12 ஏப்ரல் 2026



எழுத்தாளர் சிந்துஜாபற்றி...


தன்னை சற்றும் விளம்பரப்படுத்திக் கொள்ளாத திறமையான எழுத்தாளர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர். சரளமாகக் கதை சொல்லும் கலை அவர்களின் அடையாளம். அவர்களின் தனித் தன்மையை ஒரு தரமான வாசகனால் உணர முடியும். அவர்கள் உலக சினிமாவைப்பற்றி..நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்கள்பற்றியெல்லாம் அற்புதமான..ஆழமான கட்டுரைகளை..மொழிபெயர்ப்புகளைத் தந்திருக்கிறார்கள் . யாரும் கண்டறிந்து பாராட்டவில்லையே என்றெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. படித்தவர்கள் பலர். தங்கள் திறமையை வெளிப்படுத்தும்விதமாய்..சொந்த விருப்பங்களுக்கு மதிப்பளித்து..தொடர்ந்து தங்களின் படைப்புப் பணியைச் சலியாது செய்துகொண்டேயிருக்கிறார்கள். அந்த எழுத்துத் திறமை தகுதிவாய்ந்த தளத்தில் உணரப்படத்தான் செய்கிறது. தக்க சமயத்தில் தரமான புத்தகங்களாக அச்சேறி நின்று மதிப்பாய் பவனி வருகிறது. அப்படியான ஒரு நூல்தான் இது. அந்தப் படைப்பாளி மதிப்பிற்குரிய திரு.ஸிந்துஜா அவர்கள்.நூல் வெளியீடு:- கண்மணி கிரியேடிவ் வேவ்ஸ்..தி.நகர்..செ-17 (ஃபோன்-9791071218)