27 ஆகஸ்ட் 2020

குறுங்கதைகள் - 1 “தீட்டு தொற்றான கதை”

குறுங்கதைகள் - 1

     “தீட்டு தொற்றான கதை”                                               ---------------------------------------


     ள்ளி நின்னு முட்டகோஸ் மட்டும் வாங்கிட்டு சட்டுனு வாங்க... - பால்கனியிலிருந்து குனிந்து கீழே பார்த்தவாறே கத்தினாள் சௌம்யா.

      சரி...சரி...என்றவாறே தராசில் நிறுத்து நீட்டிய காயை இடது கையில் வைத்துக் கொண்டு பணத்தைக் கொடுத்த கணேசன், மீதியை வாங்கிக் கொண்டு மாடிப்படி ஏறினான். வீட்டிற்குள்ளே  நுழைந்து இந்தா பிடி...என்றான். 

      முதல் மாடில இருக்காங்களே முத்துப்பேச்சி...கவனிச்சீங்களா...கையுறை போட்டிருக்கிறதை..? சில்லறையை வாங்கி அவன் முன்னாடியே அலம்பினாங்களே.. அதைப் .பார்த்தீங்களா...? .எவ்வளவு ஜாக்கிரத? நீங்களும் கழுவுங்க...

      சரி...சரி...இதுக்கு எதுக்கு டென்ஷனாகுறே...?                                       நான் சுவரில் தொங்கிய பாட்டியின் படத்தை நோக்கினேன்.                   ”அப்டி ஓரமா வச்சுடுப்பா....நா எடுத்துக்கிறேன்...”  பதவாகமாய்ச் சொல்லியவாறே துளி ஜலத்தை அதன் தலையில் ஊற்றி மீதிக் காசை எடுத்துக் கொண்ட பாட்டி ஞாபகம் வந்தது. சிரித்துக் கொண்டேன்.                                   கையோடு சேர்த்து, காய்கறிக்காரன் தந்த மீதிச் சில்லரையை வாஷ் பேசினில் அலம்பினேன். அப்படியே கேட்டேன்.

      ஏண்டீ....இந்த பாக்கி ரூபா நோட்டையும் தண்ணில நனைச்சு உலர்த்திடவா...?

                              -------------------------------

       

                             

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...