28 நவம்பர் 2018

“அப்பா”வின் தியாகங்கள்

(வெள்ள நிவாரண சேவை)
வயதான பிராம்மணர்களின் பூணுலை அறுத்தும் அர்ச்சகர்களை வைதீகாளை ஏழை பிராம்மணர்களை தாக்கியும் வரும் கருஞ்சட்டை நார்த்திக நயவஞ்சக கூட்டமே போலி நடுநிலைவாதிகளே எங்கள் பிராம்மணர்குலத்தை தவறாக பேசுபவர்களுக்கு ஊடகத்தில் பேச வாய்பளித்து அவர்கள் அரசியல் விமர்சர்கள் பத்திரிக்கையாளர்கள் மதசார்பற்றவர்கள் நடுநிலைவாதிகள் என்ற பட்டம் கொடுத்து பிராம்மணர்களின் பேச்சுமொழிகளை உண்ணும் உணவு.உடுத்தும் உடை பேச்சுமொழிகள் நெற்றியில் அணியும் இடும் நாமம் பட்டை இடுதலை கேவளமாக பேசி பிழைப்பு நடத்தும் கூட்டத்தை ஊக்குவிக்கும் போலி நடுநிலை வி(பசார)யாபார ஊடகங்களே இந்த தள்ளாத நிமிர்ந்து நிற்ககூட இயலாத வயதிலும் வெள்ளத்தால் பாதிக்கபட்டு உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்காக 6000 மக்களுக்கு உணவு தயாரித்துவழங்கி பொதுமக்களின் பசியைபோக்கி தனது மனிதாபிமானத்தால் நிமிர்ந்நு நிற்கும் 75 வயது கனேஷ் என்ற இந்த பிராம்மணரின் நல்ல செயலை பாராட்ட தொலைகாட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாமல் புறகணித்தாலும் உண்மையை மக்களிடம் மறைக்கமுடியாது,.பிராம்மணர்களின் தேசமதபற்றை உயர்ந்ந உள்ளத்தை மனிதாபிமானத்தை தேச விடுதலையில் வளர்ச்சியில் மத பாதுகாப்பில் ஆன்மீக வளர்ச்சியில் மொழிவளர்ச்சியில் அந்தணர்களின் தியாகத்தை வரலாற்றை இவ்வையகம் உள்ளவரை மறைக்கமுடியாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேற்கண்ட  படத்தைப் பார்த்ததும் என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது. ஐம்பதாண்டு காலம் உழைத்த அப்பா. கரண்டி பிடிக்கும் வேலை தன் பிள்ளைகளுக்கும் வந்து விடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்த அப்பா. எங்களுக்காக காலமெல்லாம் தபதபவென்று எரியும் அடுப்பின் முன் நின்ற அப்பா. ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நமக்கும் இப்படி வாய்க்கவில்லையே என்றுகிஞ்சித்தும் நினையாமல் தினசரி அதிகாலை நாலு மணிக்கு எழுந்து வேலைக்கு ஓடிய அப்பா. மஞ்சளாறுப் பக்கம் காலைக் கடன்களைக் கழித்து விட்டு, அமைதியாகக் காத்திருக்கும் ஓடுகாலில் சந்தி பண்ணிவிட்டு நேரமாகி விட்டதோவென்று பதறி நடந்து ஹோட்டலின் முதல் ஆளாய் உள்ளே நுழைந்து வாழ்வாதாரம் தந்த அடுப்பினை வணங்கி, அதனை மூட்டி, தன் கடமையைத் துவக்கிய அப்பா...மதியம் ஒரு மணி நேர இடைவெளியில் வீட்டிற்கு வந்து வாசிப்பு ஆர்வத்தில் இரவல் வாங்கி வைத்திருக்கும் வார இதழ்களை அட்டை டூ அட்டை அலசும் அப்பா. உலகத்தின மொத்த இன்பமும் இதுதான் என்று மடியில் இருக்கும் மட்டையை விரித்து, ஒரு சிட்டிகை எடுத்து உறிஞ்சி உலகமே தன் கைக்குள் என்று இன்பம் காணும் அப்பா. அந்தச் செலவைக்கூடக் குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு ப் பாடப் புத்தகமும் நோட்டும் வாங்க அளித்த அப்பா. அந்த நாலணா பேட்டாவுக்காக முதலாளியின் கல்லா முன்பு வியர்வை வழியக் காத்துக் கிடந்த அப்பா. அடுப்பின் முன் நின்று நின்று வெந்து, தீராத இருமலைக் காலமெல்லாம் சுமந்து, எங்களைக் கரையேற்றிய அப்பா...இன்னும் எத்தனை சொல்ல....? அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்...அவர்களே கண்கண்ட தெய்வம்...இது போல் எத்தனை வெள்ள நிவாரண சேவை அப்பா செய்தது? எத்தனை இரவுகள் விழித்துக் கிடந்தது? கூலி எதுவும் வேண்டாம் என்று எப்படி ஆறுதல்பட்டது அந்த மனது? காலங்கள் மாறலாம். சரித்திரங்கள் மாறுவதில்லை....

கருத்துகள் இல்லை: