்க, ஒருகால்வுட்டவங்க, எல்லாருக்கும்கொளுத்தியநெய்பந்தங்களைசாமிநாதன்தர்றான்பாரு. அதைபுடிச்சிக்கிட்டுசவத்தைமூணுதபாஇடவலமாகசுத்திவரணும். அப்புறம்எல்லாபந்தங்களையும்கொள்ளிச்சட்டியில்போட்டுட்டுசவத்தின்கால்மாட்டில்விழுந்துகும்பிட்டுமுடிக்கணும். தெரிஞ்சிதா?.சீக்கிரம்சீக்கிரம்.”-------எல்லாரும்அழுதபடிசுற்றிமுடித்தார்கள்.இடுகாட்டுக்குவரமுடியாதவர்களுக்காகஅங்கியேவாய்க்கரிசிபோடும்சடங்கைநடத்திமுடித்தார்கள்.அப்புறம்காரியஸ்தர்சொற்படிபிள்ளைகளேசேர்ந்துசவத்தைதூக்கிக்கொண்டுவந்துபாடையில்வைத்தார்கள். பெண்களின்அழுகைச்சத்தம்கூடியது. சிலர்கீழேவிழுந்துபுரண்டுஅழுதார்கள்.உறவுப்பெண்கள்பாடையைஇடப்பக்கமாகமாரடித்துக்கதறியபடிமூன்றுமுறைசுற்றிவந்துபின்புஒருவரையொருவர்கட்டிப்பிடித்துக்கொண்டுஒப்பாரிவைத்துஅழுதார்கள்.
ஆயிற்றுமூத்தபிள்ளைகுளித்துமுடித்துஈரவேட்டியுடன்கொள்ளிச்சட்டியைமுன்னேபிடித்துக்கொண்டுசெல்லஊர்வலம்கிளம்பியது. வழிநெடுகஒப்பாரிபாடல்கேசட்ஓடிக்கொண்டிருந்தது.தெருக்கோடிவரையிலும்ஏகாலிகள்பாதையில்துணிகளைவிரித்துக்கொண்டேசெல்ல, அதன்மீதுஊர்வலம்நகர்ந்தது. பறையின்உச்சகட்டசத்தத்தில்ஊர்அதிர்ந்தது.ஒருத்தர்ஒருமுறத்தில்அரிசிபொரியைவைத்துக்கொண்டுவழியெங்கும்இறைத்தபடியேசென்றார். பாடையில்தொங்கும்பூமாலைகளைஉறவினர்கள்வழியெங்கும்பிய்த்துபோட்டுக்கொண்டேசென்றனர். சித்தப்பனும், அவர்பிள்ளைகளும்பாடையையொட்டிநடந்தார்கள். இடையிலஒருதடவைகாரியஸ்தர்வேதபுரிஅய்யாவந்துபாடையைஒருபக்கம்தோள்கொடுத்துக்கொண்டிருந்தநடுபையனிடம்கிசுகிசுப்பாய்எதையோசொல்ல, அவன்வேண்டாவெறுப்பாய்தன்சித்தப்பனுக்குதோள்மாற்றிவிட்டுநகர்ந்தான்.
ஆயிற்றுசுடுகாடுவந்தாயிற்று. அரிச்சந்திரன்கோயில்எதிரில்பாடையைஇறக்கினார்கள். சற்றுதூரத்தில்சிதைக்காகவிறகுகள்அடுக்கப்பட்டிருந்தன. அரிச்சந்திரன்கோவிலின்முன்அரிச்சந்திரன்அகவலைவெட்டியான்சொல்லஆரம்பித்தான்.
நீரால்அடியேன்நெடுங்கால்பறவியே,தீராமணியேதிருமால்மகன்தோன்றி,உலகம்தோன்றி, ஊர்தோன்றி, ஊருக்குவடக்கேகாளிகோயில்தோன்றி, ஊருக்குமேற்கேபெருமாள்கோயில்தோன்றிஊருக்குக்கிழக்கேதிருபனைசாற்றசாம்பவன்கோயில்தோன்றிபூவுதோன்றி, புஷ்பம்தோன்றி. . . .
அடுத்துசித்தப்பன்ஒருபக்கம்கைபிடிக்க, பாடையைசிதையருகேதூக்கிச்சென்று, சிதையைமூன்றுசுற்றுசுற்றிகீழேவைத்தார்கள். படையல்போட்டுஎல்லாச்சடங்குகளையும்முடித்துதீபாராதனைகாட்டிசவத்தைசிதையில்வைத்தார்கள். தோள்மிதுபானையில்தண்ணீர்சுமந்தபடி

கொள்ளிவைக்கும்பிள்ளைமூன்றுசுற்றுசுற்றிவந்துபானையைப்போட்டுஉடைத்துவிட்டுநிற்க, வேதாச்சலம்அய்யாகுரல்கொடுத்தார்.
“வாய்க்கரிசிபோட்றவங்கள்லாம்வந்துபோடுங்கப்பா. சீக்கிரம்கீழ்க்காத்துஓட்டுது.”------எல்லாரும்வரிசையாய்வந்துவாய்க்கரிசிபோட்டுவிட்டுநகரஅடுத்ததாகசவத்தின்கால்களைபிணைத்திருந்தகட்டுகளையும், இடுப்புஅரைஞான்கயிற்றையும்அறுத்துவிட்டார்கள். இன்னும்சித்தப்பன்நினைத்துநினைத்துஅழுதுக்கொண்டிருந்தான். அப்புறம்சவத்தின்மேல்விறகுக்கட்டைகள்அடுக்கப்பட்டன. வேதாச்சலம்அய்யாகவனித்துவிட்டுசிதைஅடுக்கினவர்களைஅதட்டினார்.
“டேய்! நெஞ்சாங்கட்டையவெக்கலியா?.இன்னாடாவேலைசெய்யறீங்க?.----பூதவுடல்நெருப்பில்எரியும்போதுமுன்பக்கமாகவளைந்துக்கொள்ளும். அதைத்தடுப்பதற்காககனமானவிறகுதிம்மைஒன்றைமார்பின்மேல்வைப்பார்கள். அதைநெஞ்சாங்கட்டைஎன்பார்கள்.அடுத்துஎல்லாஉறவுக்காரங்களும்கதறமூத்தபிள்ளைசிதைக்குநெருப்புவைத்துவிட்டுதிரும்பிப்பார்க்காமல்நடக்கஆரம்பித்தான்.கூடவேதுணைக்குஅவன்மச்சான்..வந்தகும்பலும்ஆற்றில்தலைமுழுககிளம்பியது. வேதாச்சலம்அய்யாஉரக்ககுரல்கொடுத்தார்.
“யாரும்போவாதீங்கப்பா. ஒருநிமிசம்இங்கவாங்க.”----எல்லாரும்கூடினர். கொள்ளிவைத்துவிட்டுச்செல்லும்மூத்தபிள்ளையும்நின்றான்.
“ஏம்பா! மாதவா! இத்தநாமவூட்லபோயிஉக்காந்துதான்பேசணும். நான்ராத்திரிக்குசென்னைகிளம்பறேன். வரஒருவாரம்ஆயிப்புடும். அதான்இங்கியேசொல்லிட்றேன். நாளைக்குகாத்தாலஎல்லாரும்வந்துபால்வெச்சிடுங்க. அப்புறம்திதிபார்த்துதேதியகுறிச்சிவெச்சிட்டேன்.உயிர்வுட்டபதினஞ்சாம்நாளுசனிக்கிழமைநடப்பு, பதினாறாம்நாளுஞாயிற்றுக்கிழமைகருமாதி. மாதவா!இன்னாசொல்ற?.”---மூத்தவன்சற்றுநேரம்மவுனமாகநின்றான்.அப்புறம்வாயைத்திறந்தவன்தம்பிகளைபார்த்துவிட்டுதயங்கிசொன்னான்.
“ எங்கசித்தப்பாவைகேளுபா.”---சித்தப்பன்முன்னேவந்துநின்றான்.
                                         ******************************************

கணையாழி நவம்பர்2019இதழில்பிரசுரமானகதை.


நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்னம் - பேசும் புதிய சக்தி - டிசம்பர் 2019
நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்னம் (என்னப்பா...தப்புன்னா நீதானப்பா சரியாச் சொல்லணும்...? என்னை கொறை சொல்றியேப்பா...?)
      ன்னப்பா....நீதானப்பா சொன்ன...அதாம்ப்பா அனுப்பிச்சிருக்கேன்.... கோவிச்சிக்காதப்பா... டயத்துக்கு அனுப்பிட்டன்லப்பா.... சந்தோஷமா ஏத்துக்கப்பா- இப்படிச் சொல்லிக் கொண்டேதான்  இக் கட்டுரையை ஆரம்பிக்க ஆசை. அதுதான் பொருத்தமாய் இருக்கும்.  நானாக அப்படி  நினைக்கவில்லை. அதுவாகவே அப்படி அமைந்து விட்டது. ஒருவரைப் பற்றியதான தொடர்ச்சியான நினைவுகள் நம்மையும் அப்படி மாற்றி விடுகின்றன. அவர் பெயரைச் சொன்னாலே, ஏன் அவரை நினைத்தாலே முதலில் மனதில் வருவது சபாபதி திரைப்படம்தான். டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகனாக நடிக்க காளி என்.ரத்னம் அவருக்கு வேலைக்காரன்.
      காளிஎன்.ரத்னத்தை  நினைக்கையிலேயே அவரது அப்பாவித்தனமான...ஊறீம்....வெகுளித்தனமான....ஊறீம்...முட்டாள்தனமான...இப்படிச் சொல்வதுதான் சாலப் பொருத்தமாய் இருக்கும். இது அவரைத் திட்டுவதல்ல... அவரை இழிவு செய்வதல்ல...அந்தக் கதாபாத்திரம் அப்படியான ஒரு காரெக்டர் என்றே நிர்ணயித்து அதற்கு யார் பொருத்தம் என்று தேடியபோது காளி என்.ரத்னம் நினைவுக்கு வர அவரே ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து  (நடித்து என்ற சொல்லும் பொருத்தமல்ல...வாழ்ந்து என்பதே நூறு சதவிகிதம் பொருந்தும்-) படம் வந்தபோது அவரே அதில் நின்றார். முகத்தில் கொஞ்சமும் புத்தியுடையவனாகத் தெரியக் கூடாது. அடி மடையனாக ஒருவன் இருந்தால் எப்படியிருக்கும்? அதுதான் இந்தக் காரெக்டர். நாடகத்தில் பம்மல் சம்பந்தம் நடித்த அந்தக் கதாபாத்திரத்தை, தான் ஏற்று சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று காளி என்.ரத்னம் ஆசைப்பட்டார். அவர் விருப்பம் போலவே அவருக்கு இந்த வேடம் கிடைத்தது. இப்பொழுது உடனே இந்த சபாபதி படத்தை யார் போட்டுப் பார்த்தாலும், காளி என் ரத்னம்பற்றி நான் இங்கே சொல்லியிருப்பது சரிதான் என்பதை உணர முடியும். அந்த முட்டாள்தனம் யாருக்கும் வராது. உண்மைலயே ஆள் இப்படித்தானோ என்பதுபோல் அசலாய் வாழ்ந்திருப்பார். கண்ணும், வாயும், சிரிப்பும், பேச்சும்....எல்லாமே ஒன்றுக்கொன்று பொருந்தி உணர்த்தி நிற்கும்.
      ஒரு படத்தின் வெற்றிக்கு நகைச்சுவைக் காட்சிகளே தூணாய் நின்று உதவும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். கதையின் மையக்கரு, அதன் போக்கு என்பதையெல்லாமும் பின்னுக்குத் தள்ளி விட்டு நகைச்சுவை ரசம் தன்னை முன்னே நிறுத்திக் கொண்டு- நான்தான் முதல் - என்று தலையை முன்னே நீட்டிப் பார்த்தது இத் திரைப்படத்தில்..
      கதாநாயகன் பெயரும், வேலைக்காரனின் பெயரும் ஒன்று என்பதுதான் படத்தின் நகைச்சுவைக்கு ஆதாரமாய் நின்ற அஸ்திவாரம்.
      எதைச் சொன்னாலும் புரிந்து கொள்ளாத, தவறாய் வேறொன்றைப் புரிந்து கொள்கிற, அப்படிப் புரிந்து கொள்வதே முட்டாள்தனம் என்று அறியாத, முட்டாள்தனம் என்றாலே என்ன என்றே தெரியாத, செய்தது தவறு என்று உணராத, (உணருபவன் என்றால் அதற்காக வருந்த நேரிடும்-அப்படி வருந்தினால் அடுத்தாற்போல் இம்மாதிரித் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்று திருத்திக் கொள்ள நேரிடும், அதெல்லாம் தெரியாதவன்தானே மடையன்) அப்படி உணராமலேயே திரும்பத் திரும்ப அப்பாவித்தனமாய்த் தவறுகள் செய்து கொண்டிருப்பவனாய் (நீதானப்பா சொன்ன...சரியாச் சொல்லுப்பா...அப்பத்தான நான் சரியாச் செய்ய முடியும்...என்று எதிராளிக்கு அட்வைஸ் வேறு) அமைந்த ஒரு பாத்திரம் என்றால் அது சபாபதி படத்தில் காளி என்.ரத்னம் ஏற்றுக் கொண்டு நடித்த சபாபதி காரெக்டர்தான்.
      நடிக்க வந்து நாடக சபாக்களில் தலையைக் காட்டியபோது பெரும்பாலும் பலருக்கும் அமைந்தது பெண் வேஷம்தான். நடிகர்திலகமும் பாய்ஸ் கம்பெனியில் அம்மாதிரிப் பெண் வேஷமிட்டுக் கலக்கியவர்தான். அதுபோல் 12 வயதில் நாடக உலகிற்குள் நுழைந்த காளி என்.ரத்னத்திற்குக் கிடைத்ததும் பெண் வேஷம்தான். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் 27 ஆண்டுகள் நடிகராகவும், மேலாளராகவும் பணியாற்றி மிகுந்த அனுபவத்தோடுதான் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார்.  1936லேயே அப்போது பிரபலமாயிருந்த இந்த பாய்ஸ் கம்பெனி ஒரு திரைப்படமும் எடுத்திருக்கிறார்கள். படம் “பதிபக்தி” டி.ஆர்.பி. ராவ் என்பவரும் இன்னொருவரும் சேர்ந்து இயக்கியது இப்படம்.
      1897ல் கும்பகோணம் அருகிலுள்ள மலையப்பநல்லூரில் பிறந்த இவர், பரமேஸ்வரய்யர் என்பவரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றுச் சிறந்தார். கோவலன் நாடகத்தில் காளி ரோல் ஏற்று திறம்படச் செய்ததால் அதன் பின் இவர் காளி என்.ரத்னம் என்றே வழங்கலானார். கோவை டிராமா டூரில் இருந்தபோது மனம் நெருங்கி, பரஸ்பரம் பிரியம் கொண்டு சி.டி.ராஜகாந்தம் என்ற நடிகையை மணந்தார். இவர் பழைய திரைப்படங்களில் பிரபலமானவராய்த் திகழ்ந்தார். அழுத்தம் திருத்தமாய் வசனம் பேசுவதிலும், வெடுக் வெடுக்கென்று முக பாவங்களை வெளிப்படுத்துவதிலும், கணீரென்ற குரல் வளமும் கொண்டிருந்ததால்  தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைத்துக் கொண்டேயிருந்தன.  இவரும் காளி என். ரத்னமும் சேர்ந்து பிரபல காமெடி ஜோடியாக வலம் வந்தனர். அந்தக் காலத்தில் என்.எஸ்.கே. +  டி.ஏ.மதுரம் ஜோடிக்குப் பெரும் போட்டியாக அமைந்திருந்தனர். ராஜலட்சுமி என்று ஒரு மகள் உண்டு இவர்களுக்கு. பிரபல பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதனின் துணைவியார்தான் அவர்.
      காளி என்.ரத்னத்தின் சிறப்பம்சமே  நிரந்தரமாக மொட்டைத் தலையோடு நின்றதுதான். ஆனால் அந்தத் தலை எந்தப் படத்திலும் வெட்டவெளியாகத் தெரிந்ததில்லை.  நடிப்புக்கென்று விதவிதமான சிகையலங்காரம் தேவைப்படும் என அப்படியே விட்டுவிட்டார். அந்தக் காலத் திரைப்படங்களில் அவரது ஒப்பனையைச் சற்று உற்றுக் கவனித்தால், நாடகங்களில் தென்படும் அதே வகையான ஒப்பனைத் தோற்றமாய் காணப்படுவதை உணரலாம்.  அந்த மொட்டை வெளியே தெரிந்ததேயில்லை. தலைப்பா கட்டிக்கொண்டு, ஏற்றிக் கட்டிய ஒரு வேட்டி, காடா துணியில் தைத்த கையில்லாத ஒரு பனியன் போன்ற ஒரு சட்டை அல்லது ஒரு தொள தொளா சட்டை (பழம் பெரும் எழுத்தாளர் திரு. சி.சு.செல்லப்பாவின் தோற்றம் அந்த கௌரவமான இலக்கியவாதியிடம் படிந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன்-கையில்லாத காடாத் துணி பனியன் மற்றும் நீர்க்காவி ஏறிய ஒரு நாலு முழ வேட்டி-இதுதான் அவரது தோற்றம்) , ஒரு சின்னக் கைப்பிடி மேல் துண்டு இவைகள்தான் நடிகர் ரத்னத்தின் அடையாளம்.
      எந்நேரமும் வெற்றிலைக் காவி கமழும், வாயில் ஊறவைத்து சவைத்துக் கொண்டிருக்கும், அடக்க முடியாது வழிய விட்டு விடும் தாம்பூலம் தரித்த வாயோடு, அதிலிருந்து வழியும் சொற்களோடு,  அகன்ற வாயின் பெரிய பெரிய பற்களில் ஆளை அடையாளப்படுத்துவதுபோல் அமைந்திருக்கும் காவிக் கறை, அத்தோடு அவர் கொன்னிக் கொன்னி, கொஞ்சிக் கொஞ்சி அல்லது கெஞ்சிக் கெஞ்சிப் பேசும் முறை, அதில் அமைந்திருந்த இயற்கையான பாவம், அப்பாவித்தனம், அறியாமை, அத்தனையும் மீறிய அன்பும் நெருக்கமுமான மன உறவு,  இவையே அவரைத் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தி நிறுத்தியிருந்தன. முதல் பார்வையிலேயே முதல் படத்திலேயே பார்த்த ரசிகர்கள் காளி என்.ரத்னம் என்கிற பெயரை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்ட காலங்கள் அவை. மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படும்போதுதான் இம்மாதிரியெல்லாம் நிகழும் வாய்ப்புக்கள் உண்டு. அல்லாத பட்சத்தில் பத்தோடு பதினொன்றாகத்தானே இருந்தாக வேண்டும்.
      ஐம்பதுகள் வரையில் தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்து வந்த, தமிழ் சினிமா மூத்த தலைமுறை ரசிகர்களுக்கு, இன்றைய அந்த வயதான  பெரியோர்களுக்கு காளி என்.ரத்னம் என்றால் ஏதோ அவர்களது பக்கத்து வீட்டுக்காரனைப் பார்ப்பது போன்று, அவர்கள் வீட்டுச் சொந்தங்களைப் நேசிப்பது போன்றதான நெருங்கிய உணர்வோடு, கண்களில் நீர் கசிய நீண்ட பெருமூச்சோடு “ம்ம்ம்...அது ஒரு காலம்....!“ என்றே விளித்துப் பேசி பெருமை கொள்வார்கள்.
      எம்.ஜி.ஆர் இவரைக் குரு என்று சொல்லியிருக்கிறார். நடிப்புக்கா குரு என்று தகவல் அறிவோருக்கு ஒரு சந்தேகம் வந்து கொண்டேயிருக்கும். தற்காப்புக் கலையை (Martial Arts) அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் காளி என்.ரத்னம்தான். அந்தவகையில் அவர் குருவானார்.
      1941 ல் வெளிவந்த சபாபதி திரைப்படம்தான் நகைச்சுவைக் காட்சிகளின் உச்சங்களைக் கொண்டவை. அத்திரைப்படத்தின் நகைச்சுவைக்காகவே மக்கள் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். தங்கள் குடும்பக் கவலையை மறக்க, உறவுகளோடு மகிழ்ந்திருக்க, மாற்றமில்லாத பொழுதுகளை புதுப்பித்துக் கொள்ள என்று திரைப்படங்களை நாடியபோது, இவரின் படங்கள் இயல்பான ஒன்றாக, நாம் வீதிகளில் அன்றாடம் சந்திக்கும் ஒரு எளிய மனிதனின் விகல்பமற்ற சம்பாஷனை கொண்ட காட்சிப்படுத்தலாக  அமைந்திருந்தது. ஏ.வி.எம். நிறுவனம் அதற்கு முன் ஒரு திரைப்படம் எடுத்து சற்றே சரிவில் இருந்த ஒரு கால கட்டம். இப்படத்தின் வெற்றியினால் தலை நிமிர்ந்தது. பின்புதான் என்.எஸ்.கே., டி,ஏ.மதுரம் ஜோடிக்குப் போட்டி என்று காளி என்.ரத்னம்-சி.டி.ராஜகாந்தம் ஜோடியைப் பேச ஆரம்பித்தார்கள் தமிழ்த் திரை ரசிகர்கள்.
      காளி என்.ரத்னத்திற்கு அமைந்ததே அவரது அப்பாவித் தோற்றமும், அந்தத் தோற்றத்தையே நிலை நிறுத்தும் அடையாளமான பாவங்களும், அவர் ஏற்றிருக்கும் பாத்திரங்களுக்குப் பொருந்தி அமர்ந்து கொண்டன. பாகவதர் வேஷமானாலும் சரி, ஆபீஸ் பியூன் ஆனாலும் சரி, வீட்டு வேலைக்காரனானாலும் சரி...என்று எல்லாவற்றிலும் அவர்கள் இதற்கென்றே பிறந்தவர்கள் என்பதான எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய விதமாக நடிப்பில் சிறந்து விளங்கினார்கள். அதே குரல்தான், அதே சேட்டைகள்தான்...என்றாலும் வசனம் பேசும் பாங்கில் நாடக அனுபவங்கள் கைகொடுக்க அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப் போனார்கள்.
      1940 ல் வெளிவந்த உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தில் காளி என்.ரத்னத்தின் நகைச்சுவை சொல்லத்தக்கதாய் அமைந்திருந்தது. அதற்குப்பின் அடுத்தடுத்த படங்கள் அவரது வெற்றியை உயரே கொண்டு சென்றன.
      நல்ல காலம் பிறக்குது...நல்ல காலம் பிறக்குது...என்று குடுகுடுப்பையை உருட்டியவாறே அசல் குடுகுடுப்பைக்காரனாய் அந்தக் குடிசை வீட்டு வாசலில் நின்று குரல் கொடுக்கும் அந்தக் காட்சி -  இன்று நாமும் ரசிக்கத்தக்கதாகத்தானே இருக்கிறது.
      வெளியே வருகிறாள் செல்லி...இதென்ன கொள்ளை.....? - என்று அந்த வேஷத்தைப் பார்த்து கேள்வியை வீசுகிறாள்.
      அதிருக்கட்டும்...செல்லி...சௌக்கியமா?
      ஆமா....இப்பவாவது கேட்க வந்துட்டீங்களே....? - இந்த அலுப்பு அவருக்கு அதிர்வை ஏற்படுத்த ஆதரவாய்க் கையைப் பிடிக்கிறார்.அவளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்த, இருவரும் குடிசைக்குள் போகிறார்கள்.
      எங்க போயிட்டான் கதாநாயகன்...? - சூட்சுமமான கேள்வி.
      அது யாரு...?     ஒம் புருஷன்....!!
      ஓகோ....வெளிய போயிருக்காரு...அது இருக்கட்டும்...சரடு வாங்கித்தாரேன்னுட்டு, சரடு விட்டுட்டுத்தானே போயிட்டீங்க....
      க்கும்....சரடு கிரடுன்னு சொன்னே...நான் பெரிய்ய்ய முரடாயிடுவேன்...நான் வரும்பொழுதெல்லாம் நீங்க மஜாவுல இருந்தீங்க...இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்னா எனக்கு எத்தனையோ வேலை...
      வேல....பெரிய்ய்ய்ய்ய்ய வேல...!.
      அவள் தோளைத் தொட்டு...அட...நான் பகல் வேஷம் மட்டுமல்ல....ராஜாங்கத்துல உளவாளி உத்யோகம்...எத்தன பேரச் சிக்க வச்சிருக்கேன் தெரியுமா..?..-மீசையை முறுக்குகிறார்...
      என்னைய எதுலயாவது சிக்க வச்சிராதீங்க...
      நீதான் எங்கிட்ட சிக்கியிருக்கியே...உன்ன அங்க சிக்க வச்சுட்டு...நான் இங்க என்ன எண்றது? உன்ன சிக்க வைக்க மாட்டேன்...கக்க வைப்பேன்.....உற.உற்உறா....சிரிக்கிறார்.
      பிறகு குழைந்து...ம்...செல்லி...ஒரு வேல செய்றியா...?    -        என்ன...?
      உனக்கு சரடு வேணுமோ...?    -        ஆமா....கண்டிப்பா வேணும்.....
      அப்படீன்னா உன் அட்டியக் கழட்டிக் கொடு....அத அழிச்சி, கொஞ்சம் பொன்னு போட்டு, பெரிய்ய்ய்ய சரடா நெரடில்லாம செஞ்சிட்டு வர்றேன்....
      ம்.....சிரித்துக் கொண்டே திருப்தியாய் செல்லி...தாலியைக் கழட்டிக் கொடுக்கிறாள். ஜன்னல் வழியாக ஒருவன் இதைப் பார்த்து விடுகிறான்.
      கையில் வந்த அட்டியோடு....ஏவ்வ்வ்வ்வ்வ்வ்.....என்று பெரிய்ய்ய்ய்ய ஏப்பம்.
      என்ன ஏப்பம் பலமாயிருக்கு....?
      ஆமா...இது ஏப்பந்தான்.... -அட்டியைப் பார்த்துக் கொண்டே சொல்கிறார். அதிருக்கட்டும்...செல்லி நாளைக்கு...என்று சொல்லிக்கொண்டே அவள் கையை லேசாகத் தொட்டு, முத்தம் கொடுப்பதுபோல் உதட்டைக் குவிக்க, அதையும் அந்த ஆள் பார்த்து விடுகிறான். சட்டென்று அவள் சைகை செய்ய, இவர் ஜன்னல் பார்த்து சுதாரிக்க.. விலகி நின்று  குடு குடுப்பையை உருட்டி .சமாளிக்கிறார்...
      அம்மா பலிக்கவே...அம்மா பலிக்கவே...எங்கம்மா பலிக்கவே...காளி...காளி...மகமாயி....நொண்டி வீரப்பா....கருப்பண்ணசாமி ஓடிவா...எங்கருப்பண்ணசாமி ஓடி வா....காரியம் முடியும்போது ஒரு காளை வந்தது...ஒரு காளை வந்தது....அந்தக் காளையப் பார்த்துட்டு இவன் கண் கலங்கி ஐயோன்னு போறான்...ஐயோன்னு போறான்.....அந்தக் காளையை ஒழிக்க இந்தக் கன்னிதான் வேலை செய்யணும்...இந்தக் கன்னிதான் வேலை செய்யணும்...என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே உடுக்கையை உருட்டுகிறார். இந்தக் கன்னி மனம் வச்சா காரியமெல்லாம் கை கூடும்...காரியமெல்லாம் கைகூடும்....அந்தக் காளை கண்ணோட்டம் போட்டு கடுங்கோபமாப் பாக்குறான்...கடுங்கோபமாப் பாக்குறான்...அதுக்காக இந்தக் காளை பயப்படமாட்டான்...பயப்படமாட்டான்...வந்த காரியத்தை முடிச்சிட்டுத்தான் போவான்....முடிச்சிட்டுத்தான் போவான்...என்றவாறே நழுவுகிறார்.
      ஏய்...குடுகுடுப்ப....நினைச்ச காரியம் பலிக்குமாடா...? கேட்டுக்கொண்டே அந்தாள் உள்ளே வர....பலிக்குமே...பலிக்குமே....கணபத்ரகாளி, நொண்டி வீரப்பா...என் கருப்பண்ணசாமி ஓடிவா...கருப்பண்ணசாமி ஓடிவா....நெனச்ச காரியம் பலிக்க நெடுநாள் ஆகும்...நெடுநாள் ஆகும்...நாளாக ஆக நாளாக ஆக கன்னி நயம்மா வருவா...நயம்மா வருவா.... என்று தப்பிக்க முயல...அந்தாள் ஓங்கி ஒரு தள்ளுத் தள்ளுவார்...ஏய்ய்....! இந்த அலறலில் நடுங்கிப் போவார். 
என்னடா கைல...      -             குடு குடுப்பை.....
      இந்தக் கைல.....?-கேட்டுக் கொண்டே ...என்னடா மறைக்கிற....? என்று அட்டிகையைப் பார்த்துவிட்டு அதிர்ந்து...டேய்...பட்டாபி...அங்க இங்க சுத்தி என் அடி மடிலயே கைய வச்சிட்டியேடா.....என்ன தைரியண்டா உனக்கு....? என்று கேட்டுக்கொண்டே அதைப் பிடுங்கிக் கொண்டு  மொத்த ஆரம்பிப்பார்....
      வேணாம்..வேணாம்...வேணாம்...செத்துருவேன்.....அலறியடிக்க...
      இனிமே இந்தப் பக்கம்  வந்தே...ஜாக்கிரதை.....போடா...நிக்காத....நிக்காத...ஓடுறா...ஓடு...ஓடு...என்று அடித்து விரட்ட, கதவை எக்கித் தள்ளித் திறந்து ஆளை விட்டால்போதும் என்று தப்பித்து ஓடுவார்.
      இன்று இந்தக் காட்சி சாதாரணமாய்த் தோன்றினாலும், அதில் உள்ள இயல்புத் தன்மை....செயற்கைத்தனமில்லாத நடிப்பு, குடுகுடுப்பைக்காரனாய் வரும்பொழுதே தப்புச் செய்யத்தான் என்பதுபோலான  பம்மிப் பதுங்கிய வரவு, புருஷன்காரனக் கண்டதும் சட்டென்று சுதாரிக்கும் பயம், பிறகு சமாளிக்கும் வேஷம்...அடி மாறி மாறி விழ ஆளை விட்டால் போதும் என்று ஓட்டமெடுக்கும் வேகம். என்று மொத்தக் காட்சியிலும் இருக்கும் ஒரு யதார்த்தமான இயல்பான தொடர்ச்சி....நிஜ வாழ்க்கையில் காணும் காட்சிகளைப் போலவே நம்மை ரசிக்க வைக்கும்..
      ஆற்றங்கரைப் பக்கம் ரத்னம் சென்று கொண்டிருப்பார். நெற்றியில் பட்டை விபூதி பளிச்.  அவர் ஒரு பாகவதர். அன்று அமாவாசை. அமர்ந்திருக்கும் அய்யர் அவரை அழைப்பார். அடடே...வாரும் வாரும்...என்று அழைக்க...என்ன என்று இவர் போய் உட்கார...இன்னைக்கு அமாவாசை...தெரியுமோ...தர்ப்பணம் பண்ணிட்டுக் குளிச்சா புண்ணியமாக்கும் என்பார். அப்டியா...சரி...என்று தாடையைத் தடவிக்கொண்டே அவர் முன் உட்காருவார்...அப்படி அவர் உட்காருவது சவரம் செய்து கொள்ள உட்காருவதுபோல் இருக்கும். போறாதே...பக்கத்துல ஒரு பொம்மனாட்டி வேணுமே...இருந்தாத்தான் சிலாக்கியம் என்று அய்யர் சொல்ல...அப்டிங்களா...இதோ வந்துடறேன்...என்று புறப்படுவார். கொஞ்சம் தள்ளி இன்னொரு அய்யர் ஒரு தம்பதியருக்கு தர்ப்பணம் செய்து வைத்துக் கொண்டிருப்பார். மந்திரம் முடிந்ததும்...திரும்பிப் பார்க்க...ஓ...நீங்களா...வாங்க...வாங்க...என்று அழைக்க...இன்னைக்கு அமாவாசையாமே...தர்ப்பணம் பண்ணிட்டுக் குளிச்சா புண்ணியம்னு அய்யர் சொன்னார் என்று சொல்லித் தயங்குவார்...இல்ல...ஒரு பொம்பளை வேணும்னாரு அய்யர்...ஆமா...அப்படி இருந்தாத்தான கண்கண்ட பலன் கிடைக்கும் என்று அந்த அம்மாளும் சொல்ல...ஓ...அப்டியா? என்று வியந்து அதான் பக்கத்துல இவங்கள உட்கார்த்திட்டு, கொஞ்ச நேரத்துல திருப்பி அனுப்பிச்சிடுறேன்...என்று அந்தம்மா புருஷனிடம் கேட்க...ஏன்யா...இதென்ன பாத்திரமா பண்டமா...பக்கத்துல உட்கார்றதுக்கு...? சாஸ்திரத்துக்குப் பக்கத்துல உட்கார வேண்டிதானே...இப்போ சங்கீதத்துக்கு பக்கத்துல உட்காரு்ன்னா உட்கார்றதில்லையா...? என்பார். புண்ணியந்தானே...என்று அந்தாளும் தன் மனைவியை அனுப்புவார். அட, கேள்விப்பட்டதில்லையா...பொண்ணோட குளிச்சா...பாவம் மண்ணோட போகும்னுட்டு...என்று... நீ.. பாகவதரோட போய் தர்ப்பணத்த முடிச்சிட்டு வந்திடு... ..நா இதோ குளிச்சிட்டு வந்திடறேன்...என்று புறப்படுவார்.
      ரத்னம் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டுபோய் அந்த அய்யர் முன்னால் உட்கார...அவர் மந்திரத்தைச் சொல்வார்....அது புரியாமல்...இவர் சரியா சொல்லு அனுமந்தோ...என்று திருப்பிச் சொல்வார்...என்னங்காணும் அநுமந்துங்கிறீர்...என்க...வாயில நுழையலீங்க...என்பார். சரி...தனித்தனியா சொல்லுங்கோ என்று அய்யர் ஆரம்பிப்பார். மமோபாத்த...மாமாவப் பார்த்தேன்....பரமேஸ்வர தீர்த்தம்...பரங்கிக்கா நாத்தம்....எங்கானது தீர்த்தே...இங்குதான் வந்து பார்த்தேன்....ஓய்...உம்ம நாக்குல தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க...நீர் என்ன ஜாதிங்காணும்....? என்று அய்யர் கேட்க...நான் ஆண் ஜாதி...அவ பொஞ்ஜாதி...அது தெரியுதுங்காணும்...நீர் என்ன கோத்ரம்?   கோத்ரமா....நான் அவரக்கா கோத்ரம்...அவ கொத்தவரங்கா கோத்ரம்....ஓய்...நீர் தர்ப்பணம் செய்ய வந்தீரா...அல்லது சண்டை கிண்ட போட வந்தீரா....சுத்த அதிகப் பிரசங்கியா இருக்கீரே...உமக்கு தர்ப்பணம் செய்ய முடியாது...போங்காணும்...என்று விரட்டுவார்...
      தர்ப்பணம் செய்ய முடியாதுன்னா குடுத்த காசத் திருப்பிக் குடுய்யா.? ...எதுக்காகக் காசக் கொடுக்கணும்...சொன்ன மந்திரத்துக்கும் நீர் குடுத்த காசுக்கும் சரியாப் போச்சு....ஓய்...காசு வாங்காம உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன் நான்...ஏய்.தொடாமப் பேசுங்காணும்...ஏய்...காச கீழ வைங்காணும்...என்று மடியைப் பிடித்து இழுக்க..அந்தப் பெண்ணின் புருஷன்காரன் ஓடி வர.....அவர் ஏன்யா தர்ப்பணம் செய்ய மாட்டேங்கிறீர் என்று கேட்டு அந்த அய்யர்கள் ரெண்டு பேருக்கும் சண்டை வர, அதுதான் சமயம் என்று அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு கிளம்பி விடுவார் காளி என்.ரத்னம். சண்டை முற்றி அடிதடியாகிக் கட்டி உருள....இவர் போயே போய் விடுவார்...
      இந்த மாதிரிக்  காட்சிகள் நாற்பதுகளில் வந்த திரைப்படங்களில் ஒன்றிரண்டு அங்கங்கே தென்பட்டாலும் யாரும் அப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சினிமாவில் வரும் வெறும் நகைச்சுவைக் காட்சிகளே என்கிற எண்ணத்தில் நடிகர்களின் நகைச்சுவையை ரசிக்கவே செய்தார்கள். கடந்து போனார்கள். காளி என்.ரத்னத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் இம்மாதிரி சில என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் போட்டியாக அந்தக் கால சினிமாவில் அமைந்தன என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். யாரும் யார் மனதையும் கஷ்டப்படுத்தியதில்லை. ஏதுமறியாத முட்டாள் ஒன்றைப் பேசினால் எப்படியிருக்கும் என்பதற்கடையாளமாய் அமைந்த மேற்கண்ட பதிலிருக்கும் வசனங்கள் அந்தப் பாத்திரத்தின்  அறியாமையின் அடையாளங்களாகவே இருந்து அந்தக் காட்சிகளுக்கு மெருகூட்டின. பாமர மக்களின் வாய்ச் சவடால்களின் திசைகளைக் கோடிட்டுக் காட்டின.
      சபாபதி திரைப்படம்தான் காளி என்.ரத்னத்திற்கு ஆஉறா என்று பெயர் வாங்கிக் கொடுத்த படம். காரணம் படம் முழுவதும் அவரது நகைச்சுவைதான் மேலோங்கியிருந்தது. துளியும் புத்திசாலித்தனம் தெரியாத, மடையனாய்ப் பேசக் கூடிய, நடந்துகொள்ளக் கூடிய தன்மையோடு கூடிய அந்தக் கதாபாத்திரம் நாயகனுக்கும், அவருடைய வேலைக்காரனுக்கும் ஒரே பெயரைக் கொண்டதாய் அமைந்தது. ஆம், அந்தப்படத்தில். சபாபதி என்பதுதான் இருவரின் பெயரும். டி.ஆர்.ராமச்சந்திரன் சொல்வதையெல்லாம் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டு தப்பாகவே செய்து கொண்டிருப்பார் காளி என்.ரத்னம். செய்வதையும் செய்து விட்டு, அவரிடம் நீ புரியும்படியாச் சொல்லுப்பா...என்று வேறு சொல்வார். ப்ளடி ஃபூல் என்று அவர் இவரைப் பார்த்துத் திட்ட, அப்படீன்னா என்னாப்பா....? என்று இவர் அப்பாவியாய்க் கேட்க...அப்படீன்னா கெட்டிக்காரன்னு அர்த்தம் என்று சொல்லி வைப்பார். டி.ஆர்.ஆர் -உடன் இருக்கும் அவரது நண்பரையே ஒரு சமயம் ப்ளடி ஃபூல் என்று சொல்லி விடுவார். என்னடா இப்படிச் சொல்றே? என்று திடுக்கிட்டுக் கேட்க, நீதானப்பா சொன்ன...ப்ளடிஃபூல்னா கெட்டிக்காரன்னு என்று விகல்பமில்லாமல் சிரிப்பார்.
      பேட்மிட்டன் விளையாடக் கிளம்புவார். போய் அந்த பூட்ஸை எடுத்திட்டு வா...என்று சொல்ல இரண்டு பூட்ஸ்களை வெள்ளித்தட்டில் வைத்து மரியாதையாகக் கொண்டு வந்து தருவார். என்னடா செருப்ப இப்டித் தட்டுல வச்சிக் கொண்டு வர்றே...? என்று கேட்க...நீதானப்பா சொன்ன...என்க...போடா ஃபூல்...ஏதாச்சும் தின்ற வஸ்துவை தட்டுல வச்சுக் கொண்டாடான்னா....என்று திட்ட....இனிமே புரியற மாதிரிச் சொல்லுப்பா...தப்புன்னா நீதானப்பா சரியாச் சொல்லணும்...என்னைக் கொறை சொல்றியேப்பா...என்று திருத்துவார். இப்டி நம்மளையே திருத்தறானே என்று எந்த முதலாளிக்கும் கோபம் வராது. அந்த மாதிரியான ஒரு காரெக்டர்தான் அவர் சபாபதி படத்தில் ஏற்றுக் கொண்ட வேலைக்காரன் சபாபதி பாத்திரம்.
      வெளில மழை பெய்யுது...சரி...டென்னிஸ் இன்னிக்கு இல்ல...கார்ட்ஸ் விளையாடலாம்.என்று நண்பர்கள் சொல்ல, .. போய் கார்ட்ஸ் எடுத்திட்டுவா...என்று அனுப்ப... போஸ்ட் கார்டு ஒன்றைக் கொண்டு வந்து தருவார். டர்ன் தி டேபிள்....என்றால் விஷயத்தை மாற்றிப் போடு என்று பொருள்.பேச்சு வாக்கில் ராமச்சந்திரன் நண்பர்களிடம் அப்படிச் சொல்லி வைக்க, அது தனக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, சடாரென்று முன்னால் இருக்கும் டேபிளைக் கவிழ்த்துப் போட்டு விடுவார். சட்டுச் சட்டென்று எந்தத் தாமதமுமின்றி முதலாளி சொல்லும் வேலைகளைத் தான் சரியாகச் செய்வதாய் நினைத்துக் கொண்டு தப்புத் தப்பாகவே செய்து கொண்டிருப்பார். இந்தப் படம் முழுவதும் இவரது நகைச் சுவை ரசிக்கத்தக்கதாக இவருக்காகவே அமைக்கப்பட்ட காட்சிகளாய் இருக்கும்.  திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் விதமாய் அமைந்திருந்தது அது ஏ.வி.எம்.மின் மிகச் சிறந்த வெற்றிப் படமாக அமைந்து அந்த நிறுவனத்தை நிமிர்ந்து எழச் செய்தது.
      ஒருமுறை சென்னையில் ஒரு நாடகத்தை காளி என் ரத்தினம் பார்த்தார். அப்பொழுது பம்மல் சம்பந்தம் அந்த நாடகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தார். பார்த்து பரவசமடைந்த ரத்னம் தன் நடிப்பாற்றலை செழுமைப்படுத்திக் கொள்ள அமைந்த சிறந்த வாய்ப்பாக அதைக்  கருதினார். இதன் -,விளைவை 1941-ல் வந்த 'சபாபதி' திரைப்படத்தில் காளி என் ரத்தினம் நடிப்பில் நாம் இன்றும் கண்டு ரசிக்கிறோம்.இப்பொழுதும் நகைச்சுவையை விரும்புபவர்கள் ஆதி முதலான நடிகர்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டுப்  படங்களைப்  பார்த்து ஆய்வு செய்யத் தொடங்கினால் அது காளி என்.ரத்னத்திலிருந்துதான் தொடங்கியாக வேண்டும். இன்றைய இளைய தலைமுறை அவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதற்காக அவரை அறவே ஒதுக்கிவிட்டுக் கடந்து போகுதல் என்பது நகைச்சுவை என்கிற கலை தர்மத்திற்கு செய்யும் துரோகமாக அமையும்.  
     
      காளி என்.ரத்னம் நடித்த எந்தப் படமும் நகைச்சுவையில் சோடை போனதேயில்லை. சி.டி.ராஜகாந்தத்துடன் ஜோடி போட்டு வெற்றிக் கொடி நாட்டினார். தொடர்ந்து பல படங்களில் அவரது நகைச்சுவைக் காட்சிகள் கொடிகட்டிப் பறந்தன.  கூடவே ஏழுமலை போன்ற வேறு சில நகைச்சுவை நடிகர்களும் அவரோடு சேர்ந்து பங்களிப்பு செய்திருந்தாலும்  அவரது செயல்திறனே முன்னின்றது. மிகச் சிறந்த இயக்குநர்கள் இயக்கிய படங்களிலெல்லாம் அவர் நடித்துள்ளார் என்றால் அந்த இயக்குநர்களது தேர்வாக இவர் இருந்திருக்கிறார் என்பதுதான் முக்கியமாக இங்கே கவனிக்கத்தக்கதாகிறது. வால்மீகி இயக்கிய சுந்தர்ராவ் நட்கர்னி, பொன்முடி திரைப்படத்தை இயக்கிய எல்லீஸ் ஆர்.டங்கன், தேவதாசி இயக்கிய எம்.எல்.டாண்டன், போஜன், ஆதித்தன் கதை படங்களை இயக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் மற்றும் எல்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் அந்தக்கால திறமைமிகு இயக்குநர்களாகத் திகழ்ந்தவர்கள். ஜூபிடர் பிக்சர்ஸ் படமான ஸ்ரீமுருகன் திரைப்படத்திலும் ஆரவல்லி-சூரவல்லி சி.வி.ராமன் என்பவர் இயக்கிய படத்திலும் அர்த்தனாரி என்கிற பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கே.யுடன் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய படத்திலும் காளி என்.ரத்னத்தின் பங்கு முக்கியமானது. ஜூபிடர் பிக்சர்ஸ் படத்தில்தான் எம்.ஜி.ஆர். மற்றும் கொன்னப்ப பாகவதர்  ஆகிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது.
      மிகக் குறுகிய காலத்தில் நிறையப் படங்களில் நடித்து, தொடர்ச்சியாக தன் பங்களிப்பைச் செய்து, நகைச்சுவைக் காட்சிகளைத் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் மிகவும் விரும்பும் வண்ணம் இயங்கி வந்த காளி என்.ரத்னம் ஆகஸ்ட் 1950 ல் காலமானார் என்கிற செய்தியை நாம் அறியும்போது தொடர்ந்து இருந்து வந்திருந்தால் இன்னும் பல குணச்சித்திரக் கதாபாத்திரங்களையும் கூட அவர் ஏற்றுச் சிறப்புச் செய்திருக்க முடியும் என்று நமக்குத் தோன்றுகிறது.நகைச்சுவை நடிகர்கள் எந்த வேடத்தையும் ஏற்றுப் பொருந்தச் செய்யும் திறமைசாலிகளாய்த்தான் எப்போதும் வலம் வந்திருக்கிறார்கள்.   தனது 52-வது வயதில் மரணமடைந்த காளி என்.ரத்னம் கடைசியாக நடித்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் வெளிவந்த பொன்முடி.
      மூத்த தலைமுறையினரே அதிகம் கேள்விப்படாத படங்கள் இவர் நடித்தவை. நாடகங்களில் நடித்த காலங்களில், மேலாளராகப் பணியாற்றியபோது இவரது ஒருங்கிணைப்பில் அனுபவம் பெற்ற  பழம் பெரும் நடிகர்களான கே.பி.கேசவன், எம்.ஜி.ராமச்சந்திரன், பி.யு.சின்னப்பா மற்றும் எம்.ஜி.சக்ரபாணி போன்றவர்கள் பின்னாளில் ரொம்பவும் பிரபலங்களாக மாறி வெற்றிக்கொடி நாட்டினார்கள்.
      நகைச்சுவை நடிகர்கள் மொத்தத் திரைப்படத்தில் சிறு பங்களிப்பைச் செய்பவர்கள்தானே என்று எண்ணிவிட முடியாத பல்நோக்குத்  திறமைசாலிகளாய், கதை நாயகனிலும் மேம்பட்ட அனுபவமுள்ளவர்களாய், நாயகர்களே அறிந்து கூட நடிக்க அஞ்சுபவர்களாய், போட்டியாளர்களாய் பலரும் வலம் வந்த களம்  நம் தமிழ்த் திரையுலகம்...!!!
                                    ------------------------------------------------------
     
     
     

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...