24 ஆகஸ்ட் 2011

எதிர்பார்ப்புகள்                    

என்
உடல்
பற்றியதான                .

பிரக்ஞை

எனக்கு

இல்லாமற்போனது

உன்னைச்

சந்தித்த
பின்னால்தான்

உடல்முழுக்க

உணர்வுகள்
முழுக்க

உன்
நினைவுகளால்

வியாபித்துக்
கிடக்கிறேன்

அவைதான்
என்னைச்

சுமந்து
அலைகின்றன

மனம் இலகுவாகி

வான் வெளியில்

பறந்து அலைகிறேன்

காற்று கூட என்னைத்

தாலாட்டத்தான் செய்கிறது

காலம் உன்னை

என்வழி

திருப்பாமலா போய்விடும்?

-------------------


 

காலைக்காட்சி

அவிழ்த்து விடப்பட்ட

கிழண்டுபோன குதிரைகள்

ஓட்டிவிடப்பட்ட

ஒன்றுக்கும் உதவா மாடுகள்

மதில்களில் ஒடுங்கிப்போய்

பால் திருடக் காத்திருக்கும்

எப்போதாவது கண்ணில் படும்

கள்ளப் பூனை

பேருந்தில் அகப்பட்டு

சாலையில் சித்திரமாய்

கண்ணில் பட்டுவிடும் நாய்

கோயில் வாசல்களிலும், வெளிகளிலும்

தவாக்க இயலாமல்

தவறாமல் காணக்கிடைக்கும்

இளைத்து நொந்த

இரவலர்கள்

இவற்றிற்கிடையே

நடைப் பயிற்சி

கோஷ்டிகானமாய்

விரிந்த சிரிப்போடு – மன

விசாலமாய் உலாத்தும்

முதியோர் என்கிற

சீனியர் சிட்டிசன்ஸ்!


 

---------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...