11 ஜனவரி 2015

ஸ்ரீஅதிருத்ர மஉறாயக்ஞம்

 

 

2015-01-11 19.32.29 2015-01-11 19.32.39 2015-01-11 19.33.11

 

 

ஸ்ரீஅதிருத்ர மஉறாயக்ஞ சிவாராதனை நடந்தது 31.12.2014 முதல் 11.1.2015 வரை. மதுரை லட்சுமி சுந்தரம் உறாலில். தினமும் காலை 5 மணி முதல் இரவு ஒன்பது வரை. ஸ்ரீருத்ரஜெபமும்,ஸ்ரீ ருத்ர க்ரமார்ச்சனையும் இன்னும் விடாமல் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஸத் சங்க நிகழ்வுகளோடு மட்டுமே மீதி வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்கிற அளவுக்கு மனசும், உடலும் ஒன்றிப் போய் இத்தனை நாட்கள் இதமாய், சுகமாய்க் கழிந்தன. தினசரி நடந்த கச்சேரிகளும், நாமசங்கீர்த்தனங்களும், ஸ்ரீவேத மகிமை பற்றிய உபன்யாசங்களும் மனதுக்கு அத்தனை இதமானவை. ஸ்ரீருத்ர சமக கணார்ச்சனை, ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம், இந்த்ராக்ஷி சிவகவசம் மற்றும் சிவ ஸகஸ்ரநாம பாராயணம், லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் அச்சித்ர அஸ்வமேத பாராயணம் ஆகியவை மனதை முழுக்க முழுக்க பக்தியில் மூழ்கித் திளைக்க வைத்தன. வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நாட்கள் இவை. லோக ஷேமத்திற்காக, எல்லா உயிர்களும் அன்போடும், ஆதரவோடும், ஒற்றுமையோடும், இன்புற்றிருக்க நடத்தப்படும் இந்த யாகங்களின் மகிமை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...