பொய்கைக்கரைப்பட்டி : நேர்த்தியான கலை வடிவம்!
நாவல்
என்பது ஒரு மிகப் பெரிய கலை உருவம். அது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் நிகழ்வுகளையும், மக்களின்
வாழ்வியல் முறைமைகளையும், சமுதாய மாற்றங்களையும், பிரதி
பலிக்கக்கூடியதாக அமைய வேண்டும். ஒரு
நாவலைப் படைப்பது என்பதில் உள்ள சவால்கள் அநேகம். இன்றும்
கூட வெறுமே கதை சொல்வதுதான் நாவல் என்பதாகக் கருதப்படு கிறது.அதையே சுருக்கிச்
சொன்னால் அது விமர்சனமாகி முடிந்து போகிறது. ஒருகால
கட்டத்தின் நிகழ்வுகளின் கண்ணாடியாகப் பிரதிபலிக்க ஆரம்பித்து, வெறுமே
கதைசொல்லி நகர்த்திக் கொண்டே சென்று எந்தவித அதிர்வுகளும் இன்றி, பாதிப்புகளுமின்றி, சலனமில்லா
மல் வெறும் சம்பவங்களாக நகர்ந்து, ஒரு கட்டத்தில் அதுவாகவே
நொண்டி அடித்து நின்று போய் நாவல் என்கிற பெயரோடு முடிந்து போன கதைகள் நிறைய உண்டு. கதையோடு சேர்த்து நம்மையும் கூடவே வழி நெடுக அழைத்துச் செல்ல ஆசிரியர் அங்கேயே முடிவு செய்து விட்டது புலனாகிறது. சொல்லப் போகும் விஷயம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்பதாக மனத்தினில் நமக்கு உதிக்கும்போதே அதன் தப்புத் தாளங்களும், தகிடுதத் தங்களும் புகுந்து புறப்பட்டால்தானே இந்த நாவல் சிறக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பும், தவிப்பும் எழ, ‘அதைப் பற்றியெல்லாம் நீங்க ஏன் கவலைப் படுறீங்க, பேசாம என் கூட வாங்க, உங்கள எல்லா எடத்துக்கும் நானில்ல கூட்டிட்டுப் போறேன்’ என்று தைரியமாக நம்மை அழைத்துச் செல்கிறார் படைப்பாளி. அவருக்கு இருக்கும் தைரியம் படிக்கும் வாசகனுக்கும் கண்டிப்பாக இருக்குமேயானால் “இந்தச் சமுதாயக் கேடுகளுக்கு, கேள்வி கேட்கப்படாத அவலங் களுக்கு,சரியான சவுக்குய்யா இது” என்று சத்தமிட்டு ஆரவாரம் செய்யத்தான் தோன்றும். சமுத்திரக்கனி என்கிற ஒரு கையாள் கஜேந்திர குமாருக்கு புரோக்கராக அமைவதும், அவர் மூலம் அவரின் வீட்டு மனை விற்பனைத் தொழில் வெகு சீக்கிரம் பெருகுவதும், பல இடங்களில் பலரும் இப்படித்தான் பெருகிக் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக் கும் முன்பே திடுமென சமுத்திரக்கனியை முதல் அத்தியாயத்திலேயே வெட்டிச் சாய்த்திடுகை யில் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே ஒருவனைக் கொன்று போடுவதற்குத் தீர்மானித்து விட்ட ஆசிரியரை நினைத்து நமக்கே சற்று பயமாகத்தான் இருக்கிறது. இப்படியான வில்லங்கங்களெல்லாம் உள்ள ஒரு தொழிலுக்கு ஏன் மெனக்கெட வேண்டும் என்பதான ஒரு எண்ணமும் மெலிதாக நமக்குத் தலையெடுக்கிறது. ஆரம்பமே சிக்கலானாலும், ஒருவன் அசராமல் எப்படித் தன்னை மென்மேலும் காலூன்றி வளர்த்துக் கொள்கிறான் என்பதற்கு கஜேந்திரகுமார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு தொழில் நேர்த்தியான முன்னுதாரண மாகத் திகழ்கிறார்.
எடுத்துக்
கொண்ட களம், சமுதாயத்திற்குச்
சொல்லியாக வேண்டும் என்று நினைத்த முனைப்பான விஷயம், அதுபற்றி
அவர் அறிந்து சேகரித்தவை அவற்றில் தவறு நேர்ந்து விடக்கூடாது என்று கருத்தாகத்
தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சொல்ல நினைத்த, சொல்ல
வேண்டிய நிகழ்வுகளை எந்தவித செயற்கைப் பின்னணியும் இல்லாமல் யதார்த்த தளத்தில்
நிறுத்தி மக்களின் வாழ்வியலோடு பொருத்தி மிக லாவகமாக, செயல்
இயல்பாக அமைய அந்தக் கதாபாத்திரங்களோடு தானும் கூடவே நகர்ந்து வாழ்ந்து
கழித்ததுபோன்ற அனுபவப பகிர்வைத் தனக்கும் ஏற்படுத்திக் கொண்டு படிக்கின்ற வாசகர்களுக்கும்
ஏற்படுத்தி ஒரு புதிய வாழ்வனுபவத்தை நமக்குப் புகட்டுகிறார் நாவலாசிரியர். வேளாண்மையோடு
காலம் காலமாய் ஒன்றிப்போய், விவசாயமே கதி என்று
முன்னோர்கள் விட்டுப் போன கண்கூடான சொத்தான நிலங்களை அதுவே தங்கள் வாழ்வின்
ஆதாரம் என்று வைத்துக் கொண்டு பிழைத்து வரும் அப்பாவி மக்களை அவர்களோடு கூடிக்
குலவி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுறவான மனிதர்களையே காய்களாகப் பயன்படுத்திப்
பறிக்க முயல்வதும், படியவில்லை என்றால் தொடர்ந்து
முயன்று கொஞ்சங் கொஞ்சமாகக் கரைக்க முயல்வதும்,எதுவுமே
ஆகவில்லையென்றால் தான்தோன்றித்தனமாக வளர்த்துக் கொண்ட அடாவடித்தனத்தைப்
பயன்படுத்தி பயமுறுத்துவதும், உயிருக்கே உலைவைத்து விடும்
அளவுக்கான தந்திரோபாயங்களை முன்னிறுத்துவதும், நம் கையைக்
கொண்டு நம் கண்ணையே குத்தப் பார்க்கிறார்களே என்று எதற்கு வில்லங்கம் என
நினைத்து காலத்தின் கட்டாயத்தில் அமிழ்ந்துபோய் ஒதுங்கி ஓடுவதுமாக ரியல் எஸ்டேட்
என்கிற ஏகபோகத்தில் சாதாரண அப்பாவி மக்களின் வாழ்க்கை நசிந்து போவதையும், தொழில்
செய்வோரைத் தாறுமாறாக உச்சத்திற்குக் கொண்டு நிறுத்துவதையும், அந்த
எதிர்பாராத உச்சமே அவர்களுக்கு அச்சங்களை விளைவித்து நிம்மதியைக் கெடுப்பதையும், ஒரு
அளவுக்கு மேல் பணம் நிலை தடுமாறி வந்து கொட்டிக்
கிடக்கும்போது கூடவே அபாயமும் சேர்ந்துதான் வரும் என்கிற உண்மையும் கதையின் சம்பவங்களாய், படிப்படியாய்
விரிந்து ஒரு தேர்ந்த எழுத்தனுபவமுள்ள முதிர்ச்சியான நாவலாய் நம் முன்னே
படர்கிறது இந்தப் பொய்கைக்கரைப்பட்டி. மனிதர்கள்
ரொம்பவும் யதார்த்தமாக, வெகு சகஜ மனோபாவம்
கொண்டவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். இலக்கியம் என்கிற புனைவின் ஊடாக
வாழ்க்கையைப் பிரதிபலிக்க முனையும்போது நம்மையறியாமல் ஒரு இயல்பை மீறிய
தன்மையும், தவிர்க்க
முடியாத சிலதிரைகளும் விழுந்துவிடத்தான் செய்கின்றன. ஆனால் தவிர்க்க முடியாத
அவற்றோடுதான் இலக்கியத்தை நாம் நேசித்தாக வேண்டியிருக்கிறது. யதார்த்த
வாழ்க்கைக்கு இல்லாத ஒரு மேல் பூச்சை இலக்கியத்திற்குத் தந்து அதை நேசிப்பது
வாழ்க்கையை நேசிப்பதற்குச் சமமா கிறது. நல்லவைகளும், கெட்டவைகளும்
ஏராளமாக விரவிக் கிடக்கின்றன இங்கே. குணங் களும், குறைகளுமாக, உயர்வும்
தாழ்வுமாக பிரிக்க முடியாத அங்கங்களாகக் காட்சியளிக் கின்றன. அதனால்தான்
வாழ்க்கையை ஆழ அறிந்து அதனோடு நேசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது
இன்றியமையாததாகிறது. அம்மாதிரியான நேச பாவங்களை மிகப் பெரிய வீச்சோடு முனைப்பாக
முன்வைப்பதே இலக்கியம். அதை இந்தநாவல் மிகச் சரியாகவே செய் திருக்கிறது என்று
சொல்லலாம். மக்கள்
பல்வேறு தளங்களில் ஏழ்மைப்பட்டுக் கிடக்கிறார்கள். பொருள் சார்ந்த ஏழ்மை, கலாச்சாரம்
சார்ந்த ஏழ்மை, இப்படிப் பலவும் அவர்களை
வாட்டி எடுக்கின்றன. பணத்தை மையப்புள்ளியாகக் கொண்ட வாழ்வின் பொது வெளிகளில்
ஒழுக்கம் என்பது தேட வேண்டிய ஒன்றாகிக் கிடக்கிறது.பணம் என்கிற ஒரு காரணி
வாழ்க்கையின் சகலவிதமான நன்னிலை களையும் சாகடித்து
விட்டது என்பதுதான் சத்தியம். ஓங்கிக் குரலெடுத்துப் பேசும் பேச்சுக் களிலும், வீரியக்
கட்டோடு எழுதும் எழுத்துக்களிலும் தடையின்றி வெளிப்படும் மனித நேயம் யதார்த்த
வாழ்க்கையில் தேடியடையும் ஒன்றாகவும், அபூர்வமானதாகவும்தானே காணக்
கிடைக்கிறது. நாவல் என்பது ஒரு சமூகச் செயல்பாடாகப் பரிணமிக்க வேண்டும். காலத்தைத் தாண்டி நிற்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருக்கும் அது பயன்படக் கூடியதாக இருக்கும். இந்தச்சமூகத்தின் ஒருகுறிப்பிட்ட தளத்தில் பதுங்கிக் கிடக்கும் பொய்மை களைக் கட்டவிழ்த்து அம்பலப்படுத்துகிறது இந்த நாவல். மனிதர்களின் பொய்முகங்களைக் கிழித்தெறிவதோடு, ஒவ்வொரு மனிதருக்குமிடையேயான மாயத்திரைகளையும் அறுத்தெறி கிறது. மிருகங்கள் தாங்கள் வாழ்வதற்காக ஒன்றையொன்று அடித்துத் தின்று ஜீவிக்கின்றன. ஏறக்குறைய மனிதர்களும் அப்படித்தானோ என்று நினைக்க வைக்கிறது. உயர்ந்தவன் இளைத் தவனை வளைத்துப் போட முயல்கிறான். படியவில்லை என்றால் அதற்கான மறைமுக அஸ்திரங்களைப் பிரயோகிக்கிறான். அந்த அஸ்திரங்களும் பலனளிக்கவில்லை யென்றால் மேலே ஒருபடிசென்று மிரட்டி, பயமுறுத்தி அடிபணிய வைக்கத் தேவையான வித்தைகளைக் கையாள்கிறான். அதனிலும் அகப்படாதவர்களை இல்லாமல் செய்துவிடுவது என்கிற அளவுக்கான உச்சநிலை அக்கிரமங்களும் ஒருவனால் கையாளப்படுகின்றன. தனி மனிதச் செயல்பாட்டின் முரணான நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக நின்று காப்பது பணம் என்கிற மோசமான வஸ்து. அந்தக்காரணி அது வந்தவழி சரியில்லையென்றால் அதனுடைய செயல் பாடுகளும் சரியில்லாத வழிமுறைகளுக்குத்தான் ஒருவனை இட்டுச்செல்ல முடியும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இந்தநாவல் அதன் யதார்த்த வழியில் சர்வ சகஜமாகச் சொல்லிச் செல்கிறது. இன்று வெளிவரக்கூடிய நாவல்கள் தொட்டுப் பேசாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். முன்னைக்கு இப்போது எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது இன்று பேசும் நாவல்கள். யதார்த்த வெளிதனில் தமிழ்ச் சமூகத்தின் முரண்பாடுகளையும், சாதிகள் சார்ந்த முரண்பாடுகளையும், படைப்பாளிகள் நாவலில் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியான பரந்த வெளியைத் துணிச்சலோடு பேசும் நாவல்தான் பொய்கைக்கரைப்பட்டி. நாவல்
விமர்சனம் என்பது முழுக்க முழுக்க அந்தக் கதையைப் பற்றிப் பேசுவது என்பதாகக்
கொள்கிறார்கள் பலர். ஒரு நாவலை அதன் தத்துவார்த்த தளத்திலிருந்து அமைதி யாக
உள்வாங்கி அது ஏற்படுத்தும் விகசிப்பைப் பூடகமாக வெளிப்படுத்துவதும், அதன் பயன்
பாட்டை வெளிச்சமாக்குவதும்தான் ஒருநல்ல நூலுக்கு நாம்தரும் உண்மையான மரியாதை யாக
இருக்கமுடியும். அந்த நோக்கில்தான் இந்த நாவல் விமர்சனம் இந்த வடிவில் இங்கே
முன் வைக்கப்படுகிறது. ஒரு நல்ல நாவலை எழுத ஒரு படைப்பாளிக்கு உரிமை என்றால் அதற்கான
ஒரு சிறந்த, கண்ணியமான
விமர்சனத்தையும், ஒரு தேர்ந்த வாசகனால் முன்
கொணர முடியும்தானே? அப்படியான வெளிப்பாடுதான்
பரந்த மனத்தோடு முன்வைக்கப்படு கிறது. யதார்த்தம் என்கிற தளத்திலேயே விடாது இயங்கும் இந்த நாவல் முழுக்க முழுக்க நல்உருப்பெற்ற முழுமையான ஒரு கலைவடிவம் என்பது உறுதி. அனைவராலும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒரு முக்கியமான நாவல். |
--------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக