யப்பப்பா...மனுஷன் என்னங்க இப்டி...வளைச்சு வளைச்சு எழுதறாரு..என்னா பிடி? உடும்புப் பிடி...! ரொம்ப ஆயாசமா இருக்குங்க....ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்தக் கூடவா இப்டி ஆராய்ச்சி பண்ணி, விவாதிச்சு, தத்துவார்த்தமா நிறுவி, அடேங்கப்பா.....என்னா எழுத்து...என்னா எழுத்து...? 90 பக்கம் படிச்சது, 900 பக்கம் படிச்ச அசதியக் கொடுத்திருச்சுங்க....நா அசந்துட்டனா? இல்ல படிக்கிற வீர்யம் எங்கிட்டக் குறைஞ்சு போச்சா? மாங்கு மாங்குன்னு விழுந்து விழுந்து படிச்சாலும்....இவரைப் படிச்ச திருப்தி வேற எதுலயும் வரல்லியே...!
இவர் எதை எழுதினாலும் அதன் மூலம் ஒரு சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டேயிருந்த காலம்...இன்றும் நீறுபூத்த நெருப்பாக.....!
மறுவாசிப்பு தொடர்கிறது இவரது படைப்புக்களை நோக்கி....அன்றும், இன்றும், என்றும் இவர்தான் சிங்கம்....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக