இலக்கிய வாசகர் திரு.குருமூர்த்தி சுவாமிநாதன் சந்திப்பு
--------------------------------------------------------------------------------------------
திரு.குருமூர்த்தி ஸ்வாமிநாதன்...எனது படைப்புகளுக்கு அத்யந்த ரசிகர். தீவிர வாசகர். அவர் வீட்டில் எல்லோரும் எனது கதைகளை விரும்பிப் படிப்பார்கள் என்று அறிய மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. மடிப்பாக்கம் வீட்டில் ஒரு லைப்ரரியே வைத்திருக்கிறார்.சொந்த ஊரான கும்பகோணம் வீட்டிலும் ஏராளமான புத்தகங்கள் தனி அறையில் என்று தன் வாசக பர்வ அனுபவத்தை விளக்கினார். பெருமையாயிருந்தது. எங்கோ யாரேனும் சிலரேனும் நம் படைப்பை விரும்பித் தொடர்ந்து படிக்கிறார்கள்..என்பதை அறிய மனதிற்குள் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டது...இந்த திருப்தியே போதும் என்றிருக்கிறது. அவருக்கு என் கைவசமான நூல்களை வழங்கிய இனிய பொழுது...காசு கொடுத்து வாங்கிப் படிப்பதுதான் எழுத்தாளனுக்குச் செய்யும் மரியாதை என்று பிடிவாதமாய் நின்ற மதிப்பிற்குரிய இந்த வாசக நண்பரைப் பெற்றது என் பாக்கியம்...எல்லா நலமும் பெற்று இனிதுற என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக