15 ஜனவரி 2015

16.01.2015 மாட்டுப் பொங்கல்

 

 

 

 

1 2

எங்க மதுரக்காரங்களோட ரசனையே தனிதாங்க...எந்நேரமும் கேளிக்கையும், கொண்டாட்டமுமா இருக்கிறதுல அவுங்களுக்கு ரொம்ப விருப்பம்...ரயில்ல மதுரை திரும்பைல கூடல் நகர் நெருங்கைலயே பாட்டுச் சத்தம் கேட்க ஆரம்பிச்சுடும். மதுர வந்திருச்சா...ன்னு கேட்டுக்கிட்டு அப்பர் பெர்த்லேர்ந்து குதிக்கிற பலபேரைப் பார்த்திருக்கேன் நா.....மதுரைக்கு அடையாளம்னு சொன்னா இந்தப் பாட்டும் கூத்தும்தான்....

இன்னைக்குப் பாருங்க...மாட்டுப் பொங்கல்ல...எங்க வீட்டுக்குப் பக்கத்துல உள்ள கிராமக் கோயில்ல...பொங்கல் விழா நடக்குதுங்க....அங்க கடந்த மூணு நாளா ஒரே பாட்டுச் சத்தம்தான்...அதுல பாருங்க....மாடு, விவசாயி, உழைப்பாளின்னு சம்பந்தப்பட்ட பாட்டா வச்சி...அசத்துறாங்கன்னா பார்த்துக்குங்களேன்...என்னப் படிக்கவே விடல...கேட்டுக்கிட்டே யோகா பண்ண ஆரம்பிச்சிட்டேன்...இன்னைக்கு க்ளாஸ் இல்ல....இலக்கியவாதிங்கல்லாம் எம்புட்டோ கதை எழுதறாங்க...கட்டுரை எழுதறாங்க...கவிதை எழுதறாங்கதான்...ஆனாலும் எங்காளுகளுக்கு உள்ள ரசனை எவனுக்கும் வராதுங்க.....பாமர சனங்கதான்...இருந்தாலும் அடியொட்டிப் போன அவுங்க ஆழமான ரசனைய அத்தனை எளிசா உதறிட முடியாதுங்க....உதாரணங்களத்தான் பாருங்களேன்....

1) ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி....சலோ...சலோ..சலோ எனும் சாலையிலே....ஜில் ஜில் ஜில் எங்கள் காளைகளே....
2) ஆடுற மாட்ட ஆடிக் கறக்கணும்...பாடுற மாட்ட பாடிக் கறக்கணும்
3) மாட்டு வண்டி பூட்டிக் கிட்டு, மாப்பிள்ளையத் தேடிக்கிட்டு, காட்டு வழி போறவளே கன்னியம்மா....
4) மாட்டுக்கால வேலா, உன் மாட்டக் கொஞ்சம் பார்த்துக்கடா...
5) ஏரு பெரிசா....உங்க ஊரு பெரிசா, அடியே நெல்லு பரிசா, பயக சொல்லு பெரிசா
6) மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி....
7) கிணற்று நீரை எறைச்சு விட்டா....
8) கடவுள் எனும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி...விவசாயி...
9) உழைப்பதிலா, உழைப்பைப் பெறுவதிலா இன்பம்....
10) போட்டது முளைச்சுதடி...கண்ணம்மா...கேட்டது கிடைச்சதுடி சின்னம்மா
11) முன்னால போகுது மயிலக் காள...பின்னால போகுது மச்சக்காளை...(இடை வரிகள்.

இன்னைக்குப் பொழுது இப்டி ரசனையோட விடிஞ்சிச்சு

கருத்துகள் இல்லை: