26 ஜூன் 2016

ஜெயமோகனின் வலைத் தளத்தைத் தொடர்ந்து படித்து வருபவன் நான். அவருக்கு எழுதிய கீதை பற்றியதான ஒரு கடிதமும், அவரது பதிலும்

கீதை

கடிதம்1100X160_without-text

அன்புள்ளஜெயமோகன்,
வணக்கம். தங்களின் வலைப்பக்கங்களைத் தொடர்ந்து படித்து வருபவன் நான். பொது, மற்றும் இலக்கியம் சார்ந்த விஷயங்களைவிடத் தத்துவம் சார்ந்த விஷயங்கள்தான்
தங்களிடம் அதிகம் பரிமளிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை இந்தத் தேடலில் கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த அளவுக்கான ஒப்புநோக்குப் பார்வை தங்களிடம் சாத்தியமாகிறது என்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால்.
கீதையைப்பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே வருகிறீர்கள். குறிப்பாக அது ஒரு தத்துவநூல் என்பதை நிறுவுவதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதுதான் உண்மையும்கூட. ஆனால் அதை ஒரு மத நூலாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள்தான் இங்கே
அதிகம். அதை அப்படிப் புரிய வைத்திருப்பதில் ன்மீகவாதிகளுக்கு நிறையப் பங்கு உண்டு.ஆன்மீகவாதிகள் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ ஒருவகையான அரசியலுக்கு ட்பட்டுப்போகிறார்கள். ஆன்மீகம் மக்களின் ஒற்றுமைக்காகவும், ஒருமித்த சிந்தனையை வளப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்பட வேண்டும். அதுதான் சரியான ஆன்மீகம் என்று கருதுகிறேன் நான். எது மக்களின் ஒருமித்த சிந்தனையை, ஒற்றுமையை, மனித நேய சிந்தனையை, மேம்படுத்துகிறதோ அதுவே சிறந்த ஆன்மீகம் என்று எனக்குத் தோன்றுகிறது.
எவன் ஒருவன் தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறானோ அவனே சிறந்த கம்யூனிஸ்ட் என்பதைப்போல. மனித வாழ்க்கை பல்வேறுபட்ட சிக்கல்கள் உடையதாய் இருக்கிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து மீளுவதற்கு ஒருமித்த, சீரிய சிந்தனை இந்த மனிதசமுதாயத்திற்குத் தேவைப்படுகிறது. மனித மனம் இந்த ஆட்படுதல்களினின்று விடுபடுதல் அவசியமாகிறது. ஆங்கே ஆன்மீகம் ஒரு சார்பு நிலையோடு முன் வைக்கப்படும்போது, மக்கள் மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். இங்கே ஆன்மீகம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லைஎன்பதே என் நோக்கு…! போதும்!
உங்களின் அவ்வப்போதைய கீதைக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வாருங்களேன். மிகவும் பயனுள்ளதாக அமையும் எல்லோருக்கும்!!
நன்றி!
அன்புடன்,
உஷாதீபன்.

அன்புள்ள உஷா தீபன்

தங்கள் கடிதம் கண்டேன். கீதை பற்றிய என் நோக்கு அதை ஒரு முழுமையான தத்துவ நூலாக வாசிக்க வேண்டும் என்பதே. இன்னும் சொல்லப்போனால் அதை யோகமீமாம்சை என்ற– டைலடிகல் – முறைப்படி வாசிக்க வேண்டும். அதன் ஒவ்வொரு அத்தியாயத்துக்குள்ளும் உள்ள முரணியக்கத்தை கருத்தில் கொள்ளவேண்டும். அதன் பின் கீதைக்கும் பிறநூல்களுக்கும் நடுவே உள்ள முரணியக்கத்தை கருத்தில் கொண்டு வாசிக்க வேண்டும். அவ்வாசிப்பே இந்து மெய்ஞான மரபைப்பற்றிய புரிதலை அளிக்கும் என்பது ஒருபக்கம். ஒரு முக்கியமான தத்துவ நூல் நமக்களிக்கும் பயனையும் அளிக்கும். அதை நான் கற்றவகையில் இங்கே அளிக்கவில்லை, மாறாக நான் என் வாழ்க்கை சார்ந்து அதை பய்ன்படுத்திய முறையிலேயே அளிக்கிறேன். ஒரு நூலாக இதை ஆக்கும் எண்ணம் உண்டு. தொடர்ந்து நிறையவே எழுதவேண்டியிருக்கிறது.

அன்புடன்

ஜெயமோகன்

***

கருத்துகள் இல்லை: