14 ஜனவரி 2015

ஜெயந்தி சங்கர் நாவல்கள்-காவ்யா வெளியீடு

 

2015-01-14 15.06.57 2015-01-14 15.42.18

 

 

download (1) download

   
   
   
 

சிங்கப்பூரில் வசிக்கும் மேடம் ஜெயந்தி சங்கர் அவர்களின் புத்தகம் காவ்யா வெளியீடாக வந்துள்ள “ஜெயந்தி சங்கர்நாவல்கள்“ இன்று கைக்குக் கிடைத்தது. காவ்யா பதிப்பகம் இதனை அருமையான பைன்டிங்கில் அற்புதமாக வெளியிட்டிருக்கிறது.

காவ்யாவிலிருந்து பார்சலா, என்னவாயிருக்கும்? என்று அதிசயித்துக்கொண்டே வாங்கினேன். பொக்கிஷமாய் அது இன்று என் கையில். மேடம் சொல்லித்தான் இது நடந்திருக்க வேண்டும். நானும் மதுரைதான் என்று சொல்லித்தான் அவர்களின் பேச்சு ஆரம்பித்தது திரு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது விழாவில். கொஞ்ச நேரத்தில் ஒரு உறவுக்காரரின் அன்பையும், நேசத்தையும் அவர்களிடம் உணர்ந்தேன். நெடு நேரம் பேச முடியாமல் போனது வருத்தமே.

அவர்கள் எழுதிக் குவித்திருக்கும் அளவு நான் எழுதவில்லை. ஆனாலும் என்னிடத்திலும் ஏதோ உண்டு என்று கண்டு, புத்தகத்தை அனுப்பச் சொல்லியிருக்க வேண்டும்.

அவரது “ச்சிங் மிங்” சீனக் கலாசாரக் கட்டுரைகள் நான் ஏற்கனவே படித்துப் பிரமித்திருக்கிறேன்.

மதிப்புமிக்க படைப்பாளி திரு எஸ்.ஷங்கரநாராயணன்தான் அந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுத்து, படி என்றார்.

கதைகள் எழுதுபவர்களுக்கு கட்டுரைகள் எழுதும்போது, கதைக்கான நடை தவிர்க்க முடியாமல் வந்து உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடும். அதை வலிய ஒதுக்கி கட்டுரைக்கான விஷயத்தை மட்டும் முன்னிறுத்தி இறுக்கமாக, தொடக்கம், மையம், இறுதி என்று வகுத்து கட்டுரை வரைவதற்கு ஒரு பயிற்சியும், திறமையும் வேண்டும். அந்தத் திறமையை மேற்கண்ட சீனக் கலாச்சாரக் கட்டுரைகளில் நான் கண்டேன்.

மேடத்தின் நாவல்களைப் படிக்கப் போகிறேன்....அதன் மூலம் என் எழுத்துப் பயிற்சியை நான் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. காவ்யா பதிப்பகத்திற்கும்தான்

கருத்துகள் இல்லை: