07 ஜூன் 2013

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்–எழுத்தாளர் திரு. கர்ணன்

 

 

 

 

 

2013-06-07 17.16.06-1

 

 

இந்த 75 வயதிலும் எழுதிக் கொண்டேயிருக்கிறார் ஒருவர். அவர் மணிக்கொடிக்கால எழுத்தாளர்.அவர்களுக்குச் சமமாகப் படைப்புக்களைத் தந்தவர். நாற்பதுகளில் எழுதிய பல அரிய படைப்பாளிகளோடு அன்றாடம் விடாமல் பழக்கம் கொண்டவர். அவரது கடைப்பக்கம் வந்து போகாத படைப்பாளிகளே கிடையாது. ஊரெல்லாம் அலைந்துவிட்டு, அங்கு போய் படுத்து ஓய்வு எடுக்காதவரே இல்லை. விருந்துண்டு, அவரோடு இலக்கியப் பகிர்வு செய்து, ஒரு நாள் இரண்டு நாள் அவரது வீட்டில் தங்கிச் செல்லாதவரே கிடையாது. ஐம்பதுகளில், அறுபதுகளில், ஜெயகாந்தனுக்கு இணையாகப் படைப்புக்களைத் தந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் எழுதியவர். தமிழக அரசின் பரிசினை அவர்கள் எங்கே போகிறார்கள் என்கிற தரமான கட்டுரைப் புத்தகத்திற்காகப் பெற்றவர். கி.வா.ஜ. முதல் வண்ணதாசன் வரை என்ற ஒரு புத்தகத்தை நர்மதா பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது. இப்போது அகம் பொதிந்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். பழம் பெரும் படைப்பாளிகளை நேரில் சென்று காண வேண்டும். அவர்களைப் போற்ற வேண்டும், பெருமைப் படுத்த வேண்டும் என்று யார் நினைக்கிறார்கள் இன்று? அந்தப் பழி இவரின் மேற்கண்ட 2 புத்தகங்களா்ல தீர்ந்தது. அந்த மதிப்பிற்குரிய படைப்பாளி திரு கர்ணன் அவர்கள். அறியுங்கள். - உஷாதீபன்


கருத்துகள் இல்லை:

பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில்   “கடைநிலை“  நாவல் அறிமுகம்