01 அக்டோபர் 2018

இ.பா.வின் “வெந்து தணிந்த காடுகள்” நாவல்



இவர் அளவுக்கு அறிவுபூர்வமான விவாதங்களை உள்ளடக்கி ஆழமாகச் சித்தரிக்கப்பட்ட நாவல் வாசிப்பு அனுபவம் வேறெவரிடமும் எனக்கு ஏற்பட்டதில்லை. இவர் தன் சிறுகதைகளில், நாவல்களில் ஓடவிடும் ஒவ்வொரு வரிகளுக்கும் நான் ரசிகன்.
ினர் பற்றியும், மத்தியதரக் குடும்பம்பற்றியுமான அலசல் பார்வையோடு அங்கதத்தை மெல்லிய இழையில் வெளிப்படுத்தி வருபவர். புனை கதைகளில் சாதனை படைத்த இவர் சிந்தனைமிக்க நாடகாசிரியருங்கூட. இவருடைய சிறுககதைகள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மேலே நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர்.
ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தீர்மானித்துக் கொண்டு குறிப்பிட்ட குணாதிசயத்தோடு அறிமுகப்படுத்தி கதை நெடுக எங்கும் எதிலும் வழுவாமல் இறுதிவரை கொண்டு சேர்க்கும் அழகும் அழுத்தமும் இவரது எழுத்தோடு நம்மைப் பிணைத்து நிறுத்தி விடுகின்றன.
இந்த நாவலில் வருகின்ற முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் பொறியில் அகப்பட்ட எலிகள். நல்லவர்களும் இல்லை. கெட்டவர்களுமில்லை.அவர்கள் அப்படித்தான் என்று ஒரு இன்றியமையாத தன்மையை நாம்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரும் மனப்போராட்ட நெருப்பில் எரிந்து வெந்து தணிந்த காடுகள்....!!!!!
திரும்பத் திரும்பப் படிப்பதில்தான் எத்தனை இன்பம்...?!

கருத்துகள் இல்லை:

  தாய் வீடு ஜூலை 2025 இதழ் சிறுகதை யூ.ட்யூபில்