04 அக்டோபர் 2011








மதுரை காந்தி மியூசியத்தில் டாக்டர் திரு.டி. ரவிச்சந்திரன் அவர்களால் துவக்கப்பட்டு திரு கே.பி. கங்காதரன் என்ற பயிற்சியாளரால் யோகாப் பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் காலை 6 மணி முதல் 7.15 வரையிலும், பகல் 10 மணிக்கும் பிற்பகல் 5 மணிக்கும் நாளுக்கு மூன்று முறைகளாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மனத்தையும், மனதில் எழும் எண்ணங்களையும் நன்கு கட்டுப்படுத்துவதே யோகம். இப்பயிற்சியில் ஒருவன் முழுமை பெறும்போது அவன் தனக்குரிய தூய்மையும் பிரகாசமும் பொருந்திய நிலையில் நிறுத்தப்படுகிறான். மற்ற வழிகளை அவன் பின்பற்றினால் மனநிலையில் ஏற்படும் விபரீத உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவான். இது யோக சூத்திரம்.

நாம் தினம் ஆசனங்களைச் செய்வதால் நல்ல வஜ்ஜிரம் போன்ற உடலமைப்பும் பிரகாசமான முக வடிவமும், தெளிவான குரல் வளமும் நமக்கு உண்டாகின்றன.நோயற்ற நல்லுடலும், ஒளி பொருந்திய கண்களும் கிடைக்கின்றன. நமது உடலில் ஓடும் 72000 நாடிகளும் சுத்தமடைகின்றது.

இதை மனதில் வைத்து இதைப்படிக்கும் அனைவரும் யோகாசனங்களைச் செய்ய முயல்வீர்களாக.

அக்டோபர் 2, 2011 காந்திஜி பிறந்த தினத்தில் மதுரை காந்தி மியூசியத்தில் நானும் எங்கள் யோகாசன வகுப்புத் தோழர்களும் கலந்து கொண்டு அண்ணல் காந்திஜி அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய மகி ழ்ச்சிகரமான தருணங்கள் மேலே.

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...