09 ஜூலை 2020

“சினிமா என்ற பெயரில்“ - வெங்கட்சாமிநாதன்

“சினிமா என்ற பெயரில்“ - இது வெங்கட்சாமிநாதன் அவர்களின் முக்கியக் கட்டுரைகள் அடங்கிய நூல். தமிழ்நாட்டின் மாபெரும் கேளிக்கையாக மாறிவிட்ட சினிமாவைப் பற்றிய முக்கியமான புத்தகம்.

1961 ல் பதேர் பாஞ்சாலியை சென்னை பிராட்வேயில் திரையிட்டபோது அந்தப் படத்தைப் பார்க்க அதிகபட்சம் 20 பேர் வரை கூடியிருப்பார்கள். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் கழித்தும் இன்றும் அதே நிலைமைதான் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது என்கிறார்.
பாலு மகேந்திராவின் வீடு படத்தைப் பற்றி இப்படி விவரிக்கிறார். காட்சி பூர்வமாகவே அது ஒரு வாழ்க்கைத் துணுக்கை, தமிழ் வாழ்க்கைத் துணுக்கை நம் முன்னே விரித்து நிகழ்வித்தது. அதைப் பார்த்தாலே தெரியும்.
அவர்கள் யாரும் நடிப்பவர்களாகவோ, ஒரு செட்டில் இயக்குநர் சொல்வதைச் செய்பவர்களாகவோ தோன்றாது.
வாழ்க்கையில், எங்கோ ஒரு வீட்டில், தெருவில், உணவகத்தில் நடப்பதை, அவர்கள் அறியாது நமக்குப் பார்க்கக் கிடைப்பதான உணர்வில்தான் நாம் இருப்போம்.
நடிப்பது என்று தெரியாமல், இது உருவாக்கப்பட்ட கதை என்பது தெரியாமல், இது தயாரிக்கப்பட்ட செட் என்று நமக்குப் புலப்படாமல், இது ஒரு இயக்குநர் சொல்லிச் செய்வது என்று தோன்றாதவாறு எது நமக்குக் காணத் தரப்படுகிறதோ அதுதான் தொழில்நுட்பம்.
ஆனால் அதுவே கலையாகிவிடாது. கலைக்கான உபகரணங்கள் இங்கு சொல்லப்பட்டனவெல்லாம் நிகழ்ந்து இவை அனைத்தும் இவற்றின் கூட்டுறவில் ஒருமித்து, ஒன்றாகி, சொல்லப்பட்டதுக்கும் மேல் சொல்லப்படாத, நமக்குத் தெரியாத ஒன்று உணர்விக்கப்பட்டால் அதுதான் கலையாகும்.
தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் தொடராக வந்து பெரிதும் பாராட்டப்பட்ட கட்டுரைகள் இவை. மேலே அவர் சொல்லியிருக்கும் தொழில் நுட்பம் மற்றும் கலை சார்ந்த நுணுக்கமான அணுகுமுறை இந்தப் புத்தகத்திற்கான அறிமுகமாகப் போதுமென்று நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...