01 டிசம்பர் 2024

 

                                                                                                                                            

சிறுகதை

 

மேலிருந்து கீழ் - வலமிருந்து இடம்”  தாய்வீடு -டிசம்பர் 2024


அன்புள்ள ஆசிரியருக்கு,                   


                                                                                     
                                                                                                                                                                                                                  வணக்கம். மகிழ்ச்சியான இந்தத் தமிழர் திருநாளில், இனிப்பான பொங்கலைச் சுவைத்துக் கொண்டிருக்க வேண்டிய தருவாயில், மிகவும் கசப்பான அனுபவங்களோடு, மிகுந்த மன வேதனையில், நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.                                                                                                                                                                                                                                                                                     என் மன வேதனைகளை யாரிடமேனும் கொட்டித் தீர்க்க வேண்டுமென்று நான் யோசித்தபோது, அதை உடன் தோள் கொடுத்துச் சுமக்க என் மனைவி தயாராயிருந்தாள் எனினும், இந்தச் சமூகத்திற்கு எவ்வகையிலேனும் அது போய்ச் சேர வேண்டும் என்று என் மனம் தீராத ஆற்றாமையில் வெந்து கொண்டிருந்ததை எந்த வழியில் தீர்த்துக் கொள்வது என்று மன உளைச்சலோடு நான் நிம்மதியற்று அலைந்து கொண்டிருந்தபோது, அதற்கும் வழி சொன்னவள் என் துணைவியார்தான் என்பதை நான் இங்கே பெருமையோடு சொல்லிக் கொள்வேன்.                                                                                                                                                                                                                       குடும்பம் என்கிற அருமையான அமைப்பில், இந்தப் பெண்களின் பங்கு எத்தனை பொறுப்புமிக்கதாய் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த முக்கியமான கால கட்டத்தில் என் மனைவி மூலம்தான் நான் உணர நேர்ந்தது.                                                                                                                                                                                                                                                                             

இதை எழுதுவதற்கு முந்திய பல மாதங்களில் கூட இவைபற்றியெல்லாம் ஒருவகையான கேலித்தன்மை என்னிடம் படிந்திருந்தது என்பதை நான் மனமுவந்து ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அம்மாதிரியான ஒரு விட்டேற்றியான மனப்பான்மை என்னிடம் படிவதற்கு எனது வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைந்திருந்தது என்பதையும் இங்கே நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.                                                                                                                                                                                                                                                                   இந்த இடத்தை நான் எழுதும்போது ஒரு பழைய திரைப்படப் பாடல் என் நினைவுக்குத் தவிர்க்க முடியாமல் வருகிறது.                                                                                                                                                                                                                                                                கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டிமானே                                                           வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி...!                                                                                                                                                                                                                                                                           பத்திரிகை, தொலைக்காட்சி என்று ஊடகங்கள் எத்தனையோ வகைகளில் மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளைக் கொண்டு செல்கிறதெனினும், மனித வாழ்க்கையின் உள்ளீடுகளைப் பிரதிபலிக்கும் வகையில், வாழ்க்கையின் அடி நாதமான, ஆதார ஸ்ருதியான விழுமியங்களைப் போற்றுவனவாக அவை அமைவதில்லை என்பதை ஆத்மார்த்தமாக நான் உணர முற்பட்டபோதுதான், என் மன உணர்வுகளை யாரிடமேனும் கொட்டித்தீர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்தேன்.                                                                                                                                                                                                                          இந்த விழுமியங்கள் பற்றியதான பிரக்ஞை எனக்கே இதுநாள் வரை இல்லாமல்தான் இருந்தது என்பதை வெட்கமின்றி ஒப்புக் கொள்கிறேன். அவையெல்லாம் வெறும் உபயோகமற்ற பழங்கதை என்றும், காலத்துக்கும் மாறாத புலம்பல்கள் என்றும்,                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 கால விரயத்தை உண்டு பண்ணுபவை என்றும், மனிதர்களின் சுதந்திரத்தைப் பறிப்பவை என்றும், அவற்றினால் எள்ளளவும் பயனில்லை என்றும்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவை வாழ்க்கையின் வெவ்வேறு படிமங்களைப் பொறுப்புடன் எதிர்கொள்வதற்கும், மன தைரியத்துடன் கடந்து செல்வதற்கும், தன்னம்பிக்கையோடு தளராது,  தன் முனைப்போடு செயல்படுவதற்கும், கைகோர்த்துக்கொண்டு நம்மோடு வாழ்நாள் பூராவும் கூட வருபவை என்பதைப் பின்னால்தான் உணர நேர்ந்தது. இன்றும் கூட நான் இந்நிலையை எட்டாவிட்டால் அதை நினைத்து உருகுவேனா என்பதைச் சொல்லமுடியாதுதான். எட்டுவது என்பது உயரங்களைத் தொடுவது மட்டும்தான் என்று கற்பனை செய்து கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கீழே விழுவதும் கூடத்தான் இல்லையா?  ஆனால் ஒன்று எனது இன்றைய நிலையில் எனக்கு உறுதுணையாக நிற்பவை அவைதான். என் தன்னம்பிக்கையைத் தளராது பிடித்து நிறுத்தியிருப்பவை அவைதான்.                                                                                                                                                                                                     மிக மிகச் சாதாரண விஷயங்கள்தான். கடைப்பிடிக்க முடியாது என்று எதுவுமேயில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                             நேரம் காலத்தை ஒழுங்கு செய்து கொள். அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயல்படு...எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கைக் கட்டாயமாக, பிடிவாதமாகக் கடைப் பிடி...”                                                                                                                                                                                                                                                                                இப்படியெல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்ட சிறு சிறு காரியங்களைக் கூட நான் அலட்சியம் செய்ததால், அவை நான் கற்கும் கல்விக்கு முற்றிலும் சம்பந்தமில்லாதவை என்பதாகத் தவறுதலாக உணர்ந்து கொண்டு ஒதுக்கியதால், அந்த அடிப்படையான ஒழுக்க சீலங்களை நான் கற்க மறுத்ததன் விளைவினைப் பின்னால் அனுபவித்தேன். வாழ்வின் உயரத்தில் எவையெல்லாம் என்  துணை நின்று உதவி புரியுமோ, என்னை முன்னெடுத்துச் செல்லுமோ, அவை எனக்கு உதவாமல் போய் விட்டன என்பதுதான் உண்மை. வாழ்ந்து முடித்த, அனுபவத்தின் உச்சத்தில் இருந்த என் தந்தையின் வழிகாட்டுதல்களை, அதன் அடிப்படையான மெய்ம்மைகளை நான் படிப்படியாகத்தான் உணர்ந்தேன். பலருக்கும் பின்னால் இருந்த என் திறமைகள், என் உழைப்பு, அதன் மேன்மை, இவையெல்லாமும் மேற்சொன்ன அடிப்படை ஒழுங்குகளை நான் சீராகக் கடைப்பிடிக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்குள் தன்னம்பிக்கை தளிர்விட்டு வளர்ச்சி பெறுவதும், ஊக்கமுடன் செயல்படுவதும், உத்வேகம் பெற்றதும் ஆன நடவடிக்கைகள்  என்று நான் சொல்வேன்.                                                                                                                                                                                                                                                                                                                                               ஆனால் அப்படியான வெற்றிமுகத்தை நோக்கிய என் பயணத்தின் போது இப்படியானதொரு திடீர் வீழ்ச்சி ஏற்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. பள்ளிப் பருவ காலத்திலேயே இந்த முறைமைகளையெல்லாம் நான் பின்பற்றியிருப்பேனாகில், ஒரு வேளை இன்றைய என் செயல்பாடு எல்லோரையும் பின் தள்ளிக்கொண்டு ரொம்பவும்  முன்னே நிற்பதாக அமைந்திருக்கக்கூடும். என் திறமைகளைப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தக் கூடிய ஒரு முழுமையான,  தவிர்க்க முடியாத நபராக நான் இருந்திருப்பேனோ என்று இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன்.   அம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் எனக்கு இன்றைய பின்னடைவு  ஏற்பட்டிருக்காதோ என்று கூட எண்ணத்  தோன்றுகிறது.                                                                                                                                                                                                    எதையோ சொல்ல வந்து என் சொந்தக் குமுறல்களையெல்லாம் சற்று அதிகமாகவே கொட்டித் தீர்த்து விட்டேன் என்று நினைக்கிறேன்.  அவையும் சொல்லப்பட வேண்டியவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காகத்தானே இந்தக் கடிதமே துவக்கப்பட்டது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   மனித வாழ்க்கை எந்த அஸ்திவாரத்தில் கட்டமைக்கப்படுகிறது என்கிற ரீதியில் நாம் சிந்திக்க முற்பட்டோமானால், எல்லாவிதமான நற்பண்புகளையும், மதிப்புமிக்க விழுமியங்களையும், பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே நிற்பது பணம்தான்.                                                                                                                                                                                                                                                                              பணம் என்பது வாழ்க்கையின் ஒரு காரணி. அதுவே வாழ்க்கையல்ல என்கிற நேர்மை, ஒழுக்கத்தின்பாற்பட்ட தத்துவார்த்தங்களெல்லாம் இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டவையாய் இருக்கின்றன. அவையெல்லாம் வெறும் பிதற்றல்கள் என்பதுதான் சரி என்ற நிஜம்தான் இன்று முன்னே நின்று கோலோச்சுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சுவாசிப்பதற்குக் காற்று, குடிப்பதற்குத் தண்ணீர், அதுபோல் வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு உபயோகப்படுவது பணம் என்பதாகக் கொள்ள ஒருவரும் தயாரில்லை என்பதுதான் இன்றுள்ள சத்தியமான உண்மை. பணத்தை முன் வைத்து அந்தப் புள்ளியிலிருந்துதான் கிளைகள் பிரிகின்றன.                                                                                                                                                                                                                                                                             இந்த எல்லாவற்றிற்கும் ஆதாரமான பணம் என்கிற காரணி, அறிவியல் தொழில்நுட்பம் தலை தூக்கி நிற்கிற இந்தக் காலகட்டத்தில் எத்தனை மதிப்புமிக்கதாய் நம் இளைஞர்களையும், இந்த சமுதாயத்தையும் ஆட் கொண்டிருக்கிறது?            ஆட்டிப் படைக்கிறது?                                                                                                                                                                                                                                                                      பணம் ஒன்றுதான் வாழ்க்கையின் எல்லாவிதமான சந்தோஷங்களையும் அளிக்கவல்லது என்று நடப்பு உலகின் எல்லா இளைஞர்களையும்  போலத்தான் நானும் இயங்கிக் கொண்டிருந்தேன். வாழ்க்கை சந்தோஷமிக்கதுதான், அதில் எள்ளளவும் சந்தேகமில்லை, அதை இயன்றவரை அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும் என்கிற நோக்கில்தான் எனது குடும்ப வாழ்க்கையும் நேற்றுவரை பயணித்துக் கொண்டிருந்தது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                          ஆனால் இப்படியொரு திடீர் வீழ்ச்சி என் வாழ்க்கையில் ஏற்படும் என்று கனவிலும் நான் கருதவில்லை. எந்த உயர்வினைப் பார்த்து என் பெற்றோர் மகிழ்ச்சியிலும், நிறைவிலும் திளைத்தார்களோ, எந்த மேன்மையைக் கண்டு  என் உற்றாரும் மற்றோரும் மனதுக்குள் பொறாமைப் கொண்டார்களோ, எந்த வசதி வாய்ப்புக்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோ, எந்த ஆதாரம் எனது அன்றாட நிகழ்வுகளை சந்தோஷ மயமாக்கியதோ, எந்தக் தேவை தன்னை எப்படிப் பயன்படுத்திக் கொண்டாலும் குறையாத அட்சய பாத்திரமாக நின்று என்னை யோசிக்க விடாமல் பண்ணியதோ, எந்த ஆதாரப் புள்ளி என்னை உற்சாகமாகவும், ஊக்கமாகவும் இயக்கியதோ, அதுவே இன்று என் காலடியில் படுத்து, தன் படத்தைச் சுருக்கிக் கொண்டிருக்கிறதை நினைக்கிறபோது, எனக்கு நானே ஆறுதல் சொல்ல முடியாதவனாக என்னை நானே தேற்றிக் கொள்ள இயலாதவனாக நின்று கொண்டிருக்கிறேன்.                                                                                                                                                                                                            பணத்தை முன்வைத்து எங்கெல்லாம் காரியங்கள் நிகழ்த்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் எல்லா போற்றுதல்களும் தன் மதிப்பிழந்து நிற்கும் என்பதற்கு எனது இன்றைய நிலையே சாட்சி.                                                                                                                                                                                                                          எனது திறமைகளின் அடிப்படையில்தான் இவையெல்லாம் மதிப்புப் பெற்றன என்ற இறுமாப்பில் இருந்தேன் நான். அந்த வீரியத்தில்;தான் இத்தனை நாட்கள், இத்தனை வருடங்கள் பணியாற்றினேன். எந்த நிறுவனம் எனது எல்லாத் திறமைகளுக்கும் அடிப்படையாக இருந்ததோ, எந்த நிர்வாகம் எனது திறமைகளனைத்தையும் வெளிக் கொணர உற்சாகப்படுத்தியதோ, எந்த ஆதாரம் எனது வாழ்க்கையின் சுய நிர்ணயத் தடத்தை உறுதிப்படுத்தியதோ, எதை முழு மனதோடு கொடுத்தோமானால், எதில் நம்மை முழுமையாக அர்ப்பணித்தோமானால் மேலே மேலே செல்ல முடியும் என்று                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    எனக்கு நானே நிர்ணயித்துக்கொண்டு என்னை நானே முழுமையாக அர்ப்பணித்தேனோ, அந்த இடம் எனக்கில்லை என்றபோது நான் ஆடிப் போய் விட்டேன். இதை பகிரங்கமாக இங்கே வெளியிட்டுக் கொள்வதில் எனக்குத் துளியும் வெட்கமில்லை. இதை உங்களிடம் சொல்வதுதான்  பொருத்தம் என்றுதானே எழுதத் துணிந்தேன்.                                                                                                                                                                                                                                                                                                          எனது பணியில் நான் நேரம் பார்த்ததில்லை. காலம் கணித்ததில்லை. என் உடல் சோர்வு, மனச் சோர்வு, சொந்தச் சூழல், இப்படி எதையுமே பொருட்படுத்தியதில்லையே!                                                                                                                            இது என் பணி. எனக்கான பணி. என் வாழ்வாதாரத்திற்காக, அதன் சந்தோஷத்திற்காக, அதன் மேன்மைக்காக, எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய பெரும் சொத்து. இதை நான் உண்மையாக, நேர்மையாக அணுக வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என்னைக் கொடுக்க வேண்டும். என்னை முழுமையாக இதன் முன்னேற்றத்திற்காக, வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். உழைப்பு, உழைப்பு. உழைப்பு அது ஒன்றுதான் என் மனதில் படிந்திருந்தது.                                                                                                                                                 ஆனால் இன்றோ எல்லாம் பொய்யானது. எல்லாமும் கைவிட்டுப் போனது. எதுவும் மதிக்கப்படவில்லை. எதுவும் பொருட்படுத்தப்படவில்லை. எதுவும் நினைக்கப்படவில்லை.                                                                                                            உறல்லோ...” என்று எது துள்ளலோடு கை கொடுத்ததோ அதுவே கையைப் பட்டென்று உதறிக் கொண்டது. தோளில் விழுந்த கைகள் தானே விலகிக்கொண்டன. பார்த்து, சிரித்து, பழகி, கை கொடுத்து மகிழ்ந்த நண்பர்கள் இன்று பார்க்காதது போல் விலகிப் போகிறார்கள். உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் அவர்களின் பார்வை கவனிக்காததுபோல் கடந்து செல்கிறது. யார் யாருக்கெல்லாம் நான் வழிகாட்டியாய் இருந்தேனோ, எவர் எவரெல்லாம் என் ஆலோசனைகளை அவ்வப்போது பெற்றார்களோ, அவர்களெல்லாம் என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன் பணியில் கவனமாகி விட்டார்கள்.மென் பொருள் இளைஞர்கள் மென்மையற்றுப் போனார்கள். மேன்மையற்றும் பிறழ்ந்தார்கள்.  பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே, இதைபார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே...என்று ஒரு பாடலை என் தந்தை அடிக்கடி வீட்டில் பாடிக் கொண்டிருப்பார். அப்பொழுதெல்லாம் அதை அழுகுணிப் பாட்டு என்று நினைத்தவன் நான். அதற்கான முழு அர்த்தம் சமீபத்தில்தான் எனக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று சொல்ல வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                              இன்னிக்கு ஆபீஸ் போறேன்...திரும்பி வரும்போது என்னமா வருவேன்னு சொல்ல முடியாது...” - இப்படித்தான் சொல்லிவிட்டு என் மனைவியிடம் விடை பெற்றுக் கொண்டேன் நான்.                                                                                                                                                                                                                                                      எந்த அதிர்ச்சியை என் மனையாளுக்குக் கொடுத்துவிட்டு நான் வீட்டை விட்டுக் கிளம்பினேனோ, அதே அதிர்ச்சி என் அலுவலகத்தின் வாசலிலேயே எனக்காகக் காத்திருந்தது. அந்தச் செய்தியே அதிர்ச்சிதான். அப்படி நிகழலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் நானே என்னை இயக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது எனக்கு அறிவிக்கப்பட்ட விதம், அதன் மேன்மை, அப்பப்பா...! என்னைச் சுக்கு நூறாக நொறுக்கிப் போட்டுவிட்டதய்யா!!                                                                                                                                                                                                                                                                                                                               தினமும் உள்ளே நுழைகையில் கால்களை அட்டென்ஷனில் வைத்து சல்யூட் செய்யும் அந்த செக்யூரிட்டி சொன்னார்:                                                                                                                                                                                                                                                                              சார், நீங்க கொஞ்சம் காரிடார்ல வெயிட் பண்ணுவீங்களாம்...”                                                                                                                                                                                                               எதுக்கு...?”                                                                                                                                                                                                                                                                                                                              தெரியாது சார்...இப்டி இருங்க...”                                                                                                                                                                                                                                                                                         அதற்கு மேல் எந்த உரிமையோடு நான் உள்ளே அடியெடுத்து வைப்பேன்?                                                                                                                                                                                                                                             

நான் ஓடியாடித் திரிந்த அந்த நிறுவனம், அந்தக் கணத்திலேயே எனக்கு இல்லாமல் போனதுதான் பெரிய சோகம். என்னைக் கடந்து செல்லும் என் நண்பர்கள் ஒரு உறலோ கூடச் சொல்லாமல், அதற்கான அவசியமில்லை என்பதுபோல், பார்வையில் படாதவனாகச்  சென்று கொண்டிருந்தார்கள். எந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் நான் உழைத்தேனோ, மற்ற எவராலும் நிகர் செய்ய முடியாத உழைப்பைக் கொட்டினேனோ, அந்த நிறுவனம் ஒரு நிமிடத்தில் என்னைத் தூக்கிக் கடாசி  விட்டது மூலையில். மிகக்  கேவலமான முறையில் வாசலிலேயே நிறுத்தி விட்டது                                                                                                                                                                                                                                                       எந்தவொரு முன்னறிவிப்புமில்லாமல். எந்தவொரு சைகையுமில்லாமல். எந்தவொரு பண்பாடுமில்லாமல். ஒரு தொழிலாளிக்கான எந்தவொரு மரியாதையுமில்லாமல்.                                                                                                                                                                                                                                               என் உழைப்பு நினைக்கப்படவில்லை, மதிக்கப்படவில்லை. என் செயல்களுக்கான அங்கீகாரம், என் திறமைகளுக்கான ஒப்புதல், என் தன் முனைப்பிற்கான பீடம் எல்லாமும் அடித்து நொறுக்கப்பட்டன. எல்லாமும் தராசில் நிறுத்து மூலையில் போடப்பட்ட பழைய பேப்பர்க் கட்டுகளாயின.         எனக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய கூலி கூட ஏமாற்றப்பட்டது.                                                                                                                                                                                          அக்ரீமென்ட்ல சைன் பண்ணியிருக்கீங்களே, கவனிச்சதில்லையா...? ஒன் தேர்ட் இஸ் அலவ்ட்...தட்ஸ் ஆல்...”                                                                                                                                                                                                                                                                                      எப்பொழுது என்னை அவர்கள் வேண்டாம் என்றார்களோ, எப்பொழுது என்னை உதற முற்பட்டார்களோ, பிறகு எனக்கென்ன வந்தது? எல்லாமும் அறிவேன் நான்...அனைத்தும் உணர்ந்துதான் இந்த நிறுவனத்திற்குள் அடியெடுத்து வைத்தேன் என்பதுபோல் எனது உரிமைக்காகக் போராடினேன். எனது பக்க நியாயங்களை முன் எடுத்து வைத்தேன். அதில் அவர்கள் தோற்றதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வாங்கிக் கொண்டுதான் நான் என்னை விடுவித்துக் கொண்டேன்.                                                                                                                                                                                                                                                                                                                  அங்கே எனது போராட்டம் ஒரு மாபெரும் சக்தியாக மிளிர்ந்தது. எனது உரிமைகள் பறிக்கப்பட்டபோது எனக்குள் கிளர்ந்தெழுந்த கோபம், அந்தத் தார்மீக நெறி அவர்களைச் சுட்டிருக்க வேண்டும். அவர்களால் எதுவும் பேச முடியாமல் போயிற்று. எதுவும் செய்ய இயலாமல் நிலையற்றுப் போனார்கள் அவர்கள்.                                                                                                                                                                          இந்த நேரத்தில்தான், இந்த இடத்தில்தான், நான் அதை நினைத்துக் கொண்டேன். இந்த நியாயமான உரிமைகளுக்கென்று ஒரு அமைப்பு இருந்திருக்குமேயானால் எனக்கு, என்னைப் போன்ற பல்லாயிரம் பேருக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? என்று சிந்திக்க முற்படுகிறேன் நான். அதை ஏன் ஏற்படுத்த முடியாது? ஏன் ஏற்படுத்தக் கூடாது? என்ற  கேள்விகள் என் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.                                                                                                                                                                                                                                            தனி மனிதனாகப் போராடி, எனக்கான ஏமாற்றுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்ட நான், ஒரு அமைப்பாக இருந்து செயல்பட்டிருப்பேனேயானால்                                                                                                                                                                                                                                                                             

எத்தனை பேருக்கு என்னால் இயன்றதைச் செய்திருக்க முடியும்? எத்தனை பேர் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்? எத்தனை பேருடைய நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும்?                                                                                                                                                                                                                                                                         எனது சிந்தனைகள் நியாயமானவைதான் என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். இவற்றை ஏனோ உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது எனக்கு. இந்தச் சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றியிருக்காது என்று அல்ல. ஒத்த சிந்தனைகளோடு உள்ளவர்களோடுதான் கலந்து கை கோர்க்க முடியும் என்ற நேச உணர்வோடு, மனித நேயச் சிந்தனையோடு தோன்றிய கருத்து இது.                                                                                                                                                                                                                                                                எனது இந்தக் குமுறல்களைத் தயவுசெய்து உங்கள் இதழில் வெளியிட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும். இது சத்தியம்.                                                                                                                                                                                                                                                                                          கடைசியாக ஒன்று. இன்றைய இறக்க நிலையை நான் அடைந்த இந்த வேளையில்தான் எனக்கே இந்தச் சிந்தனை வந்திருக்கிறது என்பதை வெட்கமின்றி இங்கே உங்கள் முன் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக மனமார வருந்தவும் செய்கிறேன். தொட்ட பின் பாம்பு என்றும், சுட்டபின் நெருப்பு என்றும், பட்டபின் அறிவதே என் பழக்கமென்றானபின்பு... என்ற கவியரசரின் பாடல் வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன. நன்றி!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      அன்புடன்,                                                                                                                                                           வேணு கார்த்திக்.                                                                                                                                        முகவரி அற்றவன்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 \

29 நவம்பர் 2024

 “கடைநிலை” -  நாவல் - 2024  டிசம்பர் சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு  அட்டை இறுதி செய்யப்பட்டது  - முன் பக்கம் மற்றும் பின் பக்க அட்டை.



26 நவம்பர் 2024


கடைநிலை  நாவல்  சென்னை-2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரையிலான புத்தகக் கண்காட்சி வெளியீடு




 பின் அட்டைக் குறிப்பு -     கடைநிலை நாவல்

 



ங்கெல்லாம் தன் சுய காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் மனிதர்கள் தவிக்கிறார்களோ ஆதரவற்று நிற்கிறார்களோ அவர்களெல்லோருமே கடைநிலையில், கதியற்று உள்ளவர்கள்தான் என்றே கொள்ளலாம். அது வீடென்றாலும், பணியிடங்கள் என்றாலும், பொதுவெளி என்றாலும் நிலை ஒன்றுதான். அவர்களை அடையாளம் கண்டு ஆதரவளிப்போர் குறைவே. சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான். சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்…!

இன்னல்படும் அந்த மனிதர்க்கு ரட்சகன் என்றொருவன் தன்னலமற்று பொது நன்மைக்காக நிறைந்திருப்பான் என்கிற நியதியை வலியுறுத்தும் அரிய படைப்பாக இந்த நாவல் பயணிக்கிறது.

 

 

 

13 நவம்பர் 2024

 

சிறுகதை               “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை





            வித்யாபதி அந்தத் தெருவழியே நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் அவனைத் தற்செயலாகப்  பார்த்தார். தலை குனிந்தமேனிக்கே நடப்பதுதான் அவரது இயல்பு. அந்த இடத்தில் அவர் தலை எதேச்சையாக நிமிர்ந்தது எதிரே வந்த ஒரு நாயிடமிருந்து விலக வேண்டும் என்றே. வாயில் எச்சில் வழிய வழிய இழைப்போடு வந்த அது வெறி நாயோ என்கிற சந்தேகம் சட்டென்று எழ, ஒரு பயம் இவரைப் பற்றிக் கொண்டது…அந்தக் கணமே அவனும் கண்ணில் பட கவனம் சிதறித்தான் போனது. அந்த இடத்தில் அவன் குறுக்கே வந்தது ஒருவகையில் நாயிடமிருந்து அவர் விலகிச் செல்ல ஏதுவாயிருந்தது.

            அவனும் இவரை ஒரு முறை பார்க்கத்தான் செய்தான். அவனுக்கு இவரைத் தெரியும். இவருக்கும் அவனைத் தெரியும். ஆனால் ஒரு முறை கூட ஒரு வார்த்தை பேசிக் கொண்டதில்லை. பேசுவதென்ன…ஒரு சிறு புன்னகை கூடச் செய்து கொண்டதில்லை. அவனிடம் என்ன புன்னகை வேண்டிக்கிடக்கிறது?  அதற்கான அவசியமுமில்லை. அது அவருக்குப் பிடிக்கவும் இல்லை.  பிடித்திருந்தால்தான் முன்பே நட்பு பாராட்டியிருப்பாரே? ஆனால் அவனைக் கண்ட அந்தக் கணம் அவர் முகம் கொஞ்சம் சுருங்கத்தான் செய்தது. அது தன்னியக்கமாக நிகழ்ந்த ஒன்று. தவிர்க்க முடியாதது. ஆழ்மன அவச வெளிப்பாடு.

            அதே சமயம் அவருக்கு இன்னொன்றும் தோன்றியது. இவன் எப்படி இங்கே வீட்டைப் பிடித்தான்? வாடகைக்கு விட்டவர்களுக்கு இவன் முன் கதை தெரியாதோ? அடுத்தடுத்த தெருவில் இருந்துமா தகவல் தெரியாமல் போயிற்று? -இரண்டு மூன்று கேள்விகள் அவர் மனதில் சட்டுச் சட்டென்று ஓடின. அதற்குள் அங்கே வீடு பிடித்துக் குடியேறி விட்டானே? நடந்த நிகழ்வுக்கு அந்தப் பகுதியையே விட்டல்லவா அவன் ஓடியிருக்க வேண்டும்? என்ன தைரியம்?

            தகவல் எப்படித் தெரியும்? அடுத்தடுத்த வீடுகளில் இருப்பவர்களுக்கே தெரிவதில்லையே…அப்புறம் எப்படி அடுத்த தெருவைப் பற்றி நினைப்பது?பாவம் எந்த அப்பாவிகளோ…!

            இது எதற்கு வேண்டாத சிந்தனை? எவன் எப்படிப் போனாலென்ன… நமக்கென்ன வந்தது?  -மனசு உதறியது.

            வன் விலகி எப்பொழுதும்போல் நடந்து கொண்டிருந்தான். அதாவது அவர் முன்பு அவனை எப்படிப் பார்த்துப் பழகியிருந்தாரோ அதே பாணியில் தொடர்ந்தது அவன் நடை. எந்தப் பதட்டமுமோ, பரபரப்போ அவனிடம் இல்லை.

கல்லுளி மங்கன் என்று இதற்குப் பெயர் சொல்லலாமா?  தோன்றியது வித்யாபதிக்கு. அவன் இயல்பே அப்படித்தானா அல்லது அப்படி இருப்பதற்குத் தன்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறானா? அநியாய அமைதியாக இருப்பது கூட ஒருவகை அதிகாரத்தின் அடையாளமோ? அல்லது நடத்தையை மறைப்பதற்கான வேஷமா? அல்லது எதிராளியைப் பயப்படுத்தும் தந்திரமா?

அந்த எதிர் வீட்டிலும் இப்படித்தான் மாடிப்படி இறங்கி வந்து வெளியேறுவான் அவன். பெயரைக் கூட இன்றுவரை கேட்டுக் கொண்டதில்லை. அதாவது தெரிந்து கொள்ளவில்லை. ஆர்வமுமில்லை. உங்க பேரென்ன? என்று அவனிடமா எதிரே சென்று கேட்க முடியும்? மாடியை அவனுக்கு வாடகைக்கு விட்ட அந்தக் கீழ் வீட்டுக் குடும்பத்திற்குச்  சொல்லியிருந்தால் சரி. அல்லது அகஸ்மாத்தாக அவன் பெயர் இவர் காதில் விழுந்திருந்தால் சரி.   எதுவுமில்லையே? ஒருவேளை அந்த வீட்டுச் சொந்தக்காரர்களுக்கே அவன் பெயர் தெரியுமோ என்னவோ? இப்படி இரும்புத் துண்டை முழுங்கியவன் போல் இறுக்கமாய் நின்றால்? பாவம்தான் அவர்கள். பயந்து பயந்தல்லவா இருந்தார்கள். நல்லவர்களால் பயப்பட மட்டும்தான் முடியும் போலிருக்கிறது. அந்த பயத்தினால் விழையும் நஷ்டங்களையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். சகித்து முழுங்குகிறார்கள்.

அடிக்கடி கீழேயிருந்தமேனிக்கே மாடியிலிருக்கும் அவனிடம் அவர்கள் ஏதோ கேட்பதும் அவனும் சளைக்காமல் சத்தமாய் பதில் சொல்வதுமாய் தெளிவின்றிக் காதில் விழுந்திருக்கின்றன. உருவ அமைதி இல்லாத  சப்தங்கள். வெற்றுக் கூச்சல்கள்.

வாசல் மணி ஓசை கேட்டது. யாரென்று எட்டிப் பார்த்தார் வித்யாபதி.  நாலைந்து  வீடு தள்ளிக் குடியிருக்கும் மாசிலாமணி நின்று கொண்டிருந்தார்.

வாங்க…வாங்க…என்று சொல்லிக்கொண்டே போய்க் கேட்டைத் திறந்தார். என்னாச்சு…புக்ஸ் வேணுமா? வேணுங்கிறத எடுத்துட்டுப் போங்க.உள்ளே வாங்க….என்றார்.

அதுக்கு வரலை…வேறொரு விஷயம்….வெளி கேட் வரைக்கும் பூட்டி வச்சிர்றது போல்ருக்கு….என்றார் அவர் சகஜமாக.

ஆமா சார்….கேட்டைத் திறந்துட்டு திண்ணை வரைக்கும் வந்து நின்னு பாட்டுப் பாட ஆரம்பிச்சிடுறாங்க…அதென்னவோ தெரில இந்த ஏரியாவுக்குன்னு வகை வகையாய்ப்  பிச்சைக்காரங்க இருக்காங்க…வெவ்வேறே ரூபத்துல…குடு குடுப்பை…சாமி வேஷம், …மாரியாத்தா…காளியாத்தா….கூழு ஊத்தறோம்…ஏன் பூம் பூம் மாட்டுக்காரன் கூடத் தயங்கறதில்ல….மாட்டோடக் கயித்தைப் பிடிச்சமேனிக்கு அவனும் உள்ளே வந்து நின்னுடுறான்…அது அங்கிருந்தமேனிக்கே இவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுது…..நம்ம வீட்டு வாசல் மட்டும் தணிவா…ரோட்டோட ரோடா இருக்குதுங்களா…சட்டுன்னு வசதியா நுழைஞ்சிடுறாங்க…அதோட மட்டுமில்ல…அரணை, ஓணானெல்லாம் கூட சமயங்கள்ல புகுந்திடுதுன்னா பார்த்துக்குங்களேன்….அதனால்தான் கதவுக்கடில கேப் இல்லாம இருக்க ஒரு கட்டையைக் குடுத்து அடைச்சிருக்கேன்…விஷ ஜந்துக்கள் உள்ளே வந்துடக் கூடாதுல்ல….!

நல்லதுதான்…பாம்பு கீம்பு நுழைஞ்சிடுச்சின்னா…? இன்னும் அப்பப்போ ஒண்ணு ரெண்டு கண்ணுல படத்தானே செய்யுது…பக்கத்துல சீண்ட்ரம் இருந்தாலே வந்து அடையத்தாங்க செய்யும்….ஏதாச்சும் ஒரு கட்டடம் கட்டிட்டுத்தானே இருக்காங்க இந்தத் தெருவுல…செங்கலு, மணல், ஜல்லின்னு கொண்டு கொட்டிட்டுத்தான இருக்காங்க…போதாக்குறைக்கு பழச இடிச்ச கப்பிக வேறே மலையாக் கெடக்குது….அடையத்தான செய்யும்….ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுதான்…ஆனா ஒண்ணு பாருங்க…உங்க எதிர்த்த வீட்டுக்காரங்கள நினைக்கிறபோது பாவமால்ல இருக்குது….சற்றுத் தணிந்த குரலில் சொல்லிக் கொண்டே நுழைந்தார்.

எதையோ கொண்டு வந்து எதிலோ நுழைப்பது போலிருந்தது அவர் பேச்சு.  நிறையத் தயார் நிலையில் வந்திருப்பதாய்த் தோன்றியது.

உள்ளே வாங்க…ரூம்ல உட்கார்ந்து பேசுவோம்…– சொல்லியவாறே அவரை அறைக்குள் அழைத்தார் வித்யாபதி.  எதைச் சொல்ல வருகிறார் என்பது லேசாக இவருக்குப் புரிந்தது.

தெரியுமா சேதி உங்களுக்கு? – என்றார் எடுத்த எடுப்பில் மொட்டையாக.

எதச் சொல்றீங்க…என்றவாறே வித்யா…சார் வந்திருக்கார்…காஃபி கொண்டா…என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார். வேறேதாவது…..என்றவாறே ஒரு தட்டில் ரெண்டு பிஸ்கட்டும்…முறுக்குமாக  வந்து வைத்தாள் வித்யா.

எதுக்குங்க…இப்பத்தானே காலை டிபன் சாப்டிட்டு வர்றேன்…காபி மட்டும் கொடுங்க போதும்…என்றார் மாசில். காபியின் மீதான ப்ரீதி அவர் முகத்தில் தெரிந்தது. உங்க வீட்டுக் காபிக்கு ஈடே இல்லைங்க…-எத்தனை பக்குவமாக் கலக்கறாங்க… - வித்யாவுக்கு உச்சி குளிர்ந்து போகும்.

இருக்கட்டும்…எடுத்துக்குங்க… - என்று கொண்டு வந்ததை எதிர் டீபாயில் வைத்து விட்டுப் போனாள் வித்யா.

ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கடித்தவாறே ஆரம்பித்தார் மாசிலாமணி. விண்டு சாப்பிடக்கூடாதா என்று தோன்றியது வித்யாபதிக்கு. பிஸ்கட், முறுக்கு, வடை இப்படியான பண்டங்களைக் கடித்து சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சொல்லவா முடியும்? அவரவர் பழக்கம்…..

அந்தாளு….ஆறு மாசமா  வாடகையே கொடுக்கலையாம்..அட்வான்சைக் கழிச்சது போக அப்டியே ஆள் வெளியேறினாப் போதும்னு விட்டுட்டாங்களாம்…போக மாட்டேன்…இருபதாயிரம் பகடி கொடுத்தாத்தான்  வெளியேறுவேன்னு அடம் பிடிச்சிருக்கான்…என்னா தைரியம் பார்த்தீங்களா? -என்றவாறே முறுக்கை நறுக்கென்று கடித்தார் மாசிலாமணி. கடித்த வேகத்தில் அது சிதறியது. அய்யய்ய…என்றவாறே சிதறியவற்றைப் பொறுக்கத் தலைப்பட்டார்.

அதச் சாப்பிட வேணாம்…இந்தக் குப்பைக் கூடைல போட்டுடுங்க…என்றார் வித்யாபதி. தொடர்ந்து சொன்னார்…

என் ஆபீஸ் மேட் ஒருத்தர்…அவர் வீட்டு சைடு போர்ஷன்..பத்துக்குப் பத்து அளவு… ரோட்டப் பார்த்து இருந்ததை ஒரு தையற்காரனுக்கு வாடகைக்கு விட்டார்.  வருஷக் கணக்கா வாடகையே உசத்தாமல் இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டார்.  எனக்குத் தெரிய பத்து வருஷத்துக்கும் மேல இருக்கும்னு வைங்களேன்…இப்போ அவருக்கு வீடு பத்தல….பையன் படிக்க ஒரு தனி அறை வேணும்னு கேட்கறான்…உள் சுவத்தை இடிச்சிட்டு வெளில அடைச்சுப் பூசி அதை வீட்டுக்குள்ளயே  அறையாக்கிடலாம்னு ஐடியா…காலி பண்ணுடான்னா மாட்டேங்கிறானாம்.  

பார்த்தீங்களா? காலம் எப்படிக் கெட்டுப் போச்சுன்னு? எவனுக்கும் இரக்கப்படக் கூடாது. இரக்கம் என்னத்த? வாடகைக்கே விடுறதுக்கு லாயக்கில்லே…நாமளே அனுபவிப்போம்னு வச்சிக்க வேண்டிதான்…இல்லன்னா வெறுமே கெடந்துட்டுப் போகுதுன்னு விட வேண்டிதான்…அப்பத்தான் தப்பிச்சோம்…-தன் கருத்தை அழுத்தமாக முன் வைத்தார் மாசிலாமணி.

அவருக்கு அவர் இருக்கும் வீடு ஒன்றுதான். அதனால் வேறு கவலையில்லை. இனிமேல் வலிய ஏதேனும் அவரே வரவழைத்துக் கொண்டால்தான் ஆயிற்று. அப்படி  இப்படி ஆசை இருந்தால்தானே? இருப்பது போதும் என்ற மனம் கொண்டவர். வீடு கட்டிக் குடி வந்து இருபது வருஷம் ஆன வீட்டை அவ்வப்போது பராமரிப்பு செய்து…சிவனே என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆசைகளே துன்பத்திற்குக் காரணம். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி என்று தன்னையும் அரசுத் தொழிலாளிதானே என்று நினைத்து திருப்திப் பட்டுக் கொள்வார். எளிமையா வாழ்றது மாதிரி ஒரு சுகம் எதிலயும் இல்லீங்க…என்பார். எங்கப்பா ரெண்டு சட்டை, வேட்டிதான் வச்சிருந்தாரு…என்று ஆரம்பித்தாரானால் கதை கோமணத்துணி மாதிரி நீண்டு போகும். ஏற்கனவே சொல்லியதைப் புதிதாய்ச் சொல்வதுபோல் ஆரம்பித்தலும் நீட்டலும், மழித்தலும் தாங்காது மனுஷனுக்கு.

 வித்யாபதி தொடர்ந்தார்.

ஏரியா கவுன்சிலரைக் கூட்டியாந்து சொல்ல வச்சிருக்காரு…அவன் அதுக்கெல்லாம் பயப்படுற ஆளா என்ன? முதல்ல இருபது கேட்டவன் இப்போ முப்பதுங்கிறானாம். தந்தா கம்னு போயிடுறேன். இல்லன்னா ஆளக் கூட்டியாறேங்கிறானாம். அந்தக் கவுன்சிலருக்குப் பங்கு கொடுக்க….என் நண்பர் எங்க டிபார்ட்மென்ட்ல அசோசியேஷன் தலைவர். தொகுதி எம்.எல்.ஏட்டப் போய்ச் சொல்ல…அவர்தான் கவுன்சிலரை அனுப்பிச்சதாம். காசு எப்டிப் பரவலா சுத்துது பார்த்தீங்களா?

இப்டித்தாங்க அடாவடியாப் பிழைக்கிறாங்க இன்னிக்கு. நல்லதுக்கே காலமில்லே….சாதாரண மக்கள் வாழ்றதையே கடினமாக்கிட்டாங்க…-அங்கலாய்த்துக் கொண்டார் மாசிலாமணி.

எல்லா விஷயத்துலயும் குறுக்கு வழி எதுன்னு யோசிச்சு…அதையே நடைமுறை ஆக்கிட்டாங்க…ஆனாலும் இவுங்க ரொம்பப் பாவமுங்க…போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு சொன்னாங்க எங்கிட்ட வந்து…அதுவரைக்கும் எதுக்குமே அவுங்க  வந்ததில்ல…பரிதாபமா இருந்திச்சு…சரின்னு போனேன்….கார்ல போய் இறங்கினாத்தான் மதிப்பா இருக்கும்…புகாரையாவது வாங்குவாங்கன்னு பக்கத்து வீட்டுக்காரரையும் கூப்டுக்கிட்டாங்க…அவர்தான் தன் காரை எடுத்தாந்தார்..வெறுமே கூடப் போறதுக்கு என்ன வந்தது? நானும் போனேன்னு வச்சிக்குங்க….ஆனா கதையாகல…! மனு வாங்கினதோட சரி…அதையும் வச்சிருக்காங்களோ இல்ல கிழிச்சிப் போட்டாங்களோ…? ஒரு போலீசும் எட்டிக்கூடப் பார்க்கலே…! போன்லயாவது மிரட்டிச் சொல்லலாம்தானே? அதுவுமில்லே….

அப்புறம் எப்டிக் காலி பண்ணினானாம்? அது விஷயம் தெரியாதா உங்களுக்கு? என்று வியப்போடு கேட்டார் மாசிலாமணி. சொல்வதற்கு மிகவும் ஆர்வமாய் இருப்பதாய்த் தோன்றியது.

எனக்குத் தெரியாதுங்க…காலி பண்ணிட்டான்னு தெரியும். ஒருநா கூடப் போனதோடு சரி. அப்புறம் அவுங்க எதுவும் சொல்லலை என்கிட்டே….! நானும் கண்டுக்கலை….அபூர்வமாத்தான் பேசுவாங்க…இருக்கிற எடமே தெரியாது.

நம்ப காலனி அசோசியேஷன் ரெப்ரசென்டேடிவ் இருக்காருல்ல….அவர்ட்டச் சொல்லி ராவோடு ராவா அடாவடியாத் தூக்கிப் போட்டதுதான்….அதுக்கு இவுங்க எப்படிச் சம்மதிச்சாங்கங்கிறதுதான் அதிசயம். ஆச்சரியம்.  பாவம்….மேற்கொண்டு எதுவும் அவுங்களுக்குச் சங்கடம் வராம இருக்கணும்…யாரைத் தொடுறோம்ங்கிறது முக்கியமில்லியா? அது தெரிஞ்சிதான் செய்தாங்களா தெரில…

என்ன சொல்றீங்க நீங்க….போன சனிக்கிழமை வரை நான்தான்   ஊர்ல இல்லையே….ஒரு கல்யாணத்துக்குக் கும்பகோணம் போயிட்டனே……அப்ப நடந்ததா இது…!

ஆமாங்க….உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னுல்ல நினைச்சேன்….மழை பேய்ஞ்சு ஓய்ஞ்ச பிறகு வந்திருக்கீங்க…. ….நம்ப ஏரியா கட்டட வாட்ச்மேன் இருக்கான்லங்க…திருப்பாப்புலி….அவன்ட்டச் சொல்லியிருக்காங்க போல….அவன் ஆளுகளோட வந்து…  ஒரே ராத்திரி…. சாமான் செட்டையெல்லாம் அள்ளி வெளில  தூக்கி எறிஞ்சு, ஆளைத் தர தரன்னு வாசல்ல இழுத்துப் போட்டு, பொம்பளையாளுகளைத் தடாலடியாக் கிளப்பி, கதவைப் பூட்டி, சாவியைக் கொடுத்துட்டுப் போயிட்டானாம்…! நானே ஏரியா  ரௌடி…எங்கிட்டக் காட்டுறியா உன் வேலையை..ன்னானாம்…!

இவங்களுக்குக் கொடுத்த காசை அவன்ட்டயே கொடுத்திருந்தா அவனே போயிருப்பானே..? – வியப்போடு கேட்டார் வித்யாபதி.

என்ன கொடுத்தாங்க…ஏது செஞ்சாங்க தெரியாது. என்ன நிச்சயம்? மறுபடியும் அடாவடி பண்ண மாட்டாங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்? ஆறு மாச வாடகைன்னு இவுங்க சொல்றாங்க…உண்மையா எத்தனை மாசமோ? இடம் மிஞ்சினாப் போதும்னுல்ல இது  நடந்திருக்கு…! மராமத்து வேலை நடக்குது…எவ்வளவு செலவோ…யார் கண்டது?

அந்தத் திருப்பாப்புலிக்கு இன்னொரு கதை உண்டு. அது இப்போது வித்யாபதியின் நினைவுக்கு வந்தது. இதே தெருவின் கடைசியில் நடந்து கொண்டிருந்த அநாச்சாரம் அது. என்னடா…ராத்திரியானா டர்ரு…புர்ர்ருன்னு ஆட்டோக்கள் வர்றதும் போறதுமா இருக்கே…என்ன விஷயமா இருக்கும் என்று விழித்துக் கொண்டபோதுதான் அந்த அபத்தம் புலப்பட்டது.  குடியிருப்போர் நலச் சங்கம் கொதித்து எழுந்தது. கண்ணியமும் கட்டுப்பாடுமாக் குடியிருக்கிறவங்க அமைதியா இருக்கிற இந்தத் தெருவுல இப்டியொரு நாராசமா? என்று திருப்பாப்புலியை ஏற்பாடு செய்தபோது, நாலு பேரோடு போய் தடாலடியாய் அவ்வளவு பேரையும் அள்ளித் தூக்கிப் போட்டுக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு நிறுத்தினான் அவன்.

ஏன்யா…உன் நீசத் தொழிலை நடத்துறதுக்கு உனக்கு இந்த ஏரியாதான் கிடைச்சிச்சா…? இந்த நகர்ப் பக்கமே இருக்கக் கூடாதுன்னு உன்னை ஏற்கனவே விரட்டி விட்டா…நீ அங்க போய் கொடி நாட்டுனியா? ஈத்தற நாயே…இனி நீ வெளிலயே தலை நீட்ட முடியாதபடி செய்யுறேன் பாரு…என்று  அந்தக் கோஷ்டியின் தலைவனையும் அவன் ஆட்களையும் போலீஸ் நிர்வாகம்  உள்ளே போட்டு நொங்கெடுத்தது.. பிறகு அவர்கள் வேற்றூருக்கு எங்கோ சென்று விட்டதாகத் தகவல் வந்து நிம்மதியாயிற்று.

திருப்பாப்புலி அந்தப் பகுதியின் காவல் தெய்வம்.

அமைதியாய் அமர்ந்திருந்தார் வித்யாபதி. நடந்தவைகள் அனைத்தும் செய்திகளாய்க் காதுக்கு வருகின்றன. யாருக்கோ நடந்தது வெறும் செய்திகள்தானே? உறவுகளுக்கென்றாலும் பெரிதாய் என்ன செய்து விடப் போகிறோம்? போய் ஆதரவாய் நிற்போம்…ஏதோ கொஞ்சம் உதவுவோம். பிறகு விலகுவோம். அதுதானே?  இப்படித்தானே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வெவ்வேறு விதமான நிகழ்வுகள் நமக்கு வெறும் செய்திகளாய் ஆகின்றன.அதன் தாக்கம் ஏன் நம் மனதை அரிப்பதில்லை. அதுதானே சமூகச் சிந்தனை.  …தீவிரவாதிகளை எதிர்த்து முறியடித்து குண்டடி பட்டு இறந்து போகும் ராணுவ ஜவான்கள்பற்றிய செய்திகள் கூடப் பல சமயங்களில் நமக்கு வெறும் செய்திகள்தான். அன்றாடம் என்னென்ன விதமாகவோ பாலியல் செய்திகளைப் படிக்க நேர்கிறது. அவை ஏன் வெறும் வரிகளாக மட்டும் நம்மைத் தாக்குகின்றன? வெவ்வேறு ஊர்களில் நடக்கும் இந்தக் கொடுமைகளைக் கண்டு மனம் கொதிக்க வேண்டாமா? அப்போதைக்கு மனதை நெருடும் இவைகள் பின்னர் மறைந்து போகின்றனவே?

அக்கா, தங்கை என்று சகோதரிகளோடுதானே நாமும் பிறந்திருக்கிறோம். அப்படிப் பார்த்தால் இந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் நம் சகோதரிகள்தானே? அவர்களுக்கு நடந்த கொடுமை எப்படி வெறும் செய்திகள் ஆகும்? அல்லது அந்தக் கணம் வருந்தி ஒதுங்கும் மனநிலையை எப்படிக் கொண்டு வரும்? கொதித்து எழ வேண்டாமா? வெறுமே வருந்துவதா எதிர்வினை?  அப்போதைக்கு அடடா…என்று மனசு துக்கப்படுகிறது! எங்கோ நடந்தவை.  யாருக்கோ நடந்தவை. அடுத்தடுத்த நாட்களில் வரும் வேறு விதமான புதிய செய்திகளில் இதற்கான சங்கடம்,  துக்கம் மற்றும் கேள்விகள்  எல்லாமும் கரைந்து காணாமல் போய்விடுகின்றன. நாட்டுக்கு நாடு போர்கள் நடக்கின்றன. மக்கள் கொத்துக் கொத்தாக மடிகிறார்கள். வாழ்விடங்களை இழந்து இடம் பெயர்கிறார்கள்.  கேள்விப்படுகையிலே மனசு நடுங்கும் இச்செய்திகள் பின் எப்படி மறைந்து போகின்றன மனதிலிருந்து? நமக்கு  பாதிப்பில்லாத இவை, நாட்கள் கடக்கையில் எப்படி நம் மனதில் நிற்கும்? இதுவும் கடந்து போகும் என்று எல்லாமும் நம்மைத் தாண்டித்தான் சென்று விடுகின்றன. ஒருவகையில் இது சுயநலம் சார்ந்ததுதானே? மனிதர்களே இப்படித்தானா? வாழ்க்கை அவசங்களில் மூழ்கிக் கிடக்கும் அவனால் இதற்கு மேல் உந்திச் செயல்பட முடியாதா?

பனியிலும், மழையிலும்,மலையிலும், காற்றிலும், குளிரிலும் சரியான உணவின்றி, உறக்கமின்றி, ஓய்வின்றி நமக்காகப் பல ஜீவன்கள் எல்கையில் நின்று, இந்த நாட்டு மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை, அவர்களை நாம் என்றென்றும் நினைப்பதேயில்லை. மனதில் நிறுத்துவதில்லை. ஆத்மார்த்தமாய் வணங்குவதில்லை.  கடந்து செல்லும் பல அன்றாடச் செய்திகளில் அதுவும் ஒன்று. அவ்வளவே…! அந்தக் குடும்பங்கள் எல்லாம் தலைவனை இழந்து என்ன பாடுபடும்? எவ்வளவு துயருற்று நிற்கும்? நினைத்துப் பார்த்திருக்கிறோமா? மனதுக்குள் கொஞ்சமேனும் அழுதிருக்கிறோமா? துயரப்பட்டிருக்கிறோமா?

எங்கு எது நடந்தாலும் அது மற்றவர்களுக்கு நடந்ததுதானே? நமக்கு இல்லையே என்கிற எண்ணம் வந்து விடுகிறது. அது மனித இயல்பா? இந்த மனதுக்குச் செய்யும் துரோகமில்லையா? நமக்கு நடந்தால்தானே அதன் பாதிப்பு,  தாக்கம் நம்மை வதைக்கும்? ஆழ யோசிக்க வைக்கும்? கவனம் கொள்ள வைக்கும்? அல்லாமல் கடந்து போகும் பலவும் வெறும் செய்திகளே அப்படித்தானே..! நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய சிந்தனைகள்…!

என்ன…ஒரேயடியா யோசனைல மூழ்கிட்டீங்க…? என்றார் மாசிலாமணி.  காபியை ஆற்ற ஆரம்பித்திருந்தார். ஆவி பறந்தது. டிகாக் ஷன் மணம் மூக்குக்கு இதம் தந்தது.

தலையை மேலே தூக்கிப் பார்த்துக் கொண்டே பெருமூச்சு விட்டார் வித்யாபதி. வாங்கின அட்வான்சை என்னவோ தெய்வாதீனமா மனசுக்குள் நெருட….மறுநாளே அந்த ஆளை வரச்சொல்லித் திருப்பிக் கொடுத்தவங்க நானு….இப்பத்தான் முதன்முதலா உங்ககிட்டே சொல்றேன் இந்தச் செய்தியை. .இந்தத் தெருவுலயே முதல்ல எங்கிட்டதாங்க வந்து நின்னு எங்க மாடியை வாடகைக்குக் கேட்டான் அந்த ஆளு…அப்புறம்தான்  அடுத்துன்னு விசாரிக்கப் போனான். .எதிர்த்த வீட்டு மாடியை யாரு சொல்லி, எப்போ எப்படிப் பிடிச்சான்னே தெரியாதுங்க…அவுங்க வாடகைக்கு விடுற எண்ணத்துல இருந்திருக்காங்கங்கிறதே புதிய செய்தியா இருந்திச்சு எங்களுக்கு. ஆச்சரியமாயிருந்திச்சு. சொல்லப்போனா அவங்களப் பார்த்துத்தான் நானும் சும்மாப் போட்டு வச்சிருந்தேன். எப்டியோ அங்க ஆள் புகுந்துட்டான்….இப்ப நினைச்சுப் பார்க்கிறேன் அதை….இன்னைவரைக்கும் மாடியை சும்மாத்தானே போட்டு வச்சிருக்கேன்….கிடக்கட்டும்னு…ஒட்டடை, தூசி சேர்ந்தாலும் பரவால்லன்னு…!  – சொல்லிவிட்டுப் பெருமூச்சோடு புன்னகைத்தார் வித்யாபதி. நல்லவேளை தப்பிச்சோம்…என்ற நிம்மதி தெரிந்தது அதில்.

பார்றா….புதுச் செய்தியால்ல இருக்கு? அப்போ அதிர்ஷ்டவசமாத் தப்பிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க…- காபியை சூடாய் உள்ளே ஊற்றியவாறே உற்சாகமாய்க் கேட்டார்  மாசிலாமணி. செய்தியின் சூடு குறையவில்லை அவருக்கு. புதிய தகவல் கிடைத்திருக்கிறதே…!

எதிரிலிருந்தும் எப்படியோ சேதி தெரியாமல் போயிற்றே என்று மனம் வருந்தினார் வித்யாபதி. யார் கூடவும் பேசுவதேயில்லையே அவர்கள். எதிர்வீட்டைத் தலை நிமிர்ந்து பார்த்தாலே பாவம் என்பது போலல்லவா இருக்கிறார்கள்? நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் ஒரு புன்னகை கூடவா கூடாது? வெறித்த பார்வையோடு முகத்தைத் திருப்பிக் கொண்டால்? யாருக்கு யார் உசத்தி, தாழ்த்தி?ஒரு முறை மட்டும் வந்ததோடு சரி.  அந்த வீட்டில் என்ன சோகமோ…யார் கண்டது? ஒரு வேளை அவர்களின் இயல்பே அப்படி ஒதுக்கலாய் இருக்கலாமே! ஆனாலும் இந்த மாதிரிச் சங்கடங்களெல்லாம் யாருக்கும் வரக் கூடாதுதான். அப்பாவிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

ஒரு தெரு தாண்டி அவனின் இந்த அடாவடியை அறியாமல் வீட்டை வாடகைக்கு விட்டவர்களை எந்த வகையிலாவது மறைமுகமாகவேனும், யார்மூலமாகவேனும் அல்லது குடியிருப்போர் நலச் சங்கத்தின் மூலமாகவேனும் எச்சரிக்க வேண்டும், மேலும் இவர்கள் அவனால் ஏமாறாமல் இருக்க வேண்டும்… என்று அவரின்  மனம் மானசீகமாய் அப்பொழுது முடிவு செய்து கொண்டது.

                                    ---------------------------------

 

 

 

 

11 நவம்பர் 2024

 

சிறுகதை    “பால் மனக்  கணக்கு” - தினமணிகதிர்-10.11.2024 பிரசுரம்





                     துக்கு இருபத்தி ஒண்ணுதான் விலை. கார்டுக்கு அதுதான் ரேட்டு. காசுக்கு வாங்கினா இருபத்திரெண்டு. அவ்வளவுதான்.  அந்தக் கிழவர் பாவம்…இந்த வயசுலயும் உழைக்கிறார்…போனாப் போறது…இருபத்தி மூணு….அப்டீன்னாலும் மூணு பாக்கெட்டுக்கு அறுபத்தி ஒன்பதுதானே ஆச்சு…நூறு ரூபா கொடுத்தீங்கன்னா மீதி முப்பத்தி ஒண்ணு தரணுமே… - விடியாத அந்த நாலரை மணி விடிகாலையிலும், தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு துல்லியமாய்க் கணக்குப் பண்ணி சுளீர் என்று  எனக்குச் சொன்னாள் வைதேகி.

பிறகுதான்  எனக்கே உரைத்தது. அந்த நேரம் வீட்டு வாசலில், சற்றும் எதிர்பாராமல் பால் கிடைத்ததே பெரிது என்கிற எண்ணமே என் மனதில் நிறைந்திருந்தது.

ரெண்டு ஃபர்லாங் நடந்தால்தான் பால் டெப்போ.  அங்கேயும் இப்போதே பால் பெட்டிகள் வந்த இறங்கியிருக்குமா தெரியாது. அப்படியே வந்திருந்தாலும் பொறுப்பாளி வந்து விநியோகிப்பதற்கு எப்படியும் அஞ்சரைக்கு மேல்  ஆகிவிடும். நடக்கும் வழியில்தான் எத்தனை நாய்த் தொல்லை? குலைத்துத் தள்ளி குலை நடுங்க வைத்துவிடும். இந்த ஏரியா ஆள்தான் நான்…என்று அவைகளிடம் சொன்னால் புரிந்து கொள்ளவா போகிறது? தினசரி நம்மைப் பார்த்திருந்தால்தான் ஓரளவு ரெண்டே ரெண்டு குலைப்போடு வாயைமூடும். அதிலும் இருட்டிலும், அரைகுறை வெளிச்சத்திலும் நிச்சயம் அதற்குப் புரியாது. புது ஆள் என்கிற நினைப்பிலேயே உறுமலை ஆரம்பித்து விடும். எனக்கு நாய் என்றால் அநியாய பயம். யாருக்குத்தான் இல்லை?

சரக் சரக்…சரக்….என்று மெது மெதுவாய்ச் சாலையில்  அந்தத் தேய்ந்த ரப்பர் செருப்பை அணிந்த  கால்களைத் தேய்த்துத் தேய்த்து அவர் பால் கொண்டு வரும் சத்தம்தான் என்னை எழுப்பவே செய்தது. ஊரெல்லாம் உறங்கி வழியும்போது ஒரு வயதான குடுகுடு கிழம் கருமமே கண்ணாகத் தேய்ந்து மாய்கிறது. உழைப்பே பிரதானம் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது.

            முதல் நாள் கோயிலுக்குப் போய் மணிக்கணக்கில் வரிசையில் நின்று தரிசனம் செய்துவிட்டு, பிறகு ரொம்ப நேரமாகிவிட்டதே என்று ஓட்டலில் போய் வயிற்றுக்குக் கொட்டிக் கொண்டு, டாக்சி பிடித்து வீடு வந்து சேர்கையில் மணி பதினொன்றைத் தொட்டு விட்டது. மூடும் கடையைச் சட்டென்று பார்த்து, வண்டியிலிருந்து இறங்கி ஓடி…நாலு பாக்கெட் பால் வேணும்…என்று கத்தியபோது…பால் எப்பயோ தீர்ந்திடுச்சேய்யா…இனி காலைல ஆறு…ஆறரைக்குத்தான்…என்று பழக்கமான கடைக்காரன் கையை விரித்து விட்டான். ஃபோன் பண்ணிச் சொல்லியிருந்தீங்கன்னாக் கூட எடுத்து வச்சிருப்பேனே…என்று தன்னிரக்கம் வேறு.

            எது நடக்கிறதோ இல்லையோ…காலையில் அஞ்சரைக்கு எழுந்ததுமே காப்பி குடித்தாக வேண்டும்…! தொண்டையில் அது சூடாக இறங்கினால்தான் நாளே துவங்கும்.  இல்லையென்றால் உலகம் ஸ்தம்பித்துப் போகாதா? பால் இல்லாமப் போச்சே…பால் இல்லாமப் போச்சே….அடச்சே…ச்சே…!! என்று பெரும் சோகத்தோடு அலுத்துக் கொண்டே தூங்கியாயிற்று. அந்தப் பால் நினைப்பே மைன்ட்டில் செட்டாகி ஆளைக் கிள்ளி எழுப்பி விட்டது.

            பொழுது விடியும் வேளையில் ஆபத்பாந்தவனாய் அந்தக் கிழவர்.  நாலரைக்கு எனக்கு சட்டென்று விழிப்பு வந்தது பெரும் ஆச்சர்யம்தான். அவரின் செருப்புச் சத்தம்தான் என்னை உசுப்பித் தூக்கி நிறுத்திற்று.  புத்தி நம் உறக்கத்திலும் எப்படி வேலை செய்கிறது பாருங்கள்?

            ஊரும் உலகமும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் ஒரு ஜீவன் யாரையும் தொந்தரவு செய்யாமல் அந்தப் பகுதியில் வீடு வீடாய்ப் போய் பால் பாக்கெட் போட்டுக் கொண்டு தன்னிச்சையாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நாய்கள் வாய்மூடி மௌனியாய் அவர் பின்னால் வந்துகொண்டேயிருக்கின்றன அவருக்குக் காவல்போல். எவ்வளவு புத்திசாலிகள்?

 வயது  தொண்ணூறுக்கு மேல். ஆனாலும் விடாத உழைப்பு. கடை வைத்திருக்கும்  மகனுக்கு உதவி. உயர்ந்த உள்ளம். .அதுவே தெய்வம். பால் வண்டியான சைக்கிளை அவரால் ஓட்ட முடியாதுதான். ஆனால் பின் சீட்டில் பிளாஸ்டிக் பெட்டியை வைத்து இறுக்கக் கட்டி, அதில் பால் பாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டு தள்ளியபடியே தளராது சென்று கொண்டிருக்கும் அந்த உருவம்….பார்ப்போர் மனதை நெகிழச் செய்யும். வீடு வீடாய் ஸ்டான்ட் போட, எடுக்க…எத்தனை கஷ்டம்? அதென்ன எக்ஸர்சைஸா?  அங்கங்கே வண்டியைச் ஸ்டான்ட் போட்டு நிறுத்தி, தேவையான பாக்கெட்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டு  வாசல் கேட்டைத் திறந்து கயிறால் கட்டி விட்டிருக்கும் பையில் போடுவதும், மாடியிலிருந்து கயிறு கட்டி ஊஞ்சலாடித்  தொங்கிக் கொண்டிருக்கும் கூடைகளில், பைகளில் போட்டுவிட்டு நகர்வதும்,…அட…அட…அடா…என்னே பொறுமையும் சகிப்புத் தன்மையும்  இந்தப் பெரியவருக்கு? இந்த வயதிலும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்கிற தீர்மானமும், உறுதியும்…..பையனோடுதான் இருக்கிறார் என்றாலும்  அவனுக்குப் பெரும் உதவியாய் இருந்து மீதி நாட்களைக் கழிப்பதுதான் நியாயம், தர்மம் என்று செயல்படும் அந்தக் கிழவர் எவ்வளவு போற்றத் தக்கவர்? எத்தனை மதிக்கத் தக்கவர்?

            அவரிடம் போய் எப்படிக் கணக்குப் பார்ப்பது? ஆத்திர அவசரத்துக்குப் பால் தந்ததே பெரிய விஷயம்.  வீட்டுக்கு வீடு இத்தனை பாக்கெட் என்று கணக்குப் பண்ணி எடுத்துக் கொண்டு வரும் அவரிடம் பால் இருக்கா தாத்தா….? என்று மாடியிலிருந்து அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கத்தியபோது…இருக்கு….வாங்க…என்று சொல்லியபடியே…உருட்டிக் கொண்டிருந்த வண்டியைத் தட்டுத் தடுமாறி நிறுத்தி, அதைத் தன் கைகளாலும், இடுப்பு அணைப்பிலும் தாங்கிப் பிடித்து நிறுத்தி,  மாடியை நோக்கிய அந்தக் கணம்….. அவரின் தள்ளாட்டமும், தடுமாற்றமும், கண்கள் சரியாய்த் தெரியாத நிலையில் அவரின் இடுங்கிய பார்வையும்….இவனை ஒரு கணம் ஆட்டி எடுத்துவிட்டதுதான்.

            ஐயையோ…பெரியவரத் தெரியாம நிப்பாட்டிட்டமோ? அவசரப்பட்டுட்டனே….! என்று மனது சங்கடப் பட, கிடு கிடுவென்று மாடியிலிருந்து இறங்கி ஓடி….பால் பாக்கெட்டை அவரிடமிருந்து வாங்கியபோது மனசு எவ்வளவு நன்றி பாராட்டியது அந்தக் கிழவருக்கு. பொழுது விடியும் முன் சூடாய் மணக்க…மணக்கக் காப்பி குடித்தாக வேண்டும் என்கிற வாழ்க்கை லட்சியம் இன்று அவரால் தவறாமல் நிறைவேறப் போகிறதே…? எவ்வளவு பெரிய வாழ்நாள் லட்சியம் அது…!! வெளியே சொன்னால் சிரிப்பார்கள்.

            அவர் சொன்ன கணக்கே மண்டையில் ஏறாத அந்தக் கணத்தில், இன்னும் ஒரு பாக்கெட் கொண்டு வந்து தந்திடுறேன்….அதோட கணக்குச் சரியாப் போயிடும்…அடுத்தாப்ல இன்னொரு ரவுண்டு வருவேன்…அப்பத் தர்றேன்…என்று அவராகவே சொன்னதும் பதிலுக்கு வெறுமே மண்டையைத்தான் ஆட்ட முடிந்தது. புத்திக்குக் கணக்குப் பண்ணத் தெரியவில்லை. தோன்றவுமில்லை. கேட்க வாயுமில்லை.

            அந்த நாலரை மணிக்கு அந்தப் பகுதியில் கிடைக்காத பால் வீட்டு வாசலில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி ஏதோ பெரும் சாதனையை நிகழ்த்தி விட்டது போன்றதான உணர்வைத்தான் எனக்கு ஏற்படுத்தியிருந்தது. எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்குகையில் நான் மட்டும் விழித்து அவர்களுக்காக ஓடுகிறேனே?  வீட்டிலுள்ள எல்லோருக்கும் என்னால், என் முனைப்பால் கிடைத்த ஏமாற்றமில்லாத காலைப் புத்துணர்ச்சி. பாக்கிக் காசைப் பற்றி  மனம் எண்ணவேயில்லை. வந்து இன்னொரு பாக்கெட் தருகிறேன் என்று சொன்ன தாத்தாவையும் மேற்கொண்டு எதிர்பார்க்கவில்லை. முதல்ல போய் அடுப்பை மூட்டி. பாலைக் காய்ச்சி, காபியை உள்ளே இறக்குற வழியைப் பாருய்யா….!

            இப்போது இவள் என்னடாவென்றால், புத்தியைத் தீட்டி, மனக் கணக்குப் போட்டு மீதிக் காசெங்கேய்யா என்று ஒத்தைக்கு நிற்கிறாள்? ஏமாந்துட்டீங்க…என்று சொல்லாமல் சொல்கிறாள். கேலி செய்கிறாள். இவனை எதிலடா மடக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பாளோ? திருடனை “மடக்கிப்“ பிடித்தனர் என்பதுபோல் அகப்பட்டக்கொண்டேன்.

            ஏமாந்தால்தான் என்ன? அப்படியே வைத்துக் கொள்வோமே…என்ன குடி முழுகிப் போகிறது? அந்தப் பெரியவரின் உழைப்பின் முன்னால் இதுவெல்லாம் தூசு!  பாக்கெட் இருபத்தஞ்சு ரூபாய் என்று கூடச் சொல்லட்டுமே…இன்னும் ஒரு மீதிப் பாக்கெட் கொண்டு வந்து கொடுக்கப் போகிறார்? நூறுக்குக் கணக்குத் தீர்ந்து விடும். பிறகென்ன நஷ்டம்?  அந்த மீதி ஒன்றைக் கொடுக்காவிட்டால்தான் என்ன?

             வராதுங்கிறனே... என்னைக்கு இன்னொரு ரவுன்ட் வந்திருக்கார் அவர்? அவர் வயசுக்கு ஒரு ரவுன்ட் வர்றதே பிரம்மப் பிரயத்தனம். அவர் ஏதோ சொல்லியிருக்கார்…நீங்களும் மொண்ணையாக் கேட்டுட்டு வந்து நிக்கிறீங்க…? காசு கொடுத்துதானே பால் வாங்கினோம்…அப்பக் கணக்குப் பண்ணி மீதி வாங்கத் தெரியாதா? அதிலென்ன தப்பு? கௌரவக் குறைச்சல்? அவர் சொன்னதைக் கேட்டுட்டு அப்டியே வந்து நிப்பீங்களா? இருபத்தி ஒண்ணுதானே தாத்தா…காசுக்கு இருபத்திரெண்டு, ஒரு ரூபா கூட வச்சிக்குங்க…மூணு பாக்கெட்டுக்கு அறுபத்தி ஒன்பது போக மீதி முப்பத்தி ஒண்ணு கொடுங்கன்னு வாய் விட்டுக் கேட்டு வாங்கியிருக்க வேண்டாமா? இந்தச் சின்னக் கணக்குக் கூடவா உங்களுக்குப் போடத் தெரியாது?தூக்கம் தெளியலயா அப்போ…அவர் முன்னாடி தூங்கிக்கிட்டே நின்னீங்களா?   – விட்டு வாங்கினாள் வைதேகி. அடேயப்பா…என்னா வாய்? என்னா பேச்சு? சந்தர்ப்பம் கிடைத்தால் ஆளைப் போட்டு அமுக்கி துவம்சம் செய்து விடுவாள்.

            எனக்குள் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. ஏழு மணிக்கு மேல் சாவகாசமாய்க் கிளம்பிப் போய் ஆடி அசைந்து வாங்கிக் கொண்டு வந்து, இந்தா பிடி…என்று சொல்லியிருந்தால்தான் இவளுக்கெல்லாம் சரியாய் வரும். ஒருத்தன் கஷ்டப்பட்டு சத்தம் கேட்டு அலர்ட் ஆகி, தூக்கத்தை விரட்டி, மாடியிலிருந்து திடுதிடுவென்று இறங்கி ஓடிப் போய் அக்கறையாய் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறானே…என்ற நன்றியில்லையே? வாங்கின பாலைப் பக்குவமாய்ச் காய்ச்சி எடுத்து வைத்திருக்கிறானே? என்கிற சமாதானப் பார்வையில்லை. வெட்டி ஓட்டு ஓட்டுகிறாள். சண்டைக்கு அடிபிடி மாடுபிடி…!

            மீதி ஒரு பாக்கெட்டை அவர் எங்க கொண்டு வந்து தரப் போறார்? அதெல்லாம் வர மாட்டார்….பாக்கிக் காசும் மொங்கான்தான். அப்படியென்ன அவசரம்? காலைல ஏழு மணிக்கு மேலே காப்பி சாப்பிட்டா தொண்டைல இறங்காதா உங்களுக்கு? ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டா காப்பி சாப்பிட்டா உயிர் போயிடுமா? யாருக்காக இப்டி உசிர விட்டுண்டு ஓடிப்போய் வாங்கினீங்க? நாங்க யாரும் கேட்கலையே? நீங்களா எங்களுக்கு உதவி செய்றதா நினைச்சிட்டு இப்டியெல்லாம் கோமாளித்தனம் பண்ணினா அதுக்கு நாங்க என்ன பண்றது? நாங்களா பொறுப்பாக முடியும்? பொண்ணும். பையனும் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த அறையில் மாமியார்.  யார் இருந்தால் எனக்கென்ன, சொல்ல வேண்டியதைச் சொன்னால்தான் என் மனசு ஆறும்…! உழைக்கவும் உழைத்து, கொத்தடிமையாவும் இருத்தல் இருக்கிறதே…! அதைப்போல் ஒரு கொடுமை உலகில் வேறேதுமில்லை.

            அடக் கடவுளே…! இதற்கா இவ்வளவு பேச்சு?ஈஸ்வரா…என்று எனக்கு விடுதலை?  ஆனாலும் இவளுக்கு வாய் ரொம்ப அதிகம்தான். எப்படித்தான் அடக்குவது இதை? பிஞ்சுல பழுத்தவ மாதிரி இப்படி எகிறிப் பாய்கிறாளே? இவளை எப்படி இவர்கள் வீட்டில் பொறுத்திருந்தார்களோ? மாட்டினான்யா வசம்மா ஒரு கிறுக்கன்…என்று என்னிடம் தள்ளிவிட்டு விட்டார்களோ?

            கொஞ்சம் உன் திருவாயை மூடிட்டு சும்மா இருக்கியா? ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஓ…ஓ…ன்னு கத்திட்டு? தேவையில்லாத டென்ஷன்.  பக்கத்து வீட்டுல காதுல விழுந்தா உன்னைப் பத்தித்தான் தப்பா நினைப்பாங்க…கொஞ்சம் அடக்கி வாசி…ஓட்ட வாயி….!! பொம்பளைக்கு இவ்வளவு வாய் ஆகாது….ஊர் சிரிச்சிப் போகும் அப்புறம்….! மனசு வெறுத்துப் போயிடும்…!

            சொல்லிவிட்டு வேகமாய்க் கீழே இறங்கி என் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தேன்.  இத்தனை வருடம் வேலை பார்த்தும் இன்னும் ஒரு மொபெட் கூட வாங்க முடியாத நிலையில்தான் நான் இருக்கிறேன். இரண்டு முறை டிபார்ட்மென்ட் லோனுக்கு அப்ளை பண்ணி, ஃபன்ட் இல்லை…ஃபன்ட் இல்லை  என்று திரும்பி வந்து விட்டது. எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும்…கடன் பெறுவதில் கூடவா இத்தனை சிரமங்கள்? ஆபீசில் இன்னும் சைக்கிளில் வரும் ஒரே ஆள் நான்தான்.

அந்தக் குறை வைதேகிக்குத் தாளாத ஒன்று.  ஒரு கோயில் குளம்னு எங்கயாச்சும் ஃப்ரீயாப் போக முடியுதா? வர முடியுதா?  எல்லாத்துக்கும் நடந்து நடந்தே சாக வேண்டியிருக்கு….பஸ்ல போயிப் போயி காசு கொடுத்து மாளல…..அந்தக் கூட்டத்துல நசுங்கிச் செத்து, யாரு போவாங்க? அப்டி என்ன சாமி வேண்டியிருக்குன்னுதான் அலுப்பு வருது.  எனக்கு எதுக்கும் யோகமில்லை….வீடு வீடுன்னு கெதியாக் கெடந்து செத்து மடிய வேண்டிதான்…..வாழ்க்கைப்பட்ட எடம் சரியில்லை…யாரை நோகுறது? –எனக்கும்தான்…நானும் என் மனதில் சொல்லிக் கொள்வேன்தான்.

 நாமே இப்படிக் குறைபட்டுக் கொண்டால் தாத்தா மாதிரி ஆட்கள்? எந்தச் சாமியைக் கும்பிட்டால் இந்தத் துயரம் தீரும்? நன்மையும் தீமையும் பிறர் தர வாரா…! எல்லாமும் நமக்கு நாமே சம்பாதித்துக் கொள்வதுதான். இருப்பதை வைத்து அல்லது நியாயமாய்க் கிடைக்கும்வரை  ..….திருப்தி கொள்ள முடியாத மனசு.

அவள் மனக்குறையைத் தீர்த்து வைக்க என்றுதான் எனக்கு வேளை வரப்போகிறதோ? இந்தச் சமயம் பார்த்துத்தான் எல்லா நினைப்பும் வருகிறது. நினைப்பு என்று வருவதென்ன? எப்போதும்  இதெல்லாமும் மனதில் காட்சிகளாய் ஓடிக் கொண்டிருப்பதுதான். நான் நடுத்தர வர்க்கத்தவனா அல்லது கீழ் நடுத்தர வர்க்கத்தவனா? இன்னும் எவ்வளவு வருவாய் இருந்தால் என்னால் என் குடும்பத்தை சந்தோஷமாய்க் கொண்டு செலுத்த முடியும்?        பற்றாக்குறையோடு குடும்பம் நடத்துவது பாவமா? கடன் எதுவுமில்லையே? அந்த திருப்தி ஏன் வரமாட்டேனென்கிறது?

தீராத, ஓயாத சிந்தனைகள் என் மனதில். இருந்தால் பெரும் பணக்காரனாய் வலம் வர வேண்டும். அல்லது பரம ஏழையாய்ச் சுற்றித் திரிய வேண்டும் . இந்த ரெண்டும்கெட்டான் மத்தியதர வர்க்க வாழ்வு இருக்கிறதே….அப்பப்பா…! மனுஷனால் நினைத்துப் பார்க்கவே முடியாத துன்பங்கள் அடங்கியவை அவை. பற்றாக் குறை…பற்றாக் குறை… அநியாயப் பற்றாக்குறை….எது வந்தாலும் போதாது. எவ்வளவு வந்தாலும் போதாது. எண்ணிச் சுட்டது விண்ணப்பம் என்று ஒரு முதுமொழி.   எண்ணிச் சுடவே இருந்தால்தானே? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? வெறும் கையில் முழம் போட முடியமா?

ட…நீங்க எதுக்கு வந்தீங்க…..? நாந்தான் வருவனே….இதோ கிளம்பிட்டேயிருக்கேன்ல… - கையில் ஒரு பால் பாக்கெட்டோடு கொந்திக் கொந்தி நடந்து வந்து கொண்டிருந்தார் அந்தக் கிழவர்.  அடப் பாவி மனுஷா…!

என்னாச்சு…ஒத்தப் பாக்கெட்டோடு வர்றீங்க…? என்றேன் நான்.

ஒங்களுக்குத்தான்…..கொண்டாந்து தர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்ல…..? கொடுக்க வேண்டாமா?  பெறவு நீங்க எதுக்கு வர்றீங்க? நா வரமாட்டன்னு நினைச்சிட்டீங்களா? – சொல்லிவிட்டுப் பொக்கு பொக்கென்று பொக்கை வாயால் சிரித்தார். ஒரு குழந்தையின் குதூகலம் அதில் தெறித்தது. ரொம்பவும் அனுபவம் வாய்ந்த சிரிப்பு அது. ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது.

இதக் கொடுக்க வாணாமா? இன்னைக்கு அடுத்த ரவுன்ட் இல்லாமப் போச்சு…பால் பாக்கெட் கொறச்சுப் போட்டுட்டாங்க….ராத்திரி பார்லர்ல ஏதோ நிறையப் பால் கெட்டுப் போயிடுச்சாமுல்ல….கீழே கொட்டிட்டாகளாம். எல்லாக் கடைக்கும் அளவாத்தான் போட்டிருக்காக இன்னைக்கு…சரி…உங்க ஒரு பாக்கெட்டை ஏன் தொங்கலா விடணும்னு எடுத்திட்டுப் புறப்பட்டேன்…..இந்தாங்க பிடிங்க……-சொல்லிக் கொண்டே  பால் பாக்கெட்டை என் கையில் திணித்தவர்…இருங்க…பாக்கி தர்றேன்….என்றார்.

இன்னும் என்ன பாக்கி? அதான் பால் பாக்கெட் கொடுத்திட்டீங்களே…என்றேன் புரியாமல். அப்போதும் என்னிடம் கணக்கு ஏதுமில்லை.   அவரிடம் போய் மனக் கணக்குப் போட்டு வாங்க எனக்கு மனசே இல்லை. மீதி ஒரு பாக்கெட்டைக் கொடுத்து விட வேண்டும் என்று புறப்பட்டுப் பாதி வழி வந்திருக்கிறாரே…என்ன ஒரு நேர்மையான உணர்வு இந்த மனுஷனுக்கு? பழையவர்கள் பழையவர்கள்தான். அந்த மகிமையே தனி.  தொண்ணூறு தாண்டிய ஒரு ஜீவன் பொழுது விடிந்தும் விடியாததுமாய் உழைக்கும் உழைப்பா இது? துவங்கிய வேலையை ஒட்டுக்க முடித்தால்தான் ஆயிற்று என்கிற தீர்மானம். என்ன ஒரு ஒழுங்கும் நேர்மையும்…!

இந்தாங்க பாக்கி…நாலு பாக்கெட்…நாலிருபது எண்பது…நா மூண பன்னெண்டு….தொண்ணூத்தி ரெண்டு போக மீதி எட்டு….சரியா இருக்கா பார்த்துக்குங்க….

எதுக்குத் தாத்தா இதெல்லாம்…? மீதியைத் தராட்டாத்தான் என்ன? எதுக்கு இந்தக் கணக்கு? வாடிக்கையல்லாத எனக்கு, கேட்டவுடனே மறுக்காம எடுத்துத் தந்தீங்களே…அது எவ்வளவு பெரிய விஷயம்? பால்லெல்லாம் இல்ல…ன்னு முகத்தத் திருப்பிட்டுப் போறவுங்கதான் அதிகம்.  போதாக்குறைக்கு இன்னிக்குப் பால் ஷார்ட்டேஜ்னு வேறே சொல்றீங்க…நான் வாங்கின பால் வேறே யாராச்சும் வாடிக்கையாளருக்கு குறையில்லாமப் போயிருக்கும்….இன்னைக்குப் பார்த்து நான்தான் உங்களுக்குக் குறுக்கே  சங்கடமா வந்து நின்னுட்டேன் போலிருக்கு….

சே…சே…அது ஏன் அப்டி நினைக்கிறீங்க…ஒவ்வொரு நாளைக்கு இப்டி ஏதாச்சும் ஆகுறதுதான்.  சகஜம்தானே…எதிர்பாராம நடக்குறதுக்கு நாமதான் என்ன பண்ண முடியும்? அதுக்காகப் பாலை ஒரு நியாயமில்லாத விலைக்கு விற்க முடியுமா? காசுக்கு இருபத்திரெண்டு…நா ஒரு ரூபா கூடக் கேட்குறேன்….அவ்வளவுதான்…..வீட்டுக்கு வந்து டெலிவரி கொடுக்குறவுக இருபத்தஞ்சுன்னெல்லாம் கூட விற்குறாங்க…நமக்கு அது வாணாம். எதுலயும் மனுசனுக்கு ஒரு நிதானம் வேணும்…நியாயம் வேணும்…அப்டி வர்ற எதுவும்தான் ஒருத்தனுக்கு நிலைக்கும்…நீங்க கொண்டு போங்க….என்று மீதிச் சில்லரையை என்னிடம் திணித்து விட்டு நடையைக் கட்டினார் அவர்.  அவர் கணக்கு பாக்கி கொடுப்பதோடும், முடிந்தது அன்றைய வேலை என்று திரும்புவதோடும்தான் நிறைவு பெறுகிறது. கோடு போட்டுக்கொண்டு பயணிக்கும் அன்றாட நியமங்கள். அவரவர் மனது நிர்ணயித்து வைத்திருக்கும் தர்ம நியாயங்கள். அந்த மனக் கணக்கு தனிக் கணக்கு. அது என்ன வெறும் பால் கணக்கா, மனக் கணக்கா அல்லது பால்மனக் கணக்கா?

மீதி ஒரு பாக்கெட்டும் வராது…பாக்கிச் சில்லரையும் வராது….நல்லா ஏமாந்தீங்க…மொங்கான்தான் –என்னவொரு இளக்காரமான பேச்சு?  வைதேகியின் வார்த்தைகள் என் காதுகளை அறைந்தன. நமக்கு வாய்த்தது இப்படி…என்ன செய்ய? அவள் கணக்கும் தனிக்கணக்குதான். தனி நபர் கணக்குகள் பல இடங்களில் மாறுபடும்தானே? ஒத்து வராத கணக்குகளோடும் ஒன்றித்தானே பயணிக்கிறோம்? உலக நடைமுறையிலிருந்து விலகிச் செல்ல ஏலுமா? நன்னெஞ்சே நீ  அறிவாய்…!  சில பெண்கள் பலவற்றில் எப்போதும் கொஞ்சம் அதீதம்தான்…! நினைத்து சிரித்துக் கொண்டேன்.

பாக்கிச் சில்லரையையும் எடுத்துக் கொண்டு ஒரு பால் பாக்கெட்டோடு தட்டுத் தடுமாறி பாதி வழிக்கும் மேல் வந்து, ஏன் நீங்க வந்தீங்க…நான்தான் வருவனே..என்று பவ்யமாய்ச் சொல்லிக்  கொடுத்து விட்டு படு நிதானமாய், நிச்சலனமாய்த் திரும்பி நடந்து கொண்டிருந்த அந்தத் தாத்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றேன் நான்.

  -------------------------------------