"நன்னூல்" பதிப்பகத்தின் பதிப்புத்தடத்தில் இன்று ஒரு சிறப்பான பேரொளி...
கடைநிலை நாவல் - தென் ஆப்பிரிக்காவின் ஸூலு மொழியில் மொழிபெயர்க்கப்படுதல்.
------------------------------------------------------------------------------------------
#எழுத்தாளர்_உஷாதீபன் எழுதிய #கடைநிலை" நாவல் தென் ஆப்பிரிக்க #Zulu மொழியில் மொழிபெயர்த்து வெளியிட ஆணை தமிழ் நாடு அரசால் வரப்பெற்றோம். இந்த நாவலை தென் ஆப்பிரிக்காவின் #Pelmo_Book_Publishers_South_Africa நிறுவனம் வெளியிடுகிறது. ஜனவரி 2025 சர்வதேச புத்தகக்கண்காட்சியில் MoU போடப்பட்டு Translation Review Committee யின் ஒப்புதலுடன் இன்று ஆணை வரப்பெற்றது.
Zulu மொழி தென் ஆபிரிக்க நாட்டில் 10 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி. தென் ஆப்பிரிக்க நாட்டின் 11 ஆட்சி மொழிகளில் Zuluவும் ஒரு ஆட்சி மொழி. தென் ஆப்பிரிக்க நாட்டில் 24% மக்களின் இரண்டாவது அதிகார மொழியாகவும் Zulu விளங்குகிறது.
ஏற்கனவே
உலகத்தின் திசையெங்கும் தமிழ் படைப்புகளை கொண்டுசெல்லும் முயற்சியில் இணைத்துக்கொண்ட நாம் ஸ்வாகிலி( தான்சானியா), மலாய் ( மலேசியா) ,க்குப்பிறகு தற்போது Zulu மொழியிலும் தடம் பதிக்கிறோம்.
நூலாசிரியர் உஷா தீபன் அவர்களுக்கும், எமது இலக்கிய முகவர் கோகிலா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் , நன்றிகளும்..
#வெல்க_தமிழ்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக