சென்னை நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் வைர விழா கடந்த 3.12.2011 சனிக்கிழமையன்று சென்னை –24, கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகிலுள்ள மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் சிறப்புற நடைபெற்றது.
அவ்விழாவில் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். எனது இரண்டு சிறுகதைப் புத்தகங்கள் என்.சி.பி.எச். நிறுவனத்திலிருந்து வெளி வந்துள்ளன.
1) வாழ்க்கை ஒரு ஜீவநதி
2) நினைவுத் தடங்கள்
இந்த இரண்டு சிறுகதைப் புத்தகங்களுமே பரிசு பெற்றவையாகும். வாழ்க்கை ஒரு ஜீவநதி சிறுகதைத் தொகுப்பு 2008 ம் ஆண்டில் திருப்பூர் தமிழ்ச் சங்கமும், அமரர் ஜீவா மற்றும் பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழாக் குழுவும் இணைந்து நடத்திய விழாவில் பரிசு பெற்றது. இப்புத்தகம் மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் இலக்கியப் பிரிவு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நினைவுத் தடங்கள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய இலக்கியப்போட்டி 2011 ல் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத் தேர்வு பெற்று பரிசினைப் பெற்றது.
என்.சி.பி.எச் – ன் வைர விழாவின் போது எனது புத்தகங்களுக்கு இந்தப் பெருமை உண்டு என்பதை இங்கே நினைவு கூற வேண்டியுள்ளது அவசியமாகிறது.
இம்மாதிரிப் பல பெருமைகளை உள்ளடக்கிய என்.சி.பி.எச் –ன் மூலம் புத்தகங்கள் வெளிவரப்பெற்ற எழுத்தாளர் பலரும் மேற்கண்ட வைர விழாவின்போது பெருமைப் படுத்தப்பட்டனர். வெளிவந்த புத்தகங்களுக்கான ராயல்டி தொகையும் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது இங்கே முக்கியச் செய்தியாகிறது.
மேற்கண்ட வைரவிழாவின்போது எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக