முன்னுரை
நான் எப்படி தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது
நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும் முயற்சியே
எனது கதைகள் என்று குறிப்பிடுகிறார் திரு.ஜெயகாந்தன் அவர்கள்.
என் முயற்சியிலான கதைகளும் இதையேதான் காட்சிப்படுத்த முனைகின்றன என்பேன்
நான். என் கதைகளில் நடமாடும் பாத்திரங்கள், நாமும் அவர்களை எங்கோ சந்தித்திருக்கிறோமோ
என்ற கேள்வியை நிச்சயம் எழுப்பும். ஒரு சிறுகதையின் தரத்தை நிர்ணயிக்க அழகியல் அம்சங்கள்
பிரதான தீர்மான சக்தி என்பது உண்மைதான். ஆனால் மனித நேயம், சமூக நோக்கு, பண்பாட்டுக்
கவலை என்ற அம்சங்களும் இன்றியமையாதவை. இவையனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
இந்த அம்சங்களை உள்ளடக்கி, வடிவ அமைதியோடு உருவாகியுள்ளவை இத்தொகுதியிலுள்ள கதைகள்.
நான் பார்க்கிற ஏழை மனிதரையெல்லாம் நேயத்தோடும், பரிவோடும், இவர் இப்படித் துயருறுகிறாரே
என்கிற கவலையோடும் நோக்குகிற என் குணபாவமே என் சிறுகதைகளின் உயிராகவும், உடம்பாகவும்
இயங்குகின்றன. மனித நேயத்துக்கு எதிரான, ஏழைகட்கு எதிரான எந்தச் சிந்தனையும் என் கதைகளில்
இல்லை என்பேன். உலுத்தாத மொழி நடையோடு என் மனதில் பதிவாகிற நான் பார்க்கிற உலகம், உண்மை மிக்க எளிய மொழி நடையில் எவ்வித ஒப்பனையுமில்லாமல்
சிறுகதைகளாக வடிவம் பெறுகின்றன.
என் கதைகளைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து
எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக்காமல், வாசகனின் புலன் முழுதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில்
கட்டுப்பட்டதாய் இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்தை இப்படைப்புகளில் காண முடியும். நன்றி....
உஷாதீபன்
எஸ்-2
- இரண்டாவது தளம், (ushaadeepan@gmail.com) ப்ளாட் எண்.171, 172-ஏ மேத்தாஸ் அக்சயம், மெஜஸ்டிக் அடுக்ககம், ராம்நகர் (தெற்கு) 12-வது பிரதான சாலை, மடிப்பாக்கம், சென்னை-600
091. (கைபேசி-94426 84188)
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக