30 செப்டம்பர் 2018

படித்து முடித்தது எம்.வி.வெங்கட்ராமின் "உயிரின் யாத்திரை" நாவல். சிறிய நாவல்தான். திருமூலரின் பாடல்களில் மூழ்கி மனசு விட்டுப்போய் அதற்கேற்ப இந்த நாவலைஎழுதினாரோ என்று தோன்றுகிறது. நல்லவேளை...60 பக்கங்களிலேயே முடிந்து போகிறது. இதுக்குத்தானா...இவ்வளவுதானா என்று ஒரு அலுப்பும் தோன்றி விடுகிறது. கொஞ்சம் பக்குவப்பட்டவனுக்கு திருமூலர் பாடல்களே போதும். இந்த நாவல் என்று ஒன்று தனியே வேண்டியதில்லை...இன்னமும் சொல்லப்போனால் இந்த சமூக வாழ்க்கையே ஒருவனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்துவிடும்...ஐநூறு பக்கங்களுக்கு மேல் கற்பனை செய்தேன் என்கிறார்.. இதுவே அதிகம்....என்றுதான் எனக்குத் தோன்றுகிறது....

கருத்துகள் இல்லை: